ஆடுதுறை மாசாத்தனார்


ஆடுதுறை மாசாத்தனார் தொகு

புறநானூறு: 227 தொகு

திணை: பொதுவியல் தொகு

துறை: கையறுநிலை தொகு

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது.


நனிபேதையே நயனில் கூற்றம்
விரகின் மையின் வித்தட் டுண்டனை
இன்னுங் காண்குவை நன்வா யாகுதல்
ஒளிறுவாள் மறவருங் களிறு மாவுங்
குருதியங் குரூஉப்புனற் பொருகளத் தொழிய
நாளு மானான் கடந்தட் டென்றுநின்
வாடுபசி யருத்திய வசைதீ ராற்றல்
நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை யாயின்
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே.
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆடுதுறை_மாசாத்தனார்&oldid=13105" இலிருந்து மீள்விக்கப்பட்டது