அ. மருதகாசி-பாடல்கள்/நகைச்சுவை

நகைச்சுவை

சிரிப்பு.... .... .... ... இதன்
சிறப்பை சீர்தூக்கி பார்ப்பது நமது பொறுப்பு!...
கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்
காட்டும் கண்ணாடி சிரிப்பு-மனம்
கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக்
காட்டும் கண்ணாடி சிரிப்பு


இது
களைப்பை நீக்கி கவலையைப் போக்கி,
மூளைக்குத் தரும் சுறு சுறுப்பு ....
துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு ! இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில்
துலங்கிடும் தனி செழிப்பு !


பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப்
பல்லிளிப்பதும் ஒரு வகைச் சிரிப்பு-அதன்
பலனாய் உடனே பரிசாய் கிடைப்பது
காதறுந்த பழஞ் செருப்பு!


சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு! வேறு
ஜீவ ராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு !
இது .... அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு !....
இது .... அடங்கி நடப்பவன் அசட்டுச் சிரிப்பு !...
இது .... சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு !...
இது .... சங்கீதச் சிரிப்பு !


ராஜாராணி-1956


இசை : T.R.பாப்பா

பாடியவர்: கலைவாணர் N. S. கிருஷ்ணன்

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்
திருமணமாம் ! - இரவில்
சோளத்தட்டை பல்லாக்கிலே
ஊர் வலமாம் !


நொண்டிக்காலு நண்டுப் பொண்ணு
நாட்டியமாம் !
நுரைத் தவளை மேளதாள
வாத்தியமாம்!
தொண்டையில்லாக் கோட்டானும்
சுதியை விட்டு பாடிச்சாம் !
கண்சிமிட்டி மின்மினியும்
காந்தலைட்டு போட்டுச்சாம் !


நஞ்ச வயல் சேறு அங்கே
சந்தனமாம்!
நத்தாங் கூட்டுத் தண்ணிரே
பன்னீராம் !
புஞ்சைக் காட்டுக் குருவித் தழை
போட்டுக் கொள்ள வெத்திலையாம் !
வந்திருந்த கும்பலுக்கு
சோறுமட்டும் பத்தலையாம் !


கைதி கண்ணாயிரம்


இசை : K. V. மகாதேவன்

பாடியவர்: M. S. ராஜேஸ்வரி


சேகர் : வளையல்-அம்மா! வளையல்!

ஜக்கன் : வளையல்! அம்மா! வளையல்!

வளைசல் நெளிசல் ஒடசல் இல்லா வளையல்:

சேகர் : பளபளப்பான பம்பாய் வளையல்

இருக்குது பலதினுசு! -கைவசம்
இருக்குது பலதினுக!


ஜக்கன் : புது பாஷன் பூனா வளையல் இதுக்கு

எங்கும் தனிமவுசு !-எப்போதும்
எங்கும் தனிமவுசு!


சேகர் : வழவழப்பான கைகளுக்கேத்த

வங்கிரகம் புதுசு!-இந்த
வங்கிரகம் புதுசு!


ஜக்கன் : இதை ....

வாங்கிப் போட்டுக்கும் அம்மாமாருக்கு
வந்து சேரும் சொகுசு!-தேடி
வந்து சேரும் சொகுசு!


(வேறு நடை)


ஜக்கன் : புள்ளைக்குட்டி பெத்தெடுத்த

பொம்பளைங்க கூட இதை
போட்டுக்கிட்டா வயசு தெரியாது!


சேகர் : பணப் ....

புழக்கமில்லா ஏழைகளும்
சல்லுசாக வாங்கும் நகை
பூமியிலே வேறு கிடையாது!
ஜக்கன்: கள்ளத்தனமாக இரு காதலர்கள் பேசும்போது
எள்ளளவு ஓசையும் செய்யாது !-இது
எள்ளளவு ஓசையும் செய்யாது!
சேகர் : கப்பலேறி இங்குவந்த ரப்பர் வளைஇது எந்தக்
காரணத்தினாலும் உடையாது !-எந்தக்
காரணத்தினாலும் உடையாது !
(வேறு நடை)
செகப்புவளையல் கறுத்த கையில்
ஜிலு ஜிலுன்னு ஜொலிக்கும் !
கருப்பு வளையல் செவந்த கையின்
மதிப்பை அதிகமாக்கும் !
ஜக்கன்: கனத்த உடம்பு பெண்களுக்கு
காரு வளையல் இருக்கு !
கடகம் இது தலையணையா
உதவி செய்யும் நமக்கு !
(வேறு நடை)
சேகர் : பொன்னைப் போலவே மின்னும் கண்ணாடி
வளையல் ரொம்ப ஜோரு!-இந்த
வளையல் ரொம்ப ஜோரு!
ஜக்கன்:கையில் போட்டு ஆட்டினா புருஷனும் மயங்கி
கேட்டதைத் தருவாரு!-நீ
கேட்டதைத் தருவாரு!

