அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/V

V

'v' s , (எந்: பட்.) "வி" வழிகள் : மேசை அல்லது பொருட்கள் நிறைந்த கலங்கள் நகர்ந்து செல் வதற்கென சற்று உயரமான அல்லது குழிவான வகையில் அமைந்த 'v' வடிவப் பாதைகள்.

vaccum : (இயற்.) வெற்றிடம்: காற்று அல்லது வேறு ஏதேனும் ஒன்று வெளியேற்றப்பட்ட கொள் கலம். (நீராவி, வெப்பம்).

vaccum brake : (தானி.) வெற்றிட முறை பிரேக் : கனரக பயணி வாகனங்களுக்கு மிகவும் உகந்த ஏற்பாடு. பிரேக் இயக்கு முறையானது உள் வாங்கு பல முனைக் குழாய், அல்லது கார்ப்புரேட்டரிலிருந்து திராட்டிலுக்கு சற்று மேலே வெற்றிடத்தை பெற்றுக் கொண்டு இயங்குகிறது.

Vaccum cleaner: வெற்றிட முறை துப்புரவி : கம்பள விரிப்பு போன்றவற்றிலிருந்து குப்பை, தூசு ஆகியவற்றை வெற்றிட முறை மூலம் உறிஞ்சும் மோட்டாரால் இயங்கும் மின்விசிறிக் கருவி.

Vaccum forming : (குழை,) வெற்றிட முறையில் உருவாக்கம் : ஷீட் உருவாக்கம் வெப்ப முறை உருவாக்கம் ஏற்றும் பெயர் உண்டு. முக்கியமான ஒரு முறையில் வெப்ப பிளாஸ்டிக், குழைமம் ஆகிற அளவுக்கு சூடேற்றப்பட்டு பிறகு வெற்றிட முறை மூலம் ஒரு அச்சில் வந்து படியும்படி செய்யப்படுகிறது. இதில் பல மாறுபாட்டு முறைகள் உள்ளன. காற்றைச் கீழ்நோக்கிச் செலுத்தி குழைமம் வீட்டுகளாக உருவாகும்படி செய்யலாம். அல்லது காற்றை மேல் நோக்கிச் செலுத்தியும் ஷீட்டுகளை உருவாக்கலாம். இந்த முறையைப் படிமான முறை என்றும் கூறலாம். விளம்பர அடையாளங்கள், விமான உறை போன்றவற்றைச் செய்ய படிமான முறை பயன்படுத்தப்படுகிறது.

Vaccum control (தானி.) வெற்றிடக் கட்டுப்படுத்தி : பல முனைக்குழாய் வெற்றிடத்தினால் கட்டுப்படுத்தப்படுகிற பிரேக்,கிளட்ச் போன்று மோட்டார் வாகனத்தின் எந்த ஓர் உறுப்புக்கும் பொருந்தும். Vaccum fuel Šupply : (தானி.) வெற்றிடமுறை எரிபொருள் அளிப்பு: பிரதான எரிபொருள் தொட்டியிலிருந்து உயர்ந்த மட்டத்தில் உள்ள என்ஜினுக்கு வெற்றிட முறை மூலம் தான் பெட்ரோல் கிடைக்கிறது. வெற்றிடத் தொட்டி இதற்கு உதவுகிறது. என்ஜின் ஒடும் போது கார்புரேட்டரில் தோற்றுவிக்கப்படும் வெற்றிடத் தின் பலனாக வெற்றிடத் தொட்டியில் ஒரளவு வெற்றிடம் பராமரிக்கப்படுகிறது.

Vaccum gauge : (தானி.) வெற்றிட அளவுமானி : ஒர் என்ஜினின் உள் வாங்கி பல முனைக்குழாயில் அல்லது எரிபொருள் குழாயில் உள்ள வெற்றிடத்தை அளந்து கூறுவதற்கு காற்று மண்டல அழுத்த அடிப்படையில் குறியீடுகள் செய்யப்பட்ட அளவுமானி.

