ஆர்க்டிக் பெருங்கடல்/அமைப்பு
(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)
(Upload an image to replace this placeholder.)
இருப்பிடம்
உலகின் தென் கோடியைத் தென்முனை என் பது போல், வட கோடியை வடமுனை என்கிறோம். இம் முனையைச் சுற்றி அமைந்துள்ள கடலே ஆர்க்டிக் கடல். உண்மையில் இது ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கும் இடையில் உள்ளது. ஐம்பெருங்கடல்களில் மிகச் சிறியது.
பரப்பு
இதன் பரப்பு 55 இலட்சம் சதுர மைல். ஒரு காலத்தில் ஆழமற்றது என்றும்; உண்மையான கடல் அல்ல என்றும் இது நினைக்கப்பட்டது. ஆனால், இன்று நிலை அப்படியல்ல. அறியப்பட்டடுள்ள இதன் ஆழம் 17,850 அடி. ஆகவே , இதை ஆழமான கடல் என்று கூறலாம்.
இதன் தோற்றம் அல்லது வடிவம் வட்டமாக உள்ளது; கரைகள் தாழ்ந்தவை; தட்டையானவை. இது அமைந்துள்ள மூன்று கண்டங்களின் தாழ்ந்த சமவெளிகளின் தொடர்ச்சிகளே அதன் கரைகள். ஆகவே, அதன் கரைகள் தாழ்ந்துள்ளன. கண்டம்
மூன்று கண்டங்களுக்கிடையே அமைந்திருந் தாலும், இதற்குரிய பகுதி ஆர்க்டிக் பகுதி யாகும். பேரண்டஸ் கடலும், கிரீன்லாந்து கட லும் இதன் துணைக் கடல்கள். முக்கிய துணைக் கடல் வெண் கடல். இவை மாரிக்காலத்தில் பனிக் கட்டியால் மூடப்படுவதில்லை. இதில் தீவுகள், விரிகுடாக்கள், மலைத் தொடர்கள் முதலியவை உள்ளன. இதுவும் குறைவாக ஆராயப்பட்ட கடலே.
படிவுகள்
இதன் அடியிலுள்ள படிவுகள் நிலப்பகுதி யிலிருந்து ஆறுகளால் கொண்டுவரப்பட்டவை. இதில் பெரிய அமெரிக்க ஆறுகளும், சைபீரிய ஆறுகளும் கலக்கின்றன. இது நீர்க் கூட்டுக்களின் வாயிலாகப் பசிபிக்கடலோடும் அட்லாண்டிக் கடலோடும் சேர்கிறது.
புயல்கள்
உலகக் கடல்களில் மிகக் குறைவாகப் புயல் கள் ஏற்படும் கடல் இது. பொதுவாக, இது நம் நண்பனே; பகைவன் அல்ல. இக் கடலில் உயர்ந்த மலைகளும் சமவெளியும் உள்ள இடங்களில் மட் டுமே புயல்கள் ஏற்படும்.
வெப்ப நிலை
இதன் மேற்பரப்பு வெப்ப நிலைகள் 29° F. இந்த வெப்பநிலை நிலையானது என்று சொல்வதற்கில்லை. பனிக்கட்டி
அண்டார்க்டிக் கடலைப்போல் அல்லாமல், இக்கடல் பகுதியே பனிக்கட்டியால் நிலையாக மூடப்பட்டுள்ளது. இதில் கோடையில் மிதந்து கொண்டிருக்கும் பனிப்பாறைகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
இதன் தரை அமைப்பு, அதன் ஆழ்நீர்களை அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் அடையா வண்ணம் தடுக்கிறது.
இதை மூடியிருக்கும் பனிக்கட்டி, பாளங் களாக அமைந்துள்ளன. பாளங்களின் தடிமன் 5 - 50 அடி வரை இருக்கும்.
கிரீன்லாந்தின் மேற்குக்கரையில் பல பனியாறுகள் உள்ளன. இவற்றில் நன்கு அறியப்பட்டது ஹம்போல்ட் பனியாறு. இப்பனியாறு கள் கடலை அடைகின்ற பொழுது உடைந்து, அவற்றின் முனைகள் பனிப்பாறைகளாக மாறுகின்றன.
பனிக் கட்டியின் அடித்தோற்றம் சிதைந்து காணப்படுகிறது. முன்பு நினைத்ததைவிட இக் கடலில் பனிக்கட்டி அதிகம் இருப்பதாகக் கருதப் படுகிறது. பனிக்கட்டியின் சராசரி ஆழம் 10 அடி இருக்கும்.
பனிக்கட்டிப் பாளங்களுக்கு வெளியே பல இடங்களில் நீர் நிலையாக நிற்கிறது. இந்நீர் 9 அடி ஆழம் வரை நிற்கும். உருகும் பனிக்கட்டி, அமெரிக்க, சைபீரிய ஆறுகள் ஆகியவற்றிலிருந்து இந்நீர் உண்டாகிறது.
மலைத் தொடர்கள்
இதில் மலைத்தொடர்களும் தீவுகளும் காணப் படுகின்றன. தீவுகளில் பெரியது கிரீன்லாந்து.
காட்டாக, இதில் லோமோசோனவ் மலைத் தொடர் இருப்பதாக அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் உயரம் 9,000 அடி.
