அறிவியல் வினா விடை-வேதியியல்/வேதிவினைகளும் விதிகளும்
(1) வேதிவினைகள்
1. இயல்பு மாற்றம் என்றால் என்ன?
புதிய பொருள் உண்டாகாத தற்காலிக மாற்றம். எ-டு. பனிக்கட்டி உருகி நீராதல்.
2. வேதி நிறுத்தி என்றால் என்ன?
வேதி வினையை நிறுத்தும் பொருள்.
3. வேதிவினை என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் வினைபுரிவதால், புதிய பொருள்கள் தோன்றுதல். இவ்வினையைச் சமன்பாடு தெரிவிக்கும்.
Н2 + О2 → 2Н2О
4. வேதிமாற்றம் என்றல் என்ன?
புதிய பொருள்கள் உண்டாகக் கூடிய நிலைத்த மாற்றம். எ-டு. துருப்பிடித்தல்.
5. வேதி மாற்றத்தில் உண்டாகும் நிகழ்ச்சிகள் யாவை?
வெப்பம், ஒலி, ஒளி, நிறமாற்றம்.
6. வேதிமாற்றத்தைத் தூண்ட வல்ல காரணிகள் யாவை?
நெருங்கிய தொடர்பு, சூடாக்கல், ஒளி, மின்சாரம்.
7. வேதி மாற்றத்தின் வகைகள் யாவை?
1. வேதிக்கூடுகை வேதிச் சேர்க்கை. இதில் இரண்டிற்கு மேற்பட்ட பொருள்கள் சேர்ந்து ஒரு புதிய பொருளை உண்டாக்கும்.
2Mg+ O2 → 2MgO.
2. இடப்பெயர்ச்சி - இதில் ஒரு தனிமம். ஒரு சேர்மத்திலுள்ள மற்றொரு தனிமத்தை வெளியேற்றித் தான் அவ்விடத்தை அடைவது.
Zn + H2SO2 → ZnSO4 + H2 3. வேதிச்சிதைவு - ஒரு சேர்மம் சிதைவுற்று ஒன்றுக்கு மேற்பட்ட தனித்த பொருள்களாக மாறுதல்.
2Hgo → 2Hg + O2.
4. இரட்டைச் சிதைவு - இரு வேதிப் பொருள்கள் வினையாற்றும் பொழுது அவற்றின் உறுப்புகள் இடம் மாறி இரு புதிய பொருள்கள் உண்டாதல்.
CuSO4 + 2NaOH → Na2SO4 + Cu(OH)2
8. வேதியாற்றல் என்றால் என்ன?
இது பிணைப்பாற்றலே. ஒர் அணு அல்லது மூலக்கூறிலுள்ள ஆற்றலில் ஒரு பகுதியை வேதிவினை விடுவிக்கும். கட்டு அறுபடும் பொழுது, அணுக்கள் பிரிந்து பிணைப்பாற்றல் வெளிப்படும்.
9. ஆக்சிஜன் ஏற்றி என்றால் என்ன?
எரிதலை உண்டாக்கும் உயிர் வளியைத் தரும் பொருள். எ-டு. அய்டிரசன் பெராக்சைடு.
10. ஆக்சிஜன் ஏற்றம் என்றால் என்ன?
ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல் அல்லது அய்டிரஜன் நீங்கல். உயிர் வாழத் தேவைப்படும் ஓர் அடிப்படைச் செயல்.
11. ஆக்சிஜன் ஏற்ற இறக்கம் என்றால் என்ன?
ஆக்சிஜன் ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. ஆக்சிஜன் ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல்.
12. இவ்விரு செயல்களும் மின்வாயில் எவ்வாறு நடை பெறுகின்றன?
நேர்மின்வாயில் ஆச்சிஜன் ஏற்றமும் எதிர்மின்வாயில் ஒடுக்கலும் நடைபெறுகின்றன. இச்செயல்கள் மின் வேதியியல் முறைகள் சார்ந்தவை.
13. ஆக்சிஜன் ஏற்றி நீக்கல் என்றால் என்ன?
ஆக்சிஜன் ஏற்றத்தின் மூலம் கரி இரு ஆக்சைடையும் அய்டிரஜனையும் நீக்கல்.
