இரண்டாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி
இரண்டாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி
தொகுமெய்க்கீர்த்தி 01
தொகு- பூமருவிய பொரிலேழும் பொருப்பேழும் புனைநித்திலத்
- தாமநெடுங் கொடை பொழிந்த தவள
- வெண்ணிலா குளிர்பொதியச்
- சுடர்ச்சக்கர வெற்பில்தன தடற்சக்கர வெயி்லெறிப்பச்
- சினப்புலியுஞ் செங்கோலு மனைத்துயிர்க்குங் காவல்பூணப்
- பணியணைமிசைப் பரஞ்சோதி பாற்கடல்நின் றெழுந்தருளி
- மணிநெடுமுடி கவித்தூநெடு மண்மடந்தையை மணம்புரிந்து
- புகழ்மடந்தை கொழுநனாகிப் போர்மடந்தையை மணம்புணர்ந்து
- பருதிமுதற் குலம்விளக்கிச் சுருதிகளின் முறைவாழ்த்தெழ
- விழுந்த அரிசமயத்தையு மீளவெடுத்து ஆதியுகங்
- கொழுந்துவிட்டுத் தழைத்தோங்கக் கோடாதறங் குளிர்தூங்க
- மாரிவாய்த்து வளம்சுரக்க தாரணியோர் பிணிநீங்க
- நல்லோர்தங் கற்புயர நான்மறையோர் தொழில்வளர
- எல்லாருந் தனித்தனியே வாழ்ந்தனமென மனமகிழ்ந்து
- ஒருவருடன் ஒருவர்க்கும் ஒன்றினுடன் ஒன்றுக்கும்
- வெருவருபகைமை மனத்தின்றி விழைந்துகா தலுடன்சேர
- இந்திரன்முதற் றிசாபாலர் எண்மருமொரு வடிவாகி
- வந்தபடி தரநின்று மனுவாணை தனிநடாத்தி
- மாலியானையே பிணிப்புண்பன மணிச்சிலம்பே யரற்றுவன
- சேலோடையே கலக்குண்பன தேமாவே வடுப்படுவன
- பொய்யுடையன வனவேயே போர்மலைவன வெழுகழனியே
- மாமலரே கடியவாயின வருபுனலே சிறைப்படுவன
- காவுகளே கொடியவாயி்ன கள்ளுண்பன வண்டுகளே
- பொய்யுடையன வனவேயே போர்மலைவன வெழுகழனியே
- மையுடையன நெடுவரையே மருளுடையன இளமான்களே
- கயற்குலமே பிறழ்ந்தொழுகும் கைத்தாயரே கடிந்தொறுப்பார்
- இயற்புலவரே பொருள்வேட்பார் இசைப்பாணரே கூடஞ்செய்வார்
- இவன்காக்கும் திருநாட்டில் இயல்விதுவென நின்றுகாவல்
- நெறிபூண்டு மனுநெறி யல்லது நினையாது
- தந்தையிலோர்க்குத் தந்தையாகியுந் தாயிலோர்க்குத் தாயாகியு
- மைந்தரிலோர்க்கு மைந்தராகியு மன்னுயிர்கட் குயிராகியும்
- விழிபெற்ற பயனென்ன அமையப்பெற்ற வருளெனவும்
- மொழிபொரு(ளா-மிவ)னெனவும் முகம்பெற்ற பனுவலெனவும்
- எத்துறைக்கும் இறைவனெனவும் வரஞ்செய்யும் பெருந்தவமெனவும்
- முத்தமிழ்க்கும் தலைவனெனவும் மூன்றுலகின் முதல்வனெனவும்
- அரசியற்கை முறைநிறுத்தி யல்லவைகடிந் தாறுய்த்து
- பொருகலியி னிருளகற்றிப் புகழென்னு நிலாப்பரப்பிக்
- கன்னடருங் காலிங்கருந் தென்னவருஞ் சிங்களருங்
- கைகயருங் கொங்கணருங் கூபகருங் காசியருங்
- காம்போசருங் கோசலருங் கொந்தளரும் கப்பளரும்
- பப்பளரும் பாஞ்சாலரும் பெப்பளரும் பூலுவரும்
- மத்திரரு மராட்டரும் வத்தவரு மாகதருங்
- கொடிநுடங்கு கனககோபுரக் கொற்றவாசலில் வந்தீண்டி
- கொட்பா வயரப் பாவல ரொராவகற்றிக்?