Vaccum metalizing (குழை.) வெற்றிட உலோகப்பூச்சு: ஆவியாக்கப்பட்ட அதாவது மிக நுண் திவலைகள் வடிவிலாக்கப்பட்ட உலோகத்தை (அலுமினியம்) கொண்டு பிளாஸ்டிக் உறுப்புகள் மீது மெல்லிய பூச்சு அளித்தல். இது வெற்றிடத் தொட்டியில் நிகழ்த்தப்படுகிறது. மின்சார இழை மூலம் ஆவியாக்கப்படுதல் நிகழ்த்தப்படுகிறது. உலோகக் குழம்பில் நிறம் சேர்க்கப்பட்டுப் தங்க பித்தளை, அல்லது தாமிர நிறம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது. இறுதி தயாரிப்புகளின் மேற்புறம் ஓரளவு உலோகத்தன்மை பெற்றிருக்கும்.

819

Vaccum tube : (மின்.) வெற்றிடக் குழாய் : உள்ளிருந்து வாயு அல்லது ஆவி அகற்றப்பட்ட - மிச்ச மீதியாக சிறு அளவுக்கு இருக்குமானால் அதனால் மின் தன்மைகள் பாதிக்கப்படாத அளவுக்கு வெற்றிடமாக்கப்பட்ட மின்னணுக்குழாய்.

Valley : (க.க.) கூரைப்பள்ளம் :இரு கூரைகளின் சரிவுகள் சந்திப்பதால் ஏற்படும் கோணம். அல்லது அந்தச் சந்திப்பில் உள்ள வடி நீர்ப் பாதை.

Valley rafter : (க.க.) கூரைப் பள்ளச் சட்டம் : இரு கூரைகளின் சரிவு சந்திக்கின்ற பள்ளத்துக்கு அடியில் தெடுக அமைந்த சட்டம்.

Value : (வண்.) உயர் தகவு: ஒரு வண்ணத்தின் அழுத்தம் அல்லது மென்மையைக் குறிக்கும் தன்மை .

Valve : தடுக்கிதழ் : குழாய்களின் வழியே நீர்மம் அல்லது வாயுவின் ஓட்டத்தை ஒழுங்குபடுத்தும் சாதனம்.

Veive action : (தானி.) நடுக்கிதழ் செயல்பாடு : டைமிங் கியர்கள், செயின் கேம் ஷாப்ட் லிப்டர்கள், வால்வு தொகுப்பு ஆகிய வால்வுகள் திறந்து மூடுவதைக் கட்டுப்படுத்தும் பகுதிகள்.

Valves: (தாணி.) தடுக்கிதழ்கள்: என்ஜின் சிலிண்டர்களுக்குள் அல்லது அவற்றிலிருந்து வாயுக்கள் வெளியே செல்வதை மற்றும் உன்ளே செல்வதைக் கட்டுப்படுத்தும் 620

கருவிகள். மோட்டார் என்ஜின்களில் அவை மோப்பெட் வால்வுகள் என்று குறிப்பிடப்படுகின்றன.

Valve spring; (தானி.) தடுக்கிதழ் திருகு சுருள் விசை வில்: தடுக்கிதழ் மூடிய நிலையில் இருக்கும் பொருட்டு 40 முதல் 90 ராத்தல் அழுத்தத்தை ஏற்படுத்து கிற அழுத்து வகை திருகு சுருள் விசை வில்.

Valve stem: (தானி.) தடுக்கிதழ் தண்டு: போப்பெட் வகை தடுக் கிதழ் தண்டு.

Valve timing: (s rafi.) :தடுக்கிதழ காலத் திட்டம்: பிஸ்டனின் நிலையைப் பொருத்து தடுக்கிதழின் செயல்பாட்டைத் தக்கபடி பொருத்துதல்.

Vanadium: (உலோ.) வெண்ணாகம்: வெள்ளி போன்று வெண்மையாகக் காட்சியளிக்கிற அரிய தனி மம். கலோக உருக்குத் தயாரிப்புக்கு மிகவும் பயன்படுவது. மோட்டார் வாகன அச்சு போன்று கடும் அதிர்ச்சிக்குள்ளாகிற பகுதிகளைத் தயாரிக்க வனாடிய வெண்ணாக உருக்கு பயன்படுகிறது.

