அறிவியல் அகராதி/புதுப்பதிவுகள்
anaphase -பின்னிலை: உயிரணுவின் இழைப்பிரிவில் மூன்றாம் நிலை. (உயி)
animatronics -எழுச்சிமிகு மின்னணுத் தொலை இயல் : இச்சொல் animation, electronics, robotics ஆகிய மூன்று சொற்களின் தொகுப்பு. தவிர, இது ஒரு தொகுப்புத் தொழில்நுட்பம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய மூன்று காலங்களிலும் கற்பனை உண்மையைக் காட்டுவது. மிகப்புதிய அறிவியல் துறை (17-10-2000) (தொ.நு).
aril - பத்திரி: விதைப்புற வளர்ச்சி. (உயி).
blood bank -குருதி வங்கி: குருதியைச் சேமித்து வைத்து வேண்டிய பொழுது பயன்படுத்துவது.ஒ. fransfusion. (மரு)
broadcasting -ஒலிபரப்பு: நிகழ்ச்சிகளை வானொலி அலைகள் வாயிலாகப் பரப்புதல், ஒ. telecast, network programme (தொ.நு).
business netiquette - இணைய இணக்க நடத்தை: இணையத்தைக் கையாளும் பொழுது, தொழில் செய்பவர்களும் தொழில் அமைப்புகளும் மேற்கொள்ளும் சமூக இணக்கமுள்ளதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் தகுதியுள்ளதுமான வணிக நடத்தை (20-11-2000) (தொ.நு). chromatid - நிறணி: நிறப்புரி பிரியும் பொழுது உண்டாகும் இழை போன்ற பொருள். பா. chromatin. (உயி)
collateral bundle - இருகுத் திரள்: தாவரக் குழாய்த்திசுத் தொகுதியிலுள்ளது. இது மூடிய திரள், ஈரடுக்குத் திரள், திறந்த அடுக்குத் திரள் எனப் பல வகை. (உயி)
coordinate = ஆயத்தொலை: அச்சுத்தொலை (கணி).
crustacea - ஓட்டு விலங்குகள்: நண்டு முதலியவை. (உயி)
cyber crime - கணிணிக் குற்றம்: கணிப்பொறித் தொடர்பாகச் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறுவது. (தொ.நு.)
diarch xylem - இரட்டைப் புரி மரத்திசு: இரு இழைகள் உள்ளது. ஒ. exarch (உயி)
distal end - சேய்மை முனை: தொலைமுனை ஒ. proximal end. (உயி)
divergent evolution - விரி உயிர் மலர்ச்சி: பரிணாமத்தில் ஒரு வகை. ஒ. convergent evolution (உயி)
earthworm -மண்புழு: நாங்கூழ்ப்புழு (உயி)
empirical formula - வீத வாய்பாடு: தகவு வாய்பாடு (வேதி).
endarch xylem - உள்முனை மரத்திசு: உள் முனையில் முன் மரத்திசு அமைதல். (உயி)
exarch xylem - புறமுனை மரத்திசு: மரத்திசு வெளிப் புற முனையில் முன் மரத்திசு இருத்தல். (உயி)
fascicular cambium - பட்டை வளர்திசு: வளர்திசுவின் தட்டைப்புரி, குழாய்த் திரளில் மரத்திசுவிற்கும் பட்டைத் திசுவிற்கும் இடையில் உள்ளது. பா. xylem, phloem (உயி)
girdle - வளையம்: இது தோள் வளையம், இடுப்பு வளையம் என இருவகை. (உயி)
heteromerous - வேறெண்ணிக்கையுள்ள: பூவட்டத்தில் வேறுபட்ட எண்ணிக்கையில் பகுதிகள் அமைந்திருத்தல். (உயி)
homoimerous - ஒத்த எண்ணிக்கையுள்ள: பூ வட்டத்தில் ஒத்த எண்ணிக்கையில் பகுதிகள் அமைந்திருத்தல். (உயி)
kinetic energy - இயக்க ஆற்றல்: ஆற்றலின் ஒருவகை ஒ. potential energy. (இய)
labellum - உதட்டிதழ்: தும்பி, தேனீ முதலியவற்றில் காணப்படும் உறுப்பு. (உயி)
metaphase - நடுநிலை: உயிரணுவின் இழைப் பிரிவில் இரண்டாம் நிலை. (உயி)
M. Commerce - நடமாடும் வணிகம்: mobile commerce. கைத்தொலைபேசி, இருவழி வானொலி ஆகியவை மூலம் நடைபெறுந் தொழில். பா. teleconferencing, teleshopping. (தொ. நு.)
