D

Dalton's atomic theory - டால்டன் அணுக்கொள்கை: 1803இல் இக்கொள்கையினை ஜான் டால்டன் வெளியிட்டார். இதன் அடிப்படைக் கருத்துகளாவன: 1. அனைத்துப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் மிகச்சிறிய துகள்களாலானவை. 2. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அவற்றைப் பகுக்கவும் இயலாது. (இன்று பகுக்கப்பட்டுள்ளது) 3. ஒரு தனிமத்தின் அணுக்கள் யாவும் ஒரே மாதிரி வடிவம், அமைப்பு, பருமன் ஆகியவற்றைக் கொண்டவை. 4. வேதிவினைகள் நிகழும் பொழுது சிறிய முழு எண்ணிக்கை உள்ள அணுக்களே அவ்வினையில் ஈடுபடுகின்றன. அக்கால நிலையில் பல வேதியியல் உண்மைகளை இக்கொள்கை விளக்கியது சிறப்புக்குரியது. (இய)

Dalton's laws of vapour pressure - டால்டன் ஆவியழுத்த விதிகள்: 1. ஒரு நீர்மத்தின் நிறையாவி அழுத்தம் பருமனைப் பொறுத்ததன்று. அதாவது, அது பாயில் விதிக்குட்பட்டதன்று. 2. ஒர் நீர்மத்தின் நிறையாவி அழுத்தம், வெப்ப நிலை உயர்வுக்கு நேர்வீதத்தில் இருக்கும். 3. வேதிவினையாற்றாத வளிக்கலப்பினால் ஒரு நீர்மத்தின் நிறையாவி அழுத்தம் மாறுபடுவதில்லை. 4. பல நீர்மங்களால் ஏற்படும் நிறையாவியழுத்தம் அவற்றின் தனித்தனி அழுத்தங்களின் கூடுதலாகும். 5. வெவ்வேறு நீர்மங்களின் நிறையாவி அழுத்தம் வெவ்வேறு அளவுகளில் இருக்கும். (இய)

damp air - ஈரக்காற்று: உயர்ந்த சார்பு ஈரநிலையிலுள்ள காற்று. (இய)

damping - தாழ்வு: ஓர் அலைவின் வீச்சில் ஏற்படும் இறக்கம், ஆற்றல் செலவழிவதால் இந்நிலை. (இய)

damping off - நாற்றுநோய்: மண்ணிலுள்ள பூஞ்சையினால் நாற்றுகளுக்கு உண்டாகும் நோய், குளிர், மண் ஈரம் முதலி யவை இதற்கு ஏற்புடையனவாக இருக்கும். (உயி)

dark matter - கரிய பருப்பொருள்: பார்வைக்குப் புலப்படாத பொருள். விண்ணகப் பொருளில் 90% உள்ளது என நம்பப்படுவது. எரிடானஸ் விண்மீன் கூட்டத்திலுள்ளது எனப் பிரின்ஸ்டன் உயராய்வு நிறுவன வானியலார் ஆண்ட்ரூ கவுல்டு என்பவரால் 1990களில் கண்டுபிடிக்கப்பட்டது. (வானி)

dark reaction - இருட்செயல் அல்லது வினை: இதற்குப் பிளாக்மன் வினை என்று பெயர். ஒளி வினையைத் தொடர்ந்து வருவது இச்செயல். இருட்டில் நடைபெறுவதால் இதற்கு இப்பெயர். இந்நிலையின் அடிப்படைச் செயல் நீர்வளியால் கரி ஈராக்சைடு ஒடுங்குதல். இவ் வினைக்கு வேண்டிய ஆற்றலை ஒளிவினையில் உண்டாகிய அமுபா அடினோசைன் மப்பாஸ்பேட் என்ஏடிபிஎச் ஆகிய பொருள்கள் அளித்தல், இதில் கரி ஈராக்சைடு சர்க்கரையாகிறது. (உயி)

dark space - இருள்வெளி: மின்னிறக்கு குழாயின் காற்றழுத்தத் தை 0.1 செ.மீ. அளவுக்குக் குறைக்கும் பொழுது, ஊதாநிற நேர்மின் பிழம்பில் எதிர்மின் வாய்க்கருகில் ஓர் இருள்பகுதி தோன்றும். இதுவே பாரடே இருள் வெளி. மேலும் அழுத்தத்தை 0.01 செ.மீ அளவுக்குக் குறைக்கும்பொழுது, எதிர்மின் பிழம்பு எதிர்மின்வாயிலிருந்து விடுபட்டு மற்றொறு இருள்பகுதி தோன்றும். இது குருக்ஸ் இருள்வெளி ஆகும். இதில் மின்பிழம்பின் நீளமும் குறைந்திருக்கும். (இய)

Darwinism - தார்வினியம்: தார்வின் கொள்கை. உயிர்வகைகளின் தோற்றக் கொள்கை. சார்லஸ் தார்வின் (1809-1882) 1858இல் முன்மொழிந்தது. காலத்தால் அழியாதது. இயற்கைத் தேர்வின் மூலம் வேறுபட்ட உயிர்வகைகள் உண்டாகின்றன என்பது இக்கொள்கை. இதன்படி வலுவுள்ளவை வாழ்தல், வலுவற்றவை வீழ்தல். (உயி)

dasymeter - வளியடத்திமானி: மெல்லிய கண்ணாடி உருண்டையுள்ள கருவி. வளியின் அடர்த்தியைக் காணப் பயன்படுவது. (இய).

dasyphyllous - இலை அடர்வு: நெருக்கமாகவும் தடித்தும் இலைகள் அமைந்த நிலை. (உயி)

data - தருவாய்கள்: தகவல்கள். தரவுகள், செய்திக்கூறுகள். இவை மெய்ம்மைகள், புள்ளி விவரங்கள், அளவீடுகள், குறீயீடுகள் ஆகியவற்றைக் கொண்டவை. இவற்றைச் செயல்முறையாக்கிச் செய்தித் தொடர்புக்குப் பயன்படுத்தலாம். கணிப்பொறிக்கு இன்றியமையாத தலைவாய்கள். (இய)

data base - தருவாய்க் கோவை: தகவல் திரட்டு, கணிப்பொறித் தொகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது. இதில் மேற்கோள் குறிப்புகள் அடங்கி இருக்கும். எ-டு. தலைப்புச் சொற்கள், முதன்மைச் சொற்கள், இலக்கியத் தலைப்புகள் முதலியவை. (இய)

data bus - தகவல் போக்குவாய்: கணிப்பொறியில் நினைவகத்திற்கும் நுண்செயல் முறையாக்கிக்கும் இடையே அமைந்த மின்வழி. இது ஒரு தொகுதி கம்பிகளாலானது. இதன் வழியே ஒரு சமயம் ஒரு பைட் வீதம் இரு நிலைக்குறிபாடுகள் செல்லும். இக்குறிபாடுகள் அமைந்த செய்தி புறக்கருவியத்திற்குச் செல்லும். அங்கிருந்து மீண்டும் உள்ளே வரும். பா. address, bus. (இய)

data storage - தகவல் சேமிப்பு: கணிப்பொறியில் செய்திகளைத் தேக்கி வைத்தல்.

dating techniques - கால கணிப்பு நுணுக்கங்கள்: தொல்லுயிர்ப் படிவங்கள், தொல்பொருள் படிவங்கள், பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள். இவை இருவகைப்படும். 1.சார்புக் காலமறி நுணுக்கம் (ரிலேட்டிவ் டேட்டிங்) மற்ற மாதிரிகளோடு ஒப்பிட்டு ஒரு மாதிரியின் வயதை உறுதி செய்வது. 2.சார்பிலாக் காலமறி நுணுக்கம் (அப்சல்யூட் டேட்டிங்) நம்புமையுள்ள கால அளவைக் கொண்டு வயதை உறுதி செய்தல். பா.carbon dating, radioactive dating.(இய)

daughter - சேய்: 1.கதிரியக்கதால் ஏற்படும் கருவைடு. 2. பிரிகையால் உண்டாகும் அயனி 3. சேயனு. (இய)

day - நாள்: புவி தன் அச்சில் ஒரு சுற்றுசுற்ற ஆகும் காலம். 24 மணி. (பு.அறி)

day neutral plant - நடுநிலை பொழுதுத் தாவரம்: பூப்பதற்குக் குறிப்பிட்ட ஒளிக் காலத்தை விரும்பாத் தாவரம். பா. photoperiodism. (உயி)

day vision - பகற்பார்வை: ஒளிர் வான பகல் ஒளிப்பார்வை. (உயி)

