Y

yagi aerial -யாகி அலைவாங்கி: கதிரியத் தொலைநோக்கிகளுக்கும் தொலைக்காட்சிக்கும் பயன்படும் திசைசார் அலை வாங்கித் தொடர் (இய)

yak-யாக்கு: திபேத்து எருது வகை உடல் முழுதும் நீண்டதும் தடித்ததுமான பட்டு போன்ற மயிர் உண்டு. (உயி)

yam - காச்சைக்கிழங்கு: ஒற்றை விதையிலை கொண்ட ஏறும் தாவரம். வளரும் உயரம் 18 மீ. தண்டு நாற்கோண வடிவ முள்ளது. இலைகளில் 5 நரம்புகள் உண்டு. இதன் கிழங்கு ஊட்டமில்லாதது. உண்ணக் கூடியது. (உயி)

yawning - கொட்டாவி விடுதல்: இது நீண்டும் ஆழ்ந்தும் நடைபெறும் உள்மூச்சு, இதில் வாய் முழு அளவுக்கு திறந்திருக்கும். தளர்ச்சி,சோம்பல்,போதிய காற்று இல்லாமை ஆகியவற்றால் இஃது ஏற்படுகிறது. (உயி)

y-chromosome-ஒய் நிறப்புரி: இது பால் நிறப்புரியாகும். வேறுபட்ட பாலில் மட்டும் காணப்படுவது. அதாவது ஆண்களில் மட்டும் தெரிவது.எக்ஸ் நிறப் புரியிலிருந்து வேறுபடுவது. அடிக்கடி அதன் சிறிய குறுகிய பகுதி மட்டுமே குன்றல் பிரிவில் எக்ஸ் நிறப்புரியோடு சேர்தல். வழக்கமாக, அது சில மரபணுக் களையே கொண்டது. இரு வகைப் பால் நிறப்புரிகளில் சிறியது. (உயி)

year - ஆண்டு: கதிரவனை ஒரு தடவை சுற்றிவரப் புவி எடுத்துக் கொள்ளும நேரம், கதிரவன் ஆண்டு 365 நாட்கள். நாட்காட்டி ஆண்டு என்பது கதிரவன் ஆண்டை ஒட்டி ஒழுங்குபடுத் தப்படுவது. அதற்குச் சமமானது. விண்மீன் ஆண்டு. நிலையான விண்மீன்களைக் கொண்டு அளக்கப்படுவது, திங்களாண்டு என்பது 12 திங்களுக்குரியது. கதிரவன் ஆண்டு 365.242 19 சராசரி கதிரவன் நாட்கள். விண்மீன் ஆண்டு 365.256 36 சராசரி கதிரவன் நாட்கள். திங்கள் ஆண்டு 3653671 சராசரி கதிரவன் நாட்கள். (வானி)

yeast-ஈஸ்ட்டு: சைமேஸ் என்னும் நொதியை உண்டாக்கும் ஓரணுப் பூஞ்சை சர்க்கரைக் கரைசலை நொதிக்க வைத்து ஈத்தைல் ஆல்ககாலையும் கார்பன் டை ஆக்சைடையும் கொடுப்பது. ரொட்டித் தொழிலிலும் சாராய வடிதொழிலிலும் பயன்படுதல். அரும்புதல் முலம் இனப் பெருக்கம், புரதம், உயிரியன் ஆகியவற்றின் ஊற்று. (உயி)

yellowing - மஞ்சளாதல்: பா.chlorosis.(உயி)

yellows - மஞ்சள்நோய்: கனிம ஊட்டக்குறைவினாலோ நச்சியத்தினாலோ உண்டாகும் தாவர நோய். (உயி)

yolk - ஊட்டக்கரு: கருவிலுள்ள ஊட்டமளிக்கும் பொருள். புரதமும் கொழுப்பும் நிறைந்தது. (உயி)

yolk cleavage -ஊட்டக்கரு பிளவிப் பெருகுதல்: ஒன்று அல்லது பல பிளவு உட்கருக் களைக் கொண்ட தொகுதிகளாக ஊட்டக்கரு பிரிதல். (உயி)

yolk gland-ஊட்டச்சுரப்பி: ஊட்டக்கரு உண்டாக்குவது (உயி)

yolk plug -ஊட்டச் செருகி: உறுப்பு முனை (முட்டை முனை) யிலுள்ள ஊட்டக்கரு பதிந்த சில கண்ணறை (செல்) களால் தோற்றுவிக்கப்படுவது. இரு படைக் கோளத்திலுள்ள கருக் கோளத்துளை வழியாக நீட்டிக் கொண்டிருப்பது, எ-டு தவளை. (உயி)

yolksac-ஊட்டப்பை: பையமைப்புள்ள கூடுதல் கருப்படலம். முட்டையின் முழுக்கருவையும் மூடுதல். பறவை, ஊர்வன முதலி யவற்றின் முட்டைகளில் காணப் படுவது. (உயி)

yolk stalk-ஊட்டக்காம்பு: கருப்பையினைக் கருக்குடலோடு இணைப்பது. பறவை, ஊர்வன முதலியவற்றின் முட்டைகளில் அமைந்திருப்பது (உயி)

Young's modulus-யங் எண்: யங் குணகம். ஒரு பொருளின் தகை விற்கும் அதனால் உண்டாக்கப் படும் திரிபிற்குமுள்ள வீதம். இது நீட்சி எண் ஆகும். இங்கிலாந்து இயற்பியலார் தாமஸ் யங்கின் (1773-1829) பெயரால் அமைந்தது. (இய)

ytterbium -எட்டர்பியம்: Yb, வெள்ளி போன்ற உலோகம் மென்மையானது. அரிய புவித் தனிம வரிசையைச் சார்ந்தது. எஃகின் பண்பை உயர்த்தப் பயன்படுதல். (வேதி)

yttrium -எட்டிரியம்: Y வெண்ணிற உலோகம். மாறுநிலைத் தனிம வரிசையைச் சார்ந்தது. உலோகக் கலவைகள் செய்ய.(வேதி)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/Y&oldid=1040379" இலிருந்து மீள்விக்கப்பட்டது