V

vacancy-வெற்றுப்பாடு: பா. defect (இய)

vaccination - அம்மை குத்துதல்: தடுப்பாற்றலை உண்டாக்க எதிர்ப்புத் தூண்டு பொருளை, உயிர்களிடத்துச் செலுத்துதல். இம்முறையை 1796இல் ஜென்னர் (1749-1823) கண்டறிந்தார். வேறு எதிர்ப்புத்தூண்டு முறைகள் நடைமுறைக்கு வந்து விட்டதால், இம்முறை இப்பொழுது பழக் கத்தில் இல்லை. ஆவைன் குத்து தல் என்றும் கூறலாம். (உயி)

vaccine - ஆவைன்: நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம் ஆவைனை உடலில் செலுத்துவதற்கு ஆவைன் செலுத்துதல் (வேக்சி னேஷன்) என்று பெயர். 1953இல் ஜோனஸ் சால்கு என்பார், சால்க் ஆவைன் என்னும் தடுப்புமருந்தைக் கண்டறிந்தார். இது ஊசி மூலம் செலுத்தும் போலியோ தடுப்பு மருத்தாகும். அண்மையில் உயிருள்ள ஆனால் வலுக்குறைந்த நச்சியங்களைப் பயன்படுத்தி விழுங்கக்கூடிய மாத்திரைகளை உண்டாக்கி யுள்ளனர். இதற்குச் சாபின் ஆவைன் என்று பெயர். இதைக் கண்டறிந்தவர் டாக்டர் ஆல்பர்ட்டு சாபின், போலியோவை ஒழிக்க 1985இல் போலியோ முனைவுத் திட்டம் (போலியோ பிளஸ் புரோகிராம்) அனைத்துலகச் சுழற்சங்கத்தினால் தொடங்கப்பட்ட பெருந் திட்டம். இதனால் இலட்சக் கணக்கில் குழத்தைகள் பயனடைந்தனர். ஆவைன் செலுத்துவதின் முதன்மையான நோக்கம் இதுவே. உடலில் குறிப்பிட்ட நோய்க்கு எதிராக எதிர்ப்பாற் றலை செயற்கையாக உண்டாக் கலாம். பா. cel. (உயி)

vacuole - நுண்குமிழி: உயிரணுவில் உள்ளது. இதில் பாய்மம் நிரம்பியுள்ளது. உயிரணு நீட்சியின் போது, ஊடுபரவலால் அதிக அளவு நீரை உயிரணுக் குமிழி உட்கொள்வதற்கு குமிழி நீர்ப் பருகுதல் (வேக்யோலேஷன்) என்று பெயர். (உயி)

vaccum - வெற்றிடம்: ஒரு வளியைக் காற்றுவெளி அழுத்தத் திற்குக் கீழ்க் கொண்டுள்ள இடம். நிறைவெற்றிடம் பருப் பொருளைக் கொண்டதன்று. மென்வெற்றிடம் (10-2பாஸ்கல்), வன்வெற்றிடம், மீ வெற்றிடம் (10-2 பாஸ்கலுக்குக் கீழ்) என வெற்றிடம் மூன்று வகைப்படும். (இய).

vacuum distillation -வெற்றிட வடித்துப்பகுத்தல்: குறைந்த அழுத்தத்தில் நீர்மங்களை வடிக்கும் முறை. இதனால் கொதிநிலை உயரும் அல்லது தாழும். இது நீர்மக் கலவையைப் பிரிக்கும் முறை. (வேதி)

vacuum metallising -வெற்றிட உலோகப்படிய வைப்பு: பூசும் உலோகத்தை முதலில் ஆவியாக்கி, அந்த ஆவியை மட்ட உலோகத்தின் மீது செலுத்திக் குளிர வைக்கும்பொழுது, பூசும் உலோகம் மெல்லிய படலமாக அதன் மீது படிகிறது. வெப்ப ஆவியாக்கல், எதிர்மின்வாய் உமிழ்வு ஆகிய முறைகளில் செய்யப்படுவது. (வேதி)