14. ஆக்சிஜன் ஏற்றிப் பாஸ்பேட்டாக்கல் என்றால் என்ன?
ஓர் ஆற்றல் மிகு பிணைப்பு மூலம் ADP கரிமப் பாஸ்பேட்டைச் சேர்ந்து ATP உண்டாகுமாறு செய்தல்.
15. ஒடுக்கல் என்றால் என்ன?
வறுக்கப்பட்ட தாதுவானது துத்தநாக ஆக்சைடு, துள் கரியுடன் சேர்ந்து சூடாக்கப்படுகிறது. இப்போது கல்கரி துத்தநாக ஆக்சைடைத் துத்தநாகமாகக் குறைக்கிறது. ஆக்சிஜன் நீங்குகிறது.
16. அய்டிரஜன் ஏற்றம் என்றால் என்ன?
ஒரு சேர்மம் அய்டிரஜனோடு சேர்ந்து வினையாற்றுதல். வனஸ்பதி தயாரிப்பதில் இம்முறை பயன்படுகிறது.
17. அய்டிரஜன் அயனிச் செறிவு என்றால் என்ன?
ஒரு லிட்டர் கரைசலில் அடங்கியுள்ள அய்டிரஜன் அயனிகளின் கிராம் எண்ணிக்கை.
18. ஒடுக்கி என்றால் என்ன?
ஏனைய பொருள்களில் ஒடுக்கலை உண்டாக்கும் பொருள். எ-டு. கல்கரி.
19. ஒடுக்கல் என்றால் என்ன?
1. இது ஒரு முறை. இதில் ஒரு மின்னணு அணு அல்லது அயனியோடு சேர்கிறது. இச்செயல் ஆக்சிஜன் ஏற்றத்தைத் தொடர்ந்து வருவது.
20. ஒடுக்கலின் வகைகள் யாவை?
1. ஒரு மூலக்கூறிலிருந்து ஆக்சிஜனை நீக்கல்.
2. அதன் கூட்டுப் பொருள்களிலிருந்து உலோகம் பிரிதல்.
3. ஓர் அணு அல்லது அயனியிலிருந்து நேர் இணைதிறன் குறைதல்.
21. ஏற்ற இறக்கத் தொடர் என்றால் என்ன?
ஆக்சிஜன் ஏற்ற இறக்கமுறை. இதில் ஒரு பொருள் ஆக்சிஜன் ஏற்றம் பெறுகிறது. மற்றொன்று ஒடுக்கப் படுகிறது.
22. துருப்பிடித்தல் என்றால் என்ன?
இரும்பின் நீரேறிய ஆக்சைடு. இரும்பு ஈரக் காற்றுக்கு உட்படும்போது, அதன் மேல் உண்டாவது. இது ஒரு வேதிச் செயல். இதைத் தடுக்க வண்ணம் பூச வேண்டும்.
23. எரிதல் என்றால் என்ன?
இது ஓர் ஆக்சிஜன் ஏற்றம். இந்தச் செயல் விரைவாக நடைபெறுவதால் வெப்பமும் ஒளியும் உண்டாகும். ஆகவே, இது வேதிமாற்றமே. பொசுங்கும் பொருள்கள் எரியும்.
24. வெடித்தல் என்றால் என்ன?
விரைவான எரிதலால் உண்டாகும் வளிகள் பெருகும் பொழுது ஏற்படும் உடன் வெடிப்பு. இது கடுமையாக இருக்கும். சிறிய இடத்தில் வளிகளை அடைத்துப் பற்றவைக்கும் பொழுது அவை பெருகி வலுவான விசையை உண்டாக்க வல்லவை. இவ்விசையினாலேயே வெடித்தல் ஏற்படுகிறது. எ-டு. சீனிவெடி வெடித்தல்.
25. பெர்முடிட் என்றால் என்ன?
நீரில் கரைந்துள்ள தேவையில்லாத பொருளை நீக்கும் வேதிப் பொருள். இது சீயோலைட் சோடியம் அலுமினியம் சிலிகேட்.
26. நிலைகாட்டிகள் என்றால் என்ன?
