அறிவுக்கு உணவு/கூட்டுக் கையெழுத்து
எவனொருவன் பிறருடைய கடனுக்காகக் கூட்டுக் கையெழுத்துப் போடத் தொடங்குகிறானோ, அவன் அன்றையிலிருந்தே தன்னையும் அழித்துக் கொள்ளத் தொடங்கிவிடுகிறான். கூட்டுக்கையெழுத்துப் போட்டுப் பிறருக்கு உதவி செய்ய விரும்புவதைவிட, தன் கையில் இருக்கும் பணத்தை அவருக்கு நன்கொடையாகக் கொடுத்து விடுவது எவ்வளவோ மேலானது.