Vacuum pump -வெற்றிட எக்கி: ஒரு கொள்கலத்திலுள்ள வளி யழுத்தத்தைக் குறைக்கப் பயன் படும் இழுகுழாய். (இய)

vacuum tube-வெற்றிடக் குழாய்: பா, thermionic valve. (இய)

vagina - புணர்வழி: விலங்குகளின் பெண் பிறப்பு உறுப்புகளில் முட்டை செல்லும் குழல்வழி, இது கருப்பைக்குச் செல்வது. (உயி)

valency -இணைதிறன்: ஒர் அணு மற்றொரு அணுவோடு சேருந்திறன் அல்லது மற்றொரு அணுவை விலக்குந்திறன். இத்திறன் அணுக்களுக்குத் தகுந்தவாறு வேறுபடும். இதை வேறுவகையிலும் கூறலாம். ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஓரணுவுடன் கூடும் நீர்வளி அணுக்களின் எண்ணிக்கையின் இருமடங்காகும். இது ஒரு முழு எண். எ.டு நீர்வளி. 1. உயிர்வளி 2. நைட்ரஜன் 3. கரி 4. பாசுவரம் 5. கந்தகம் (வேதி)

valve - திறப்பி: தடுக்கிதழ். ஒர் உறுப்பு அல்லது எந்திரத்தில் ஒரு பக்கம் மட்டுமே ஒரு சமயத்தில் திறக்கும் அமைப்பு. அதாவது ஒரு சமயம் திறக்கும் மற்றொரு சமயம் மூடும். எ-டு இதயத்தில் ஈரிதழ், மூவிதழ் திறப்பிகள், அகக்கனற்சி எந்திரத் தில் உள்விடு வெளிவிடு திறப்பி கள். (ப.து)

valvate - தொடு இதழமைவு: புல்லிகள் அல்லது அல்லிகள் பக்கம் வெளியே பிதுங்காமல் அமைந்திருத்தல். அதாவது, அவை ஒரே வட்டத்தில் அமைந் திருக்கும். எ-டு செம்பருத்தி. பா. aestivation (உயி)

vanadium -வெனாடியம்: V. கடினமும் உறுதியும் வாய்ந்த உலோகம், இது வெனாடியம் எஃகுவும் அதன் சேர்மங்களும் செய்யப் பயன்படுதல். (வேதி)

Van Allen radiation belts -வேன் ஆலன் கதிர்வீச்சு வளையங்கள்: 1958இல் நிலா எக்ஸ்புளோரர் 1 இவற்றைப் புலப்படுத்தியது. 1959இல் பயனியர், எக்ஸ்புளோரர் நிலாக்கள் அளித்த தகவல்களை அமெரிக்க இயற் பியலார் ஜேம்ஸ் வேன் ஆலன் என்பார் (1914- ) தம் குழுவினருடன் ஆராய்ந்து, இவ்வளையங்கள் இருப்பதை உறுதி செய்தார். இது புறவளையம், அகவளையம் என இரண்டாலானது. புவிமேற்பரப்பிலிருந்து 40,000 மைல் வரை பரவியுள்ளது. புவியிலிருந்து 1200 மைல் தொலைவில் உள்ளது. இது வானவெளி ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளில் ஒன்று. (இய)

Van der Waals equation-வேண்டர்வால் சமன்பாடு: உண்மை வளிகளின் நிலைபற்றிய சமன்பாடு.

(P+a/Vm2)(Vm-b)=RT

P- அழுத்தம். Vm- மோலார் பருமன்.T-வெப்ப இயக்க வெப்பநிலை. a,b- குறிப்பிட்ட பொருள் மாறிலிகள். R- வளி மாறிலி. (இய)

Van der Waals Force -வேண்டர் வால் விசை: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவர்ச்சி விசை, வேண்டர்வால் (1837-1923) பெயரால் அமைந்தது. (இய)

vane - பரப்பு, தகடு: 1. பறவையின் உடலிறகுப் பரப்பு 2. வானிலைச் சேவல். காற்றுத் திசையைக் காட்டும் சுழலும் தகடு. (ப.து)

vapour -ஆவி: வளிநிலைப் பொருள்.பனியாகவும் புகையாகவும் இருக்கும். வெப்பநிலை மாறாமல் அழுத்தத்தை அதிகமாக்கி இதை நீர்மமாக்கலாம். (இய)

vapour density -ஆவி அடர்த்தி: ஒரே பருமனுள்ள அய்டிரஜன் பொருண்மைக்கும் குறிப்பிட்ட பருமனுள்ள பொருளின் பொருண்மைக்கும் உள்ள வீதம் ஒத்த வெப்பநிலையிலும் அழுத் தத்திலும் அளக்கப்படுவது. அய்டிரஜன் அடர்த்தியினை 1 என்று கொள்ள, வளியின் சார்பு மூலக்கூறு பொருண்மையின் பாதிக்கு இவ்வீதம் சமமாகும். (1 :1/2) (வேதி)

vapourisation -ஆவியாக்கல்: இது ஒரு முறை. இதில் நீர்மம் அல்லது திண்மம் வெப்பத்தினால் வளி அல்லது ஆவிநிலைக்கு மாற்றப் படுகிறது. பா. (இய)