நிறங்காட்டிகள். காடியாகவோ உப்பு மூலியாகவோ இருக்கும். வேதிப்பொருள்கள் தம் நிற மாற்றத்தால் வேதி வினையைக் காட்ட வல்லவை. எ-டு. மீத்தைல் கிச்சிலி, மீத்தைல் ஊதா.
27. குளோரின் நீக்கிகள் என்றால் என்ன?
சலவைத்தூளால் வெளுக்கப்பட்ட துணிகளிலுள்ள அதிகப்படியான குளோரினை நீக்கும் பொருள். எ-டு. சோடியம் தயோசல்பேட்டு, கந்தக இரு ஆக்சைடு, சோடியம் சல்பேட்டு.
28. ஆக்சைடு என்றால் என்ன?
ஆக்சிஜன் உள்ள இரு தனிச் சோடியம். எ-டு. மாங்கனிஸ் இரு ஆக்சைடு.
29. ஆக்சிஜன் ஏற்றும் அமிலம் எது?
நைட்டிரிக் அமிலம், கந்தக அமிலம்.
30. ஆக்சிஜன் அளவியல் என்றால் என்ன?
ஓடும் குருதியில் ஆக்சிஜன் செறிவை அளத்தல்.
31. பலவகை ஆக்சைடுகளைக் கூறுக.
ஓராக்சைடு - கரி ஓராக்சைடு ஈராக்சைடு - கரி இரு ஆக்சைடு. மூவாக்சைடு - கந்தக முவாக்சைடு.
32. இரு சல்பைடு என்றால் என்ன?
ஒரு மூலக்கூறு கந்தகத்தில் ஈரணுக்கள் உள்ள சல்பைடு. எ-டு. கரி இரு சல்பைடு. இச்சல்பைடில் கந்தகம் கரையும்.
33. கந்தக அமிலம் எந்த உப்பைக் கொடுக்கும்?
சல்பேட்
34. நைட்டிரிக் காடி எந்த உப்பைக் கொடுக்கும்?
நைட்ரேட்
35. அயடிரோ குளோரிகக் காடி எந்த உப்பைக் கொடுக்கும்? குளோரைடு.
36. பாசுவரிக அமிலம் எந்த உப்பைக் கொடுக்கும்?
பாஸ்பேட்
37. பெராக்சைடு என்றால் என்ன?
ஒரு கனிமக் கூட்டுப் பொருள்.
38. பிணைப்பு என்றால் என்ன?
அணுக்களையும் அணுத்தொகுதிகளையும் இறுக்கிப் பிடிக்கும் விசை.
39. வேதிநாட்டம் என்றால் என்ன?
ஓரணு மற்றொரு அணுவோடு சேரும் போக்கு. வேதிச் செயலுக்கு இன்றியமையாதது.
40. வேதிப் பிணைப்பு என்றால் என்ன?
ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களை நெருக்கி வைக்கும் விசை,
41. எத்தனை பிணைப்புகள் வரை உருவாக்கலாம்?
ஐந்து பிணைப்புகள் வரை உருவாக்கலாம். எ-டு. ஒற்றைப் பிணைப்பு. H + Cl → H-CI.
42. ஒற்றைப்பிணைப்பு என்றால் என்ன?
இரு தனிமங்களுக்கிடையே உள்ள உடன் பிணைப்பு. இதில் இரு மின்னணுக்கள் சேர்கின்றன.
43. இரட்டைப்பிணைப்பு என்றால் என்ன?
ஒரு கூட்டுப் பொருளில் ஈரணுக்களை இணைக்கும் இரு உடன் இணைப்புகள். இதில் ஒரு பிணைப்பு சிக்மா பிணைப்பு, மற்றொன்று பை பிணைப்பு. 44. இரட்டை உப்பு என்றால் என்ன?
இரு உப்புகளின் கூட்டுப் பொருள். இக்கரைசலைப் படிகமாக்கக் கிடைக்கும் உப்பு படிகாரம். இப்படிகாரம் பொட்டாசியம் சல்பேட்டும் அலுமியச் சல்பேட்டும் சேர்ந்தது.
45. முப்பிணைப்பு என்றால் என்ன?
மூவினை மின்னணுக்கள் பங்கு கொள்ளும் இரு அணுக்களிடையே உண்டாகும் உடன் பிணைப்பு.
