அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/புத்தகம் எழுதத் தகுதி
(97) புத்தகம் எழுதத் தகுதி
தான் எழுத்தாளராகி, புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டான் இளைஞன் ஒருவன்.
மிகவும் உற்சாகத்தோடு, புகழ்பெற்ற பத்திரிகை அதிபர் நார்த் கிளிப்பிடம் சென்று, -
"ஆரம்ப நூலாசிரியனுக்கு வேண்டிய முக்கியமான தகுதி என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அவர் மிகவும் அமைதியாக,
"கொஞ்சம் பசி வேண்டும்!" என்றார்