vapour pressure -ஆவியழுத்தம்: நீர்மம் அல்லது திண்மத்தோடு சமநிலையிலிருக்கும் ஆவியின் அழுத்தம். (இய)

variety - மாறுவகை: துணைச் சிறப்பின மட்டத்திற்குக் கீழுள்ளது. பா. cultivar. (உயி)

vascular bundle -குழாய்த்திரள்: பா. Vascular system. (உயி)

vascular cambium -குழாய் அடுக்கியம்: குழாய் அடுக்குத்திசு. பா. intrafascicular cambium. (உயி) vasa vasorium -குழல்நுண்குழல்: தமனி அல்லது சிரைச் சுவர்களின் நுண்ணிய ஊட்டக் குழாய்கள். (உயி)

vas differens -விரைகுழல்: விரையிலிருந்து (டெஸ்டில்) வெளியே செல்லும் பக்கக்குழாய்களில் ஒன்று. இது எண்ணிக்கையில் இரண்டு. (உயி)

vasectomy -விந்துகுழல் துணுக்கம்: விந்து குழல் ஒவ்வொன்றின் பகுதியை அறுவை மூலம் நீக்குதல். இதனால் விந்து நீரில் விந்தணு சேர்வது தடுக்கப்படுகிறது. புணர்ச்சியின்பொழுது இது கருப்பைக்குச் செல்வதால், கருவுற வாய்ப்பில்லை. இது ஆண்களுக்குரிய குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளுள் முக்கியமானது. (மரு)

vas efferens -விந்து குழலி: இரு சிறுகுழல்கள். விரையின் விந்து குழலை விரை குழலியோடு இணைக்கும் நுண்ணிய குழல். (உயி)

vat dyes - தொட்டிச் சாயங்கள்: கரையாச்சாயங்கள். நீர்த்த காரத்தில் கரையும் வழிப்பொருள்களில் இவை சேர்த்து முதலில் ஒடுக்கப்படும். இந்நிலைமையில் சில இழைகளில் ஏறும் - பருத்தி, கரைசல் சாயந்தோய்க்க வேண்டிய பொருளோடு சேர்க்கப்படும். கரையாச் சாயம் காற்று வெளி உயிர்வளி ஏற்றத்தால் இழைகளில் மீட்பாக்கம் பெறும். (வேதி)

vector - 1. நோய்க்கடத்தி: ஓர் ஓம்புயிரியிலிருந்து மற்றொரு ஓம்புயிருக்குக் குச்சியங்கள், பூஞ்சைகள், நச்சியங்கள் ஆகியவற்றின் நோய்க்கூறுகளைக் கொண்டு செல்லுங் காரணி, 2. திசைச்சாரி: திசை இன்றியமையாததாகவுள்ள அளவு. இது வழக்கமாகக் குறிக்கப்படுவது. ஒரு நேர்க்கோட்டில் திசை, அளவு (எண் மதிப்பு) ஆகிய இரண்டும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எ-டு இடப்பெயர்ச்சி, திசைச்சாரி (வெக்டார்) அளவு. தொலைவு அளவு சாரி (ஸ்கேலர்) அளவு. கணிப்பொறிக் காட்சித் திரையிலுள்ள வரி, திசை சார்ந்தது, அளவு சார்ந்தது. தவிர எடை, நேர் விரைவு, காந்தப்புலம் முதலியவையும் ஏனைய எடுத்துக்காட்டுகள். (இய)

vector graphics - திசைச்சாரி வரைகலை: கணிப்பொறியின் காட்சித் திரையில் விரைந்து செல்லும் படப்பொழிவுகளை உருவாக்கல், திரைக்குக் குறுக்கே எத்திசையிலும் மின்னணுக் கற்றையை நகர்த்தி இதனைச் செய்ய இயலும். இதற்கென்று தனியாக வடிவமைக்கப்பட்ட எதிர்மின் கதிர்க்குழாய் உள்ளது. பா, graphics (இய)

vector multiplication - திசைச்சாரி பெருக்கல்: இரண்டிற்கு மேற்பட்ட திசைச்சாரிகளைப் பெருக்கல். (இய) vector product -திசைசாரிப் பெருக்கற்பலன்: ஒரு திசைச் சாரியைப் பெற, இரு திசைச் சாரியைப் பெருக்குதல். எ-டு a, b ஆகியவற்றின் திசைச்சாரிப் பெருக்கற்பலன், axb, (இய)

vector quantity -திசைச்சாரி அளவு: இயற்பியல் அளவு. இதில் அளவும் திசையும் குறிக்கப்பட வேண்டும். விசை, நேர்விரைவு முதலியவை திசைசார் அளவுகளாகும்.ஒ. Scalar quantity (இய).