46. முந்நிலை என்றால் என்ன?
வளி, நீர்மம், திண்மம் ஆகிய முந்நிலைப் பொருள்களும் சமநிலையில் இருக்கும் ஒரே நிலை.
47. பல் மையப் பிணைப்பு என்றால் என்ன?
இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களின் சுற்றுவழிகள் ஒன்றின் மீது மற்றொன்று படுவதால் உண்டாகும் இரு மின்னணுப் பிணைப்பு.
48. பன்மப் பிணைப்பு என்றால் என்ன?
பல்நிலைப் பிணைப்பு. ஓரிணை மின்னணுக்களுக்கு மேலுள்ள இரு அணுக்கருக்களுக்கிடையே ஏற்படும் பிணைப்பு. எ-டு. இரு பிணைப்பு, முப்பிணைப்பு.
49. வேதிப் பிணைப்புகள் எத்தனை வகைப்படும்?
1. அயனிப் பிணைப்பு -இதில் இணைதிறன் மின்னணுக்கள் நீங்கும் அல்லது உண்டாகும் எதிர் மின்னேற்றமுள்ள அணுக்கள் கூலும் விசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும்.
2. சகப் பிணைப்பு - இதில் இணைதிறன் மின்னணுக்கள் இரு அணுக்கருக்களோடு இணைந்திருக்கும். இதனால் உண்டாகும் பிணைப்பு முனைப் பிணைப்பு என்றுங்கூறப்படும். ஏனெனில், அணுக்கள் வேறுபட்ட மின் எதிர்மை இருக்கும்.
3. உலோகப் பிணைப்பு - இதில் இணைதிறன் மின்னணுக்கள் பல அணுக்கருக்களோடு சேர்கின்றன. இதனால் மின்கடத்தல் உண்டாகும்.
50. இணை(சக)ப் பிணைப்பு என்றால் என்ன?
இதில் இணையும் இரு அணுக்களுக்கிடையே ஒரு மின்னணு இணை பகிர்ந்து கொள்ளப்படுவதால் உண்டாகும் பிணைப்பு. எ-டு. மீத்தேன். இதில் கரி, நீர், வளி ஆகிய இரண்டிற்கிடையே உள்ள பிணைப்பு இணைப்புப் பிணைப்பு.
51. ஈதல் பிணைப்பு என்றால் என்ன?
இது ஓர் இணைப் பிணைப்பு. இதில் இரு தனி மின்னணுக்களுக்கும் ஒரே ஒரு அணுவால் மட்டும் பிணைப்பு வழங்கப்படுகிறது. எ-டு. பொரான் முப்புளோரைடு, அம்மோனியா ஆகிய இரண்டும் சேர்ந்து உண்டாகும் சேர்ப்புச் சேர்மம். இதில் நைட்ரஜன் இரு தனி மின்னணுக்களைப் பொரானுக்குக் கொடுத்து ஈதல் பிணைப்பை ஏற்படுத்துகிறது.
52. வேதிப்பிணைப்புக்கு உட்படா அணுக்கள் யாவை?
ஈலியம், நியான், ஆர்கன்.
53. பிணைப்பு நீளம் என்றால் என்ன?
வேதிக்கட்டில் சேர்க்கப்படும் இரு அணுக்களின் கருக்களுக்கிடையே உள்ள தொலைவு.
54. பிணைப்பு முனைத்திறன் என்றால் என்ன?
மின்னணுக்களை ஈர்க்கும் வேதிப் பிணைப்பிலுள்ள இரு அணுக்களின் திறனிலுள்ள வேறுபாடு.
55. பார்போர்டு வினையாக்கி என்றால் என்ன?
செம்பு (II) அசெட்டேட்டு, எத்தனாலிகக் காடி ஆகிய இரண்டும் சேர்ந்த கலவை. ஒற்றைச் சர்க்கரைகளைக் கரைசல் நிலையில் ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. இக்கலவையை ஒற்றைச் சர்க்கரையுடன் சேர்த்து வெப்பப்படுத்தச் செம்பு (I)ஆக்சைடின் செந்நிறவீழ்படிவு உண்டாகும்.
56. பெனிடிக்ட் கரைசல் என்றால் என்ன?
