ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/U

U
ultimate முடிவான, முடிவுக் கூறான
ultra அப்பாலுள்ள, - கடந்த
umpire நடுவர்
un- அற்ற, இல்; -இல்லாத
unanimous ஒருமித்த
unbiassed ஓர வஞ்சகமற்ற
unconditioned reflex இயற்கை மறி வினை
unconscious நனவிலி
collective இன வழி
personal ஆளுடை
racial இன வழி
unconstitutional சட்டத்துக்கு மாறான
under current அடியோட்டம்
undergo பட்டறி, படு, தாங்கு
under graduate பட்டம் பெற இருப்பவர்
underline கீழ்க் கோடிடு
understanding புரிந்து கொள்ளல்
underweight குறையெடை
undesirable habit வேண்டாப் பழக்கம்
undifferentiated பகுக்கப்படாத, வேறுபடுத்தாத
uneducated கல்லாத
unemployment வேலையின்மை
unfolding மலர்தல்
uniform பொது உடை
uniformity ஒரு தன்மை
unify ஒற்றுமைப்படுத்து
unimodal curve ஒரு முகட்டுப் பாதை
unintelligent நுண்ணறிவற்ற
unit அலகு
method அலகு முறை
unity ஒற்றுமை, ஒருமைப்பாடு

universal முழு மொத்தமான, பொது, வியாபக
universe அண்டம்
university பல்கலைக் கழகம்
unmethodical முறையற்ற
unorganized ஒருங்கமைப்பற்ற
unparliamentary மன்று முறையற்ற
unpleasant வெறுப்புத் தருகிற
unrelated உறவில்லாத, சம்பந்தமில்லாத
unscientific இயல் நூல் முறையற்ற
unskilled திறனில்
unspaced repetition இடைவிடாப் பயிற்சி
unstable நிலையற்ற
up-bringing வளர்ப்பு
up-keep பேணுகை
urban நகருக்குரிய, நகர் சார்ந்த, நகர
urge விழைவு, தூண்டு, உந்துசக்தி
usage வழங்கு முறை, ஆட்சி
use பயன்
useful பயனுள்ள