vegetative propagation-உடல் இனப்பெருக்கம்: விதையில்லாமல் உறுப்புகள் மூலம் நடைபெறுவது உறுப்புகள் என்பவை அரும்புகள், கிழங்குகள், தண்டுகள், இலைகள் ஆகியவற்றைக் குறிக்கும். எ.டு. மா, கொய்யா, பா. asexual reproduction, (உயி)

vein- 1. சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியினை இதயத்திற்கு எடுத்து வரும் குழாய். நுரையீரல் சிரைமட்டும் உயிர் வளியுள்ள குருதியைக் கொண்டு செல்வது. சிரைகளில் பெரியவை கீழ்ப்பெருஞ்சிரையும் மேற்பெருஞ்சிரையுமாகும். 2. நரம்பு: இலை நரம்பு, இறகு நரம்பு, மனித உடல் நரம்பு (உயி)

velocity நேர்விரைவு: ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி வீதம். குறிப்பிட்ட திசையில் ஒரு பொருளின் விரைவு. ஆகவே, இது திசைச்சாரி (வெக்டார் குவாண்டிட்டி) அளவு ஆகும். ஆனால் விரைவு அளக்கக்கூடிய அளவு (ஸ்கேலார் குவாண்டிட்டி) ஆகும். அலகு மீ/வி. ஒ. acceleration (இய)

velocity, angular-கோணநேர் விரைவு: ஆரக்கோடு ஒரு வினாடியில் உண்டாக்கும் கோணம். சுருக்கமாக இதனைக் கோண இடப்பெயர்ச்சியின் மாறுமளவு எனலாம்.

கோண நேர் விரைவு ω =θ/t

θ-தீட்டா t-நேரம் ω-ஒமேகா அலகு ரேடியன் / வினாடி (இய)

velocity ratio, distance ratio-நேர்விரைவு வீதம், தொலை வீதம்: ஒரு தனி எந்திரத்தில் ஒரே நேரத்தில் முயற்சியால் நகரும் தொலைவுக்கும் பளுவால் நகரும் தொலைவுக்குமுள்ள வீதம் (இய)

vena Cava - பெருஞ்சிரை: கீழ்ப்பெருஞ்சிரை,மேற்பெருஞ்சிரை. உடலின் பல பகுதிகளிலிருந்தும் கரி ஈராக்சைடு கலந்த குருதியை இதயத்திற்குக் கொண்டு வரு பவை. முன்னது மார்பு, கால்கள் முதலியவற்றிலிருந்தும் பின்னது தலை, கையிலிருந்தும் குருதி யைக் கொண்டு வருபவை. (உயி),

venation -நரம்பமைவு: 1.இலையில் நரம்புகள் அமைந் திருக்கும் முறை. 2. பூச்சிச் சிறகில் நரம்புகள் அமைந்துள்ள பாங்கு. (உயி).

venn diagram -வென் படம்: ஜான்வென் (1834 - 1923) என்பார் அமைந்த படம். இதில் கணங் களும் அவற்றின் தொடர்புகளும் வட்டங்கள் அல்லது எண்களால் குறிக்கப்பெறும் (கண).

venter - அடி: ஆணியத்தின் பருத்த குடுவை வடிவமுள்ள அடிப்பகுதி. இதில் பெண் பாலணுக்கள் உள்ளன. (உயி)

ventral-வயிற்றுப் புறம்: 1.கீழ்ப்புறம் : மனிதனிடத்து இது மேல் புறம், 2. இலை முதலிய தாவரப்பக்க உறுப்புகளில் மேல் புறம் அல்லது மேற்பரப்பு. ஒ. dorsal, abactinal (உயி).

ventral aorta - வயிற்றுப்புறப் பெருந்தமனி: கருநிலை நாற்கால் விலங்குகளிலும் மீனிலுமுள்ள குருதிக்குழாய். இதயத்தின் முன் முனையிலிருந்து கரி ஈராக்சைடு குருதியைக் கொண்டுவருவது. முதிரி நாற்கால் விலங்குகளில் இது பெருந்தமனியின் ஏறுகிளை யைக் குறிப்பது. (உயி)

ventricle - அறை: இதயத்தின் கீழறை. இது வலக்கீழறை இடக்கீழறை என இருவகைப்படும். குருதியைப் பெருந்தமனிக்கும் நுரையீரல் தமனிக்கும் செலுத்துவது பா, auricle. (உயி).