லோமோசோனவ் என்பார் உருசிய அறிவிய லார் ஆவார். இவர் அம்மலைத்தொடரின் இடத்தை முன்கூட்டி அறிவித்தார். ஆகவே, இம்மலைத் தொடருக்கு அவர் பெயர் இடப்பட்டிருக்கிறது.
இம் மலைத்தொடர், நீரில் மூழ்கிய மலைத் தொடர் ஆகும். இது ஆர்க்டிக்கடலை இரு பகுதி களாகப் பிரிக்கிறது. இவை ஒவ்வொன்றிலும் நீரோட்டம் உண்டு. அந்நீரோட்டங்களில் ஒன்று வலஞ்சுழியாகவும், மற்றொன்று இடஞ்சுழியாகவும் ஓடுகின்றன.
உப்பு
இதற்கு மற்றக் கடல்களைப் போன்று அவ் வளவு அதிகமாகக் கரிக்கும் தன்மை இல்லை. அமெரிக்க, சைபீரிய ஆறுகள் இதில் கலப்பதே உப்புத் தன்மை அளவின் குறைவுக்குக் காரணம் ஆகும்.
நீரோட்டங்கள்
இதில் இரு திறப்பு வழிகள் உள்ளன. ஒன்று பெரியது ; அட்லாண்டிக் கடலோடு சேர்கிறது. மற்றொன்று சிறியது; பசிபிக்கடலோடு சேருகிறது.
முதல் திறப்பின் வழியாக அட்லாண்டிக் கடலுக்கு ஒரு பெரிய நீரோட்டம் செல்கிறது. இதற்கு ஆர்க்டிக் நீரோட்டம் என்று பெயர். மற் றொன்று கல்ப் நீரோட்டமாகும். இதன் கிளைகள் அதன் எல்லைகளுக்குள் ஆழமாக நெடுந்தொலை விற்குப் பரவியுள்ளன.
கண் கொள்ளாக் காட்சி
ஆர்க்டிக் நீரோட்டம் கல்ப் நீரோட்டத்தை நியூபவுண்ட்லாந்து கரைகளுக்கு வெளியே சந்திக்கிறது. இதனால் வியத்தகு நிகழ்ச்சிகள் உண்டா கின்றன. அவை பின்வருமாறு :
ஆர்க்டிக் நீரோட்டத்திற்கு மேலுள்ள குளிர்ந்த பனிக்காற்று, கல்ப் நீரோட்டத் திற்கு மேலுள்ள வெப்பங்கொண்ட ஈரத்தை குளிரச் செய்கிறது. இதனால் மூடு பனி உண்டாகிறது.
கரைகளில் பனிப்பாறைகள் படிந்து, உருகு கின்றன. அவ்வாறு உருகும் பொழுது, அவற்றால் கொண்டுவரப்பட்ட கல்லும் மண்ணும் கரைகளில் படிந்து, மேலும் அவற் றை விரிவாக்குகின்றன. ஆர்க்டிக் நீரோட்டம் கல்ப் நீரோட்டத்தைக் கடந்து, வட அமெரிக்கக் கரையைத் தொட் டுக்கொண்டு ஓடுகிறது. இதனால் ஐக்கிய அமெரிக்காவிற்கு மீன் கள் அதிகமாகக் கிடைக்கின்றன.
கல்ப் நீரோட்டம் வெண்கடலில் கலப்ப தில்லை. ஆகவே, அக்கடல் பல மாதங்களுக்குப் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும்.
அட்லாண்டிக் கடலின் பக்கத்திலிருந்து, தாழ் வாக அமைந்த அணுகும் வழிகள் இதனோடு தொடர்பு கொள்கின்றன. பசிபிக் கடலிலிருந்து அகலமான பாதைகள் உள்ளன.
வழிகள்
பயண விமானங்கள் துருவ வழியாகச் செல் கின்றன. வடமுனை வழியாக இரு அணு நீர் மூழ்கிக் கப்பல்கள் உறைந்த கடலைக் கடந்து சென்றுள்ளன.
சில ஆண்டுகளில் துருவ வடிநிலத்தின் (Polar basin) வழியாக வாணிப வழிகள், பனிக் கட்டித் தடையில்லாமல் அமையலாம். பனிக் கட்டி மிகுதியாக உள்ளதால் நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டுமே செல்ல இயலும். நீரில் மிதந்து செல்லும் கப்பல்கள் செல்ல இயலாது.
ஆராய்ச்சி
திங்கள் அல்லது சந்திரனின் மறுபக்கம் ஆராயப்படாதது போலவே, பல நூற்றாண்டு களாக ஆர்க்டிக் கடலும் ஆராயப்படாமல் இருந்தது. ஆனால், அண்மைக்கால ஆராய்ச்சியினால் இதைப்பற்றிய அறிவு வளர்ந்துள்ளது. குறிப்பாக, இக்கடல் வெப்பமடைந்து கொண்டு வரு கிறது என்னும் கொள்கை தற்பொழுது உருவாகியுள்ளது. இக்கொள்கை உறுதி செய்யப்படு மானால், உலக வானிலையில் அதனால் பெரும் மாற்றம் ஏற்படலாம். சுருக்கமாக, ஆர்க்டிக் கடலைத் தற்கால மையத் தரைக்கடல் என்று சொல்லலாம்.