இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி

இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி

தொகு
ஸ்வஸ்திஸ்ரீ
திங்களேர் தருதன் றொங்கல்வெண் குடைக்கீழ்
நிலமக ணிலவ மலர்மகட் புணர்ந்து
செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து
தன்சிறிய தாதை யுந்திருத் தமையனுங்
குறிகொடன் னிளங்கோக் கிளையு நெறியுணர்
தன்திருப் புதல்வர் தம்மையுந் துன்றெழில்
வானவன் வில்லவன் மீனவன் கங்க
னிலங்கையர்க் கிறைவன் பொலங்கழற் பல்லவன்
கன்னகுச் சியர்கா வலனெனப் பொன்னணி (10)
சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படர்புக
ழாங்கவர்க் கவர்நா டருளிப் பாங்குற
மன்னுபல் லூழியுட் டென்னவர் மூவருள்
மானா பரணன் பொன்முடி யானாப்
பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து
வாரள வியகழல் வீரகே ரளனை
முனைவயிற் பிடித்துத தனது வாரணக்
கதக்க ளிற்றினா லுதைப்பித் தருளி
அந்தமில் பெரும்புகழ்ச் சுந்தர பாண்டியன்
கொற்றவெண் குடையுங் கற்றைவெண் கவரியும் (20)
சிங்காதனமும் வெங்களத் திழந்துதன்
முடிவிழத் தலைவிரித் தடிதளர்ந் தோடத்
தொல்லை முல்லையூர்த் துரத்தி யொல்கலில்
வேணாட் டரசைச் சேணாட் டொதுக்கி
மேவுபுக ழிராமகுட மூவர்கெட முனி்ந்து
மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டுதன்
நாடிவிட் டோடிக் காடுபுக் கொளிப்ப
வஞ்சியம் புதுமலர் மலைந்தாங் கெஞ்சலில்
வேலைகெழு காந்தளூர்ச் சாலை கலமறுத்
தாகவ மல்லனு மஞ்ச கேவுந்தன்
தாங்கரும் படையா லாங்கவன் சேனையுட்
கண்டப் பயனும் காங்கா தரனும்
வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல்
விருதர்விக்கியும் விசயாதித்தனும்
கருமுரட் சாங்க மய்யனும் முதலினர்
சமர பீருவொத் துடைய விரிசுடர்ப்
பொன்னோடைக்கரி புரவியொடும் பிடி்த்துத்
முடிவிழத் தலைவிரித் தடிதளர்ந் தோடத்
தொல்லை முல்லையூ்ர்த் துரத்தி யொல்கலில்
வேணாட் டரசைச் சேணாட் டொதுக்கி
மேவுபுக ழிராமகுட மூவர்கெட முனிந்து
மிடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டுதன்
நாடுவிட் டோடிக் காடுபுக் கொளிப்ப
வஞ்சியும் புதுமலர் தலைந்தாங் கெஞ்சலில்
வேலைகெழு காந்தளூர்ச் சாலை கலமறுத்
தாகவ மல்லனு மஞ்சற் கேவுதன்
தாங்கரும் படையா லாங்கவன் சேனையுட் (30)
கண்டப் பயனும் கங்கா தரனும்
வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல்
விருதர் விக்கியும் விசயாதித்தனுங்
கருமுரட் சாங்க மய்யனு முதலினர்
சமர பீருவொத் துடைய விரிசுடர்ப்
பொன்னோடைக்கரி புரவியொடும் பிடித்துத்
தன்னா டையிற் சயங்கொண் டொன்னார்
கொள்ளிப் பாக்கை யுள்ளெரி மடுப்பித்
தொருதனித் தண்டாற் பொருகட லிலங்கையர்
கோமான் விக்கிரம பாகுவின் மகுடமும் (40)
முன்றனக் குடைந்த தென்றமிழ் மண்டல
முழுவ துமமிழந் தெழுகட லீழம்
புக்க விலங் கேசனாகிய விக்கிரம
பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு
தன்ன வாக்கித்தன் கன்னகுச் சியினும்
ஆர்கலி யீழஞ் சீரிதென் றெண்ணி
உளங்கொளந் நாடுதன் னுறவொடும் புகுந்து
விளங்குமுடி கவித்த வீரசலா மேகன்
போர்க்களத் தஞ்சித்தன் கார்க்களி றிழிந்து
கவ்வையுற் றோடக் காதலி யொடுந்தன் (50)
றவ்வையைப் பிடித்துத் தாயைமூக் கரிய
ஆங்கவ மானம் நீக்குதற் காக
மீட்டும் வந்து வாட் டொழில் புரிந்து
வெங்களத் துலந்தவச் சிங்களத் தரசன்
பொன்னணி முடியுங் கன்னரசன் வழிவந்
துரைகொ ளீழத் தரச னாகியசீ
வல்லவ மதன ராச்ன் மெல்லொளித்
தடமணி முடியுங் கொண்டு வடபுலத்
திருகா லாவதும் பொருபடை நடாத்திக்
கண்டர் தினகரன் நாரணன் கணவதி (60)
வண்டலர் தெரியன் மதுசூ தனனென்
றெனைப்பல வரைசரை முனைவயிற் றுரத்தி
வம்பலர் தருபொழிற் கம்பிலி நகருட்
சளுக்கியர் மாளிகை தகர்ப்பித் திளக்கமில்
வில்லவர் மீனவர் வேள்குலச் சளுக்கியர்
வல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர்
சிந்துர ரையணர் சிங்களர் பங்களர்
அந்திரர் முதலிய வரைசரிடு திறைகளும்
ஆறிலொன் றவனியுட் கூறுகொள் பொருள்களும்
உகந்துநான் மறையவர் முகந்துகொளக் கொடுத்து (70)
விசுவலோ கத்தும் விளங்கமனு நெறிநின்
றசுவமே தஞ்செய் தரைசுவீற் றிருந்த
சயங்கொண்ட சோழனு யர்ந்த பெரும்புகழ்க்
கோவிராச கேசரி வர்மரான
உடையார் ஸ்ரீராசாதிராச தேவர்க்கு யாண்டு... (75)
மெய்க்கீர்த்திகள்
[[]] :[[]] :[[]] :[[]]