ஆலமரத்துப் பைங்கிளி/காணிக்கை
காணிக்கை
“பாų, என்ன அதுக்குள்ளே செரும ஆரம்பிச் சிட்டே?..அப்பாதானே...அப்பா இன்னும் கொஞ்ச நாழிகையிலே வந்திடுவாங்க...கீழே கொஞ்சம் விளையாடு...அதோ ஆடும் குதிரை...ஒடிவா பிஸ்கட்தாறேன்... சமர்த்தில்லே...ராஜா! என்று மகனைச் சமாதானப் படுத்தினுள் வாசவி.
தாய் சொல் மிக்கதொரு மந்திரமில்லை.
பிறந்த மண் வாசனே காற்றாேடு மிதந்து வந்தது, வாசவிக்குக் கண்ணிர் வந்தது. “பாபு... என்று சொல்லி நடை பழகினுள். வாசலிலிருந்து வந்து எதிரொலித்த அறிவிப்பு அவளைச் சுண்டியிழுத்தது; காதைத் தீட்டிக் கொண்டு கேட்கலானாள்.
சென்னை-தேனும்பேட்டை காங்கிரஸ் பொருட்காட்சி விழாவிலே மரணக் கிணற்றிலே மோட்டார் சைகிள் பந்தயமொன்று வருகிற திங்கட்கிழமை நடக்கப் போகிறது. பம்பாய் புகழ் வீரர் ரமேஷ-ம், சென்னைப் புகழ் வீரர் சுதாகரும் போட்டிபோடப் போகின்றார்கள்.வெற்றி பெற்றவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு!...நல்ல சந்தர்ப்பம்!...கழுவ விட்டு விடாதீர்கள்
சுழன்றாேடிய அவ்வார்த்தைகளின் ஒலி அலைப் பரப்பினூடே, வாசவி சுழன்றாள், சுற்றினாள், கண்மண் தெரியாமல்-திக்குத்திசை புரியாமல்!
நெஞ்சிலிருந்து கண்ணீர் ஊற்றெடுத்தது.
கூடத்தில் கோயில் கொண்டிருந்த அம்பிகையின் முன் கரங்கூப்பினாள்.
பாபுவை மடியில் போட்டுக் கொண்டவாறே அடித்து வைத்த சிலையென வாசவி வீற்றிருந்தாள், தன்னை மறந்து.
"வாசவி வாசவி!"
கதவைத் தட்டும் ஒலி, 'மைக்'கில் எதிரொலிப்பது போலிருந்தது.
சுதாகர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தபடி நிலைப் படியில் நின்றான், கழுத்திலிருந்த 'டை'யை நுனி விரலால் அவிழ்த்து விட்டவாறு.
“அத்தான்...அத்தான்!”
“என்ன வாசவி. அப்படி அதிசயமாகப் பார்க்கிறாய்? ஒஹோ!...பத்து மணிக்கே வந்து விட்டேனென்றா?... எனக்கு லீவ் இன்று. இந்த வாரம் என் ஆசைக் கனவு பலிக்கப் போகிறது, கண்ணே! எனக்கும், பம்பாய் ரமேஷ-க்கும் மரணக் கிணற்றுப் பந்தயம் நடிக்கப் போகிறது...ஆஹா!..வாசவி, உன்னுடைய அத்தான் தானாக்கும் வெற்றி பெறுவான்! பாரேன்!...உலகம் இந்தச் சுதாகரின் பெயரை நினை1வு கொள்ள வேண்டிய நாள் நெருங்கி வருகிறது...வாசவி!"
"அத்தான் ...”
இதற்குமேல் எதுவும் சொல்ல முடியாதவளாக அவள் திணறினாள், கண்ணீர் மட்டும் திணறவில்லை.சுதாகர் ஒன்றும் புரியாமல் மலைத்து நின்றான்!
20, ஜூலை , 1950.
சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த அந்தக் காலண்டர் தாள் வாசவியின் கண்ணுக்குள்ளே ரங்கராட்டினம் சுற்றியது.
'காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீதறுக!' என வாழ்த்தினார்களாம், கோவலன்-கண்ணகி தம்பதிகளை.
அப்படித்தான் சுதாகர்-வாசவி ஜோடியையும் மலர் தூவி பல்லாண்டு வாழ ஆசிமொழி தூவி வாழ்த்தினார்கள்.
20, ஜூலை, 1950-பொன்னாள் அவர்களுக்கு!