DDT - டீடீடி: C14H9Cl5 இரு குளோரோ இருபினைல் முக் குளோரோதீன் இ இ மு. படிகமற்ற வெள்ளைத்தூள். நீரில் கரையாதது. நறுமண அய்டிரோகார்பன்களில் கரைவது. 1874இல் ஒத்தனார் செயில்டர் என்பவரால் தொகுக்கப்பட்டாலும் 1930இல் அதன் பூச்சிக் கொல்லி பண்புகள் பால் முல்லர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இரைப்பை நஞ்சு. நெடிய நஞ்சு விளைவு கொண்டது. (வேதி)

dead beat - வெற்று விம்மல்: (இய).

deadload - வெற்று எடை:பொருள்களை நிறுப்பதில் பிழையை நீக்கப்பயன்படுவது. கணக்கில் கொள்ளப்படாதது. (இய)

dead space - வெற்றுவெளி: குறைந்த அல்லது சிறிது கூட உயிர்த்தலே நடைபெறாத பகுதி. இது மூச்சு வழியில் உள்ளது. (உயி)

deaeration - காற்றுநீக்கம்: ஒரு பொருளிலிருந்து காற்று அல்லது வளியை நீக்கல். (இய)

deaminase - டீ அமினேஸ்: ஒரு சேர்மத்திலிருந்து அமினோ தொகுதியை நீக்க உதவும் நொதி. (வேதி)

deamination - அமினோ நீக்கம்: ஒரு கூட்டுப் பொருளிலிருந்து அமினோ தொகுதியை நீக்கல். (வேதி)

death - இறப்பு: சாக்காடு, திசுக்களில் வளர்சிதைமாற்றம் அறவே ஒடுங்குவதால் ஏற்படும் நிலை (உயி)

death rate - இறப்பு வீதம்: இறப்புத் தகவு. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் தனியாட்கள் இறக்கும் அளவு. (உயி)

de Brogile wavelength - டி புரோக்ளி அலைநீளம்: ஒரு நகருந் துகளோடு தொடர்புள்ள அலையின்

λ = h/mv

λ - அலைநீளம், அலைநீளம். h - பிளாங் மாறிலி m - துகள் பொருண்மை v - நேர்விரைவு. 1924இல் பிரெஞ்சு இயற்பியலார் டி புரோகிளி (1892) தம் பெயரில் கொண்ட அலையை முதன் முதலில் அமைத்தார். (இய).

debye - Huckel theory - டிபை கக்கல் கொள்கை: மின்பகுளிகளின் குறிக்கோளற்ற நடத்தையை விளக்குங் கொள்கை. 1923இல் பீட்டர் டிபை (1884 1966), என்ரிச் கக்கல் ஆகிய இருவரால் வெளியிடப்பட்டது. (இய)

decantation - தெளியவைத்து இறுத்தல்: திண்மத்தை நீர்மத்திலிருந்து பிரிக்கும் முறை. திண்மத்தைப் படியவைத்து நீர்மத்தை ஊற்றுதல். (வேதி)

decarboxylation - கார்பாக்சைஸ் நீக்கம்: கரிமக் காடியின் கார்பாக்சைல் தொகுதியிலிருந்து கரி ஈராக்சைடை நீக்குதல். (வேதி)

decay - குலைவு: 1. அணுச்சிதைவு 2. சுற்றுவழிச் சிதைவு. (இய)

decerebration - மூளைச்செயல் நீக்கம்: ஆய்வுநிலையில் மூளைச் செயலை நீக்குதல். (உயி)

decibel - டெசிபல்: அலகுச் சொல்: ஒலி அல்லது மின்குறிபாட்டின் அலகு. (இய)

decidua - விழுபடலம்: பல பாலூட்டிகள் கருவுற்றிருக்கும் போது, அவற்றின் கருப்பையைப் போர்த்தும் தடித்த சளிப்படலம். (உயி)

deciduous - உதிர்: 1. இலையுதிர், சிறகு. 2. விழும் பற்கள். (உயி)

deciduous teeth, milk teeth - விழும் பற்கள், பால்பற்கள்: நிலைப்பற்கள் தோன்றுவதற்கு முன் னுள்ள பற்கள் ஓ. permanent teeth. (உயி)

decimal system - தசமமுறை: பத்தின்முறை. எண் 10 அடிப் படையில் அமைந்த எண் முறை. இதுவே பொதுவழக்கிலுள்ளது. மதிப்பை மாற்றுவது எளிது. (கணி)

declination, angle of - அச்சு விலகு கோணம்: ஒரிடத்தில் புவியின் அச்சுக்கும் காந்தஅச்சுக்கும் இடையே உள்ள கோணம். இது புவியின் ஒவ்வோரிடத்திலும் கணக்கிடப்பட்டுள்ளது. (இய)

decomposer - சிதைப்பி: இறந்த கரிமப்பொருட்களைச் சிதைக்கும் குச்சியங்கள் (உயி).

decomposition - சிதைவு: (வேதி)

decompound - மீக்கூட்டிலை: இது மும்மடங்குச் சிறகுக் கூட்டிலை. முருங்கை. (உயி)

decumbent - கிடைத்தண்டு: தரைமேல் கிடக்கும் தண்டு. அதன் முனை மேல் உயர்ந்திருக்கும்: நெருஞ்சி. (உயி)

decurrent - தண்டுக்கீழடி: இலையடி, தன் பொருந்து புள்ளிக்கு அப்பால் தண்டுக்குக் கீழ் விரிதல். (உயி)

decussate - குறுக்கு மறுக்கு இலையமைவு: இதனை ஈரிலை அமைவு எனலாம். ஒரு கணுவில் இரண்டு இலைகள் மட்டுமே இருக்கும். எருக்கு

defaecation - கழிவகற்றல்: இறந்த அணுக்கள், குச்சியங்கள், செரிக்காத உணவு ஆகியவை உணவு வழியிலிருந்து வெளியே செல்லுதல். (உயி)

defect - குறைபாடு: படிகப் பின்னல் அமைவில் துகள்களின் கட்டுக்கோப்பான அமைப்பில் காணப்படும் ஒழுங்கின்மை. புள்ளிக் குறைபாடுகள், வரிக்குறைபாடுகள் என அது இரு வகைப்படும். (வேதி)

defects of image - உருக்குறைபாடுகள்: இவை நிறப் பிறழ்ச்சயும் கோளப்பிறழ்ச்சியும் ஆகும். முன்னதைக் கிரவுன் கண்ணாடியிலான குவி வில்லையையும் பிளிட் கண்ணாடியிலான குழி வில்லையையும் பயன்படுத்திப் போக்கலாம். பின்னதை வட்ட அல்லது வளை வடிவத் தடைகளைப் பயன்படுத்தியும் குறுக்கு வட்டமான வில்லைகளைப் பயன்படுத்தியும் போக்கலாம். (இய)

deficiency diseases - குறை நோய்கள்: ஊட்ட உணவில் வைட்டமின்கள் குறையும் பொழுது ஏற்படும் நோய்கள். காட்டாக, வைட்டமின் பி குறைவதால் பெரிபெரி நோய் ஏற்படும். (உயி)

defoliant - இலையுதிர்தூண்டி: இலைகள் இயல்பாக உதிர்வதற்கு முன்னரே உதிரச் செய்யும் வேதிப்பொருள். (உயி) degeneration - சிதைதல்: உயிரியின் உறுப்பு இழப்பு அல்லது வேலை இழப்பு. (உயி)

deglutition, swallowing - விழுங்கல்: தொண்டையில் உணவு செல்லுதல். இது ஒரு மறிவினை. (உயி)

degradation - நிலை இறக்கம்: இது ஒரு வேதிவினை. இதில் வழக்கமாக ஒரு மூலக்கூறு படிநிலைகளில் எளிய மூலக்கூறுகளாகச் சிதையும். எ-டு. அமைடுகளின் ஆஃப்மன் நிலை இறக்கம்.'வேதி'

degree - பாகை: 1. கோண அலகு 2. வெப்பதிலை அளவையிலுள்ள இடைவெளி. (இய)

degrees of freedom - தற்படிகள்: தனிவரைகள். தனிப்பட்ட வழிகளில் துகள்கள் ஆற்றலைக் கொள்ளும் முறை. ஈலியம், ஆர்கன் முதலிய ஓரணு வளிகளில் அணுக்கள் மூன்று மாறுநிலைத் தற்படிகளைக் கொண்டுள்ளன. (இய)

deehiscent fruits - பிளவுறு கனிகள்: பிளவுறு கனிகள், பிளவுறாக் கனிகள் என உலர்கனிகள் இருவகைப்படும். இவற்றில் பிளவுறு கனிகளில் சுவர் தெறித்து விதைகள் வெளி வரும். இது பருப்புக்கனி, ஒருபுற வெடிகனி எனப் பல வகைப்படும். எ-டு. கருவேலங்காய், எருக்கு, வெண்டை.

