அழுகணி சித்தர்
அழுகணி சித்தர் பாடல்கள்
- பக்கம் 233 - 237
கலித்தாழிசை
1
தொகு- மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
- கோலப் பதியடியோ குதர்க்கம் தெருநடுவே
- சாலப் பதி தனிலே தணலாய் வளர்த்த கம்பம்
- மேலப் பதிதனிலே – என் கண்ணம்மா
- விளையாட்டைப் பாரேனோ
- எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
- பஞ்சாய்க் காரர் ஐவர் பட்டணமுந் தானிரண்டு
- அஞ்சாமற் பேசுகிறாய் ஆக்கினைக்குத் தான்பயந்து
- நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா
- நிலைகடந்து வாடுறண்டி
3
தொகு- முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
- பத்தாம் இதழ் பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி
- அத்தை அடக்கி நிலை ஆருமில்லா வேளையிலே
- குத்து விளக்கே ற்றி என் கண்ணம்மா
- கோலமிட்டுப் பாரேனோ
4
தொகு- சம்பா அரிசியடி சாதஞ் சமைத்திருக்க
- உண்பாய் நீயென்று சொல்லி உழக்குழக்கு நெய்வார்த்து
- முத்துப் போலன்னமிட்டு முப்பழமுஞ் சர்க்கரையுந்
- தித்திக்கும் தேனமிர்தம் என் கண்ணம்மா
- தின்று களைப் பாறேனோ
5
தொகு- பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல் தூக்கிச்
- செம்பொற் கலையுடுத்திச் சேல்விழிக்கு மையெழுதி
- அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
- கம்பத்தின் மேலிருந்தே என் கண்ணம்மா
- கண்குளிரப் பாரேனோ
6
தொகு- எட்டாப் புரவியடி ஈராறு காலடியோ
- விட்டாலும் பாரமடி வீதியிலே தான்மறித்துக்
- கட்டக் கயிறெடுத்துக் கால்நாலுஞ் சேர்த்திறுக்கி
- அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்மா
- ஆண்டிருந்தா லாகாதோ
7
தொகு- கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி யென் வயிறு
- நில்லென்று சொன்னால் நிலைநிறுத்தக் கூடுதில்லை
- நில்லென்று சொல்லியல்லோ நிலை நிறுத்த வல்லார்க்குக்
- கொல்லென்று வந்த நமன் என் கண்ணம்மா
- குடியோடிப் போகானோ
8
தொகு- ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
- மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
- மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
- ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா
- உன் பாதஞ் சேரேனோ
9
தொகு- வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித்
- தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி
- தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமல் சாகவல்லோ
- வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா
- வாழ்வெனக்கு வாராதோ
10
தொகு- பையூரி லேயிருந்து பாழூரிலே பிறந்து
- மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்
- மெய்யூரிற் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
- பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா
- பாழாய் முடியாவோ
11
தொகு- மாமன் மகளடியோ மச்சினியோ நான்றியேன்
- காமன் கணையெனக்குக் கனலாக வேகுதடி
- மாமன் மகளாகி மச்சினியும் நீயானால்
- காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா
- கண் விழிக்க வேகாவோ
12
தொகு- அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை யம்பாக்கி
- மந்திரத் தேரேறியல்லோ மான் வேட்டையாடுதற்குச்
- சந்திரருஞ் சூரியருந் தாம் போந்த காவனத்தே
- வந்து விளையாடியல்லோ என் கண்ணம்மா
- மனமகிழ்ந்து பார்ப்பதென்றோ
13
தொகு- காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
- நாட்டார் நமைமறித்து நகைவிரியப் பார்ப்பதென்றோ
- நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தா லுங்
- காட்டானை மேலேறி என் கண்ணம்மா
- கண்குளிரக் காண்பேனோ
14
தொகு- உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
- மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுத்துக்
- கச்சை வடம்புரியக் காய லூர்ப் பாதையிலே
- வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா
- வகைமோச மானேண்டி
15
தொகு- மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான் தூக்கி
- நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
- நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
- மூக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
- முழுதுந் தவிக்கிறண்டி
