அறிவுக் கதைகள்/சாட்சிக்காரரின் சொத்து மதிப்பு
அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
வக்கீல் : உமக்கு என்ன வேலை?
சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது.
வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா?
சாட்சி : ஆம். இருக்கிறது.
வக்கீல் : எல்லாம் ரொக்கமாகவா? நிலமாகவா ? கட்டிடமாகவா ?
சாட்சி : கட்டிடமாக.
விக்கீல் : அதன் மதிப்பு எவ்வளவு
சாட்சி : ஒரு லட்ச ரூபாய் பெறும்.
வக்கீல் : ஊர்க்கடைசியில் கோவில் மதிற்சுவரை ஒட்டிப் போட்டிருக்கும் கூரைத் தாழ்வாரம் தானே உன் வீடு.
சாட்சி : ஆமாம்.
வக்கீல் : அதுவா ஒரு லட்சம் பெறும்?
சாட்சி : கட்டாயம் பெறும். அதற்கு மேலும் பெறும். ஒருவர் 95 ஆயிரம்வரை கேட்டார்; மறுத்து விட்டேன். 99 ஆயிரத்திற்குக் கேட்டாலும் தரமாட்டேன்.
வழக்கறிஞர் அயர்ந்து போனார். நீதிபதி சிரித்து மகிழ்ந்தார். என்ன செய்வது? இப்படியும் சில சாட்சிகளை நீதிமன்றங்கள் சந்திக்கின்றன.