இரண்டாம் இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி
இரண்டாம் இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தி
தொகு
- திருமாது புவியெனும் பெருமாத ரிவர்தன்
- மாதே வியர்க ளாக மீதொளிர்
- வெண்குடை யுயர்த்துத் திண்கலி பெயர்த்துத்தன்
- சிறிய தாதை யாகிய வெறுழ்வலிக்
- கங்கைகொண்ட சோழனைப் பொங்கிகல்
- இருமுடிச் சோழ னென்றும் பெருமுரட்
- டன்றிருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
- மும்முடிச் சோழனைத் தெம்முனை யடுதிறற்
- சோழ பாண்டிய னென்றுங் கோழிமன்
- றொடுகழல் வீர சோழனைப் படிபுகழ் (10)
- கரிகால சோழ னென்றும் பொருதொழில்
- வாள்வலித் தடக்கை மதுராந்தகனைச்
- சோழகங்க கொன்றுந் தோள்வலி
- மேவிகல் பராந்தக தேவனைச் சோழ
- வயோத்திய ராச னென்றும்
- இருதயத் தன்பொடு கருது காதலருள்
- இத்தலம்புக ழிராசேந்திர சோழனை
- உத்தம சோழ னென்றத் தொத்தணி
- முகையவி ழலங்கன் முடிகொண்ட சோழனை
- இகல்விச யாலய னென்றும் புகர்முகத் (20)
- தேழுயர் களிற்றுச் சோழகே ரளனை
- வார்சிலைச் சோழ கேரள னென்றுந்
- திண்டிரற் கடாரங் கொணட சோழனைத்
- தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ
- சனக ராச னென்றுங் கனைகடற்
- படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச்
- சுந்தர சோழ னென்றுஞ் செந்தமிழ்ப்
- பிடிகளிற் றிரட்ட பாடி கோண்ட
- சோழனைத் தொல்புவி யாளுடைச் சோழ
- கன்னகுச் சியராச னென்றும் பின்னுந்தன் (30)
- காதலர் காதலர் தம்முள் மேதகு
- கதிராங் கனைகழல் மதுராந் தகனை
- வெல்படைச் சோழ வல்லப னென்றும்
- மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை
- நிருபேந்திர சோழ னென்றும் பருமணிச்
- சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படிமிசை
- நிகழு நாளினு ளிகல்வேட் டெழுந்துசென்
- றொண்டிற லிரட்ட மண்டல மெய்தி
- நதிகளும் நாடும் பதிகளு மநேகம்
- அழித்தனன் வளவனெனு மொழிப்பொருள் கேட்டு (40)
- வேகவெஞ் சளுக்கிய ஆகவ மல்லன்
- பரிபவ மெனக்கிதென் றெரிவிழித் தெழுந்து
- செப்பருந் தீர்த்தக் கொப்பத் தகவையிற்
- சென்றெதி ரேன்றமர் தொடங்கிய பொழுதவன்
- செஞ்சர மாரிதன் குஞ்சர முகத்தினுந்
- தன்திருத் துடையினுங் குன்றுறழ் புயத்தினுந்
- தைக்க வுந்தன் னுடன்களி றேறிய
- தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையா
- லொருதனி யநேகம் பொருபடை வழங்கியம்
- மொய்ம்பமர் சளுக்கி தம்பிசய சிங்கனும் (50)
- போர்ப்புல கேசியுந் தார்த்தச பன்மனு
- மானமன்னவரின் மண் டலியசோ கையனும்
- ஆனவன் பகழா ரையனுந் தேனிவர்
- மட்டவி ழலங்கல் மொட்டையனுந் திண்டிறல்
- நன்னி நுளம்பனு மெனுமிவர் முதலினர்
- எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி
- வனினிய ரேவனும் வயப்படைத் துத்தனும்
- கொன்னவில் படைக்குண்ட மய்யனு மென்றின
- வெஞ்சின வரைசரோ டஞ்சிச் சளுக்கி
- குலங்குலை குலைந்து தலைமயிர் விரித்து (60)
- வெந்நுற் றொளித்துப் பின்னுற நோக்கிக்
- கால்பரிந் தோடி மேல்கடற் பாயத்
- துரத்திய பொழுதச் செரு்க்களத் தவன்விடு
- சத்துருபயங் கரன்கர பத்திரன் மூல
- பத்திர சாதி பகட்டரை சநேகமும்
- எட்டுநிரை பரிகளு மொட்டக நிரைகளும்
- வராகவெல் கொடிமுத லிராசபரிச் சின்னமும்
- ஒப்பில்சத்தி யவ்வை சாங்கப்பையென் றிவர்முதல்
- தேவியர் குழாமும் பாவைய ரீட்டமு
- மினையன பிறவு முனைவயிற் கொண்டு (70)
- விசையா பிடேகம் செய்துதென் றிசைவயிற்
- போர்ப்படை நடாத்திக் கார்க்கட லிலங்கையில்
- விறற்படைக் கலிங்கர்மன் வீரசலா மேகனைக்
- கடகளிற் றொடுபடக் கதிர்முடி கடிவித்
- திலங்கையர்க் கிறைவன் மானா பரணன் (75)
- காதல ரிருவரைக் களத்திடைப் பிடித்து
- மாப்பெரும்புகழ் மிகவளர்த்த கோப்பரகேசரி வர்மரான
- உடையார் ஸ்ரீராசேந்திர தேவர்க்கு யாண்டு...
- []]
- மெய்க்கீர்த்திகள் :[[]] :[[]] :[[]]