அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/மணி என்ன ஆனால் என்ன?
(66)
மணி என்ன ஆனால் என்ன?
பிரபல விஞ்ஞானி தாமஸ் எடிசன் புதிதாகத் தொழிற்சாலை ஒன்றை அமைத்தார்.
சுவர்க் கடிகாரம் ஒன்று வாங்கி தொழிற்சாலையில் பொருத்தினார். தொழிலாளர்கள் எல்லோரும் அந்தக் கடிகாரத்தையே ஓயாமல் பார்க்கத் தொடங்கினார்கள். ஆதனால் வேலை தாமதமாயிற்று. எடிசனும் நல்ல உழைப்பாளி.
அவருக்குத் தொழிலாளர்களின் போக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு நாள், பல கடிகாரங்களை வாங்கி வந்து, தொழிற்சாலையின் பல மூலைகளிலும் பொருத்திவிட்டார். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மணி காட்டியது.
இந்தக் கடிகாரக் குழப்பத்தைக் கண்ட தொழிலாளர்களுக்கு மணி பார்ப்பதில் உள்ள ஆர்வமே போய் விட்டது. நேரம் என்ன ஆனால் என்ன? என்று எண்ணிபடி தங்களுடைய வேலைகளிலே கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்கள்.