சேகர் : கன்னிப் பெண்களின் கண்ணைக் கவ்வும்

கங்கணக் காப்பைப் பாரு!-இந்த
கங்கணக் காப்பைப் பாரு!


ஜக்கன்: இது

கையில் ஏறினா கல்யாண மாப்பிள்ளை
வீடு தேடி வருவாரு!-உன்
வீடு தேடி வருவாரு!


ஆசை-1956


இசை : T.R.பாப்பா


பாடியவர்கள்: N. S. கிருஷ்ணன், A. M. ராஜா

ஆண் : சீனத்து ரவிக்கை மேலே
சேலம் பட்டு சரிகைச் சேலே!
ஓரங் கிளிஞ்ச தென்னடி?-எங்குருவிக்காரி
உண்மையைச் சொல்லிப் போடடி!


பெண்: பானையை எறக்க நானும்
பரணை மேலே ஏறும் போது
ஆணி மாட்டிக் கிழிஞ்சி போச்சுடா!-எங்குருவிக்காரா
அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா!


ஆண் : மாலை வெயில் டாலடிக்கும்
மாம்பழக்கன்ன நிறம்
மாறிச் சிவந்த தென்னடி?-எங்குருவிக்காரி
மர்மம் விளங்கச் சொல்லடி!


பெண்:மாலையிட்ட மம்முதனே!
காலையிலே உன்னுடைய
வாண்டுப் பயல் கடிச்சிப் போட்டாண்டா!-எங்குருவிக்காரா
தாண்டியே குதிக்க வேணாண்டா!


ஆண் : சீவி சிணுக்கெடுத்து
சிங்காரிச்சு பூவும் வச்சு
கோயிலுக்குத் தானே போனே?-எங்குருவிக்காரி
கூந்தல் கலைஞ்சதென்னடி?


மருத-18

பெண்: கோயிலுக்கு போயிநானும்
கும்பிட்டதும் என் மேலே
சாமி வந்து ஆடுனதாலே!-எங்குருவிக்காரா
தலையும் கலைஞ்சு போச்சுடா!


ஆண் :நீ கைவீசிப் போகையிலே கலகலண்ணு ஒசையிடும்!
கண்ணாடி வளையல் பூராவும்!-எங்குருவிக்காரி
ஒண்ணில்லாம ஒடைஞ்ச தென்னடி?


பெண்:நான் பொய் பேசப் போறதில்லே!-மச்சான்
ஒரு புத்தியில்லாகாலிப்பயல்
கையைப் புடிச்சு இழுத்ததால்!-எங்குருவிக்காரா
கலகத்துல ஒடைஞ்சு போச்சுடா!


ஆண் :ஆங்! அப்படியா! அவன் யாரு?
அவன் என்ன? அவன் எங்கே?
நீ காட்டு! நான் போட்டு!-சும்மா
கும்தளாங்கு குமுர்தகுப்பா!
ஷிங் ஷிணாகி டபுக்கு டப்பா!
குத்து! ஒருவெட்டு! ஒரு தட்டு!
ஆ ஹய்! ஆஹய்! ஆஹய்!


முல்லைவனம்-1955

அந்தி சாயிற நேரம்!
மந்தாரைச் செடியோரம்!-ஒரு
அம்மாவைப் பார்த்து-ஐயா
அடிச்சாராம் கண்ணு-அவ
சிரிச்சாளாம் பொண்ணு!


கொக்கர கொக்கர கொக்கரகோன்னு
குயிலைப் போல பாடிடுவா!
கொக்கரக்கோ! கொக்கரக்கோ!
கொக்கர கொக்கர கொக்கரக்கோ!


பல்லாக்கு போல நெளிஞ்சி ஆடி
பார்த்தவர் மனசை லாவிடுவா!
பப்பரபூ பப்பரபூ
பப்பர பப்பர பப்பரபூ!


தத்தித் தத்தி அன்னம் போலே
தாவியே நடையும் போட்டிடுவா!
டர்ரரடன் டர்ரரடன்
டர்ரர டர்ரர டர்ரரடன்!


பக்காப் பொண்ணு ஐயாமேலே
சொக்குப் பொடியும் தூவிட்டா!
தக்கிடஜம் தக்கிடஜம்
தக்கிட தக்கிட தக்கிடஜம்!