சோடியம் சிட்ரேட்டு, சோடியம் கார்பனேட்டு, செம்பு (II) சல்பேட்டு ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை.
57. இதன் பயன் யாது?
ஒடுங்கு சர்க்கரைக் கரைசலை ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. சர்க்கரைக் கரைசலோடு இக்கரைசலைச் சேர்த்து வெப்பப்படுத்தச் செம்பு (1)ஆக்சைடின் செந்நிற வீழ்படிவு உண்டாகும்.
58. டோலன் வினையாக்கி என்றால் என்ன?
அனைவுஅயனி. Ag(NH3)2+, இன் கரைசல். இந்த ஆய்வு ஆல்டிகைடுகளையும் ஆல்கைன்களையும் கண்டறியப் பயன்படுவது.
59. பேயர் வினையாக்கி என்றால் என்ன?
இது காரப் பொட்டாசியம் பர்மாங்கனேட். இவ்வினையாக்கியை ஆல்கேன் நிறமற்றதாக்கும் நிறைவுறாத்தன்மைக்கு இது ஆய்வு.
60. கேரியஸ் முறை எதற்குப் பயன்படுகிறது?
கரிமச்சேர்மங்களில் காணப்படும் ஹேலஜன்கள் (உப்பீனிகள்), பாசுவரம், கந்தகம் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுவது.
61. சீசெல்வினை என்றால் என்ன?
ஒரு கரிமச் சேர்மத்திலுள்ள மீத்தாக்சைல் தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் முறை.
62. இதை உருவாக்கியவர் யார்?
1886இல் சீசெல் என்பவர் உருவாக்கினார்.
63. வர்ட்ஸ் வினை என்றால் என்ன?
உலர் ஈத்தரில் சோடியத்தைச் சேர்த்து ஒர் ஏலோ ஆல்கேனை நீரோட்டத்தில் கொதிக்கவைத்து ஆல்கேன்கள் தயாரிக்கும் முறை.
64. கிரிஸ் வினையாக்கி என்பது என்ன?
சல்போனிலிகக் காடியின் கரைசல். ஆல்பா நாப்தைல் அமைனும் அசெட்டிகக் காடியும் நீரில் சேர்ந்த கரைசல். நைட்ரசக் காடியைக் கண்டறியப் பயன்படுவது.
65. நைலாந்தர் வினையாக்கி என்றால் என்ன?
பொட்டாசியம், சோடியம் டார்டரேட்டு, பொட்டாசியம் அய்டிராக்சைடு ஆகியவை கரைந்த கரைசல். சிறுநீரில் சர்க்கரை இருப்பதைக் கண்டறியப் பயன்படுதல்.
66. பயால் வினையாக்கி என்பது யாது? 10% இரும்பு (III) குளோரைடும் அடர் அய்டிரோ குளோரிகக் காடியும் ஆர்சனாலும் சேர்ந்த கலவை.
67. இதன் பயன் யாது?
பெண்டோஸ் சர்க்கரையை ஆய்ந்தறியப் பயன்படுவது. இச்சர்க்கரையை இவ்வினையாக்கியுடன் சேர்த்துக் கொதிக்க வைக்கப் பச்சைநிறம் உண்டாகும்.
68. பழுப்புவனைய ஆய்வு என்றால் என்ன?
நைட்டிரிகக் காடியைக் கண்டறியும் ஆய்வு. பெரஸ் சல்பேட்டுக் கரைசலில் சிறிது அடர் கந்தகக் காடியைச் சேர். பின் இக்கலவையில் சிறிது அடர்நைட்டிரிக காடியைச் சேர். நீர்மட்டத்தில் பழுப்பு வளையம் ஏற்படும்.
69. பதிலீட்டு வினை என்றால் என்ன?
இடப்பெயர்ச்சி வினை. மீத்தேனிலுள்ள அய்டிரசன் அணுக்களைக் கதிரவன் ஒளியில் குளோரின் அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடப்பெயர்ச்சி செய்யும். இதற்குப் பதிலீட்டு வினை என்று பெயர்.
70. அய்டிரோகுளோரிக அமிலத்திற்கு ஆய்வு என்ன?
வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலை இந்த அமிலத்துடன் சேர்க்க, வெள்ளிக் குளோரைடு வீழ்படிவு உண்டாகும்.
71. இந்த அமிலத்தின் பயன்கள் யாவை?
அரசநீர்மம் தயாரிக்க, குளோரின் தயாரிக்க.
72. நெசலர் கரைசல் என்றால் என்ன?
ஜூலியஸ் நெசலர் என்பவர் பெயரால் அமைந்தது. அம்மோனியாவைக் கண்டறியப் பயன்படுவது. இவ்வளியுடன் இக்கரைசலைச் சேர்க்க மாநிற வீழ்படிவு
73. இக்கரைசலை எவ்வாறு பெறலாம்?
பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசலில் பொட்டாசியம் மெர்க்குரிக் அயோடைடைச் சேர்த்துப் பெறலாம்.
74. வினையூக்கி என்றால் என்ன?
தான் மாறுபடாமல் தன்னுடன் சேருகின்ற பொருளை மாறுபாடு அடையச் செய்யும் வேதிப் பொருள். இது வேதிவினையை விரைவுப் படுத்துவது.
75. வினையூக்கியின் வகைகள் யாவை?
1. கனிம வினையூக்கி - மாங்கனிஸ் - இரு - ஆக்சைடு
2. கரிம வினையூக்கி - நொதிகள்.
76. வினையூக்கம் என்றால் என்ன?
வினையூக்கியால் ஏற்படும் வேதிச்செயல்.
77. ஆல்டால் வினை என்றால் என்ன?
இதில் ஓர் ஆல்டிகைடின் இரு மூலக்கூறுகள் எரிசோடா முன்னிலையில் சேர்ந்து ஓர் ஆல்டாலைக் கொடுக்கும்.
78. வெண்ணாவி என்றால் என்ன?
ஆல்கேன் கலவை. கரைப்பான். வண்ணத்தொழிலில் பயன்படுவது.
79. டையசோவாக்குதல் என்றால் என்ன?
நறுமண அமைன் (அனிலைன்) குறைந்த வெப்பநிலையில் நைட்டிரசக் காடியோடு வினையாற்றுதல்.
80. கரிமப்படுவினை என்றால் என்ன?
இவ்வினையில் கரிம வேதிப்பொருளில் நைட்ரோ தொகுதி சேர்க்கப்படுகிறது.
81. கூட்டுவினை என்றால் என்ன?
எத்திலீன், அசெட்டலீன் ஆகியவை புரோமின் கரைசலுடன் வினையாற்றி, அக்கரைசலை நிறமற்றதாக்கும் வினை.
82. கன்னிசாரோ வினை என்றால் என்ன?
பென்சால் - டி - கைடை ஒரு கார அடர்கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும்பாழுது பென்சைல் ஆல்ககாலாகவும் பென்சாயிகக் காடியாகவும் அது மாறும்.
83. பையூரெட் ஆய்வு என்பது என்ன?
இது புரதங்களையும் அவற்றின் வழிப் பொருள்களையும் கண்டறியும் ஆய்வு. ஆய்வுக் கரைசலுடன் முதலில் சோடியம் அய்டிராக்சைடு சேர்க்கப்படுகிறது. பின் அதனுடன் செம்புச் (II) சல்பேட்டு துளித்துளியாகச் சேர்க்கப்படுகிறது. இப்பொழுது தோன்றும் ஊதாநிறம் புரதம் இருப்பதைக் காட்டுகிறது.
(2) வேதி விதிகள்
84. போல்ட்ஸ்மன் மாறிலி என்றால் என்ன?
ஆவோகடரோ மாறிலிக்கும் அனைத்து வளி மாறிலிக்குமுள்ள வீதம்.
85. ஆவோகடரோ மாறிலி என்றால் என்ன?
ஒரு மோல் பொருளிலுள்ள அணுக்களின் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கை இதன் மதிப்பு 6.02252.x 1023. இதன் பழைய பெயர் ஆவோகடரோ எண்.
86. ஆவோகடரோ கருதுகோள் என்றால் என்ன?
ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் உள்ள பல வளிகளின் பருமன் சமமானால், அவற்றிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். இவ்விதி கேலூசாக்கின் பருமனளவு விதியை நன்கு விளக்குகிறது. இதை இவர் 1811 இல் முன்மொழிந்தார்.
