ஆசிரியர்:பேரா. சுந்தரசண்முகனார்

சுந்தர சண்முகனார்
(1922–1977)

சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பேராசிரியர் டாக்டர் சுந்தர. சண்முகனார் (30.07.1922—30.10.1997)

இவர் கடலூர், புதுவண்டிப் பாளையம், சுந்தர முதலியார்—அன்னபூரணி இணையரின் மகனார். அறிவுக் கடல் ஞானியாரடிகளின் மாணவர். 75 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த தமிழறிஞர்.

மயிலம், சிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளி, அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றியவர்.

இயற்கவி, ஆராய்ச்சி அறிஞர், செந்தமிழ்ச் செம்மல், செந்தமிழ் கொண்டல், தமிழ்ச் சான்றோர், திருக்குறள் நெறித் தோன்றல், குறளாய்வுச் செல்வர் போன்ற ஒன்பதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். முதுபெரும் புலவர் நடேசனார், பேராசிரியர் ஆ.சிவலிங்கனார் ஆகியோர் இவரது உறவினர்கள்.

தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம், ஆழ்கடலில் சில முத்துகள், அகராதியியல் (History of lexicography), கெடிலக்கரை நாகரிகம், முதுமொழிக் காஞ்சி (உரை), நல்வழி (உரை), ஞானியார் அடிகள் வாழ்க்கை வரலாறு முதலான எழுபது நூல்களை எழுதியுள்ளார்.

திருக்குறளுக்கு மிக விரிவாக மூன்று பகுதிகளாக உரை எழுதியுள்ளார். வள்ளுவர் கண்ட மனையறம், வள்ளுவர் இல்லம், திருக்குறள் தெளிவு முதலான நூல்களையும் படைத்துள்ளார். தெவிட்டாத திருக்குறள் என்னும் திங்களிதழையும் நடத்தியவர்.

புதுப்படைப்புக் கலைஞர், ஆராய்ச்சி அறிஞர் டாக்டர். சுந்தர. சண்முகனார் அவர்கள் தமிழ்—அகராதித் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். காவிரிக் கரை நாகரிகங்கள் பற்றி மிக விரிவாகவே நூல்களை எழுதியுள்ளார். தமிழ் நூல் தொகுப்புக் கலையை மிக விரிவாக ஆராய்ந்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவர்.

புதுவைக்குப் புகழ் சேர்க்கும் பெரும் புலவர்கள் பட்டியலில் முனைவர் சுந்தர. சண்முகனார்க்கு ஒரு தனித்த இடம் உண்டு. பெரும் புலவர், ஆராய்ச்சி அறிஞர், பன்னூல் ஆசிரியர் எனப் போற்றப் பெறுபவர். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொகுப்பியற் கலைத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அறிவாற்றலும் சிந்தனைத் திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்.

நன்றி: பேராசிரியர். டாக்டர். சுந்தர சண்முகனார்

படைப்புகள்

தொகு

உரைகள்

தொகு
 
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.