மந்திரிகுமாரி-1950


இசை : G. ராமநாதன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன் குழுவினர்.

ஒருவன் : லாபமா? நஷ்டமா?-நைனா
லாபமா? நஷ்டமா?
ராசாங்கம் நம்ம கையில் வந்ததாலே
நாட்டிலுள்ள மக்களுக்கு நம்மளாலே- (லாபமா)
சாலையிலே நிக்கும் மரம் சர்க்காரு வச்சமரம்
ஆளுமேலே சாஞ்சுதுனா ஆபத்து-அவன்
ஆவியது போகுமிண்ணு யூகிச்சு-நல்லா
வேரைக் கெல்லி மரத்தையெல்லாம்
வெட்டித் தள்ளி காயவச்சு
வித்து விடச் சொல்லி விட்டேன் காசுக்கு
வெறகு பஞ்சம் தீர நம்முடைய ஊருக்கு
நைனா-லாபமா?-நஷ்டமா?
இதனால்-லாபமா?-நஷ்டமா!


மற்றொருவன் : பழங் கொடுத்துப் பலன் கொடுக்கும்.
பல மரமும் போனா
நிழலும் ஏது பணமும் ஏது
லாபமேது நைனா!


ஒருவன் : சத்திரங்கள் இருப்பதாலே தண்ட சோத்து சாமிகளே
ஜாஸ்தியாகிப் போச்சு நம்ப நாட்டிலே-அதுக
சஞ்சரிக்க வேண்டியது காட்டிலே-அதனால்
இத்தினமே எங்குமுள்ள சத்திரத்தை இடிச்சு தள்ள
உத்தரவு போட்டு விட்டேன் நேருலே-எனைப் போல்
புத்திசாலி யாரு இந்த ஊரிலே?
நைனா-லாபமா-நஷ்டமா?
இதனால்-லாபமா-நஷ்டமா?
இடிச்சுத் தள்ள ஏகப்பட்ட செலவு ஆகும் போது
இருப்ப தெல்லாம் கறைஞ்சு போகும் லாபமேமிலேது?
சம்பளமும் வாங்கிக் கிட்டு கிம்பளமும் பெத்துக்கிட்டு
சட்ட திட்டம் போடும் அதிகாரிங்க-தம்மைத்
தள்ளிப் போட்டேன் வேலை விட்டு நானுங்க-இனி
சம்பளமும் மிச்சம் பல வம்புகளும் மிச்சம்-நம்ப
சனங்களுக்கும் இல்லை ஏதும் சங்கடம்-மனசில்
சந்தோஷம் தன்னாலே பொங்கிடும்-
நைனா-லாபமா-நஷ்டமா?
இதனால்-லாபமா-நஷ்டமா?
சதாரம்-1956

இசை: G. ராமநாதன் சின்ன மீனைப் போட்டா தான்-பெரிய மீனைப் புடிக்கலாம். சில்லரையை விட்டாத்தான்-பெருந் தொகையை எடுக்கலாம்.(சின்ன)

கண்ணும் கண்ணும் சேர்ந்தாத்தான் காதல் பாடம் படிக்கலாம்!

காலம் நேரம் வந்தாத்தான் காரியத்தை முடிக்கலாம். (சின்ன)

அதட்டிப் பேசும் திறமிருந்தா எதிரி வாயை அடக்கலாம்
உருட்டும் புரட்டும் தெரிஞ்சிருந்தா உலகத்தையே ஏய்க்கலாம்!

குதர்க்க புத்தி இருந்தாத்தான் குறுக்கு வழியில் போகலாம்!
குள்ள நரி குணமிருந்தா எதிலும் ஜெயிக்கலாம் (சின்ன)
வெள்ளை சள்ளை இருந்தாத்தான் கள்ளத்தனத்தை மறைக்கலாம்!

நல்லவர் போல் நடிச்சாத் தான் கொள்ளையிட்டுக் குவிக்கலாம்!

பல்லைக் காட்டத் தெரிஞ்சாத்தான் பக்குவமாப் பொழைக்கலாம்:

கல்லு மனசு படைச் சிருந்தா அடுத்துக் கெடுக்கலாம்! (சின்ன)

தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை-1959


இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: ஜமுனாராணி 

அரே நம்பள்கி சொல்றதெ
நிம்பள்கி கேட்டுக்கோ !
தம்பிடிக்கி தம்பிடி
வட்டியும் போட்டுக்கோ ஸர்தானா-அது
இல்லாம ஈட்டிக்காரன் தர்வானா?
யாஹீம் யாஹீம் யாஹீம் !
சம்பள்தே வாங்கிக்கிணு
ஜல்சா ஏன் செய்யிறான் ?
பொம்பளங்கே ஊட்டுமேலே
பொங்கி அயப் பண்ணுறான் ஸர்தானா!- நீ
போவுறதும் நல்ல வயிதானா ?
காசுக்கு ஆசெப்பட்டு
ரேசுக்கு போவுறான் !
கையிலே உள்ளதை
உட்டுப் போட்டு சாவ்றான் ஸர்தானா-நீ
காசாயம் கட்டிக்கினா விடுவானா?

