இருண்ட வீடு/அத்தியாயம்-25


25

அக்கம் பக்கத்தார்க்கு இடையூறு !

சினத்தோடு வந்தவர் சிரிப்போடு திரும்பினார்.


எதுவும் பயன்பட வில்லை ஆயினும்
அக்கம் பக்கத் தருகில் இருந்தவர்
தக்கத் தரிகிடத் தாளம் கேட்டுத்
தூக்கங் கலைந்ததால் சூழ்ந்தோடி வந்து
மூக்கில் எரிச்சலை முன்னே நிறுத்தி
என்னாங் காணும் இந்நேரத்தில்
தச்சப் பட்டரை வைச்சது போலவும்
அச்சுப் பிப்பாய் அடிப்பது போலவும்
இப்படித் தட்டி இன்னல் விளைக்கிறீர்
உள்ளே இருப்பவர் உயிரோ டிருந்ததால்
கொள்ளுக் கட்டிய குதிரை போல
வாய்திறக் காமலா வம்பு செய்வார்கள்
என்று கூறி இரைச்சலிட் டார்கள்.
இதுகேட் டந்த ஏதுங் கெட்டவர்
கதவு மிகவும் கனத்த தென்றார்
"எழுந்து திறப்பாள் என்பதை நீவிர்
எதிர்பார்த் திடவே யில்லை போலும்
கதவை உடைப்பதே கருத்துப் போலும்"
என்று சிரித்தே ஏகினார் வந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-25&oldid=1534767" இலிருந்து மீள்விக்கப்பட்டது