அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/078-383

74. சட்ட நிரூபண சபைக்குப் பலவகுப்பார் வேண்டாமாம்

பாரசீகர், ஜைனியர், தீயர் முதலிய வகுப்போர் அவரவர்களுக்குத் தனித்தனியாக ஒவ்வோர் அங்கங்களை நியமிக்கும்படி வெளிதோன்றி விட்டார்கள். இதற்குக் காரணம் கவர்ன்மெண்டார் மகமதியருக்குத் தனியாகக் கொடுத்துள்ளபடியால் மற்றவர்கள் கேட்பதற்கும் இடமுண்டாதென்று சில பத்திரிகைகள் கூறுகின்றது.

அவற்றுள் பலசாதியோர்களிலும் ஒவ்வோர் அங்கங்கள் உட்கார்ந்து சகல குறைகளையும் சரிவர ஆலோசித்து சீர்படுத்துவதினால் ஒற்று மெயுற்று சகலசாதி குடிகளும் பொதுவான சுகத்தை அடைவார்களா அன்றேல் தற்காலமனுபவிப்பவர்களே சட்டசபைக்கு அங்கங்களாயிருப்பார்களாயின் சகலசாதியோரும் சுகமனுபவிப்பார்களா இவைகளைப் பத்திராதிபர்கள் ஆலோசிக்கவேண்டியதே.

இந்துக்களென்போருக்கும் ஒற்றுமெயடையவேண்டும் என்னும் சுகமடைய வேண்டுமென்னும் எண்ணம் இருக்குமாயின் சகலசாதியோரும் கூடி இராஜாங்க சட்டதிட்டங்களை செய்தலே நலமென்று கூறியுள்ளார்கள்.

யதார்த்தத்தில் சகலசாதியோரும் பெறுமையடையவேண்டும், சுகம்பெறவேண்டும் என்ற நல்லெண்ணம் இருக்குமாயின் கருணைதங்கிய கவர்ன்மெண்டார் சகலசாதியோர்களுக்குத் தனித்தனி சுதந்திரங் கொடுத்து (தெளிவில்லை) ஓரிடத்தில் உட்கார வைக்க மாட்டார்கள்.

பெரியசாதி, சின்னசாதிகளை வைத்துக்கொண்டு தங்கள் சுயப்பிரசோசனங் கருதுபவர்களே இதற்குத் தடைகளை யுண்டுசெய்யும் வார்த்தைகளைப் பேசிவருகின்றார்கள். (சில வரிகள் தெளிவில்லை)

- 3:11; ஆகஸ்டு 25, 1909 -