அந்த நாளிலே எத்தனை எத்தனையோ இன்பக் கனவுகள் கண்டாள், வாசவி! அவளுடைய கனவுகள் பலிக்கத் தான் பலித்தன. பொன்னை ஒரு தட்டிலும் பூவை ஒரு தட்டிலுமாகப் பாவித்துத்தான் கைத்தலம் பற்றியவளை சுதாகர் போற்றினான்; பேணிக்காத்தான். இரண்டு மூன்றானது. இந்திய ஜனத்தொகைக்கு ஒர் எண் பெருக்கம்! அப்போது, இன்னும் மிஞ்சிய ஆனந்தப் பெருக்கம்!
ஆனால் ....
இந்த 'ஆனால் ’ என்ற சொல்லில்தான் தம்பதிகளின் புதிர் சுற்றியிருக்கிறது.
வாசவி தினம் தினம் செத்துச் செத்துப் பிழைத்து வந்தாள்; அவள் மாங்கல்யம் செத்துச் செத்துப் பிழைத்து வந்தது.
புதிரின் புதிரா?...
வாசவியின் கணவன் சுதாகர் பி. ஏ. பட்டதாரி; தேடிவந்த வேலையை உதறிப்போட்டு விட்டு, யாரோ ஒரு
'சேட்'டைச் சுற்றிக் கொண்டிருந்தான். அந்த சேட் ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்தினான் . அதில் 'மரணக்கிணறு’ ஆட்டத்தில் மோட்டார் சைகிளில் இந்திர ஜாலம், மகேங்திர ஜாலம் புரிய வேண்டியவன் சுதாகர்-அப்படிப்பட்ட செப்பிடு வித்தைகள் ரசிகர்களுக்குள்ளே அவன் பெயரை நினைவுக் குறிப்பாக்கி விட்டன. அவன் புகழ் நீண்டது.
கணவன் புகழ் மனைவியை ஆகாயத்திற்குத்தான் தூக்கிச் சென்றது. ஆனால் அவளுடைய ஆனந்தத்திற்குப் பின்னணியாக அமைந்திருக்கும் அந்தப் பயங்கரச் சுழலை நினைத்தால், பாவம் அபலை வாசவி அப்படியே சுருண்டு விடுவாள். ‘நித்தியகண்டம் பூரணஆயுசு' என்னும்படியான தன் துணைவரின் 'தொழில்' அவளைத் தினமும் தினமும் செத்துப் பிழைக்கச் செய்தது; தாலி அன்றாடம் புனர்ஜென்மம் பெற்றுக் கொண்டிருந்தது!
"அத்தான், என்னே ஒரு நாளாகிலும் நிம்மதியுடன் இருக்கச் செய்யமாட்டீர்களா? ...'மரணக் கிணற்று ' விளையாட்டை என் நிமித்தம் விட்டுவிட மாட்டீர்களா...அத்தான், உங்களை மாலையில் சர்க்கஸ் கம்பெனிக்கு வழியனுப்பும் கான், இரவு மீண்டும் உங்களைத் தரிசிக்கையில் தான் போன உயிரைத் திரும்பப் பெறுகிறேன்...இந்த மரண விளையாட்டை விட்டுவிடுங்கள், அத்தான்...!” என்று எத்தனையோ முறை தன் கணவனிடம் மன்றாடியிருக்கிறாள் அவள். ஆனால், அவன் எதையும் காதில் வாங்கிக் கொண்டால்தானே?... புகழ் அவனை கிறுகிறுக்கச் செய்தது!
தினமும் புதுப்புது புடைவை வகைகள், ஜாக்கெட் தினுசுகள், பூப் பொட்டலங்கள் எல்லாம்தான் அவள் காலடியில் குவிந்தன; தினமும் குழந்தையை எடுத்துக் கொண்டு புருஷனும் மனைவியும் ‘மாட்டினி' ஆட்டங்களுக்கும், தேர்த் திருவிழாவுக்கும்தான் போய் வருகின் வருகின்றார்கள்...! இன்பமயமான இல்லற வாழ்வுதான்! ஆனந்த மயமான சொப்பன உலகம்தான்!
ஆ... அந்தப் பயங்கரப் பின்னணி!...அந்த மரண விளேயாட்டு...! அந்தப் புகழ் வெறி...!
✽✽✽
“மரணக்கிணறு...!”