Venus-வெள்ளி: புவிக்கும் புதனுக் குமிடையே தன் சுற்றுவழியைக் கொண்டுள்ள கோள். அமெரிக்க மெரைனரும் சோயித்து வெனிரா வும் இதனை நன்கு ஆராய்த் துள்ளன. (வானி),

vermiform appendix -குடல்வால்: பா. appendix (உயி)

vernation -இளரிலை அமைவு: உடல் (உறுப்பு) மொட்டில் (வெஜிடேட்டிவ் பட்) இளம் தாவர இலைகள் அமைந்திருக்கும் முறை. இது இலை அமைவிலிருந்து (பில்லோ டேக்சி) வேறுபட்டது. இதில் இலைத்தொகுதி முழுதும் மடிகின்றன. ஆனால், இலை அமைவில் தண்டில் தனி இலை பல கோலங்களில் அமைகின்றன. (உயி)

vernalization -வேனிற்பதனம்: வளர்ச்சிக்குரிய வெப்பநிலை யினை ஆராய்வதால், உண்டா கும் பயன், விதைகளைக் குறைந்த வெப்பநிலையில் வைத்து விதைப் பதாகும். (உயி)

venier - வெர்னியர்: பொருளின் நீளத்தைத் துல்லியமாக அளக்குங்கோல், பிரெஞ்சு நாட்டுக் கணித மேதை பால் வெர்னியரால் அமைக்கப்பட்டது.ஆய்வகங்களில் பயன்படும் அடிப்படை அளவுகருவி. 0.1 செ.மீ. வரை அளக்கலாம். (இய)

versatile -மையம் இணைந்த மகரந்த இழை: மகரந்தப்பையின் மையத்தில் இணைந்திருக்கும். இதனால், மகரந்தப்பை நன்றாகச் சுழல இயலும். ஆகவே, சுழல் மகரந்தப்பை எனப்பெயர் பெறும். புற்களின் பூக்கள். ஒ. basifixed, dorsifixed. (உயி)

vertebra - முள் எலும்பு: முது கெலும்பிலுள்ளது. விலங்கிற்குத் தகுந்தவாறு மாறுபடும். மனித முதுகெலும்பில் 33 முள் எலும்பு கள் உள்ளன. இந்த எலும்பைக் கொண்டவை முதுகெலும்பிகள். (உயி,

vertebral column-முதுகெலும்பு: பா. spinal Column. (உயி).

very high frequency, VHF - அதிஉயர் அதிர்வெண்: 1-10 மீ எல்லையுள்ள அலைநீள அதிர் வெண். (இய)

very low frequency, VLF - அதிதாழ் அதிர்வெண்: 10-100கிமீ எல்லை கொண்ட அலைநீள அதிர்வெண். (இய)

vesica - பை: பித்த நீர்ப்பை,சிறுநீர்ப்பை (உயி)

vesicle-குழி: வேறுபட்ட தோற்ற முள்ள நுண்குமிழி. கோல்கை குழி பா.Golgi apparatus. (உயி)

vessel-குழாய்: கடத்தும் உறுப்பு.தொடர்ச்சியாகவும் நீள்வாட்டத்திலும் உள்ளது. மரக்குழாய் தாவரம்,குருதிக்குழாய் மனித உடல்.ஒ.blood vessel, tracheid. (உயி) viability - உயிர்ப்பாற்றல்: தனித்து வாழவல்ல திறன். அதாவது, கருவுயிர் பிறந்ததும் தனித்து வாழவல்ல தகுதி - கோழிக்குஞ்சு (உயி)

viability, seed -விதை உயிர்ப்பாற்றல்: விதையின் உயிராற்றல். முளைக்கருவில் உயிர் இருந்தால் தான் விதை முளைக்கும். இது விதைகளுக்குத் தகுந்தவாறு மாறுபடும். (உயி)

vibration - அதிர்வு: நடுநிலையில் ஒழுங்காகத் திரும்பத் திரும்ப நடைபெறும் முன்பின் இயக்கம். (இய).

Victor Mayer's method -விக்டர் மேயர் முறை: ஆவியடர்த்தியை அளக்கும் முறை. விக்டர் மெயர் 1848-97) என்பார் அமைத்தது. (வேதி)

video-1 உரு. 2 தொலைக்காட்சி. 3. உருக்காட்சி: (இய)

video amplifier -உருப்பெருக்கி: வானொலி வாயிலாகச் செலுத்தப் படுவதற்குமுன், தொலைக் காட்சிப் புகைப்பட பெட்டியினால் உண்டாக்கப்படும் உருக் குறிப்பாட்டின் வலிமையை உயர்த்தப் பயன்படும் கருவியமைப்பு. (இய)

video buffer -உருத்தாங்கி: கணிப்பொறியின் வரம்பிலா அணுக்க நினைவகப்பகுதி. காட்சித்திரையில் காட்டப்பட வேண்டிய வடிவம் சார் பிட் கோலங்களைக் கொண்டிருப்பது, (இய)