dehydration - நீர் நீக்கல்: ஒரு பொருளிலிருந்து நீரை வெளியேற்றுதல். (வேதி)

dehydrogenase - டிகைட்ரோஜனேஸ்: ஒர் உயிர்வளி ஏற்றி நொதி ஒரு வடிபொருளிலிருந்து நீர்வளியை நீக்குவதனால், அதை இந்நொதி உயிர்வளி ஏற்றம் செய்கிறது. (வேதி)

delamination - 1. படையுதிர்தல்: உயிரியின் கண்ணறை அடுக்கு உதிர்தல் 2. படலமாதல்: கருவளர்ச்சியின்பொழுது, கருக்கோளத்தில் கண்ணறைகள் நெருங்கிப் படலமாக அமைதல். (உயி)

deliquescence - நீர்த்தல்: 1. தற்பகுப்பு மூலம், படிப்படியாகத் திசு கரைதல், 2. சில படிகங்கள் நீரை ஈர்த்தல். எ-டு. சுண்ணாம்பு. (வேதி)

delirium - பிதற்றல்: (மரு)

demodulation - பண்பிறக்கம்: பண்பேற்றம் பெற்ற ஊர்தி அலையிலிருந்து செய்தியைப் பிரிக்கும் முறை. (இய)

demodulator - பண்பிறக்கி: பண்பேற்றம் பெற்ற ஊர்தி அலையிலிருந்து செய்தியைப் பிரிக்கும் கருவி. (இய)

denature - இயல்புநீக்கு: பண்பியல்பு மாற்றம் அல்லது மெத்தனால், பைரிடின் முதலிய இயல்புநீக்கிகளைச் சேர்த்து, ஈத்தைல் ஆல்ககாலைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்குதல். (வேதி) dendron, dendrite - கிளையன்: ஒரு நரம்பணுவிலிருந்து கிளைக்கும் இழை. கண்ணறை உடல் நோக்கித் துடிப்புகளை எடுத்துச் செல்லுதல். செய்திப் போக்குவரத்தில் இன்றியமையாப் பகுதி. (உயி)

denervation - நரம்பு சிதைதல்: உடலின் ஒரு பகுதியிலுள்ள நரம்பு சிதைந்து, அந்நரம்பிலுள்ள உறுப்பு நலிதல். (உயி)

denitrification - நைட்ரேட்டு நீங்குதல்: சில குச்சியங்களின் உயிர்ப்பினால் மண்ணிலிருந்து நைட்ரேட்டு உப்புகள் நீங்குதல். (உயி)

density - அடர்த்தி: ஒரு பொருளின் அலகு பருமனின் பொருண்மை. அதாவது, ஒரு கன செண்டி மீட்டர் பொருளின் எடை 1 கிராம். ஒரு கன சென்டி மீட்டர் பாதரசத்தின் எடை 1.4 கிராம். இஃது அலகில் குறிக்கப்படுவது. அடர்த்தி அதிகமாக அதிகமாகப் பொருள்களின் எடையும் அல்லது கனமும் அதிகமாகும். குறையக் குறைய கனம் குறையும். ஒ. relative density. (இய)

dental formula - பல்லமைவு வாய்பாடு: பா. dentition. (உயி)

denticulate - பல் விளிம்பு: பல் போன்று இலை விளிம்பு இருத்தல்: செம்பருத்தி. (உயி) பா.

dentition - பல்லமைவு: தாடையில் பற்கள் அமைந்திருக்கும் முறை. இம்முறையைக் குறிக்கும் வாய்பாடு பல்லமைவு வாய்பாடு. (உயி)

dentrifice - பல்துலக்கி: பல்லைத் துலக்கப் பயன்படும் பொருள் பற்பொடி பற்பசை. (உயி)

deodorants - நாற்ற நீக்கிகள்: நாற்றத்தைப் போக்கும் பொருள்கள். எ-டு. பினாயில், பொட்டாசியம் பர்மாங்கனேட்.(வேதி)

depolarization - முனைப்படுதல் நீக்கம்: 1. தசையணு, நரம்பணு ஆகியவற்றின் படலத்திற் கிடையே நிலவும் அழுத்த வேறுபாட்டைக் குறைத்தல். அதாவது, நிலைப்பு அழுத்தத்தைக் குறைத்தல். 2. முதல் மின்கலத்தில் முனைச் செயலைப் போக்குதல். முனைப்படுதல் நீக்கி. (போலரைசர்) மாங்கனீஸ் ஈராக்சைடு. (இய)

depolariser - முனைப்படுதல் நீக்கி: பா. depolarization. (இய)

deposition - படிதல்: புவி மேற்பரப்பில் பொருள்கள் இறுகல். (பு.அறி)

depression - தாழ்வழுத்தம்: காற்று வெளி அழுத்தம் குறைந்து மழையும் புயலும் உண்டாதல். (இய)

derived unit - வழியலகு: அடிப்படை அலகுகளை ஒட்டி வரையறை செய்யப்படும் அலகு. எ-டு. நியூட்டன் என்பது கிலோ கிராம் மீட்டர் வினாடி-2 என வரையறுக்கப்படுகிறது. பா. fundamental units. (இய)

dermal bone - தோல் எலும்பு: படல எலும்பு. (உயி)

dermatology - தோலியல்: தோல் நோய்கள். அவற்றை இனமறிதல், பண்டுவம் செய்தல் ஆகியவற்றை ஆராயும் துறை. (மரு)

dermis, corium, cutis - அடித்தோல்: இதில் நார்ப்பிணைப்புத் திசு, குருதிக் குழாய்கள் முதலியவை இருக்கும். (உயி)

desalination - உப்புநீக்கல்: குடிநீர் பெற அல்லது சாகுபடி செய்யக் கடல் நீரிலிருந்து உப்பைப் போக்குதல். (வேதி)

dessication - உலர்த்தல்: ஒரு பொருளிலிருந்து ஈரத்தைப் போக்குதல். (வேதி)

dessicator - உலர்த்தும் பாண்டம்: வேதிப்பொருள்களை உலர்த்துவதற்குரிய கருவியமைப்பு.

destructive distillation - சிதைத்து வடித்தல்: காற்றுப் புகாக் கலத்தில் நிலக்கரியைப் போட்டு நன்கு வெப்பப்படுத்த, நிலக்கரி பிரிந்து பல பொருள்களின் ஆவிகளை வெளிவிடும். இவற்றை வடித்துட பகுத்தல் வாயிலாகப் பிரிக்கலாம். (வேதி)

detector - பிரித்தறிவி: பிரித்தறியுங் கருவி. (இய)

detergent - அழுக்கு நீக்கி: கரைப்பானின் (நீரின்) துப்புரவாக்கும் செயலை உயர்த்தும் பொருள் சவர்க்காரம். (வேதி)

deuterium - டியூட்டிரியம்: D.கனநீர்வளி. (வேதி)

deviation - திரிபு: விலக்கம். ஒளிமறிப்பு அல்லது விலகலால் கதிர் திரும்புதல். கதிரானது திசை மாறுங்கோணம், திரியுங்கோணம் எனப்படும். திரிபடையாக் கதிரின் திரிபுக்கோணம் 0°. (இய)

device - (டிவைஸ்) 1. கருவி 2. கருவியமைப்பு: கருவித்தொகுதி. ஒ instruments.

dew point - பனிநிலை: காற்றிலுள்ள நீராவி நிறைவுறும் வெப்பநிலை. வெப்பநிலை குறையும் பொழுது, இந்நிலையில் நீராவி குளிர்ந்து நீர்த்துளிகளாகும். (இய)

dew point hygrometer - பனிநிலை ஈரநிலைமாணி: பனிநிலை உறுதி செய்யும் கருவி.

dextran - டெக்ஸ்ட்ரான்: நீராற் பகுக்கும்பொழுது குளுகோஸ் அலகுகளை ஈனும் பன்மச் சர்க்கரை. (வேதி)

dextrin - டெக்ஸ்ட்ரின்: ஸ்டார்ச்சின் பகுதி. நீராற்பகுப்பால் கிடைக்கும் பன்மச் சர்க்கரை. (வேதி)

dextrose - டெக்ஸ்ட்ரோஸ்: குளுகோஸ் அல்லது கொடி முந்திரிச் சர்க்கரை. இனிய வெண்ணிறப் படிகம். பழப்பாதுகாப்புப் பொருள். மருத்துகளில் இனிப்பாக்கி. (வேதி)

diabetes - நீரிழிவு: சர்க்கரை நோய். மாப்பொருள் வளர்சிதை மாற்றக் குலைவில் ஏற்படும் மரபுவழி நோய். உணவுக் கட்டுப்பாடு, மருந்தை உட்செலுத்துதல் (ஊசி போட்டுக் கொள்ளுதல்) ஆகிய இரண்டின் மூலமே கட்டப்படுத்தலாம். (உயி)

diagnosis - 1. நோயறிதல்: நோய்க் காரணத்தை அறிதல். (மரு) 2. குறையறிதல்: பிழைகளை அறிதல். (உயி)

diagnostic test - குறையறி தேர்வு: குறைகளுக்கான காரணத்தை அறிதல். (க.உள)

diakinesis - கதிரிழை நிலை: குன்றல் பிரிவின் முதல் நிலையில் காணப்படும் கடைசி நிலை. பா. meiosis.

