அறிவுக்கு உணவு/மகிழ்ச்சி
வெற்றியும் தோல்வியும் பாராமல், புகழும் வசையும் எண்ணாமல், கடமையைச் செய்து மகிழ்வதுதான் இவ்வுலகின் உண்மையான மகிழ்ச்சியாகும்.
விதி என்பது ஒன்று உண்டு. அது நன்றாய் விளையாடும் ஒரு விளையாட்டுப் பிள்ளை. முயற்சி என்ற வலிமை பெற்றுள்ள மனிதன், ஆயுதம் எடுத்து அதனுடன் சண்டைக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை. கையையே ஆயுதமாக உப யோகிக்க வேண்டிய தேவையும் இல்லை. முயற்சியுடையாரின் ஆண்மை நிறைந்த ஏளனச் சிரிப்பு ஒன்றே அதை வெல்வதற்குப் போதுமானது.