video camera -உருப்பதிவுப்பெட்டி: இஃது ஒர் மின்னணுக் கருவியமைப்பு. தொலைக்காட்சித் தொகுதியில் மீண்டும் காட்ட காந்த உருப்பதிவு நாடாவில் காட்சியையும் ஒலி யையும் பதிவு செய்வது. (இய)

video cassette recorder, VCR - உருப்பெட்டகப் பதிவு: தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் கருவி. உருக்காட்சிப் பேழைகளிலுள்ள காந்த நாடா வில் முன்னரே பதிவு செய்யப் பட்ட நிகழ்ச்சிகளை மீண்டும் காட்சிக்குக் கொண்டு வருவது. இன்று திரைப்படக்காட்சிகளே அதிகம் காட்டப்படுபவை. வேறு பெயர்கள் உருக்காட்சிப் பேழை இயக்கி (விசிபி), உருக்காட்சி நாடாப்பதிவு (விடிபி) (இய)

video conferencing -உருக்காட்சிக்கூட்டம்: வேறு பெயர் தொலைச் செய்தித் தொடர்புக் கூட்டம் வாய்ப்பு வசதி இல்லாதவர்க்கு அமைத்துத் தரப்படும் மின்னணுக் கூட்டம். இதில் தொலைத் தொடர்புச் செய்திகளின் பயனை இவர்கள் நுகர்வர். தொடர்புகள் என்பது தொலை பேசிகளையும் செய்தித் தொடர்பு நிலாக்களையும் குறிக்கும். (இய)

video signal -உருக்குறிபாடு: தொலைக்காட்சிப் பெறுவியில் பெறப்படும் அல்லது தொலைக் காட்சிப் புகைப்படப் பெட்டியில் உண்டாக்கப்படும் மின்குறிபாடு. ஒளி பரப்புச் செய்யப்பட வேண்டிய உருவிலுள்ள ஒளி யிலும் நிறத்திலும் உள்ள மாறு பாட்டோடு தொடர்புடையது. (இய)

video tape - உருநாடா: ஒரு காந்த நாடா. ஒலியாகவும் காட்சியாகவும் இதில் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்நாடா உருப்பதிவுப் பேழை அல்லது பெட்டகத்தில் இருக்கும். இதனை உருப்பதிவுப் பேழைப் பதிவியில் போட்டுக் காட்சியைப் பார்க்கலாம். (இய)

video text - உருப்பதிவுச் செய்தி: பணி செய்வோர்க்கும் வீட்டிலிருப்போர்க்கும் கணிப்பொறி வழியமைந்த செய்தியினைக் காட்சி வெளிப்பாட்டு அலகின் மூலம் தெரிவிக்கும் தொகுதி. பா. text (இய)

video tube -உருக்காட்சிக் குழாய்: தொலைக்காட்சிக் குழாய் அல்லது திரை. (இய)

villus-1.விரலி: மயிரிழை போன்ற பகுதி, 2. குடல்விரலி: விரல் போன்ற உறுப்பு. சிறுகுடலில் கூழ்நிலையடைந்த உணவை உட்கவரும் பகுதி. (உயி)

vinegar -வினிகர்: HC2H3O2, நீர்த்த பணிபோன்ற அசெட்டிகக் காடி. 3-6% எத்தானிகக்காடி கலந்தது. நீரில் கலக்கக்கூடியது. எத்தனாலை உயிர்வளி ஏற்றம் செய்து பெறலாம். ஊறுகாய்ப் பாதுகாப்புப் பொருள். (வேதி)

virgin neutrons -கன்னி அல்லணுக்கள்: மோதலுக்கு முன் எம்முறையிலும் உண்டாக்கப்படும் துகள்கள். (இய)

virology - நச்சியஇயல்: நச்சியங்களை ஆராயுந்துறை. (உயி)

virtual intelligence - மாய நுண்ணறிவு: (கணி)

virtual reality-மாய உண்மைகள்: 1993இல் கணிப்பொறித் தொழில் நுணுக்கத்தால் உண்டானது. நம்ப முடியாத வியப்புகளைக் காட்டுவது.

