அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/நானும் உங்களைப்போலவேதான்
(3) நானும் உங்களைப்போலவேதான்
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரயிலில் பிரின்ஸ்டன் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார்.
இடைவேளையில் உணவு வண்டியில் உணவு கொள்ளச் சென்றார்.
அவரிடம் உணவுப் பண்டங்களின் பட்டியல் ஒன்றைக் கொடுத்தான் உணவு பரிமாறுகிறவன். மூக்குக் கண்ணாடியை மறந்து வேறு வண்டியில் வைத்து விட்டு வந்ததால், பட்டியலில் குறிப்பிட்டிருப்பதை அந்த ஆளையே படித்துச் சொல்லும்படி கேட்டார் ஐன்ஸ்டீன்.
அவனோ பட்டியலை அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு, தெரியல்லீங்களே, ஐயா! உங்களைப் போலவே எனக்கும் படிக்கத் தெரியாதுங்க” என்று கூறினான்.
தங்களைப் போலவே பிறரையும் கருதுவது சிலருடைய இயல்பு.