dial gauge - முகப்பளவி: காற்று, நீர், ஆகியவைகளின் உயர் அழுத்தங்களை அளக்கப் பயன்படும் கருவி. போர்டன் அளவி என்றும் பெயர் உண்டு. (இய)

dialysis - ஊடுபகுப்பு: 1. ஒருவழிப்பரவல் படலம் வழியாகத் தேர்வு. விரவல் என்ற முறையில் (அமினோ காடிகள்) முதலிய சிறு மூலக்கூறுகளிலிருந்து புரதம் முதலிய பெரிய மூலக்கூறுகள் பிரிக்கப்படும் முறை. 2. குருதியிலிருந்து கழிவுகளை இயற்கையில் சிறுநீரகம் பிரிக்கும் முறை. சிறுநீரகம் பழுதுபடுமானால், இப்பிரிப்பு செயற்கைச் சிறுநீரகம் மூலம் நடைபெறும். இது ஓர் இயந்திரம்.(உயி)

diamond - வைரம்: கரியின் புறவேற்றுரு, மிகக் கடினமானது, எல்லாக் கரைப்பான்களிலும் கரையாது, உருகுநிலை 7350° செ. மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்துவது, கண்ணாடியைத் துண்டிக்கப் பயன்படுவது, அணிகலன்களிலும் பயன்படுவது. இதன் தூய்மை கேரட்டில் கூறப்படுவது. பா. carat. (இய)

diapause - வினை ஒடுக்கம்: செயலற்றநிலையும் வளர்ச்சிகுறை நிலையுமாகும். இதில் வளர்சிதைமாற்றம் அதிக அளவுக்குக் குறைகிறது. இது பல முட்டைகளிலும் கூட்டுப்புழு சிலையிலும் காணப்படுவது. பாதக மாரிக்கால நிலைகளைத் தாக்குப்பிடிக்க இது ஒரு நுட்பமாகும். (உயி)

diaphragm - குறுக்குத் தட்டம்: உதர விதானம்: 1. பாலூட்டிகளின் மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் மிகப் பெரிய தசை. பாலூட்டிகளுக்குரிய பண்புகளில் இதுவும் ஒன்று. (உயி). 2. மையத்துளை கொண்ட உலோகத் தகடு. ஒளிப்படக்கருவி முதலிய ஒளிக்கருவிகளில் உள்வரும் ஒளியைக் கட்டுபடுத்துவது. (இய)

diaphysis - நெடுந்தண்டு: புறத்துறுப்பு எலும்பின் உருள் தண்டு. (உயி)

diarrohoea - வயிற்றுப்போக்கு: மலம் நீர்மமாகச் செல்லுதல். ஒ. dysentery.

diarthrosis - சுழல்மூட்டு: அனைத்து திசையிலும் தடையின்றி இயங்கும் மூட்டு. (உயி)

diaspore - டயஸ்போர்: அலுமினியம் ஆக்சைடும் அலு மினியம் அய்டிராக்சைடும் சேர்ந்த கலவை.AlO.OH. (வேதி)

diastase - டயஸ்டேஸ்: விதை முளைக்கும்பொழுது உண்டாகும் நொதி.

diastasis - நழுவல்: உண்மையான மூட்டு இல்லாத இயல்பான இரு எலும்புகளைப் பிரித்தல். விலா எலும்புகள் போன்று இரு இணைந்த எலும்புகளையும் பிரித்தல். 2. இதயச்சுருக்கத்திற்கு முன் இதயச் சுழற்சியில் உண்டாகும் ஓய்வுநிலை. (உயி)

diastole - இதயவிரிவு: இதயச் சுழற்சியின் ஒரு பகுதி. இதில் இதயக் கீழறைகளில் குருதி நிரம்பும். (உயி)

diatom - டயட்டம் 1.ஈரணு: ஈரணுக்களைக் கொண்ட மூலக்கூறு. எ-டு. குளோரின் 2. செம்பாதியம்: ஓரணு அமைப்புடைய பாசி, மிதக்கும் தாவரத்தின் பெரும்பகுதி. உணவுச் சங்கிலியில் சிறப்பிடம் பெறுவது. (உயி)

diazotization - டையசோவாக்குதல்: நறுமண அமைப்பின் (அனிலைன்) குறைந்த வெப்பநிலையில் நைட்டிரசக் காடியோடு வினையாற்றுதல். (வேதி)

dicentric - இருமையப்படி: இருமையப்படிகளைக் கொண்ட நிறப்புரி. (உயி)

dichasium - இருகிளைக் கொத்து: முடிவற்ற பூக்கொத்தின் ஒரு வகை. (உயி)

dichlamydeous - டைகிளமீடியஸ் இதழ்வட்டப் பூ: புல்லிவட்டம், அல்லிவட்டம் ஆகிய இரண்டையும் கொண்ட பூ. (உயி)

dichromate - டைகுரோமேட் இருகுரோமேட்: இருகுரோமேட்டு இரு குரோமிகக் காடி உப்பு. இரு குரோமிய அணுக்களைக் கொண்டது. (வேதி)

dicotyledonae - இரு வித்திலைத் தாவரங்கள்: இரு விதையிலைத் தாவரங்கள். விதை உறை முடிய தாவரங்களின் ஒரு பிரிவு. கருவில் இரு விதையிலைகள் இருக்கும். வலைப்பின்னலுள்ள இலைகள். பூப்பகுதிகள் நான்கு அல்லது அவ்வைந்து என இருக்கும். எ-டு: அவரை, துவரை. (உயி)

dielectric - மின்கடத்தாப் பொருள்: ஒரு மின்தேக்கியில் கடத்தும் பரப்பைப் பிரிக்கும் மின்கடத்தாப் பொருள். (இய)

diet - உணவு: ஊட்டத்தைத் தருவது. சமவீத உணவென்பது 3000 கலோரி வெப்பத்தைத் தருவது. 2. பத்திய உணவு: நோயின் பொழுது உண்ண வேண்டிய உணவு. (உயி)

difference - வேறுபாடு: வேறுபடும் வெப்பநிலை வேறுபாடு. வகை: கட்ட வேறுபாடு. ஒ. variation. (இய)

differential calculus - வகை நுண்கணிதம்: பா. calculus.

diffraction - விளிம்பு விளைவு: அலைவிளைவு. ஒரு தடையின் விளிம்புகளில் அலைகள் வளைந்து அதற்கப்பால் தடையின் நிழல் பகுதிக்குச் செல்லும் நிகழ்ச்சி விளிம்பு வளைவு ஆகும். இந்நிகழ்ச்சி எல்லா அலைகளிலும் உற்று நோக்கப்பட்டுள்ளது. (இய)

diffraction fringes - விளிம்பு விளைவு வரிகள்: தடையின் நிழல் பகுதிகளுக்கருகில் சில வரிகள் தென்படும். இவற்றின் பொலிவு சிறுமம் பெருமம் என மாறி மாறியுள்ளது. இவை நிழல் விளிம்புக்கு இணையாக உள்ளன. இவையே விளிம்பு வரிகள். (இய)

diffraction grating - விளிம்புவிளைவுக் கீற்றணி: ஒரு கண்ணாடித் தட்டே இதன் இயல்பான வடிவம். இதில் ஒன்றுக் கொன்று இணையாக வரிகள் கீறப்படும். ஒவ்வொரு வரியின் விளிம்புகளிலும் விளிம்பு விளைவு, ஒளிக் கோலங்களையும் வேறுபட்ட கோணங்களில் கறுப்பு வரிகளையும் உண்டாக்கும். வரி இடைவெளி அலைநீளத்தைப் பொறுத்தது. எனவே, விளிம்புவிளைவுக் கீற்றணிகள் படு ஒளியின் நிறமாலைகளை உண்டாக்கப் பயன்படுபவை. (இய)

diffusion - விரவல்: 1. அதிக செறிவுள்ள இடத்திலிருந்து குறைந்த செறிவுள்ள இடத்திற்கு மூலக்கூறுகள் செல்லுதல் - வெளிப் பரவல். கரைபொருள் கரைப்பானில் கரைதல். 2. கரட்டுப் பரப்பினால் ஒளிக்கற்றை சிதறல் 3. அடிப்படைத் துகள்கள் பருப்பொருள் வழியே செல்லுதல். இந்நிலையில் சிதறல் நிகழ்தகவு அதிகமாகவும் பற்றும் நிகழ்தகவு குறைவாகவும் இருக்கும். பா. diffusionpump, reflection, refraction. (இய)

diffusion pump - விரவல் எக்கி: அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் வெற்றிட எக்கி. இதில் எண்ணெய் அல்லது பாதரச ஆவி பயன்படுவது. (இய)

digestion - செரித்தல்: செரிமானம், வளர்சிதை மாற்றத்தில் ஆக்கம் பெறும் எளிய கூட்டுப் பொருள்கள், அரிய உணவுப் பொருள்களிலிருந்து நொதி மாற்றத்தின் மூலம் ஏற்படுபவை. (உயி)

digit - 1.விரல்: கைவிரல், கால்விரல். (உயி) 2. எண்: 1,2,3... (இய)

digital - எண்ணிலக்க:

digital camera - எண்ணிலக்க ஒளிப்படப்பெட்டி:

digital computer - எண்ணிலக்க கணிப்பொறி: பா. computer.