தாயிகிட்ட பத்து மாசம்
கடன் பட்டு வாயிறான் !
வாயும் வரெ பக்வான்கி
கடன் பட்டு சாயிறான் ஸர்தானா !-இவன்
வச்சிருக்கும் கடனெ தீர்ப்பானா ?
யாஹீம்...யாஹீம்...யாஹீம் !

டில்லி மாப்பிள்ளை—1968


இசை: K. V. மகாதேவன்

பாடியவர் : T. M. சௌந்தரராஜன் & ராஜேஸ்வரி 

தோழிகள்: ஆஹா ஹா.....
மாமா மாமா பன்னாடெ !
வாங்கி வாயேன் பொன்னாடெ
வரவு மட்டும் பொண்ணோடெ !
செலவு எல்லாம் ஒன்னோடெ !
ஜீவா  : மாமா ! மாமா !
மோகனா : மாமா ! மாமா !
ஜீவா  : ஆமாஞ்சாமி காரியம் முடிச்சி
அனுப்பி வைக்கிறோம் கையோட !
தோழிகள் : சீமான் ஒனக்கு வரிசை வம்மெ
சாமான் தாறோம் பையோடெ !
கோமாளிக்கும் கோமாளி ஏ
குலுக்கி மினுக்கும் ஏமாளி !
வரவு மட்டும் பொண்ணோடெ
செலவு எல்லாம் ஒன்னோடெ
ஜீவா  : கத்தியெடுத்தாலே சத்தமில்லாமலே
தோழிகள் :பத்துப் பதினஞ்சு கத்திரிப் பிஞ்சுகளெ!
ஜீவா :பாஞ்சு பாஞ்சு வீரன் நீயும்
பதுங்கி ஒதுங்கி நறுக்குவே !
தோழிகள் :ஆஞ்சு ஒஞ்சு அசந்து போயி
விழுந்து எழுந்து பொறுக்குவே !
ஜீவா : செத்துக்கிடக்கிற கட்டு விரியனை
எட்டியிருந்தே நொறுக்குவே !
தோழிகள்  : புத்தியிருக்குது கூஜா தூக்க !
பித்துயிருக்குது ராஜாவாக
வரவுமட்டும் பொண்ணோடெ
செலவு எல்லாம் ஒன்னோடெ!
மோகனா : மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான்
மண்ணாங்கட்டி மாப்பிளே !
ஜீவா  : சாப்பிட்டுப் பிட்டு ஏப்பம் விட்டு
நல்லாத் தூங்குவே தோப்பிலே !
கூப்பிடும் போது கொறட்டை விடுவே! பொண்ணு
கூப்பிடும் போது கொறட்டை விடுவே !
ஆப்பிட்டுக்கிட்டு அவதிப்படுவே !


பெற்ற மகனை விற்ற அன்னை-1958
இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி 
உய்.....
ஆடிவரும் பூங்கொடி அழகினிலே மனம் ஆடுதா ?தடுமாறுதா ?
ஆஹா அலைபோலே பின்னாலே அய்யாவின் மனம் போகுதா ? :ஆசைவலை பின்னி ஜாடைகளும் பண்ணி ஆடுதா ?-திண்டாடுதா ?
வாருங்க மைனர் சார்-உங்க வாழ்க்கையே ஜாலி தான் !
பாருங்க பர்ஸையே அது என்றுமே காலிதான் !
தனிக் கவர்ச்சியுண்டு இவர் face லே
அதில் காலம் ஓடுதுங்க ஓசிலே!
உய்......
உண்மையைச் சொன்னதை எண்ணி
எண்ணியே கோபமா? மனஸ்தாபமா ?
ஆட்டத்தில் நாட்டமா ? ஆள் மீது கண்ணோட்டமா ?
பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா ?
கை தாளம் தவறாகப் போடுதே !
கலை ஞானி போல தலையாடுதே!... உய்...
அந்தரத்து மின்னலை சொந்தங் கொள்ள எண்ணினால்
நடக்குமா? அது கிடைக்குமா-உய்.....
தோற்றத்தில் துறவிபோல் வெளிவேஷம் போடுவாங்க!
கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடு வாங்க!
ஏமாற்றும் ஆசாமி நொடியிலே
ஏமாளியாவானே முடிவிலே-உய் ...
திலகம்-1960
இசை  : சுதர்சனம்
பாடியவர் : ஜமுனா ராணி

ரதி  : பம் பம் பம் பம் சிக் பம்

மன்மதன்  : பம் பம் பம் பம் சிக் பம்

கோரஸ்  : காலையில் ராஜா ஆனாராம்
               மாலையில் கூஜா ஆனாராம்

ரதி  : பாலும் தேனும் கசப்
              பாகத் தோணு தென்று
              காலை வேளையிலே சொன்னாராம்!

