இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/முன்னுரை

முன்னுரை


தூத்துக்குடியில் மார்க்சீயம் கற்க விரும்பிய படிப்பாளிகள் குழுவிற்காக நான் "இந்திய நாத்திகமும், மார்க்சீயமும்" என்ற தலைப்பில் குறிப்புகள் தயாரித்தேன். இந்திய நாத்திகம் பற்றிய விவரங்கள் (facts) முழுவதும் மார்க்சீயப் பேரறிஞர் தேபி பிரஸாத் சட்டோபாத்யாயாவின் 'Indian Atheism' என்னும் நூலில் இருந்து பெறப்பட்டவை. ஆனால் இந்நூல் அந்நூலின் சுருக்கமோ, மொழிபெயர்ப்போ அன்று. தேபி பிரஸாத் விளக்காமல் விட்டுவிட்ட பல கூறுகளை நான் விளக்கியுள்ளேன். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் கூற்றுக்களை அவர்கள் நூல்களில் இருந்தே மேற்கோளாகக் கொடுத்துள்ளேன். பொதுவாக இதுவோர் மூலநூல்.

இது எழுதக் காரணமாயிருந்தது தூத்துக்குடி படிப்பாளிகள் குழுவும், தேபி பிரஸாத்தின் நூலும். இக்குழுவிற்கும், எனது நண்பர் தேவி பிரஸாத்திற்கும் நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன்.

இதை வெளியிடும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் வெளியீட்டாளர்களுக்கு என் அன்பு கலந்த நன்றி.

'ஆராய்ச்சி                                நா. வான்மாமலை

258, திருச்செந்தூர் ரோடு,                2-9-78

பாளையங்கோட்டை.