digital data - எண்ணிலக்க தகவல்.

digital display - எண்ணிலக்க காட்சிப்பாடு: ஒர் அளவீட்டில் எண்களைத் திரையில் காட்டுதல். கணிப்பொறியில் நடைபெறுவது. (இய)

dihybrid - இரட்டைக் கலப்பினம்: இரு அமைவிடங்களில் வேற்றக நிலையிலுள்ள கலப்பினம்.

dilation - விரிதல்: பருமனில் அதிகமாதல். எ-டு. கண்மணி விரிதல். (உயி)

dilute - நீர்த்த: நீர் சேர்ந்தது. எ-டு. நீர்த்த கந்தகக் காடி. அடர்கந்தகக் காடியில் நீரைச் சேர்த்தல். ஒ. concentrated. (வேதி)

dilution - நீர்க்கச் செய்தல்: விளாவுதல், குறிப்பிட்ட அளவு கரைபொருளைக் கரைக்கும் கரைப்பானின் பருமன். (வேதி)

dimensions - பருமன்கள்: பரிமாணங்கள், இவை அடிப்படை அலகுகளான நிறை, நீளம், காலம் ஆகியவற்றின் அடுக்குக் குறிகளை (பவர்ஸ்) எவ்வளவு உயர்த்துகிறோம் என்பதைக் குறிப்பது. எ-டு. இயற்பியல் அளவு பருமன்: நீளம் x நீளம் x நீளம். பரும வாய்பாடு. நீளம்3 (V=L x L x L = L3)

dimer - இருபடிச் சேர்மம்: இரு மூலக்கூறுகள் இணைவதால் உண்டாகும் கூட்டுப் பொருள். எ-டு. அலுமினியக் குளோரைடு. (வேதி)

dimethyl ether - இருமீத்தைல் ஈதர்: (CH3)2O. நீரில் அரிதில் கரையக்கூடிய வளி, குளிர்விக்கும் பொருளாகவும் குறை வெப்பநிலைக் கரைப்பானாகவும் பயன்படுவது. (வேதி)

dimorphism - ஈருருவத் தோற்றம்: ஒரே வகையின் இரு தனி உயிரிகளுக்கிடையே நிறம், வடிவம், அமைப்பு, அளவு முதலியவற்றில் காணப்படும் வேற்றுமை. எ-டு. நீர்க்காக்கைக்கால் என்னும் தாவரத்தில் காற்றிலுள்ள இலைகளும் நீரில் மூழ்கிய இலைகளும். (உயி)

dinitrogen oxide - நைட்ரஜன் ஆக்சைடு: N2O. நிறமற்ற வளி. வேறுபெயர் நைட்ரஸ் ஆக்சைடு. மயக்க மருந்து. சிரிக்க வைக்கும் வளி என்றும் பெயர். (வேதி)

dinosaur - கொடுப்பல்லி, இடிபல்லி: அற்றுப்போனது. மிகப் பழங் காலத்தது. நீளம் 25 மீ. நிலத்தில் வாழ்ந்த எடுப்பான விலங்கு, சில இருகாலிகள், ஏனையவை நாற்காலிகள். (உயி)

diode - இருமுனைவாய்: இது எதிர்மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக்குகிறது. எதிர் மின்சாரம் நேர்மின்சாரமாவதற்கு மின் திருத்தல் (ரெக்டிபிகேஷன்) என்று பெயர். (இய)

dioecious - ஈரில்ல நிலை: ஆண், பெண் பூக்கள் தனித்தனி தாவரங்களில் அமைந்திருத்தல்: பனை, ஈச்சை. (உயி)

dioptre - டயாப்டர்: D. அலகுச் சொல். வில்லை விலகுதிறன் அலகு. 0.5 மீட்டர் குவியத்தொலைவிலுள்ள ஒரு வில்லையின் திறன் 1/0.5 = 2 டயாப்டர்கள். குவிக்கும் வில்லையின் மதிப்பு + விரிக்கும் வில்லையின் மதிப்பு. இத்திறன் ஒரு மீட்டருக்கு இத்தனை ரேடியன் என்று கூறப்பெறும். (இய)

dioxide - ஈராக்சைடு: இரு உயிர் வளி அணுக்களைக் கொண்ட கூட்டுப் பொருள். எ-டு. கரி ஈராக்சைடு. (வேதி)

dip,angle of - சாய்வுக்கோணம்: புவி மேற்பரப்பில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள கிடைத்தளத்திற்கும் புவிக்காந்தப் புலத்திற்கும் இடையிலுள்ள கோணம். சாய்வுமானியால் அளக்கப்படுகிறது. (இய)

diphtheria - தொண்டை அடைப்பான்: தொற்றும் கொடிய நோய் குச்சியங்களால் உண்டாவது. இதனால் மேல் மூச்சு வழிப் பரப்பில் சாம்பல் நிறப் போலிப் படலம் உண்டாகும். தொண்டையில் வலியும் வீக்கமும் இருக்கும். முச்சுத் திணறலும் காணப்படும். குச்சியங்களால் உண்டாகும் நச்சுகள் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றைத் தாக்குவதால் இந்நோய் கடுமையானது. இதற்குத் தடுப்பு மருந்துகள் உள்ளன. (உயி)

dipleurula - இருமருங்கிளரி: தொடக்ககால முட்தோலிகளின் கற்பனை வடிவ இளரி. தடையின்றி நீந்தக்கூடியது. இருபக்கச்/சமச்சீருள்ளது. ஒ. pluteus. (உயி)

diploblastic - இருபடையுடைய: ஈரடுக்கு உயிரணுக்களைக் கொண்ட உயிரி. அதாவது, புறப்படை அகப்படை என்னும் இரு அடுக்குகள் மட்டுமே உள்ள உடலைக் கொண்ட விலங்கு அய்ட்ரா. (உயி)

diploid - இருமம்: ஓர் உயிரணு அல்லது உயிரி இரட்டைப்படை எண் நிறப்புரிகளைக் கொண்டிருத்தல்.

diplopia - இரட்டைப் பார்வை: கண் குறைபாடு. ஒரு பொருள் இரண்டாகத் தெரிதல். (உயி)

diplotene - கலப்புநிலை: ஒடுங்கல் பிரிவின் முதல் நிலையில் காணப்படும் நிலை. பா. meiosis. (உயி)

dipnoi - நுரையீரல் மீன்கள்: நன்னீரில் வாழ்பவை. மூன்று பேரினங்களே உள்ளன. புரடாப்டிரிஸ், நியோசெரட்டோடஸ், லெப்பிடாப்டிரஸ். (உயி)

dipolar - இருமுனை கொண்ட: ஒரு மூலக்கூறில் தெளிவான மின்னேற்ற நிலைகள் பிரிக்கப்பட்டிருத்தல். அவை நேர்மின்னேற்றமும் (+) எதிர்மின்னேற்றமும் (-) ஆகும். (இய)

direct current, d.c. - ஒரு திசை மின்னோட்டம்: வேறுபெயர் நேர் மின்னோட்டம், பா. current.

disaccharide - இருமச் சர்க்கரைடு: இருமச் சர்க்கரை. இரு ஒருமச் சர்க்கரைக் கூறுகள் கொண்டது: சுக்ரோஸ், மால்டோஸ். (உயி)

disc drive memory - வட்டு இயக்க நினைவகம். (கணி)

disc siren - வட்டுச்சங்கு: தொழிற் சாலைகளிலும் பொது இடங்களிலும் சங்கொலி எழுப்புங்கருவி. மின்சாரத்தால் இயங்குவது.