87. டியுலாங்-பெட்டிட் விதி யாது? இதன் சிறப்பு யாது?
திண்மநிலையில் இருக்கும் ஒரு தனிமத்தின் வெப்ப எண், அதன் அணு எடை ஆகியவற்றின் பெருக்குத்தொகை மாறா எண்.
அணு எடைx வெப்ப எண் = 2.68x104.
அணு எடை 20க்கு மேற்பட்ட பல உலோகங்கள் இவ்விதிக்குக் கட்டுப்படுபவை. கரி, பொரான், சிலிகான் முதலிய உலோகங்கள் இவ்விதிக்கு உட்படுவதில்லை.
89. வேதிக்கூடுகை விதிகள் யாவை?
1. பொருண்மை அழியா விதி - வேதிமாற்றம் நிகழும்பொழுது உருவாகும் வினைப் பொருள்களின் மொத்த பொருண்மை வேதிமாற்றத்தில் ஈடுபட்ட வினைப்படுபொருள்களின் மொத்தப் பொருண்மைக்கு ஈடாகும். 1789இல் இவ்விதியை இலாவசியர் வெளியிட்டார்.
2. மாறாவீத விதி - ஒரு சேர்மத்தை எம்முறையில் உண்டாக்கினாலும், அதில் ஒரே வகையான தனிமங்கள் ஒரு திட்டமான எடைவீதத்திலேயே கூடியிருக்கும் 1799இல் பிரெளஸ்ட் இவ்விதியைக் கண்டறிந்தார்.
3. மடங்குவீத விதி
இரு தனிமங்கள் இணைந்து, ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களைக் கொடுக்கும்போது குறிப்பிட்ட எடையுள்ள ஒரு தனிமத்துடன் சேரும் மற்றொரு தனிமத்துடன் எடைகள் சிறிய முழு எண் வீதத்தில் இருக்கும். 1803இல் இதை ஜான் டால்டன் வரையறை செய்தார்.
89. பாபோ விதி யாது?
ஒரு கரைபொருளை நீர்மத்தில் கரைக்க, அதன் ஆவியழுத்தம் தாழ்வுறும். அவ்வாறு தாழ்வது அதில் கரைந்துள்ள கரைபொருள் அளவுக்கு நேர்வீதத்தில் இருக்கும்.
90. இவ்விதி எப்பொழுது வகுக்கப்பட்டது?
ஜெர்மன் வேதிஇயலார் பாபோ என்பவரால் 1847இல் வகுக்கப்பட்டது.
91. ரெளலட்டு விதி யாது?
ஒரு கரைசலின் சார்பு ஆவியழுத்தக் குறைவு, அதில் கரைந்துள்ள கரைபொருளின் மோல் பின்னத்திற்குச் சமம்.
92. தனிமவரிசை விதியைக் கூறு.
தனிமங்களின் இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் அவற்றின் அணு எடைகளுக்கேற்ப மாற்றமடைகின்றன.
93. இவ்விதியை வகுத்து வெளியிட்டவர் யார்?
மெண்டலீஃப் என்பார் 1869இல் வெளியிட்டார்.
94. இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளார்?
மெண்டலிவியம் என்னும் கதிரியக்கத் தனிமம் இவர் பெயரால் அமைந்தது. இது புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. குறுகிய நேரமே இருக்கக் கூடிய பல ஒரிமங்கள் இதிலிருந்து தொகுக்கப்படுகின்றன.
95. உட்வோர்டு - ஆஃப்மன் விதிகள் யாவை? சில வகைக் கரிம வினைகளில் தோன்றும் வினைப்பொருள்களைப் பற்றிய விதிகள். அமெரிக்க வேதிஇயலார் இராபர்ட் உட்வோர்டு, ஆஃப்மன் ஆகிய இருவரும் 1969இல் உருவாக்கியது.
96. லோரி-பிரான்ஸ்டெட்டு கருத்து யாது?
இதன்படி ஒரு முன்னணுவைக் கொடுக்கும் பொருள் காடி. அம்முதலனுவை ஏற்கும் பொருள் காரம். அதாவது காடி என்பது முதலணு கொடுப்பி. காரம் என்பது முதலணு ஏற்பி.