Vanadium steel: (உலோ.) வண்ணாக, உருக்கு: O. 10 முதல் 0.15 சதம் வரையில் வனாடியம் கலந்த உருக்கு. இதை அடித்து உருவாக்க முடியும். எனினும் இந்த உருக்கை படிப்படியாகத்தான் சூடேற்ற வேண்டும். சாதாரண வனாடியம் உருக்கைவிட குரோம்-வனாடியம், நிக்கல்-வனாடியம் உருக்குகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

Vandyke brown: (வண்.) வான்டைக் பழுப்பு நிற: பழுப்பு நிறக் கலவைப் பொருள் கலந்த இயற்கையில் கிடைக்கிற களிமண். ஆழ்ந்த நிறம் காரணமாக கலவை பெயிண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுவது.

Vane (க.க.) காற்று திசைகாட்டி: காற்று எந்தத் திசையை நோக்கி வீசுகிறது என்பதைக் காட்டும் சாதனம்,

Vanishing point: மறையும் புள்ளி: பின்னணி காட்சியை குறிப்பிடுகையில் பயன்படும் சொல். படம் வரையும்போது பின்னோக்கிச் செல்கின்ற இணைகோடுகள் ஒரு புள்ளியில் போய்ச் சேரும். இப் புள்ளியே மறையும் புள்ளியாகும்.

Vapor: (தானி.) ஆவி : வாயு, நீராவி, பெட்ரோலும் காற்றும் சேர்ந்த கலவை.

Vaporize : (வேதி.) ஆவியாக்கு : ஆவி அல்லது வாயு நிலைக்கு மாற்றுதல்.

Vaporizer : ஆவியாக்கி : ஆரம்ப காலத்து கார்புரேட்டர்.

Vapor Lock : ஆவித் தடை : எரிபொருள் வரும் குழாய்களில் எரி பொருள் ஆவி சேர்ந்து விடுவதன் காரணமாக என்ஜினுக்கு எரி பொருள் வருவது தடைப்படுதல் அல்லது குறைதல்.

Variable : (கணி.) மாறி : மதிப்பு மாறக்கூடிய அளவு அப்படி மாறும்போது மற்றவற்றின் மதிப்பு மாறாதிருக்கும்.

Variable condenser : (மின்.) மாறு மின்தேக்கி : சில வரம்புகளுக்கு உட்பட்ட மின்தேக்கி. சில வரம்புகளுக்கு உட்பட்டு இதன் திறனை மாற்ற முடியும்.

Variable Motion : (பொறி. ) மாறுபடு இயக்கம் : ஒரு பொருள் சரி சமமான தூரங்களை வெவ்வேறு கால அளவுகளில் கடக்குமானால் அது மாறுபடு இயக்கம் எனப்படுகிறது.

Varnish :(வண்.) வார்னிஷ்: ஆல்கஹால் அல்லது எண்ணெயில் சில வகைப் பிசின்கள் கலந்த நீர்த்த கலவை. ஒரு பரப்பின் மீது உறுதியான, நேர்த்தியான மண் பூச்சை அளிக்கப் பயன்படுவது.வார்னிஷ் தெளிவாக அல்லது நிறத்துடன் இருக்கலாம்.

Varying speed motor : (மின்.)வேகம் மாறுபடும் மோட்டார் : செய் சுமைக்கு ஏற்ப வேகம் மாறுகின்ற மோட்டார். பொதுவில் செய் சுமை அதிகரிக்கும் போது வேகம் குறையும். எனினும் விரும்பியபடி வேகத்தை மாற்றத்தக்க மோட்டாரிலிருந்து இது வேறுபட்டது.

Vault : (க.க.) வளைந்த கூரை : அடுத்தடுத்து அமைந்த வளைவுகளால் இணைக்கப்பட்டு உட்புறமானது வளைவாக அமைந்த கூரை.வளைவான கூரை கொண்ட அறை அல்லது இடம்.


621

V Belt : V. வார்ப்பட்டை : விளிம்புள்ள உருளையில் மாட்டப்படுகிற ஆங்கில V போன்று தோற்றமளிக்கும் வார்ப்பட்டை. பட்டையான பெல்டுடன் ஒப்பிடுகையில் V வார்ப்பட்டை. உருளையிலிருந்து நழுவ அல்லது சுழலுவதற்கு வாய்ப்புக் குறைவு.