- கருமாமுகில் திருநிறத்துக் கனகளப ராஜராஜன்
- திருமார்பிலுந் திருத்தோளிலுந் திருமனதிலும் பிரியாது
- பற்றார் குழலியர்க்கொரு சூளாமணி ரத்நமென்ன
- சிந்தாமணி மஹாரத்ன மதிலதசோழ குலரத்னம்
- பூமகளும் ஜயமகளும் புகழ்மகளும் புவிமகளு
- நாமகளுந் தனித்தேவி நரதுங்கற் கிவளென்ன
- பாரரசர் பெருமையுட .... டென்றரற்றப்
- பேரரசு தனிநடாத்திப் பெண்ணரசாய் முடிசூடி
- உடனாணையு முடனிருக்கையு முடனரசும் உடன்சிறப்புங்
- கடனாகவே படைத்தருளி அறம்புரக்குங் கருணைவல்லி
- தவனவயல் பசும்புரவி கடவுட்டேர் கடாவவருந்
- தவனகுலத் துலகந்தொழ வந்தருளிய சந்த்ரவுதயம்
- ஞானமுதற் குலநான்கு நல்லொழுக்கமும் பெருங்கற்பும்
- பேணுமயில் ராஜராஜன் பிரியாவே ளைக்காரி
- அகலாத மாதாவென் றாரணங்க ளொருநான்கும்
- புகலவருந் தனிநாயகி புவனமுழு துடையாளும்
- அக்கிரமத் தொழிலால் அருள்மழைபொழி கிளர்வெண்குடைச்
- சக்கிரவர்த்தி சனநாதன் தரணிபாலன் தனிநாயகி
- ஆரலங்க மலர்ச்சோலையி லுலாவுங்கிளி தன்காதற்
- பேரருளாமொரு பாற்கடல் விளையாடு பெடையன்னம்
- சீர்படைத்த சிலைநுதல்மயில் பூலோக சுந்தரியாம்
- பேர்படைத்த நான்முகத்தோன் பெரம்படைப்பை வளர்க்கும்பணை
- வையமேத்துஞ் சமந்தகமணி மாதவன்புனை கவத்துவமணி
- தையலார்க்கொரு சூளாமணி சதுர்வேத சிந்தாமணி
- புண்ணியமொரு வடிவுகொண்டு புகழென்னும் மணிபுனைந்து
- பெண்ணியல்பு தனதாகப் பிறந்ததெனச் சிறந்தபேதை
- மன்னவர்தந் தேவியர்நின் வழியடியோ மடியோமென
- முன்னின்று தொழுதேத்த முதன்மைபெற்ற மூலநாயகி
- இனம்பொழியுங் கவிராஜன் யானையோடு தீதாடத்
- தனம்பொழியும் ராஜராஜன் தாய்வேனை தரித்தபொற்கொடி?
- இசைமுழுதுங் குடைமுழுதுங் குணமுழுதும் ஈண்டுற்று
- திசைமுழுது மண்முழுதுந் திருமுழுது முடையாளொரு
- முந்தைமுழு துலகுய்ய முடிசூடும் ராஜபண்டிதன்
- தன்(மன)முழு ஒருசீர்த்துடைய தேவிதரணிமுழு துடையாளும்
- பார்வாழவும் மண்வாழவும் பனுவல் வாழவும் (மனுவாழவும்)
- சீர்வாழவும் மலாடகுலத் தவதரித்துத் திசைவிளக்கு
- மேன்மையுடன் பெருங்கீர்த்தி மண்மிசைவ ளர்க்குங்குயில்
- உலகுடை முக்கோக் கிழானடிக ளென்னு
- மலகில் கற்பி லரவிந்த மடையுந்
- திருந்தியதன் பெருங்குணத்திற் சிறந்தோங்கி யறந்தழைக்கும்
- அருந்ததியா மென்னவரும் பெருமையுமவனி முழுதுடையாளும்
- மன்னியபெரும் புகழ்படைத்த தென்னவன்கிழா னடிகளும்
- ஊழியூழி பலகற்பம் வாழிமணம் புணர்ந்திருப்ப
- உதயகிரி உச்சியேறி மதிவெண்குடை புதுநீழற்கீழ்ச்
- சந்திரமுக் மண்டலத்துத் தாமரைக்குள் செம்பவளவாய்
- இந்த்ரநீல குஞ்சரமோ டிளம்பிடியுட னிசைந்ததெனச்
- செம்பொன்வீர சிம்மாசனத்துப் புவனமுழு துடையாளொடும்
- வீற்றிருந் தருளியகோப் பரகேசரி பன்மரான
- திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு
- யாண்டேழா வதுகன்னி நாயிற்று அமரபட்சத்து
- நவமியும்புதன் கிழமையும் பெற்றஆயில் யத்துநாள்...
மெய்க்கீர்த்தி 02
தொகு- பூமருவிய திருமாதும் புவிமாதும் செயமாதும
- நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்துபுல்க
- அருமறை விதியெறி யனைத்துந் தழைப்ப
- வருமறை யுரிமையில் மணிமுடி சூடித்
- திங்கள் வெண்குடைத் திசைக்களி றெட்டுந்
- தங்கு தனிக்கூடந் தானென விளங்கக்
- கருங்கலிப் பட்டியைச் செங்கோல் துரப்பப்
- பொருகதி ராழி புவிவளர்த் துடன்வர
- வில்லவ ரிரட்டர் மீனவர் சிங்களர்
- பல்லவர் முதலிய பார்த்திவர் பணிய
- எண்ணரு கற்பம் மண்ணகம் புணர்ந்து
- செம்பொன் வீர சிம்மா சனத்து
- புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய
- கோப்பர கேசரி வன்ம ரான
- திரிபுவனச் சக்கர வர்த்திகள்
- ஸ்ரீராஜ ராஜ தேவர்க்கு யாண்டு...
- மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] {{}}