97. லூயிஸ் காடி என்றால் என்ன?
ஈதல் பிணைப்பை உருவாக்க ஒரு மின்னணு இணைவை ஏற்கும் பொருள்.
98. லூயிஸ் உப்பு மூலி (காரம்) என்றால் என்ன?
இது ஒரு மின்னணுவை அளிப்பது.
99. லூயிஸ் கருத்து என்பது யாது?
இதன்படி ஒரு மின்னணு இரட்டையை ஏற்றுக் கொள்ளும் பொருள் காடி. அம்மின்னணு இரட்டையைக் கொடுக்கும் பொருள் காரம்.
100. அர்கீனியஸ் கொள்கையின் எடுகோள்கள் யாவை?
1. அயனிகள் எனப்படும மின்னேற்றத் துகள்களாக மின்பகுளிகள் பிரிகின்றன. இவை நேரயனிகளும் எதிரயனிகளும் ஆகும்.
2.மின்பகுளி முழுதுமாக நடுநிலை கொண்டது. ஆகவே, நேரயனியின் மொத்த மின்னேற்றம் எதிரயனிகளின் மொத்த மின்னேற்றத்திற்குச் சமம்.
3. அயனிவயமடையாத மூலக்கூறுகளுக்கும் பிரிந்த அயனிகளுக்குமிடையே சமநிலை உள்ளது.
4. மின்பகுளிக்கரைசல் வழியாக மின்னோட்டம் செல்லும்பொழுது, எதிர்மின்வாய் நேரயனியைக் கவர்கிறது. மின்பகுளிக் கரைசலில் மின்கடத்து திறனுக்குக் காரணம் அக்கரைசலிலுள்ள அயனிகள் இயக்கமே ஆகும்.
5. அயனிகளின் பண்புகளே மின்பகுளிக் கரைசலின் பண்புகள். ஆகவே, அய்டிரசன் அயனிகள் காடிப் பண்புகளுக்கும் அய்டிராக்சைல் அயனிகள் காரப்பண்புகளுக்குக் காரணம்.
101. போர் எப்பொழுது தம் அணுக்கொள்கையை வெளியிட்டார்? அது எதை விளக்குகிறது?
1911இல் அறிமுகப்படுத்தி 1913இல் வெளியிட்டார். இது அணு அய்டிரஜனின் நிறமாலையை விளக்குவது.
102. சார்லஸ் விதி யாது?
குறிப்பிட்ட நிறையின் வளியின் பருமன் 0° செஇல் ஒவ்வொரு செல்சியஸ் பாகைக்கும் அதன் வெப்பநிலை உயர்த்தப்படும்பொழுது, அதன் பருமன் மாறாப் பின்ன அளவில் பெருகுகிறது.
103. டால்டன் அணுக் கொள்கை யாது?
இதன் எடுகோள்களாவன: 1. அனைத்துத் தனிமங்களுக்கும் அணுக்கள் எனப்படும் மிகச்சிறிய துகள்களாலானவை. 2. ஒரே தனிமத்தின் எல்லா அணுக்களும் ஒத்தவை. 3. அணுக்களை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. 4. எளிய வீதங்களில் கூட்டு அணுக்களை உண்டாக்க அணுக்கள் சேருகின்றன.
104. கேலூசக் விதி யாது?
வளிகள் வினைப்படும்பொழுது, அவற்றின் பருமனும் வினையில் விளைந்த வளிப்பருமனும் ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் சிறிய முழு எண்வீதத்தில்
105. கிரகாம் விதி யாது?
வளியின் பரவுநேர் விரைவு அதன் அடர்த்தியின் வர்க்கமூலத்திற்குக் தலைகீழ் வீதத்திலுள்ளது.
106. நுரைத்தெழல் என்றால் என்ன?
வேதிவினையினால் ஒரு நீர்மத்திலிருந்து வளிக்குமிழிகள் விடுபடுதல். பொங்கிவழிதல் என்றுங் கூறலாம். எ-டு. சோடா நீர்.
107. பூத்தல் என்றால் என்ன?
படிகம் தன் நீரை இழந்து உப்பு உண்டாதல்.