nutraceuticals - ஊட்ட மருந்துகள்: இச்சொல் nutrition, pharmaceuticals ஆகிய இரு சொற்களின் தொகுப்பு உணவுப் பிழிவுகளைத் தடுப்பு மருந்துகளாகவோ துணை உணவுப் பொருள்களாகவோ பயன்படுத்தலாம் என்பது இச்சொல்லின் பொருள். வருங்கால உணவுக் கலையில் உணவுகளாக, அதாவது ஆற்றல் தரும் உணவுகளாக அமைபவை. உணவுத் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சியை உண்டாக்க இருப்பவை.(நவம்பர் 2000) (தொ.நு.) offspring - கால்வழி: குழந்தை குட்டி. (உயி)
pad - திண்டு, பட்டை. (ப. து)
paddle - துடுப்பு. (ப. து)
pedal - மிதிகட்டை, மிதிபலகை. (ப. து)
prephase - முதல்நிலை: உயிரணுவின் இழைப்பிரிவில் முன்னதாக வருவது. (உயி)
proximal end - அண்மை முனை: அருகில் உள்ள முனை ஒ. distal end, (உயி)
RDF - refuse-derived fuel - ஆர்டிஎஃப்: கழிவுவழி எரிபொருள். (வேதி)
RDX - Research Department Explosive - ஆர்டிஎக்ஸ்: ஆராய்ச்சித்துறை வெடிபொருள், வேறுபெயர் சைக்ளோனைட் (வேதி)
resistor - தடையளிப்பி: மின்சாரத்தையும் வெப்பத்தையும் எதிர்க்கும் பொருள் (இய)
resultant - தொகுபயன்: இரு விசைகளுக்குச் சமமாக இருப்பது. (இய)
standard petal - கொடியல்லி: அவரைப் பூவிலுள்ள தனித்த அல்லி. பா. keel (உயி)
staple crop - முதன்மைப் பயிர்: அரிசி, கோதுமை. (உயி)
telecast - ஒளிபரப்பு: தொலைக்காட்சியில் நடை பெறுவது ஒ. broadcasting (தொ. நு)
teleconferencing - தொலைக் கூட்டம்: தொலைக்காட்சி வழி நடைபெறுவது, கருத்துக் கூட்டம். (தொ. நு)
telemedicine - தொலைமருத்துவம்: தொலைவிலிருந்தோ உலகளவிலோ மருத்துவச் செய்திகளைப் பெறுதல். இதற்கு இணையம் பயன்படுகிறது. (தொ.நு)
teleshopping - தொலைபேசி வழிப்பொருள் வாங்கல்: தொலைபேசி மூலம் வணிகருக்குத் தெரிவித்து வேண்டிய பொருள்களை வாங்குதல். (தொ.நு)
telophase - முடிவுநிலை: உயிரணுவில் இழைப்பிரிவில் நடைபெறும் நான்காம் நிலை, (உயி)
TNT - டிஎன்டி: Tri Nitro Toluene. முந்நைட்ரோ டூலின், உயர்ந்த வெடிபொருள். ஒ. DDT, dynamite, RDX. (வேதி)
transfusion - குருதி செலுத்தல்: சிரை வழியாகக் குருதியை வேண்டிய அளவு செலுத்தல். குருதி இழப்பு அல்லது பற்றாக்குறையைத் தடுக்க இச்செயல் நடைபெறுவது. அளிப்பவரும் பெறுபவரும் எயிட்ஸ் நோய் இல்லாதவராக இருப்பது மிக இன்றியமையாதது. ஒ. blood bank (மரு)
trigonometry - முக்கோணவியல்: முக்கோணங்கள், அவற்றின் பக்கங்கள் ஆகியவற்றிடையே உள்ள தொடர் புகளை ஆராயும் கணக்குத்துறை.
vitriol, blue - மயில்துத்தம்: செம்புச் சல்பேட் (வேதி)
vitriol, green - பசுந்துத்தம்: பெரஸ் சல்பேட் (வேதி)
vitriol, white - வெண்துத்தம்: துத்ததாகச் சல்பேட் (வேதி)
workaholic - வேலைக் களைப்பர்: மிகுவேலையால் களைப்புறுபவர். (தொ.நு)
workaholism - வேலைக் களைப்பு: மிகுவேலையினால் உண்டாகும் களைப்பு. இது ஒரு நிலைமையே, நோயன்று. (தொ.நு)