“...ஐயோ, கிடுகிடு பாதாளமாகச் செல்கிறதே அந்தக் கிணறு...! அதோ, அவன்தான் சுதாகர்!...இன்னொருவன் தான் பம்பாய் சாம்பியன் மிஸ்டர் ரமேஷ், அதோ, மோட்டார் சைகிளும் கையுமாக மரண விளையாட்டுப் பந்தயத்தில் இறங்கி விட்டார்களே...ஆஹா, அந்த இரு வீரர்களுக்கும்தான் எப்படிச் சிரிப்புப் பொங்கி விளையாடுகிறது. மரண விளையாட்டில் உயிரைப் பணயம் வைத்து விளையாடத் துணிந்ததற்கென்று புறப்பட்ட தன்னம்பிக்கைச் சிரிப்பா அது?...அல்லது விதியின் விளையாட்டைக்கூட வென்று விட்ட சிரிப்பா?...ஜனங்கள் எப்படிக் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர். மோட்டார் சைகிள்களின் சிம்ம கர்ஜனை வேறு காதைச் செவிடுபடச் செய்கின்றனவே...அதோ பாதாளக் கிணற்றிலே-வட்ட வட்டமாகத் தலை கிறுக்கும்படியாக அவ்வளவு துணிச்சலுடன் சுழன்றாேடுகிறார்கள்.கண்மூடிக் கண் திறப்பதற்குள்ளே எத்தனை இந்திர ஜாலங்கள்!.ஆ..! அவர்கள் இருவர் கண்களிலும் ஏன் இத்தனை வெறி?...புகழ் வெறியா அது? சுதாகர் வீறுபெற்றுச் சுழன்றான் ரமேஷம் அப்படியே தான் சுற்றுகிறான். ஆ..!அதோ கிணற்றின் மத்தியிலுள்ள அந்தச் சிறுகொடியை அவிழ்த்துவிட்டால் அதுவே அவர்கட்கு வெற்றிக் கொடி யார் முதலில் வெற்றிக் கொடி பிடிக்கப் போகின்றார்கள்?...என்ன ரமேஷ்தானா?ஆனால் சுதாகர்...அந்தோ!...அதன் தலை அப்படிச் சுழல்கிறது? மோட்டார் சைகிளினின்றும் நழுவி ... ஐயையோ..!”
“ஐயோ, அத்தான்!” என்று கூவி அலறினாள் வாசவி. ஆறாகப் பெருகிய கண்களுடன் விழித்துப் பார்த்தாள். எத்தனை பயங்கரமான எண்ணங்கள்! நல்ல வேளை. பிழைத்தாள்! எம்பி இறங்கிய கெஞ்சம் பெரு மூச்சில் படபடப்பை அடக்கிக் காட்டிற்று. கூடத்திலிருந்த நிலைக்கண்ணாடியில் அவள் பார்வை பதிந்தது. பாதாதிகேசம்வரை பூகம்பமாயிற்று. ரோஜாக் கன்னங்களிலே முள் கீறினாற்போல ரத்தக்கரைப் படிந்த வரிக் கோடுகள் சிரித்தன.
மாலையில் நடந்த சம்பவம் அவள் நினைவில் 'ஆஜர்’ தந்தது.
அன்றுதான் மரணக்கிணற்றுப் பந்தயம். சுதாகர் ஒரே புகழ்க் கனவு லயத்தில் மிதந்தவாறு, ஆடம்பரமாக உடை உடுத்துக்கொண்டுப் புறப்பட்டுப் போனான்.
"வாசவி..."
"அத்தான்..."
"கண்ணே, இன்று எனக்கு ஒரு சோதனை நாள்; ஆனால் இதுவேதான் எனக்குரிய பொன்னாளுங்கூட. புகழ் என்னை அண்டி அணையும் நாளல்லவா?...விடை கொடு. நான் போய் வரட்டுமா?...பாபுவைக் கெட்டியமாய்ப் பார்த்துக் கொள்...பார்த்தாயா, மறந்துவிட்டாயே?...உன் தங்கக் கையால் தாம்பூலம் மடித்துக் கொடு!..." என்றான் சுதாகர். அவன் கைகள், மனைவியின் நெற்றியைத் தடவிக்கொடுத்தன.
வாசவியின் கண்களில் கண்ணீர் இருந்தது.