disease - நோய்: உடல்உறுப்பு அல்லது உறுப்பின் வேலை, இயல்பாகத் தன் நிலையிலிருந்து வேறுபடுதல். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட அறிகுறி உண்டு. எ-டு. அடிசன் நோய். என்புருக்கி நோய் பா. ailment. (உயி)

disinfectant- தொற்று நீக்கி: நோய் நுண்ணங்களை நீக்கும் வேதிப் பொருள்: சலவைத்தூள். (வேதி)

dislocation - மூட்டுநழுவல்: மூட்டுகள் தம் இயல்பான இடத்திலிருந்து விலகல். கட்டுப்போடுதலே சிறந்த வழி. (உயி)

dispersion - ஒளிச்சிதறல்: கலப்பு அலைநீளமுள்ள ஓர் ஒளிக்கதிரை, அதன் பகுதிகளாகப் பிரித்தலுக்கு ஒளிச்சிதறல் என்று பெயர். இக்கதிர் முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் பொழுது, அதன் பகுதிகளாகப் பிரிகிறது. இதற்கு நிறப்பிரிகை என்று பெயர். இதனால் கிடைக்கும் முழு நிறத் தொகுதி நிறமாலை எனப்படும். இம் மாலையில் கீழிருந்து மேலாக வரிசையாகப் பின்வரும் நிறங்கள் இருக்கம். ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு. (விப்ஜியார்) இம்மாலையால் உண்டாவதே வானவில். (இய)

displacement - இடப்பெயர்சி: இரு புள்ளிகளுக்கிடையே உள்ள நேர்க்கோட்டுத் தொலைவு. இஃது இரு புள்ளிகளுக்கிடையே உள்ள குறைந்த தொலைவையும் திசையையும் குறிக்கும். (இய)

displacement action - இடப்பெயர்ச்சி வினை: ஒர் அணு அல்லது அணுத் தொகுதி ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு அணு அல்லது அணுத்தொகுதியை இடப்பெயர்ச்சி செய்தல். துத்தநாகம் + அய்டிரோ குளோரிகக் காடி → துத்தநாகக் குளோரைடு + அய்டிரஜன்.

Zn+ 2HCI → ZnCl2 + H2

displacement, downward, air - காற்றின் கீழ்முகப் பெயர்ச்சி: காற்று கீழ் சென்று இலேசான வளி மேலே வருதல்; அம்மோனியா. (வேதி)

displacement, upward, air - காற்றின் மேல் முகப் பெயர்ச்சி: காற்று மேல் சென்று கனவளி கீழ் வருதல்: குளோரின். (வேதி)

displacement, downward, water - நீரின் கீழ்முகப் பெயர்ச்சி: வளிமேல் சென்று நீரைக் கீழ்த்தள்ளுதல்: நீர்வளி (வேதி)

displacement pump - இடப்பெயர்ச்சி எக்கி: வேதி நிலையங்களைச் சுற்றியமைந்து நீர்மங்களையும் வளிகளையும் அகற்றப்பயன்படுங் கருவி. (வேதி)

display behaviour - வெளிப்பாட்டு நடத்தை: ஒலி, தோரணை, இயக்கம் முதலிய செயல்களில் விலங்குகள் தம் இனத்தைச் சார்ந்த விலங்குகளுக்குக் குறிப்பிட்ட செய்தியைத் தெரிவித்தல். எ-டு. பறவைக்காதல் விளையாட்டு. (உயி)

dissimiiation - தன்வய நீக்கம்: வளர்சிதை மாற்றத்தின் சிதை பகுதி. இதில் திசுக்களில் உணவுப் பகுதிகள். உயிர்வளி ஏற்றம் பெறுவதால், வேலை செய்வதற்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கிறது. (உயி)

disproportionation - வேறுபடு வினை: ஒரே பொருளின் ஏற்றமும் இறக்கமும் ஒரே சமயம் நடைபெறும் வினை. செம்புக்குளோரைடு - செம்பு + செம்பகக் குளோரைடு. 2CuCl→Cu+CuCl2. (வேதி)

dissociation - பிரிதல்: ஒரு மூலக்கூறு இரு முலக்கூறுகளாகவும் அணுக்களாகவும் படி முலிகளாகவும் பிரிதல். இவ்வினையின் நடுநிலைமாறிலி பிரிகைமாறிலி ஆகும். (வேதி)

distance - தொலைவு: இரு புள்ளிகளுக்கிடையே உள்ள வழி. எஸ்ஐ அலகு மீட்டர். இது ஒரு நேர்க்கோடாக அளக்கப்பட வேண்டியதில்லை. இது அளவு சார் அளவாகும். ஆனால், இடப் பெயர்ச்சி திசைச்சாரி அளவாகும். ஒ speed, velocity.

distance of distinct vision - தெளிவுப் பார்வைத் தொலைவு: 25 செ.மீ. தொலைவிலுள்ள பொருள்கள் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். இத்தொலைவே தெளிவுப் பார்வைத் தொலைவு. இத்தொலைவு குறையுமானால், பொருள்களைப் பார்க்க வில்லையின் பருமன் அதிகமாக்க வேண்டும். (உயி)

distance ratio - தொலைவு வீதம்: நேர்விரைவுத் தகவு, குறிப்பிட்ட நேரத்தில் திறனால் நகர்ந்த தொலைவுக்கும் அதே நேரத்தில் எடையினால் நகர்ந்த தொலைவுக்குமுள்ள வீதமாகும். இது எந்திரச் சார்பாகக் கூறப் பெறுவது.(இய)

distillation - வடித்துப் பகுத்தல்: ஒரு நீர்மக் கரைசலைப் பிரிக்கும் முறை. இதில் நீர் ஆவியாகி, ஆவி மீண்டும் குளிர்வதால் கரைசலிலுள்ள நீர்மம் தனியாகப் பிரிகிறது. இதற்கு வடிபொருள் என்று பெயர். (வேதி)

distilled water - வடித்த நீர்: காய்ச்சி வடித்தல் மூலம் துய்மை செய்யப்பட்ட நீர் ஊசி மருந்து கலக்கவும் வேதி ஆய்வு செய்யவும் பயன்படுவது. (வேதி)

disulphide - இருசல்பைடு: ஒரு மூலக்கூறு கந்தகத்தில், ஈரணுக்கள் உள்ள சல்பைடு. எ-டு. கரி இரு சல்பைடு. இச்சல்பைடில் கந்தகம் கரையும். (வேதி)

diurectic - நீர்ப்பெருக்கி: சிறு நீரகத்தின் செயலை ஊக்குவிக்கும் கூட்டுப்பொருள். (உயி)

diuresis - நீர்ப்பெருக்கு: சிறுநீரகத்தினால் சிறுநீர் அதிகமாகச் சுரக்கப்படுதல். இது மனஎழுச்சியினால் இயற்கையாக இருக்கலாம். அல்லது நச்சுக்கலப்பின் பொழுது, அதற்காக மருந் துண்ணும் நிலையில் செயற்கை யாகவும் இருக்கலாம். (உயி)

diurnal - பகற்சுறுசுறுப்பு: பகற்பொழுதில் செயலாக்கம் மிகுதியாக இருத்தல். எ-டு. தேனீக்கள். (உயி)

diverticulum - மருங்குபை: பை அல்லது குழாய் போன்ற புறவளர்ச்சி. உள்ளுறுப்பிலிருந்து கிளம்புவது. எ-டு. உணவு வழியிலுள்ள பெருங்குடல்வாய், குடல்வால்.

division - பிரிவு: தாவர வகைப்பாட்டில் பெருந்தொகுதிகளில் ஒன்று. பிரிவுக்கடுத்த துணைப்பிரிவு. எ-டு. குளோரோபைட் பசுந்தாவரங்கள். (உயி)

division of labour - வேலை பகிர்வு: சமூகப்பூச்சிகளிடையே அமைந்துள்ள பணிப்பகிர்வு. அரசி இனப்பெருக்கம் செய்தல், வேலைக்காரர்கள் உணவு தேடுதலைக் கவனித்தல். இஃது உயிர் மலர்ச்சியில் ஒரு முன்னேற்ற நிலையாகும். மனிதன் தோற்றுவித்த நிறுவனங்களில் இது சிறப்பாக அமைந்துள்ளது. (உயி)

DLT, Digital Linear Tape - டிஎல்டீ, எண்ணிலக்க நீள்நாடா: ஒரு சேமிப்புக் கருவியமைப்பு. (கணி)

dominance - ஓங்குதிறன்: ஒரு பண்பை ஒடுக்கும் மற்றொரு ஓங்கு பண்பு. இவ்விரு பண்புகளுக்குமுரிய மரபணுக்கள் நிறப்புரியில் இருக்கும். (உயி)

