ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை
ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை
தொகுதிருவருட்பிரகாச வள்ளலார் அருளியது
தொகு- (திருவருட்பா- நான்காந் திருமுறை)
- (எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
- (திருச்சிற்றம்பலம்)
பாடல் 01 (உலகியலுணர்)
தொகு- உலகிய லுணர்வோ ரணுத்துணை யேனு முற்றிலாச் சிறியவோர் பருவத்
- திலகிய வெனக்கு ளிருந்தரு ணெறியி லேற்றவுந் தரமிலா மையினான்
- விலகுறுங் காலத் தடிக்கடி யேற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
- திலகநற் காழி ஞானசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே.
பாடல் 02 (உயிரனுபவ)
தொகு- உயிரனு பவமுற் றிடிலத னிடத்தே யோங்கரு ளனுபவ முறுமச்
- செயிரி னல்லனு பவத்திலே சுத்த சிவவனு பவமுறு மென்றாய்
- பயிலுமூ வாண்டிற் சிவைதரு ஞானப் பான்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
- பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தனென் றோங்குசற் குருவே.
பாடல் 03 (தத்துவநிலை)
தொகு- தத்துவ நிலைகடனித்தனி யேறித் தனிப்பர நாதமாந் தலத்தே
- ஒத்ததன் மயமா நின்னைநீ யின்றி யுற்றிட லுயிரனு பவமென்
- றித்துணை வெளியி னென்னையென் னிடத்தே யிருந்தவா றளித்தனை யன்றோ
- சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே யெனதுசற் குருவே.
பாடல் 04 (தனிப்பரநாத)
தொகு- தனிப்பர நாத வெளியின்மே னினது தன்மயந் தன்மய மாக்கிச்
- பனிப்பிலா தென்று முள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
- இனிப்புற வொன்று மியம்புறா வியல்பா யிருந்ததே யருளனு பவமென்
- றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்த மென்னுமென் சற்குரு மணியே.
- பார்க்க