"அத்தான்...அத்தான்-இந்தப்போட்டியில் நீங்கள் அவசியம் கலந்துகொள்ளத்தான் வேண்டுமா?...எனத் பயமாயிருக்கிறதே அத்தான்..." என்று கெஞ்சினான்.
அவ்வளவுதான், சுதாகருக்குக் கோபம் வந்தது. ‘'என் புகழுக்குக் குறுக்கே நிற்கிறாயா?...புறப்படும் போதே அபசகுனம் போலத் தடையுத்தரவு போடுகிறாயே?.சி!’ என்று அவள் கன்னத்தில் அறைந்துவிட்டான்; அந்த ஆத்திர வெறியில் பந்தயத்துக்கும் புறப்பட்டுவிட்டான்.
சுயநினைவு எட்டிப் பார்த்தது வாசவிக்கு. சற்று முன் அவள் நினைவில் வெறியாட்டம் போட்ட பயங்கர எண்ணங்கள், கணவன் தன்னை அடித்தது, எல்லாம் அவளுக்குப் பயத்தைப் போதித்தன. கனவில் கடப்பது மாதிரியாக உணரலானாள்.
உடனே பூஜை அறைக்கு ஓடினாள்; கழுத்தில் தொங்கிய தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டாள்: “ஈஸ்வரி, தாயே! என் கணவருக்கு எவ்வித விக்கினமும் வராமல் காத்தருள். அவருக்கே இந்தப் பந்தயத்தில் முதல் வெற்றியையும் கொடு, மகேஸ்வரி!" என்று பிரார்த்தித்தாள்.
பார்த்தால் பசி தீரும் குழந்தை பாபுவின் முகத்தில் தன் எரிமலை இதயத்தை ஒரு கணம் மறந்தாள். அப்போதுதான் மணி ஏழு அடித்தது. 'அத்தான் வர இன்னும் நாலுமணி நேரமாகுமே...அதுவரை நான் நரக வேதனையில்தான் உழலவேண்டுமா?...என்று உருகிப் போனாள்.
அப்பொழுது "அம்மா என்று ஒரு பையன் கூப்பிட்டான்; அவன் கையில் ஓர் கடிதம் இருந்தது.
"அம்மணி,
இன்றைக்கு உங்கள் கணவர் சுதாகருடன் மரணக் கிணற்றுப்பந்தயத்தில் போட்டிபோடப் போகிறவன் நான், சற்றுமுன்உங்கள் பதியிடம் மரண விளையாட்டை மறக்குமாறு வேண்டுதல் விடுத்ததையும் அதன் பலகை உங்களுக்குள் ஏற்பட்ட பூசலையும் அறிய நேர்ந்தது, உங்கள் கணவரின் புகழ் வெறிக்கு-புகழ் வெற்றிக்குக் குறுக்கே நான் நிற்கமாட்டேன், நிற்கவே மாட்டேன்! அதிசயமாகயிருக்கிறதா?...உங்கள் துணைவருக்கு ஒரே புகழ் ஆசை. ஆனால் உங்கள் இதயத்தின் பயத்தைஉங்கள் கணவரின் புகழ் வெறிக்கடியில் நிழலாடும் மரண விளையாட்டை நீங்கள் அறிவீர்கள்; நான் அறிகிறேன். உங்கள் பதி அறியவேண்டாமா?...உங்கள் தாலிப் பாக்கியம் அவருக்கேதான் முதல் வெற்றியருளப் போகிறது...! நான் போட்டியில் கலந்துகொள்வேன்; ஆனால் வெற்றி உங்கள் கணவருக்கேதான்...! அதிசயமாமாகயிருக்கிறதா...! இனியாவது உங்கள் தாம்பத்தியத்திலே தென்றல் வீசட்டும்! அதுவே எனக்கு அமைதி சொல்லும்...!
இப்படிக்கு,
ரமேஷ்.
உலகத்தின் எட்டாவது அதிசயமா இது?
வாசவி கண்களைத் திறந்து பார்த்தாள்.
சுதாகர் நின்றுகொண்டிருந்தான், ஆனந்த வெள்ளத்திலே மிதந்துகொண்டு.