virus - நச்சியம்: அலி உயிரி. உயிருள்ளதா உயிரற்றதா என்று உறுதி செய்ய இயலாதது. மிக நுண்ணிய துகள். மீ நுண்ணோக்கி மூலமே காணலாம். வளர்ச்சியும் இனப்பெருக்கமும் கொண்டது. நோயூக்கி, 1892இல் இவனோசுகி என்னும் உருசியத் தாவரவியலார் இவை உள்ளன என்பதை ஆய்வுகள் வாயிலாக மெய்ப்பித்தார். (உயி)

viscera - உள்ளுறுப்புகள்: இவை உயர்ந்த விலங்குகளில் உடற் குழியில் உள்ள உறுப்புகள் வாய், உணவுக்குழல், இரைப்பை முதலிய உறுப்புகள் இதில் அடங்கும். (உயி)

viscocity coeficient - பாகியல் எண்: இயங்கும் நீர்மத்தில் நேர்விரைவு வாட்டத்தை நிலை நிறுத்த, ஓரலகு பரப்பின்மீது செயல்பட வேண்டிய தொடு கோட்டு விசை, அந்நீர்மத்தின் பாகியல் எண் (n) எனப்படும். (இய)

visual cortex -பார்வைப்புறணி: பெருமூளைப் பிடரிப் பகுதியில் சாம்பல் நிறப்பொருள் காணப்படுகிறது. இப்பொருளின் மெல்லிய வெளிப்புற அடுக்கே பார்வைப் புறணி, ஒளியின் பார்வை உணர்ச்சியை முறைப்படுத்துகிறது. (உயி)

visual display unit, VDU - காட்சித்திரை: கணிப்பொறியின் பகுதி படங்கள் வீழ்த்தப் பயன்படுவது. சுருக்கமாகக் காட்சித் திரை எனலாம். (இய)

visual purple -பார்வை ஊதா: ரோடாப்சின். விழித்திரையிலுள்ள ஒளி உணர்வுள்ள நிறமி. கோலணுக்களிலுள்ளது. புரதத்தாலானது. (உயி)

visualtheshold-பார்வை வாயில்: ஆற்றல் ஒளி உணர்வைப் பெறத் தேவையான குறைந்த அளவு ஒளி (உயி)

vital capacity -உயிர்ப்புத்திறன்: ஆழ்ந்த உள்மூச்சிற்குப் பின், நுரையீரல்களிலிருந்து வெளித்தள்ளப்படும் காற்றின் மொத்த அளவு, மனிதனிடம் இது 3400. 4000 க.செ.மீ அளவில் உள்ளது. (உயி)

vitamins - உயிரியன்கள்: அரிய கரிமச் சேர்மங்கள். உயிரியல் வினை ஊக்கிகள், உணவில் சிறு அளவில் இருந்து பெருமாற்றங்களை உண்டாக்குபவை. உணவில் இவை அளவில் குறையுமானால் குறைநோய்கள் உண்டாகும்.

vitelline membrane -கரு வுணவுப் பைப்படலம்: முட்டைப் படலம். (உயி)

vitreous humour-கண்பின்நீர்: கண்ணில் வில்லைக்குப் பின்னுள்ள நீர். ஒளிக்கதிர் செல்லப் பயன்படுதல். பா. aqueous humour. (உயி)

viviparous - அகக்கருவளர்ச்சி: கருவுள் வளர்ச்சி. சில விலங்கு களில் பெண்ணில் முட்டைகள் நிலைநிறுத்தப்பட்டது. கருவுறுதல் உள்ளேயே நடைபெறுகிறது. கருவுற்ற பின் பெருகிய உயிர், வளர்ச்சியடைந்த விலங்குகளாகவே பிறத்தல். பெரும்பான்மை பாலூட்டிகள் முட்டை வளர்ச்சி (ஓவிபெரஸ்) கொண்டவை. (உயி)

vocal cords -குரல்நாண்கள்: குரல்வளையின் பக்கச் சுவரிலிருந்து விரியும் இரு படல மடிப்புகள். குரல் எடுப்பிற்கு இவையே காரணம்.

volatile oils -ஆவியாகும் எண்ணெய்கள்: வேறு பெயர் பயனுறு எண்ணெய்கள். எளிதில் ஆவியாகும். நல்ல மணம் உடையவை. நீலகிரித் தைலம், கற்பூரத்தைலம். ஒ.non-volatile oils. (வேதி)

volt - ஓல்ட்: அலகுச்சொல். மின்னியக்கு விசையின் வழியலகு ஓர் ஓம் தடைக்கெதிராகச் செலுத்தப்படும் ஓர் ஆம்பியர் மின்னோட்டம் அலக்சேண்ட்ரோ ஓல்ட்டா (1745-1827) பெயரால் அமைந்தது. மின்னழுத்தம், மின்னழுத்த வேறுபாடு, மின்னியக்கு விசை ஆகிய மூன்றும் ஒன்றே. வீட்டிற்கு வரும் மின்சாரத்தின் அழுத்தம் 220 ஓல்ட் (இய)

