அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்/X

X

X-braced chair; எக்ஸ் இருக்கை நாற்காலி: நாற்காலியில் அமரும் பகுதியானது X வடிவில் அமைந்தது

X members (தானி.) எக்ஸ் உறுப்பு: அழுத்தி உருவாக்கப்பட்ட 'ப' வடிவ குறுக்குத் தண்டுகள் ஆங்கில X வடிவில் அமைக்கப்பட்டது. மோட்டார் வாகன கட்டுமானத்தின் போது பிரதான பிரேமில் வைக்கப்படுவது.

X-ray: எக்ஸ் கதிர்: காமா கதிர்கள் போன்றவை. மிகவும் ஊடுருவும் திறன் கொண்டவை. எக்ஸ் கதிர்கள் அணுக்கருவிலிருந்து வருபவை அல்ல மாறாக அதைச் சுற்றியமைந்த எலெக்ட்ரான்களிலிருந்து வருபவை.எலெக்ட்ரான் தாக்குதல் மூலம் இவை உண்டாகின்றன. எக்ஸ் கதிர்கள் பெரும்பாலான பொருட்களை ஊடுருவிச் செல்கின்றன. இக்கதிர்கள் மூலம் எலும்புகளின் உள் உறுப்புகளின் நிழல்களைப் பார்க்கவும், படம் பிடிக்கவும் முடியும் (இயற்) ரோண்ட்ஜன் கதிர்களின் ஜன ரஞ்சகப் பெயர். குரூக்ஸ் குழாயில் கேதோட் கதிர்கள் எதிர்ப்புறம் உள்ள சுவரில் அல்லது குழாயில் உள்ள ஒரு பொருளைத் தாக்கும்போது தோன்றும் ஆற்றல் வடிவிலான கதிர்கள்.

X-ray tube: எக்ஸ் கதிர்குழாய்: எக்ஸ் கதிர்களைத் தோற்றுவிப்பதற்கான வெற்றிடக் குழாய்: இதன் உள்ளே நிலை மின்புலத்தின் மூலம் எலக்ட்ரான்கள் மிக வேகத் தில் செல்லும்படி செய்யப்படுகின்றன. இவற்றைத் திடீரென நிறுத்தி இலக்கைத் தாக்கும்படி செய்கின்றனர்.

X-shaped chair: (மர.வே.) எக்ஸ் வடிவ நாற்காலி: பழங்காலப் பாணியிலான நாற்காலி. இதில் கீழ்ப்புறம் உள்ள தாங்கும் பகுதி X வடிவில் இருக்கும். பல சமயங்களிலும் அழகிய வேலைப்பாடு இருக்கும். தவிர இது பெரும்பாலான சமயங்களில் மடிக்கத் தக்கதாக இருக்கும்.