ஆடும் தீபம்/பாரதியின் அல்லி
பாரதியின்
அல்லி
அல்லி
எல்லோரையும் போலவே, தொடர்ந்து இந்தப் பகுதியைப் படித்துக் கொண்டு வந்த நான் ‘சபாஷ்’ போட்டுக் கொண்டிருந்தேன். ‘அடுத்து என்ன?’ என்று ஒவ்வொரு இதழ் வரும் நாளையும் எதிர் பார்த்திருப்பேன். இதே கேள்வியை, வாசகர்கள் என்னிடம் கேட்க வேண்டும் என்பதற்காக திரு. எல்லார்வி அவர்கள் கதையை புதிய கோணத்தில் திருப்பி விட்டு விட்டார்கள். வீரத் தமிழ் மகளான அல்லியை கண்ணீர் விட்டு, நல்லதங்காள் மெட்டில் அழுது பாட வைக்க, ஏனோ என் மனம் இடம் தரவில்லை. முதலில், அவள் அதை விரும்ப வேண்டுமே! பாரதியும், முறம் கொண்டு புலியைத் துரத்திய தமிழ்ப் பெண்ணும், அவளுக்குத் தைரியமூட்டுகின்றனர்.அவளுக்குப் பிறந்த அந்தத் துணிச்சலில், இதோ, என் பேனா ஓடத் தொடங்கி விட்டது!
ஏ. எம். மீரான்