"அவர் முதல் வெற்றி பெற்றுவிட்டாரா?...ஆஹா! இனியாவது அவருடைய புகழ் வெறி அடங்குமல்லவா? என் தாலிப்பாக்கியமே பாக்கியம்...! பரிசு ஆயிரம்ரூபாய்.. ஆமாம், ரமேஷ் தியாகி ரமேஷ் எழுதிய லெட்டரை அத்தான் கண்ணில் காட்டவே கூடாது.அத்தான், இனிக் கட்டாயம் இந்த மரண விளையாட்டில், சிந்தை செலுத்த மாட்டாரல்லவா?...எனக்கும் என் கண்மணி பாபுவுக்கும் இனி எதிர்காலத்தைப் பற்றிப் பயமே கிடையாது...என் தாலி பிழைத்துவிட்டது. என் உயிர் மீண்டுவிட்டது. அத்தானிடம் கெஞ்சி நான்கு பேரைப் போல வேறு தொழில் செய்யச்சொல்ல வேண்டும்...ஈஸ்வரி, உன் கிருபையே கிருபை...!’ என்பதாகப் பலபட எண்ணிக் கூத்தாடியவாறு, சுதாகரை நோக்கி ஒடினாள் வாசவி.
"அத்தான், வெற்றி பெற்றுவிட்டீர்களா?...”
"கண்ணே, மகத்தான வெற்றி பெற்றுவிட்டேன்... மரணக்கிணற்றுப் பந்தயத்தில் அல்ல; வாழ்க்கையில்!...”
"என்ன?’’
“ஆம், வாசவி. கான் பந்தயத்தில் கலந்துகொள்ளவில்லை! உன்னை அழச்செய்துவிட்டு வந்த எனக்குத் துளிகூட நிம்மதியில்லை. கண நேரம் தனித்திருந்து எண்னினேன். என் கண்கள், இதயம் எல்லாம் திறந்தன. மரண விளையாட்டுப் பந்தயத்தில் புகழ்த் தேடி நான் இத்தனே நாளும்-வருஷமும் பைத்தியமாக அலைந்தேன். அதே சமயம் உன் இதயத்தை அறிய முடியவில்லே, என் னுடைய மரணவிளையாட்டு என் உயிருக்கே முற்றுப் புள்ளியிடுமானல், அப்புறம் உன் கதி, பாபுவின் எதிர் காலம் என்னுகும் என்பதைப்பற்றி இன்றுதான் சிக்தித் தேன். அப்பொழுதுதான், தினம் தினம் நீ என்னைக் கண் கலங்குமாறு வேண்டியதும், இந்த மரண விளை யாட்டை விட்டுவிட வேண்டுமென்று நீ கெஞ்சிய சம்பங்களும் கினேவில் ஒடின. என்னே உணர்ந்தேன். என் த்தான தவற்றை உணர்ந்தேன். கண்ணே, இனியாதே!...இன்றுடன் மரணவிளேயாட்டை, அந்தப் யை ஒழித்துவிட்டேன். நாளேயே புதிதாக ஒன்று செய்யப் போகிறேன், உண்டகலில் நல்ல படம்: ஆடுகிற
மிருகமாக கடந்துவிட்டேன். என்னை மன்னிப்பாயா?... என்று கூறி, சுதாகர் தன் மனைவியின் கன்னங்களை அன்புடன் வருடினான். அவளுடைய ரத்தக்கீறல் படிந்த பட்டுக் கன்னத்தில் அவனுடைய கண்ணீர் முத்துக்கள் பட்டுத் தெறித்து மன்னிப்பு வேண்டின.
வாசவியின் கண்கள் தந்த அன்புக் காணிக்கை. அவளுடைய உள்ளங்கையில் மறைந்திருந்த ரமேஷின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தது.
ரீகல் தியேட்டர் வாசலில் நின்ற பம்பாய் மரணக் கிணறு வீரன் ரமேஷின் கண்களில் கண்ணீர் புரண்டது. அவன் தனக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டான்.
“...இந்த ரமேஷ் அடிநாளிலே அவளுடைய காதலுக்குப் பாத்திரமான பழைய ரமேஷ்தான் என்பதை வாசவி அறிவாளா?...நான் அவளை எங்ஙனம் மறப்பேன்?...அன்று அவள் பேரில் கொண்ட காதலுக்கு, அன்பிற்கு, பாசத்திற்கு ஒரு தூய காணிக்கையாக, இன்று மரணக்கிணற்றுப் போட்டிப் பந்தயத்தில் எனக்குக் கிட்டவேண்டிய புகழைத் தியாகம் செய்ததிலே என் உள்ளம் எவ்வளவோ அமைதி அடைகிறது...! விதியின் விளையாட்டை யாரே அறியவல்லார், புவியில்?..."