அறிவுடை நம்பி
அறிவுடை நம்பி
தொகு1. அகநானூறு - 28. குறிஞ்சித்திணை
தொகு- (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது பகலே சிறைப்புறம்.)
- மெய்யிற் றீரா மேவரு காமமொடு
- எய்யா யாயினு முரைப்பல் தோழி
- கொய்யா முன்னுகுங் குரல்வார்பு தினையே
- அருவி யான்ற் பைங்கால் தோறும்
- இருவி தோன்றின பலவே நீயே (5)
- முருகுமுரண் கொள்ளுந் தேம்பாய் கண்ணிப்
- பரியல் நாயொடு பன்மலைப் படரும்
- வேட்டுவற் பெறலொ டமைந்தனை யாழநின்
- பூக்கெழு தொடலை நுடங்க வெழுந்தெழுந்து
- கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி (10)
- ஆங்காங் கொழுகா யாயின் அன்னை
- சிறுகிளி கடிதல் தேற்றா ளிவளெனப்
- பிறர்த்தந்து நிறுக்குவ ளாயின்
- உறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே.
2. குறுந்தொகை - 230. நெய்தல்திணை
தொகு- (வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.)
- அம்ம வாழி தோழி கொண்கன்
- தானது துணிகு னல்லன் யானென்
- பேதை மையாற் பெறுதகை கெழுமி
- நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ
- வயச்சுறா வழங்குநீ ரத்தந் (5)
- தவச்சின் னாளினன் வரவறி யானே.
3. நற்றிணை - 15. நெய்தல்திணை
தொகு- (வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது)
- முழங்குதிரை கொழீஇய மூரி யெக்கர்
- நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள
- ஊதை தூற்று முரவுநீர்ச் சேர்ப்ப
- பூவி ன்ன்ன நலம்புதி துண்டு
- நீபுணர்ந் தனையே யன்மையின் யாமே (5)
- நேர்புடை நெஞ்சந் தாங்கத் தாங்கி
- மாசில் கற்பின் மடவோள் குழவி
- பேஎய் வாங்க்க் கைவிட் டாங்குச்
- சேணு மெம்மொடு வந்த
- நாணும் விட்டேம் அலர்கவிவ் வூரே. (10)
4. புறநானூறு-188
தொகுதிணை: பொதுவியல்
தொகுதுறை: பொருண்மொழிக் காஞ்சி
தொகு- படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
- உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
- குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
- இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
- நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் (5)
- மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
- பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே.