இரண்டாம் இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி
இரண்டாம் இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி
தொகு
- கடல்சூழ்ந்த பார்மாதரும் பூமாதருங் கலைமாதரும்
- அடல்சூழ்ந்த போர்மாதரும் சீர்மாதரும் அமர்ந்துவாழ
- நாற்கடல்சூழ் புவியேழும் பாற்கடல்போல் புகழ்பரப்ப
- ஆதியுக மாமென்னச் சோதிமுடி புனைந்தருளி
- அறுசமயமும் ஐம்பூதமும் நெறியில்நின்று பாரிப்பத்
- தென்னவரும் சேரலரும் சிங்களரும் முதலாய
- மன்னவர்கள் திறைசுமந்து வந்தீண்டிச் சேவிப்ப
- ஊழியூழி ஒருசெங்கோல் ஏழுபாரும் இனிதளிப்பச்
- செம்பொன் வீர சிங்காசனத்(து)
- உலகுடை முக்கோக் கிழானடி களோடும்
- வீற்றிருந் தருளிய கோவிராச கேசரி
- வன்மரான திரிபுவனச் சக்கர வர்த்திகள்
- ஸ்ரீ இராஜாதி ராஜதேவர்க்கு யாண்டு...
- கடல்சூழ்ந்த பாரேழுந் திசையெட்டுங் காத்துநின்று
- தடமாமதி யெனவிளங்கித் தரளவெண்குடை நிலாவெறிப்ப
- ஆழிவரை வரப்பாக அடற்கலியைப் பிலத்தொதுக்கி
- ஊழிதொறும் புகழோங்க ஓராழி வெயிற்பரப்பக்
- கயல்சிலையி லாரில்(?) வரையகன்றாளயிற் கரங்குவிப்பப்
- புயலாழியிற் போற்றிசெயப் புவிமேருவில் வீற்றிருப்ப
- திருவாணையுஞ் செங்கோலுந் திசையிட்டுங் காவல்கொள்ளப்
- பெருவாழ்வுபெற் றுயிரனைத்தும் பி... ....
- சமையமாறுந் தலையெடுப்பத் தருமமுமரு மறையுமோங்கி
- அமைவில்லா மனுவொழுக்க மாதியாம்படி நிலைநிற்க
- ஓர்ப்பினும்தம் முறுகனவிலம் ஒன்றோடொன்று பகையின்றிப்
- போர்ப்புலியும் புல்வாயும் புக்கொருதுறை நீருண்ணப்
- பொன்னிநதியும் பொய்யாது புயலும் புனலோவாது
- மன்னியநிதி வளம்பெருக்க விளைவயல்(எ)வ் வளஞ்சுரக்கப்
- போகபூமி யிதுவென்னப் போகமெல்லாம் வந்தீண்டி
- ஏகவாணை அரசுரிமை ஏழ்பொழில்களும் பெற்றதென்னப்
- பாற்கடலிற் கார்க்கடலிப் படிவாழ முடிசூடி
- ஆர்த்த வமராபி ஷேகச்(சல)தியரசர் திளைத்தோட
- எவ்வுலகமும் இருணீங்க வந்தகோமா னிவனென்று
- கவ்வைதீரக் கலிகாலத் தாதிகாலங் காட்டினனென
- இவன்காக்கும் புவியனைத்தும் யாவையும்நினைந் தின்றருள
- யவன்காக்கு மெனஅகில லோகங்களும் அடியடையக்
- குலைபடுவன தெங்குகளே கோட்படுவன இளங்கமுகே
- அலைப்படுவன நீர்நிலையே அதிர்படுவன இடியேறே
- தளம்படிவன போர்வரம்பே தடைபடுவன கோபுரமே
- உளம்படுவன சூன்மகளிரே யொறுப்புனைவன மதகளிறே
- தடு்ப்புண்பன கோட்டகமே தள்ளுண்பன பூங்கொடியே
- கறைபடுவது நிறைமதியே .... .....
- பட்டுண்பன அணியல்குலே பரித்தாற்றுவ பரியாகமே
- குறைபடுவன குழற்சுருளே குழைவில்லன மணிக்கொங்கையே
- மறைபடுவன சூழ்காஞ்சியே மங்கொள் வனக்கிடையே?
- என்றுபாடிப் பாவேந்தரிளங்களிற்றின் மேற்போகச்
- சென்றிறைஞ்சிப் பாவேந்தர் திருவாசற் புறநிற்பச்
- சேரலருந் தென்னவருஞ் சிங்களருங் கொங்கணரும்
- பேரரசு பெறவேண்டிப் பிரியாது சேவிப்பத்
- தம்மரசு தாம்பெற்று தம்முடனே... சூடி
- யிருமருங்குந் தேவியர்கள் அணிமங்கலம் பெற்றருள
- வளவசோழன் வாளரசர் தலைகாக்க யாதவகுல
- மரபில்வந்த குலமாணிக்க மடநாண்முதற் கணநான்கின் வடிவுகொண்டு
- உடனாணையுந் திருவாணையு முடன்செல்ல முடிகவித்தாள்
- மண்ணரசர் வந்திறைஞ்ச மகுடம்புனை வளவனுடன்
- பெண்ணரசும் பெருந்தாயமும் பெற்றருளும் பெண்பெருமாள்
- உறையூரும் பேரூரகையு முதகையுமது ராபுரியு
- முறைமுறை யாண்டருளி முளரிநகர் துறந்தவண்ணம்
- பொன்னாசனஞ் சிங்கவணை பொலங்கற்பகப் பூஞ்சோலை
- முன்னேவல் நித்தல்முறை முறையேபெறு முலைப்பெருமாள்
- அளகநுதற் கயல்நயனத் தம்பொற்குழைக் கொம்பென்ன
- உளமகிழ வந்தருளிய உலகுடைமுக்கோக் கிழானடியுடன்
- வாழிவாழி மணம்புணர்ந் தூழியூழி பலவோங்கிச்
- செம்பொன் வீர சிங்கா சனத்து
- உலகுடை முக்கோக் கிழானடி களோடும்
- வீற்றிருந் தருளியகோ விராஜகேசரி பந்மரான
- திரிபுவனச் சக்கர வர்த்திகள்ஸ்ரீ ராஜாதிராஜ தேவர்க்குயாண்டு...
மெய்க்கீர்த்திகள்