அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/ஒருநாள் வருமானம் போதும்
(74)
ஒருநாள் வருமானம் போதும்
போர்க் கருவி உற்பத்தியாளரான நோபெள் பிரபுவிடம் ஒரு வேலைக்காரி இருந்தாள்.
ஒரு நாள் அந்த வேலைக்காரி பிரபுவை அணுகி, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தாள்.
உடனே அவளிடம், "என்னிடமிருந்து என்ன சன்மானத்தை நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.
“உங்களிடமிருந்து நான் விரும்புவது எனக்குக் கைக்கெட்டாததாகத் தோன்றுகிறது” என அச்சத்தோடு கூறலானாள்.
"தைரியமாகக் கேள், நீ கேட்பதைத் தருகிறேன்” என்று ஊக்கமூட்டினார் அவர்.
"பிரபுவே, உங்களிடமிருந்து நான் விரும்புவது... உங்களுடைய ஒரு நாள் வருமானத்தையே” என தயக்கத்தோடு கூறினாள் அந்த வேலைக்காரி.
சிறிதும் தாமதியாமல், வேலைக்காரி பெயருக்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தார் பிரபு.
செக் தொகை எவ்வளவு?
ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்!