V Blocks: (எந்.) வி. பிளாக்குகள்: உருளை வடிவிலான உலோகப் பொருள்களைச் சோதிக்கும்போது அல்லது உருக்கொடுக்கும்போது நகராமல் இருப்பதற்காக ஒரு புறத்தில் V வடிவில் செதுக்குதல்.

Vector: (மின்.) வெக்டார்: மாறு திசை மின்சாரத்தில் ஒன்றிணைந்து செயல்படுகிற பகுதிகளை விளக்கிக் காட்டுகிற படம்.

Vee radiator (தானி.) V ரேடியேட்டர்: இரு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்டு நடுவில் 180 டிகிரிக்கும் குறைவான கோணத்தில் இணைக்கப்பட்டது.

Vegetable tannage : தாவரப் பதனம் : டான்னிக் அமிலம் கலந்த தாவரப் பொருட்களைக் கொண்டு தோலைப் பதப்படுத்துதல்.

Vehicle : (வேதி.) பூச்சு சாதனம் : வார்னிஷ் அல்லது லேக்கரைக் கரைத்துப் பூசுவதற்கான திரவப் பொருள்.

Vellum : வரைநயத் தோல் : தோலினால் ஆன ஆவணம் போன்று தோன்றும் காகிதம். 692

Velocity : (எந்.) திசை வேகம் : கடக்கும் தொ லைவை நேரத்தால் வகுத்து ஒரு விநாடிக்கு அல்லது ஒரு நிமிஷத்துக்கு இவ்வளவு அடி என்று கூறுதல் (இயற்.) ஒரு பொருள் செல்லும் விகிதம்.

Velox paper ; வெலாக்ஸ் காகிதம் : குறிப்பிட்ட வகைப் புகைப்படத் தாளின் வணிகப் பெயர்.

Veneer: (க க; மர. வே.) நேர்த்தி முகப்பு : (தொல் - மர நேர்த்தி) சாதாரண மேற்பரப்புக்கு நேர்த்தி யான உயர்ந்த பார்வை அளிக்க அல்லது செலவைக் குறைக்க மரம் அல்லது வேறு பொருள் மீது மெல்லிய படலத்தைப் படிய வைத்தல்.

Veneer press : (மர. வே.) மேலொட்டு அழுத்தப் பொறி : ஒட்டுப் பலகை அல்லது நீள் சதுரப் பலகைத் துண்டுகளைப் பசையிட்டு ஒட்டுவதற்கான பெரிய, கனமான அழுத்தப் பொறி.

Veneer saw : (மர.வே.) மேலொட்டு ரம்பர் : மெல்லொட்டுப் பலகைகளை வெட்டுவதற்குப் பயன்படும் தனி வகை வட்ட வடிவ ரம்பம்.

Venetian blind : (க.க.) பலகணித் திரை : மடக்கு வரிச்சட்டம் பல கணித் திரை.

Venetian red : (வண்.) இரும்பு ஆக்சைடு (Fe202) : சிவப்பு வண்ணப் பொடியாகப் பயன்படும்

இரும்பு ஆக்சைடுக் கலவை. இது இரும்பு சல்பேட்டை சுண்ணாம்புடன் சூடாக்குவதன் மூலம் கிடைக்கிறது.

Vent : (வார்.) வாயுத் துளை : வார்ப்பட வேலையில் வாயுக்கள் வெளியேற இடமளிப்பதற்காக அமைக்கப்படும் ஒரு சிறிய துளை.

Ventilatlon : (க.க.) காற்றோட்டம் : அறையில் காற்றோட்டம் ஏற்படுமாறு செய்யும் முறை.

Ventilator : (க.க.) பலகணி : வெளிச்சமும், காற்றும் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சாதனம்.

அசுத்தக் காற்றை வெளியேற்றுவதற்கான புழை.

Vent pipe : (க.க.) காற்றுக் குழாய் : பல்வேறு குழாய் அமைப்புகளிலிருந்து புகைக்கூம்பு வழியே காற்று வெளிச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய குழாய்.