ரதி  : கூழுக்காக பல்லைக்
             காட்டிக் கொண்டு-இவர்
             மாலை வேளையிலே நிண்ணாராம்!

(காலையில்)



மன்மதன்  : போனாராம் யானையைப் போலே
              பொல்லாத வேளையினாலே !
              வந்தாராம் பூனையைப் போலே !

            சிந்தையில் ஆணவம் கொண்டதன் பலனாலே

(காலையில்)



ரதி  : நாலும் மூணும்-இனி
            ஏழு இல்லை-அது
            ஆறு என்று-இவர் சொன்னாராம்

ரதி  : தாளம் போட்டுத்- தலை
ஆட்ட ஊரில் ஒரு
ஆளும் இல்லை என்று கண்டாராம் !
(காலையில்)
மன்மதன் : முட்டாளைத் தலைவனும் ஆக்கி
மூளைக்கு மதிப்பையும் போக்கி
எட்டாத கோட்டையைத் தாக்கி
ஏட்டினில் தன் புகழ் சேர்த்திடப் பார்த்தாராம் ! (காலையில்)


தலை கொடுத்தான் தம்பி. 1959
இசை  : விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடியவர்  : S.C.கிருஷ்ணன்
ஜமுனாராணி
கழுகுமலை : கூஜா .....கூஜா ... கூஜா ...
கூஜா......கூஜா.....கூஜா......ஏய்
கூஜா தூக்கி உடல் வளர்த்து
ராஜா போலே நடை நடக்கும்- (கூஜா)
மணி  : ஓய்!...வானா... மூனா..கானா... ஒய்
வானா... மூனா.. கானா
மூனாத் தனத்தை மறைக்க வைக்க
முதலாளியைக் காக்கா புடிக்கும் (வானா)


கழுகுமலை  : நாக்கை அடக்கு காக்கா புடிப்பவன்
நானில்லேடா கூஜா-உன்போல்
நடிகையின் பின்னே சுத்தித் திரியும்
அடிமைப் பசங்க தாண்டா கூஜா (கூஜா)


மணி  : ஷோக்குப் பண்ணப்ராடு கணக்கு
ஜோடிப்பதிலே ராஜா-பணத்தை
சுரண்டும் உங்க விஷய மெல்லாம்
தெரியும் எனக்கு பேஷா - {வானா)
(கெஜல்)
கழுகுமலை  : ராஜாத்தி போல் வாழ்ந்த நட்சத்திரங்கள் கூட
உன்னைப் போல்-கூஜா- பசங்களாலே
நாசமாய்ப் போனதுண்டு
(பாட்டு)
குடியைக் கெடுக்கும் கூஜா-கோள் சொல்லித்
திரியும் கூஜா-கும்மாளம் போடும் கூஜா
மானம் கொஞ்சம் இல்லாத கூஜா- (கூஜா)
(கெஜல்)
மணி  : தேசத்தில் எத்தனையோ சிறப்பான கம்பெனிகள்
உனைப் போல் மேனேஜர் அமைந்ததினால்
காணாமல் போன துண்டு
(பாட்டு)
மூட்டை அடிக்கிறதும் நீங்க- பணத்தை
மூட்டை அடிக்கிறதும் நீங்க-கம்பெனி
மூடு விழா செய்யறதும் நீங்க
சேட்டைகள் பண்ணுறதும் நீங்க-பொம்பளையைத்
தேடியலையறதும் நீங்க- நீங்க ....
(வானா)
கழுகுமலை: பகட்டித் திரியிதடா கூஜா--முதலாளி
பக்கத்திலே ஒரு வகை கூஜா
பாடுபவர் ஆடுபவர் பின்னே --எங்கு
பார்த்தாலும் கூஜா.. கூஜா... கூஜா (கூஜா)
மாங்கல்யம் - 1954

இசை : K. V. மகாதேவன் .

பாடியவர் : S. C. கிருஷ்ணன் & சீர்காழி கோவிந்தராஜன்