voltaic cell - ஓல்ட்டா மின்கலம்: ஓல்ட்டா அமைத்த மின்கலம். இதில் மின்பகுளி நீர்த்த கந்தகக் காடி நேர்மின்வாய் செம்பு, எதிர் மின்வாய் துத்தநாகம், வேதிவினையால் இதில் மின்சாரம் உண்டாகிறது. இதில் உள்ளிட நிகழ்ச்சி, முனைப்படல் என்னும் இருகுறைகள் உண்டு. இவை முதன்மை மின்கலங்களில் போக் கப்பட்டுள்ளன. (இய)

voltameter -ஓல்ட்டா (மீட்டர்) மானி: வேறுபெயர்கள் கூலு மானி. ஓல்ட் மின் முறிகலம். மின்னாற்பகுப்பு முறையில் மின்னோட்டம் அல்லது மின்னேற்றத்தை உறுதி செய்யப் பயன்படும் கருவியமைப்பு விடுபடும் பொருளின் திறை M ஐக் கொண்டு கண்டறியலாம். இதற்குரிய வாய்பாடு Q=m/z அல்லது I= m/zt (z- வேதி இணைமாற்று t-வெப்பநிலை) (இய),

voltmeter-ஓல்ட்டு(மீட்டர்)மானி: ஒரு மின்சுற்றில் எவையேனும் இரு புள்ளிகளுக்குமிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாட்டை அளக்குங் கருவி (இய).

volume -1. கனபருமன்: கெட்டிப் பொருளாலும் பாய்மத்தாலும் அடைத்துக் கொள்ளப்படும் இடத்தின் அளவு பருமனாகும். பருமன் = நிறை x அடர்த்தி (v = md) 2. உரப்பு: வானொலி அல்லது தொலைக்காட்சியில் ஒலித்திண்மை. இதைக் கூட்டிக் குறைக்க ஏற்பாடு உண்டு. பா. dimension (இய)

volumeter - பருமமானி: வளியின் பருமனை அளக்கப் பயன்படும் கருவி. (இய)

volumetric analysis -பருமனறி பகுப்பு: பண்பறி வேதிப்பகுப்பு முறைகளுள் ஒன்று. வினைபடு பொருள்களின் பருமன்களை அளத்தல், ஒவ்வொரு பொருளிலுமுள்ள ஒவ்வொரு பகுதியின் அளவை உறுதி செய்தல் ஆகிய செயல்கள் இதில் நடைபெறுகின்றன. (வேதி)

volumometer -பருமனறிமானி: ஒரு கெட்டிப் பொருளின் பருமனை, அது இடப்பெயர்ச்சி செய்யும் நீர்ம அளவைக் கொண்டு அளக்கப் பயன்படும் கருவி. (இய)

voluntary muscle -இயக்குத்தசை: பா. skeletal muscle. (உயி)

vomer- கலப்பை எலும்பு: 1. பல முதுகெலும்பிகளில் மண்டை ஓட்டு எலும்பு, 2. மனித மூக்குத் தடுப்பின் பகுதியாகவுள்ள ஆப்பு வடிவ எலும்பு, மெலிந்தும் தட்டையாகவும் உள்ளது. (உயி)

vortex - சுழல்: 1. ஒரு நீர்மத்தின் சுழல் இயக்கம். நீர்மையத்தில் குழி தோன்றும் நீர்ச்சுழல் 2. சுழற்காற்றுமையம். 3. அணுக்கள் அல்லது துகள்களின் சுழற்சி இயக்கம். (ப.து)

vulcanisation-வன்கந்தகமாக்கல்: ரப்பரின் பண்பை உயர்த்தும் முறை. இதில் கந்தகத்துடன் ரப்பர் சேர்த்துச் சூடாக்கப் படுகிறது. 1829இல் சார்லஸ் குட் இயர் என்னும அமெரிக்க அறிவியலார் இந்நிகழ்ச்சியைத் தற்செயலாகக் கண்டறிந்தார். (வேதி)

vulcanite -வல்கனைட்: பா.ebonite (வேதி)

vulcan power. -வன்கந்தக ஆற்றல்: அதிகம் வெடிக்குங் கலவை. இதில் 52.5% சோடியம் நைட்ரேட்டு, 30% நைட்ரோ கிளிசரின், 10.5% வீட்டுக்கரி, 7% கந்தகம் ஆகியவை சேர்ந்திருக்கும். (வேதி)

vulture - பிணம் தின்னும் கழுகு: கழுகு போன்றது. வெற்றுத்தலை சிறகுகள் 85 செ.மீ. வரை விரியும். இறந்த உடல்களைக் கொத்தித் தின்பது. (உயி)

vulva - பெண்குறி: பெண்ணின் புறப் பிறப்புறுப்புகள். (உயி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/V&oldid=1040370" இலிருந்து மீள்விக்கப்பட்டது