16
தொகு- காம மலர் தூவக் கருத்தெனக்கு வந்ததடி
- பாம வலிதொலைக்கப் பாசவலி கிட்டுதில்லை
- பாம வலிதொலைக்கப் பாசவலி நிற்குமென்றால்
- காம மலர் மூன்றும் என் கண்ணம்மா
- கண்ணெதிரே நில்லாவோ
17
தொகு- தங்காயந் தோன்றாமல் சாணகலக் கொல்லைகட்டி
- வெங்காய நாற்று விட்டு வெகு நாளாய்க் காத்திருந்தேன்
- வெங்காயந் தின்னாமல் மேற்றோலைத் தின்றலவோ
- தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா
- சாகிறண்டி சாகாமல்
18
தொகு- பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல்
- உற்றுற்றுப் பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை
- உற்றுற்றுப் பார்த்தாலும் உன் மயக்கந் தீர்ந்தக்கால்
- பற்றற்ற நீராகும் என் கண்ணம்மா
- பாசியது வேறாமோ
19
தொகு- கற்றாரும் மற்றாருந் தொண்ணூ ற்றோ டாறதிலே
- உற்றாரும் பெற்றாரும் ஒன்றென்றே யானிருந்தேன்
- உற்றாரும் பெற்றாரும் ஊரை விட்டுப் போகையிலே
- சுற்றாரு மில்லாமல் என் கண்ணம்மா
- துணையிழந்து நின்றதென்ன
20
தொகு- கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
- உண்ணாக்கு மேலேறி உன் புதுமை மெத்தவுண்டு
- உண்ணாக்கு மேலைறி உன் புதுமை கண்டவர்க்குங்
- கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா
- காரணங்கள் மெத்தவுண்டே
21
தொகு- சாயச் சரக்கெடுத்தே சாதிலிங்கந்தான் சேர்த்து
- மாயப் பொடி கலந்து வாலுழுவை நெய்யூற்றிப்
- பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே
- இட்ட மருந்தாலே என் கண்ணம்மா
- இல்லேட மானேண்டி
22
தொகு- பாதாள மூலியடி பாடாணந் தான் சேர்த்து
- வேதாளங் கூட்டியல்லோ வெண்சாரை நெய்யூற்றிச்
- செந்தூர மையடியோ செகமெலாந் தான் மிரட்டித்
- தந்த மருந்தாலே என் கண்ணம்மா
- தணலாக வேகுறண்டி
23
தொகு- கள்ளர் பயமெனக்குக் கால்தூக்க வொட்டாமல்
- பிள்ளை யழுதுநின்றால் பெற்றவட்குப் பாரமடி
- பிள்ளை யழுவாமல் பெற்றமனம் நோகாமல்
- கள்ளர் பயமெனக்கே என் கண்ணம்மா
- கடுகளவு காணாதோ
24
தொகு- பட்டணத்தை யாளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள்
- விட்டுப் பிரியாமல் வீரியங்கள் தாம்பேசி
- விட்டுப் பிரிந்தவரே வேறு படுங்காலம்
- பட்டணமுந் தான்பறி போய் என் கண்ணம்மா
- படைமன்னர் மாண்டதென்ன
25
தொகு- ஆகாப் புலையனடி அஞ்சானந் தான் பேசிச்
- சாகாத் தலையறியேன் தன்னறிவு தான்றியேன்
- வேகாத காலறியேன் விதி மோசமானேனடி
- நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா
- நொடியில் மெழுகானேனடி
26
தொகு- தாயைச் சதமென்றே தந்தையரை ஒப்பென்றே
- மாயக் கலவிவந்து மதிமயக்க மானேனடி
- மாயக்கலவி விட்டு மதிமயக்கந் தீர்ந்தக்கால்
- தாயுஞ் சதமாமோ என் கண்ணம்மா
- தந்தையரு மொப்பாமோ
27
தொகு- அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
- நெஞ்சாரப் போய் சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
- கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
- அஞ்சாதேயென்று சொல்லி என் கண்ணம்மா
- ஆண்டிருந்தா லாகாதோ
28
தொகு- உன்னை மறந்தல்லோ உளுத்த மரமானேன்
- தன்னை மறந்தார்க்குத் தாய் தந்தை யில்லையடி
- தன்னை மறக்காமற் றாயாரு முண்டானால்
- உன்னை மறக்காமல் என் கண்ணம்மா
- ஒத்திருந்து வாழேனோ
29
தொகு- காயப் பதிதனிலே கந்தமூ லம்வாங்கி
- மாயப் பணிபூண்டு வாழுஞ் சரக்கெடுத்தே
- ஆயத் துறைதனிலே ஆராய்ந்து பார்க்கு முன்னே
- மாயச் சுருளோலை என் கண்ணம்மா
- மடிமேல் விழுந்ததென்ன
30
தொகு- சித்திர த்தைக் குத்தியல்லோ சிலையை எழுதி வைத்து
- உத்திரத்தைக் காட்டாமல் ஊரம்ப லமானேன்
- உத்திரத்தைக் காட்டியல்லோ ஊரம்பலமானால்
- சித்திரமும் வேறாமோ என் கண்ணம்மா
- சிலையுங் குலையாதோ
31
தொகு- புல்லரிடத்திற் போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப்
- பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கி றண்டி
- பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
- புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா
- பொருளெனக்குத் தாராயோ
32
தொகு- வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனமளித்துக்
- குட்டுண்டு நின்றேண்டி கோடிமனு முன்னாலே
- குட்டுண்டு நில்லாமற் கோடிமனு முன்னாக
- வெட்டுண்டு பிணிநீக்கி என் கண்ணம்மா
- விழித்து வெளி காட்டா யோ
- முற்றும்