DNA, deoxyribo nucleic acid - டிஎன்ஏ, டிஆக்சிரிபோ நியூக்ளிக் காடி: நிறப்புரிகளில் முதன்மையாக காணப்படும் உட்கருவுள்ள காடி. வாட்சன் கிரிக் மாதிரி இதனை நன்கு விளக்குகிறது. (உயி)

இவ்வியத்தகு மூலக்கூறுவின் இரட்டைச் சுருள் வடிவம் நாடா போன்றுள்ளது. இரு சுருள்களும் பாஸ்பேட் - சர்க்கரை பாஸ்பேட் சர்க்கரைத் தொடர்களைக் குறிப்பவை. இச்சுருள்களைச் சேர்க்கும் இணைப்புகள் பியூரைன் பைரிமிடின் இணைகள் ஆகும். புகழ் வாய்ந்த வாட்சன் கிரிக் மாதிரியாகும் இது. (உயி)

DNA sequencing - டிஎன்ஏ தொடராக்கம்: இதன் மூலம் மரபணுக்களில் பொதிந்துள்ள செய்தி என்ன என்பதை அறிய இயலும். இதைப் புனைந்தவர்கள் டாக்டர் மாக்சம், கில்பர்ட் (அமெரிக்கா) டாக்டர் சேங்கர் இங்கிலாந்து. (மரு)

donor - தருநர்: தன் குருதி, திசு அல்லது உறுப்பினைப் பிறருக்குத் தருபவர். இதனைப் பெறுபர் பெறுநர் ரெசிபியண்ட். (உயி)

donor species - தருநர் வகைகள் (உயி)

doping - ஆற்றல் பெருக்கல்: குறைக்கடத்தியுடன் மாசினைச் சேர்த்து அதன் மின்கடத்தும் திறனைக் கட்டுப்படுத்துவதற்கு ஆற்றல் பெருக்கல் என்று பெயர். சேர்க்கப்படும் மாசுகள் பாக வரம், பொரான். (இய)

Doppler effect - (டாப்ளர் எபக்ட்) டாப்ளர் விளைவு: பொதுவாக, ஒலி மூலத்திற்கும் ஒலி பெறுவிக்கும் இடையே ஓர் ஒப்புமை இயக்கம் உண்டு. இதனால் ஒலி அதிர்வியைவில் மாற்றம் தோன்றும். இவ்வாறு ஏற்படும் மாற்றம் உண்மை நிலையன்று. இந்நிலையில் தோன்றும் அதிர்வெண் டாப்ளர் விளைவாகும். நாம் அமர்ந்திருக்கும் புகைவண்டி ஒடிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்ப்பக்கத்திலிருந்து வரும் வண்டியின் ஒலி அதிர்வியைவு அதைவிடப் பெரிய அளவில் உயர்ந்தும் வண்டி கடந்தபின் அவ்வியைவு இறங்கியும் காணப்படும். ஆனால், நாம் செல்லும் வண்டியில் அவ்வாறு இயைபு மாற்றமோ இறக்கமோ இல்லை. ரேடாரில் பயன்படுவது. (இய)

dormancy - விதையுறக்கம்: சேமித்துப் பாதுகாக்கப்பெற்ற விதையின் முளைக்கரு நீருடன் தொடர்பு கொள்ளும்வரை செயலற்றிருக்கும் நிலை. இந்நிலை சூல் விதையாக மாறியதிலிருந்து விதை ஊன்றப்படும் வரை இருக்கும். (உயி)

dorsal - முதுகுப்புறம்: உயிரியலில் சமச்சீர் தொடர்பாகப் பயன்படும் கலைச்சொல். ஒ. ventral. (உயி)

dorsifixed - இணைந்த: பின்புறம் இணைந்த மகரந்தப் பையின் பின்புறத்தில் (முதுகுப் புறத்தில்) உள்ள ஏதாவது ஒரு பகுதியில் மகரந்த இழை பொருந்தி இருத்தல். (உயி)

double bond - இரட்டைப் பிணைப்பு: ஒரு கூட்டுப்பொருளில் ஈரணுக்களை இணைக்கும் இரு உடன் இணைப்புகள். இதில் ஒரு பிணைப்பு சிக்மா பிணைப்பு. மற்றொன்று பை பிணைப்பு. (வேதி)

double decomposition - வேதி இரட்டைச் சிதைவு: (வேதி)

double fertilization - இரட்டைக் கருவுறுதல்: இது சில இருவிதைத் தாவரங்களில் நடைபெறுவது. மகரந்தக் குழல் உட்கருக்களில் ஒன்று முட்டையோடும் மற்றொன்று முனை உட்கருவோடும் சேர்வதால் முறையே கருவணுவும் மும்மய உட்சூழ்த்தசையும் உண்டாகின்றன. பா. (உயி)

double helix - இரு திருகுச் சுருள்: ஒரே அச்சில் ஒரே திசையில் இரு ஒத்த பல படிச் சங்கிலி சுருண்டிருக்கும் மூலக்கூறு. டி.என்.ஏ. (உயி)

double salt - ஈருப்பு: இரு உப்புகளின் கூட்டுப் பொருள். இரு உப்புகளும் சேர்ந்த கரைசலைப் படிகமாக்க இவ்வுப்பு கிடைக்கும். படிகாரம். இது பொட்டாசியம் சல்பேட்டும், அலுமினியச் சல்பேட்டும் சேர்ந்தது. (வேதி)

downsize - கீழளவாக்கு: ஓ. countdown. driers - உலர்த்திகள்: வளிகள் முதலிய செய்பொருள்களிலுள்ள ஈரத்தை உறிஞ்சப் பயன்படும் வேதிப்பொருள்கள். எ-டு. அடர் கந்தகக் காடி, கால்சியம் ஆக்சைடு, பாசுவர ஐந்து ஆக்சைடு. (வேதி)

drowning - நீரில் மூழ்கல்: நீந்தத் தெரியாமலோ நீரோட்ட இழுப்பினாலோ நீருக்கு அடியில் சென்று முச்சு நிற்றல். இதற்குச் செயற்கை மூச்சு அளிக்க வேண்டும். (உயி)

dry cell - பசைமின்கலம்: உலர் மின்கலம். இது திருந்திய லெக்லாஞ்சி மின்கலமே. நேர்மின்வாய் கரி, எதிர்மின்வாய் துத்தநாகம். முனைப்படுதல் நீக்கி மாங்கனீஸ் ஈராக்சைடு, துண்டும் நீர்மம் நவச்சாரப் பசை, துத்த நாகத்திற்கடுத்துப் பசைக்கலவை யுள்ளது. இதில் பாரீஸ் சாந்து, துத்ததாகக் குளோரைடு, நவச்சாரம் ஆகியவை உள்ளன. இதற்கடுத்து ஒரு துணிப்பையில் தூள் கலவை உள்ளது. இதில் துத்தநாகக் குளோரைடு, கரித்துள், நவச்சாரம், மாங்கனீஸ் ஈராக்சைடு ஆகியவை சேர்ந்த கலவை உள்ளது. பசை எளிதில் உலர்ந்துவிடாமலிருக்கவும் பையிலுள்ள கலவை கீழே சிந்தாமல் இருக்கவும் கலத்தின் வாய்ப்பகுதி கெட்டித்தாரினால் முடப்பட்டிருக்கும். உள்ளே உண்டாகும் வளிகள் வெளிச்செல்லக் கரித்தண்டுக்கருகில் ஒரு சிறிய துளை உண்டு. இதன் மின்னியக்கு விசை 15 ஒல்ட் கைவிளக்கு வானொலி முதலியவற்றில் பயன்படுவது.

dry distillation - உலர் வடித்துப் பகுத்தல்: ஒரு கெட்டிப் பொருளை வெப்பப்படுத்த ஆவியாகும். அதைச் சுருக்க மீண்டும் நீர்மமாகும். இதுவே உலர் வடித்துப் பகுத்தல். எ-டு. கால்சியம் அசிடேட்டை உலர் வடித்துப் பகுக்க அசிடோன் கிடைக்கும். (வேதி)

dryer - உலர்த்துவான்: ஆவியாதல் மூலம் ஒரு திண்மத்திலிருந்து நீர்மத்தை நீக்கப் பயன்படுங் கருவி. வேதிமுறைகளில் பயன்படுவது. (வேதி)

dry ice - உலர்பனிக்கட்டி: 80° செ.யில் உள்ள திண்மக்கரி ஈராக்சைடு. வண்டிகளில் செல்லும் உணவுப் பொருள்களைக் குளிர்ச்சியூட்டிப் பாதுகாக்கப் பயன்படுவது. (வேதி)

drying oil - உலர்த்தும் எண்ணெய்: தாவர அல்லது விலங்கெண்ணெய்கள். காற்றில் பட்டு உறைபவை. இயற்கை எண்ணெய்கள். வண்ணக் குழைவுகளில் பயன்படுபவை. (வேதி)

ductility - கம்பியாக நீளுந்திறன்: செம்பு முதலிய உலோகங்களைக் கம்பியாக இழுக்கலாம். பொதுவாக, உலோகப் பண்புகளில் இதுவும் ஒன்று. (வேதி)

duciess glands - நாளாமில்லாச் சுரப்பிகள்: குழாய் இல்லாமல் தம்முடைய சுரப்புகளை நேரடியாகக் குருதியில் சேர்க்கும் சுரப்பிகள். எ-டு. தைராய்டு. (உயி)

Dulong and Petit's law - டியூலாங் பெட்டிட் விதி: திண்ம நிலையில் இருக்கும் ஒரு தனிமத்தின் வெப்ப எண், அதன் அணு எடை ஆகியவற்றின் பெருக்குத் தொகை ஒரு மாறா எண். அணு எடை x வெப்ப எண்= 2.68 104 அணு எடை 20க்கு மேலுள்ள பல உலோகங்கள் இவ்விதிக்குட்படுபவை. கரி, பொரான், சிலிகான் முதலிய உலோகங்கள் இவ்விதிக்கு உட்படுவதில்லை. (வேதி)

Dumas method - டியூமாஸ் முறை: ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள நைட்ரஜன் அளவைக் காணும்முறை. (வேதி)

duodenum - முன்சிறுகுடல்: சிறுகுடலின் முன் பகுதி. இரைப்பைத் துளையிலிருந்து நடுச்சிறுகுடல் வரையுள்ளது. பா.alimentary canal. (உயி)

duplication - பகர்ப்பாதல்: இரட்டித்தல். மரபணுத் தொகுதியில் (ஜெனோம்) நிறப்புரித் துண்டுகள் அல்லது மரபணுக்கள் கூடுதலாக அமைதல். (உயி)

duralumin - டியுராலுமின்: இலேசான கடின உலோகக் கலவை. அலுமினியம் 95% செம்பு 4% மக்னீசியம் .5% மாங்கனீஸ் .5% கொண்டது. வானூர்தி, உந்துவண்டிகள் பகுதிகள் செய்யப் பயன்படுதல். (வேதி)

duramater - வன்படலம்: கடினமானதும் தடித்ததுமான புறப்படலம். முதுகெலும்பிகளில் தண்டு வடத்தினையும் மூளையையும் சூழ்ந்து பாதுகாப்பது. பா. (உயி)

duramen - வயிரக்கட்டை: பா. heartwood. (உயி)

duration, plant - தாவரக்காலம்: இதை ஒட்டித் தாவரங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1. ஒரு பருவப் பயிர்கள்: நெல் 2. இருபருவப் பயிர்கள்: முள்ளங்கி 3. பல பருவப் பயிர்கள்: கத்தாழை 4. பல்லாண்டுத் தாவரங்கள்: தாளிப்பனை

Dutch gold - டச்சு பொன்: உலோகக் கலவை. செம்பும் துத்த நாகமும் சேர்ந்தது. பொன்னுக்கு மாற்றாகப் பயன்படுவது. (வேதி)

Dutch liquid - டச்சு நீர்மம்: C2H4Cl2. எத்திலின் இரு குளோரைடு. டச்சு வேதியியலாரால் கண்டுபிடிக்கப்பட்ட மயக்கமருந்து. (வேதி)

dwarfism - குள்ளமை: குன்றிய வளர்ச்சி, மரபணுக் குறைபாட்டினால் உண்டாவது. இதனால் உடல் பகுதிகளின் வீதப்பொருத்தம் மாறும். தாவரங்களில் கிபரலின் குறைபாட்டினால் ஏற்படுவது. குழந்தைப் பருவம் அல்லது காளைப் பருவத்தில் பிட்யூட்டரி குறைவாகச் சுரப்பதால் உண்டாவது. ஒ. gigantism. (உயி)

dwarfstar - குள்ள விண்மீன்: சிறிய விண்மீன். (வானி)

dyad - இரு பிணைப்பணு: படிமூலி அல்லது தனிமம். (வேதி)

dye - சாயம்: தோல், துணி முதலியவற்றை நிறமாக்கும் பொருள். பெரும்பாலான சாயங்கள் தொகுப்புக் கரிமச் சாயங்களே. இவற்றில் மாவே என்பது முதல் சாயம். இது 1856இல் அனிலைனிலிருந்து பெர்கின் என்பவரால் தொகுக்கப்பெற்றது.காடிச் சாயம், காரச் சாயம், தோய் சாயம், நேரடிச் சாயம் எனப் பலவகைப்படும். (வேதி)

dynamics - இயக்கவியல்: விசைகளின் வினையால் எவ்வாறு பொருள்கள் அசைகின்றன என்பதைப் பற்றி ஆராயும் துறை. இயக்கத்தை விரித்துக் கூறுவது. இயக்கத்திற்கும் விசைக்குமிடையே உள்ள தொடர்பையும் இது ஆராய்வது. இயற்பியலின் ஒரு பிரிவு.

dynamite - டைனமைட்: மீவெடியம். ஆற்றல் வாய்ந்த வெடி பொருள். நைட்ரோ கிளிசரினிலிருந்து செய்யப்படுகிறது. இதிலுள்ள ஏனைய பகுதிகள் மரத்தூள், அம்மோனியம் நைட்ரேட். இரண்டாம் உலகப் போரில் அதிகம் பயன்பட்டது. இதனைக் கண்டறிந்தவர் ஆல்பிரட் நோபல்.

dynamo - மின்னியக்கி: மின்னியற்றி மிதிவண்டியிலும் உந்து வண்டியிலும் பயன்படுவது.

dynamometer - ஆற்றல்மானி: ஆற்றல், விசை, திறன் ஆகியவற்றை அளக்குங் கருவி. (இய)

dynatron - நான்வாய்ப் பிறப்பி: நான்கு மின்வாய் வெப்பஅயனித் திறப்பி. தொடர்ந்த அலைவை உண்டாக்கப் பயன்படுவது. (இய)

dynatron oscillator - நான்வாய் அலைவி: நான்கு மின்வாயைப் பயன்படுத்தும் அலை இயற்றி. இதில் நேர்மின்வாய் அழுத்தம் குறையும் பொழுது அதன் மின்னோட்டம் அதிகமாகும். இவ்வாறு அதிகமாகும் அளவுக்கு அதைப் பயன்படுத்த வேண்டும். (இய)

dyne - டைன்: அலகுச் சொல்: விசையின் சார்பிலா அலகு. ஒரு வினாடியில் ஒரு கிராம் நிறையுள்ள பொருள்மீது செயற்படும் விசை ஒரு வினாடிக்கு ஒரு சென்டி மீட்டர் நேர்விரைவை உண்டாக்கும். 1 டைன் = 10-5 நியூட்டன் (இய)

dynode - இயக்குவாய்: இது ஒரு மின்வாய். இதன் முதன்மையான வேலை மின்னணுக்களை இரண்டாம் நிலையாக உமிழ்வதாகும்.(இய)

dysentery - வயிற்றுக் கடுப்பு: குடல் குறைபாடு. அடிக்கடி நீர்மமாக மலம் வெளியேறுதல். இதில் குருதி, சளி முதலியவை இருக்கும். எண்டமீபா, வேதி உறுத்துபொருள்கள் ஆகியவற்றால் ஏற்படுவது. ஒ. diarrhoea. (மரு)

dysprosium - டிஸ்புரோசியம்: Dy. மென்மையான வெள்ளி போன்ற தனிமம். தகடாக்கலாம். அரிய புவித் தனிமங்கள் வகையைச் சார்ந்தது. அல்லது உறிஞ்சியாக அணு உலையில் பயன்படுவது. (இய)

dysteleology - பயனில் உறுப்பியல்: விலங்குகளிலும், தாவரங்களிலும் பயனற்ற உறுப்புகளை ஆராயுந்துறை குடல்வால். பா. арpendiх. (உயி)

dysthesia - உடற்கேடு: உடலில் நோய்ப்பட்ட உள்ள நிலை. பொறுமையின்மை, நலவழிவு முதலியவை இருக்கும். (உயி)

dystrophia - நிறைவிலா ஊட்டம்: ஊட்டக் குறைவு. உடல் நலத்தைப் பாதிப்பது (உயி)

dysuria - நீர்க்கடுப்பு: சிறுநீர் கழிக்கும்பொழுது ஏற்படும் வலி. (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/D&oldid=1039048" இலிருந்து மீள்விக்கப்பட்டது