Vent stack: (க.க.) புகைக் கூம்பு ; காற்றுக் குழாய்களுடன் இணைக்கப்பட்டுக் கூரைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் செங்குத்தான குழாய். இதன் வழியாக வாயுக்களும் புகையும் வெளி யேறுகினறன.

Vent wire : (வார்.) வாயுக் கம்பி : வார்ப்பட வேலையில் நீராவியும், வாயுவும் வெளியேறுவதற்காக, வார்ப்பிலிருந்து தோரணி யை அகற்றுவதற்கு முன்பு ஒரு கம்பி மூலமாகத் துளைகள் உண்

டாக்கப்படுகின்றன.

Veranda (க.க.) தாழ்வாரம் : கட்டிடத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்குமாறு அமைக்கப்படும் திறந்த நிலை ஒட்டுத் திண்ணை.

Verdigris : (வேதி) தாமிரத் துரு: இது தாமிரத்தின் மேற்பரப்பில் ஆக்சிகரணம் ஏற்படுவதால் உண்டாகிறது. தாமிரத்தை அசெட்டிக் அமிலத்துடன் கலப்பதாலும் தாமிரத்துரு உருவாகிறது. இது முக்கியமாக நிறமியாகவும், சாயப் பொருளாகவும் பயன்படுகிறது.

Verge : (க.க.) மோட்டு விளிம்பு : மூக்குட்டுச் சுவர் கடந்த மோட்டு விளிம்பு. இது கூரையின் மஞ்சடைப்புக்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும்.

Vermiculation : (க.க.) புழு அரிப்புத் தடம் : புழு அரிப்புப் போன்ற வரிப்பள்ளங்களுடைய தடம்.

Vermilion :(வண்.) இரசக் கந்தகை : செந்நிறமான இரசக் கந்தகை. இது நிறமியாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பாதரசச் சல்பைடிலிருந்து (HgS) பெறப்படுகிறது.

Vernier : (எந்.) வெர்னியர் : ஒரு நிலையான அளவு கோலின் உட்பிரிவுகளின் பின்னப் பகுதி


628

களைக் கணக்கிட்டு அறிவதற்குப் பயன்படும் ஒரு சிறிய நகரக்கூடிய துணை அளவுகோல்.

Vernier depth gauge : (எந்.) வெர்னியர் ஆழ அளவி : வெர்னியருடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வகைச் சலாகை வடிவ அளவு கருவி. இது குறுகலான ஆழப் பகுதிகளின் ஆழத்தை அளந்தறியப் பயன்படுகிறது.

vertical : (கம்.) செங்குத்து நிலை : செங்கோட்டு நிலை; வான விளிம்புக்குச் செங்கோணத் திலுள்ள நிலை.

Vertical boring mill : (எந்). செங்குத்துக் துளைகருவி : கடைசல் எந்திரத்தில் ஒரு சுழல் மேசையில், இழைப்புளியை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் நகர்த்தி கடைசல் வேலை செய்வதற்கான கருவி,

Vertical centering : நிலை குத்து மையம் : தொலைக் காட்சிப் பெட்டியின் திரையில் படத்தை செங்குத்தாக நிலைப்படுத்துவதற்கு உதவும் கட்டுப்பாட்டு அமைவு.

Vertical lathe : (எந்.) செங்குத்துக் கடைசல் எந்திரம் : பக்க வாட்டில் தலைப்பக்கம் உடைய ஒரு செங்குத்துத் துளைக் கருவி.

Vertical tall area ; (வானுர்.) செங்குத்து வால் பகுதி : விமானத்தில், சுக்கானின் உள்ளபடியான புறக்கோட்டுக்கும், செங்குத்துத் 624

தளத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் நிமிர் நேர் விளிம்புக் குட்டையிலான பகுதி.

Vertimeter : (வானூ.) செங்குத்துமானி : வான் கூண்டின் ஏற்ற, இறக்க வீதத்தைக் காட்டும் சாதனம். இது ஒரு தனி வகை நீரில்லா நுண்ணழுத்த மானியா கும். ஏற்ற வீதமானி ஏற்ற இறக்கத்தைக் காட்டுகிறது.

Vestibule : (க.க.) முன் கூடம்: வீட்டின் முன் அறை; திருக் கோயில் முக மண்டபம்.

