அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு


(45) ட்சங்களுக்கு த்தியில் லசலப்பு



ஜிம்மி டியூராண்டியில் சட்ட மன்றம் கூடிய போது, பரபரப்பான விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

“நான், நம் கடற்படைக்கு 15 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன்” என்றார்.

மற்றொரு உறுப்பினர் துள்ளி எழுந்து "நான் நம் தரைப்படைக்கு 25 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன் என்றார்.

இன்னொரு உறுப்பினர், "இரவல்-குத்தகை இனத்துக்கு 60 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன்” என்றார்.

அந்தச் சமயத்தில் சபையில் ஏதோ கலவரம் திடீரென்று உண்டாயிற்று.

அது என்ன? உறுப்பினர் ஒருவர் போட்ட கூச்சல் காதில் விழுந்தது.

“என்னுடைய நிக்கல் நாணயம் ஒன்று கீழே விழுந்து விட்டது. அது என் கைக்கு அகப்படுகிறவரைக்கும், எவருமே இந்த மன்றத்தை விட்டு நகரக் கூடாது" என்பதே அந்தக் கூச்சல்!