அறிவுக்கு உணவு/எவன் பைத்தியக்காரன்?
கடையில் முதலாளி ஒருவன் அதிகமான பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான்.
பிச்சைக்காரன் ஒருவன் வந்து காசு கேட்டான்.அவனை கணக்குப் பிள்ளை விரட்டினான். பிச்சைக்காரன் எதிர்த்தான் முதலாளி, “அவனை விரட்டவேண்டாம்; அவன் பைத்தியக் காரன்,” எனக்கூறி, ஒரு காசு கொடுத்தனுப்பினான்.
பிச்சைக்காரன் கனிந்த வாழைப்பழம் விற்கும் கடைக்காரி யிடம் சென்று காசைக் கொடுத்துப் பழம் கேட்டான் கடைக்காரி, ஏது “சாமியாரே இன்றைக்குக் காசு!" என வியந்து கேட்டாள். “அதோ அந்தக் கடையில் பணத்தை எண்ணி எண்ணி அடுக்கிக்கொண்டிருக்கிற ஒரு பைத்தியக்காரன் கொடுத்தான்.” எனக் கூறினான் அவன்.