ஆடும் தீபம்/என் நம்பிக்கைக்கு உயிர்


என் நம்பிக்கைக்கு
உயிர்

மலை உச்சியை நோக்கிச் செல்லுகையில், ஏற ஏறத் தான் கையில் இருக்கும் சுமையின் கனத்தை— உண்மையான கனத்தை நன்கு உணர்கிறோம். கதை முடிவு என்ற உச்சி சமீபிக்கிறது. எனது பாரத்தின் பளுவும் அதிகமாகியிருக்கிறது. திரு.வாசவன் முதல் திரு. செல்லப்பா வரை நெய் விளக்கைப் பிரகாசமாக்கி விட்டார்கள். பூவை என்னை விளக்கருகே நிறுத்தி விடத் தைரியமாகத் தீர்மானித்தார். அந்தத் தைரியமே என் நம்பிக்கைக்கு உயிராக விளங்குகிறது.

இத்தனை நாட்கள் நரகப் படுகளத்திலும், வெறி பிடித்த கொலைக் களத்திலும் அவதிப்பட்ட அல்லிக்கு எப்போதுதான் மன நிம்மதி கிடைக்கும்?

இப்போது கிடைக்க வழி வகுத்து விட்டேன் நான். எப்படி?

அதை ‘பூவை’ அடுத்தாற் போல் சொல்லுவார்!

பி.வி.ஆர்.