Viaduct (பொறி.) மேம்பாலப் பாதை: இரும்புப் பாதை, சாலை போன்றவற்றுக்கு மேலே கட்டப்பட்டுள்ள மேம்பாலம்.

Vibrating bell: (மின்.) அதிர்வு மணி: மணியடிக்கும் நா அல்லது சுத்தி உடைய ஒரு மின் சாதனம். இதன் வழியே மின்னோட்டம் பாயும்போது நா அல்லது சுத்தி ஒரு மணியைத் தட்டி ஒலி எழுப்பும். இது மின்காந்த ஈர்ப்புத் தத்துவத்தின்படி இயங்குகிறது.

Vibration dampeners: (தானி.) அதிர்வுத் தளர்வுறுத்தி: ஒரு கோட்டச் சுழல் தண்டின் அதிர்வினைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எதிர்எடை அல்லது சம நிலைப்படுத்தும் கருவி.

Vibrator col : (மின்.) அதிர்வுச் சுருள்: ஒருவகை தூண்டுச் சுருள், உள்ளீட்டின் காந்தத் தன்மை

யானது அடிப்படைச் சுற்று வழியினை முறிக்கும் வகையில் இயங்குமாறு இது அமைக்கப்பட்டிருக்கும்.

Video: ஒளிக்காட்சி: படம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள தொலைக்காட்சிச் சைகையின் பகுதி. அமெரிக்காவில் தொலைக் காட்சியையும் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

Viewing mirror: காட்சிக் கண்ணாடி : தொலைக்காட்சியில், படக் குழாயில் உருவாகும் உருக்காட்சியை, பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதியான கோணத்தில் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி.

Vignette: (க.க.) சித்திர வேலைப் பாடு: தளிர்க்கொடி ஒப்பனை வேலைப்பாடு; முகப்பெழுத்துச் சித்திர வேலைப்பாடு; முற் காலக் கையெழுத்துப் படிகளுக்குரிய தலைப்பெழுத்துப் பூ வேலை ஒப்பனைக் கோலம்: பெயர்ப்பக்க முகட்டுப் பூவேலைப்பாடு; பெயர்ப்பக்க அடி வரிப் பூ வேலைப்பாடு.

Vinyl acetal resins: (வேதி; குழை.) வினில் அசிட்டால் பிசின்: பாலிவினில் அசிட்டேட்டிலிருந்து தயாரிக்கப்படுவது. காப்புக் கண்ணாடிகளில் இடைப்படலமாகவும், ஒட்டுப் பசையாகவும் பயன்படு கிறது. இது விறைப்புடையது; ஒட்டுந் தன்மை கொண்டது: ஈரம் புக இடமளிக்காதது; ஒளியாலும் வெப்பத்தாலும் நிலை குலையாதது. Vinyl resin: (குழை.)வினில் பிசின் : பிசின் குடும்பத்தில் ஒரு முக்கியமான வகை.

Viscid : (இயற்.) நெய்ப்புத் தன்மை: நெய்ப்புத் தன்மை: ஒட்டும் இயல்பு.

Viscolsity: (குழை.) குழைம நிலை: பிசைவுப் பொருளின் திட்ட ஆற்றல். பிசைவுப் பொருளின் தன் ஈர்ப்பு ஆற்றல்.

Visccusness: (வேதி.) பசைத்தன்மை: உள்ளொட்டிழுப்புத் தன்மை.

Vise: (பட்.) பட்டறைப் பற்றுக் குறடு: பிடித்து நிறுத்துவற்குரிய மரம் அல்லது உலோகத்தினாலான பற்றுக் குறடு. இதில் இரண்டு தடைகள், ஒன்று நிலை யாகவும், இன்னொன்று நகரக் கூடியதாகவும் அமைந்திருக்கும்.

Visibility: (வானூ.) காண்பு நிலை: சுற்றுப் புறத்திலுள்ள பொருள்களை எவ்வளவு துரத்திலிருந்து தெளிவாகக் காணலாம் என்பதைக் குறிக்கும் ஒளியளவு நிலை.

Vista: (க.க.) காட்சி வரிசை: சாலை மர அணி வரிசை.

