ஆடும் தீபம்/கதம்பத்தின் மணம்


கதம்பத்தின்
மணம்


தனி மல்லிகைச் சரத்துக்கும், ரோஜாச் செண்டுக்கும் இருக்கும் சிறப்பு கதம்பத்துக்கும் உண்டு. முல்லை, இருவாட்சி, தாழம்பூ, மருக்கொழுந்து முதலிய மலர்களை அருகருகே வைத்து இணைக்கும் போது, தோற்றத்திலும், மணத்திலும் தனிச் சிறப்பை அடைந்து விடுகிறது அந்த மாலை, கதம்பச் சரத்தின் பல மலர்களைப் போல, பல்வேறு கருத்துக்களை—கற்பனைகளை, எண்ணங்களை நாங்கள் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். திரு.வாசவன் அவர்கள் தீபாவளித் திருநாளில் ஆடும் தீபத்தில் சுடரை ஏற்றி வைத்து விட்டார்.அது உமிழும் ஒளியிலே அல்லியை அரக்கர் வாயிலிருந்து கம்பீரமாக மீட்டுப் பட்டணம் கொண்டு வந்து சேர்த்து விட் டார் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள். நாட்டும் புறத்து அல்லி மலரை, நகரத்து மேஜை ஜாடியில் வைத்து அழகு பார்க்க வேண்டிய பொறுப்பு என் மீது விழுந்திருக்கிறது. கள்ளமில்லாத நாட்டுப்புறத்துப் பெண் அலலியின் வாழ்க்கையிலே, இனி நாட்டியமும் நடிப்பும் இடம் பெற வாய்ப்பு ஏற்படுத்தத்தான் ராஜநாயகம் அவளைத் தேடி வருவதாக நாம் ஏன் எண்ணலாகாது?

ஸரோஜா ராமமூர்த்தி