Visual attral range: வானூர்தி நெறிமுறை: வானொலி உதவியால் இயக்கப்படும் வானூர்தி நெறி முறை.

625

Visualize: உருவாக்கிக் காண்: அகக் காட்சியாக உருவாக்கிக் காண்; கற்பனை செய்து காண்.

Vitalglass: புறவூதாக் கண்ணாடி: கட்புலனுக்கு அப்பாற்பட்ட ஊதாக்கதிர்களையும் ஊடுருவ விடும் கண்ணாடி .

Vitreosity: (வேதி.) பளிங்கியல்பு : கண்ணாடி போன்று எளிதில் நொறுங்கும் தன்மையும், பளிங்கின் திண்மையும், கண்ணாடி போலப் படிக உருவமற்ற இயல்பும் உடைய பண்பியல்பு.

Vitrification; பளிங்குருவாக்கம்: எரிப்பதன் இணைத்து பளிங்கியலாக்கப்பட்ட பொருளின் நிலை.

Volatile: (வேதி.) விரைந்து ஆவியாதல்: விரைவாக ஆவியாகும் தன்மை.

Volatile liquid: விரைந்து ஆவியாக்கும் திரவம்: மிக எளிதாக விரைவில் ஆவியாகும் இயல்புடைய திரவம்.

Volt : (மின்.) மின் அழுத்தம் (ஒல்ட்): மின் அலகுக் கூறு: வின் இயக்க விசையின் அலகு; மின் அழுத்த விசை.

Voltage : (மின்.) மின் வலியளவு: மின் வலி அலகு எண்ணிக்கை அளவு.

Volta's law : (மின்) ஓல்ட்டா விதி : எந்த இரு உலோகங்க 626

ளுக்குமிடையிலான மின்னழுத்த நிலை வேறுபாடானது, தொடர் வரிசையிலுள்ள எடை உலோகங்களுக்கிடை யிலான மின்னழுத்த நிலை வேறுபாடுகளின் கூட்டுத் தொகைக்குச் சமமானதாக இருக்கும்" என்பது இந்த விதி.

Voltage Amplification : (மின்.) மின்னழுத்த விரிவாக்கம் : வானொலி அலைவெண் விரிவாக்க நிலைகளில் உண்டாகும் வானொலிச் சைகைகளைப் பெருக்கிக் காட்டுவதற்கான ஒரு வகை.

Voltaic cell : (மின்.) ஓல்ட்டா மின்கலம் : ஒரு வகை அடிப்படை மின்கலம். இதனை முதலில் கண்டு பிடித்தவர் ஒல்ட்டா. அதனால் இதற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இது இரு முரண்பட்ட உலோகங்கள் ஒரு கரைசலில் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கரைசல், ஒர் உலோகத்தை இன்னொரு உலோகத்தின் மீது அதிக அளவில் வேதியியல் வினைபுரியும். இதனால் இரு உலோகங்களுக்குமிடையே மின்ன ழுத்த நிலை வேறுபாடு உண்டாகிறது.

V - T h r e a d (எந்; பட்.) V - திருகிழை : 'v', என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்துள்ள திருகிழை. 60° கோணத்தில் அமைந்த திருகிழையையும் இது உள்ளடக்கும்.

V - type engine : (தானி.) V - வடிவ எஞ்சின் : 'v', என்ற ஆங்கில எழுத்தின் வடிவத்தில் அடுக்கப்பட்ட நீள் உருளைத் தொகுதிகளைக் கொண்ட ஒர் எஞ்சின்.

Vulcanite : (வேதி.) கந்தக ரப்பர் : கந்தகம் கலந்து கடுமையூட்டப்பட்ட ரப்பர். இந்திய ரப்பரும் கந்தகமும் கலந்த ஒரு கூட்டுப் பொருள் இது நெகிழ் திறம் இல்லாத கடினமான ரப்பர்.

Vulcanizing : (வேதி.) கந்தக வலிவூட்டம் : இந்திய ரப்பருக்குக் கந்தகம் கலந்து வலிவூட்டுதல். ரப்பருக்கும் வலிமையும் நெகிழ் திறனும் ஊட்டுவதற்கு மிக உயர்ந்த வெப்ப நிலையில் இவ்வாறு செய் யப்படுகிறது.