இறையனார் அகப்பொருள்/களவியல்
கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த உரை பத்தாம் நூற்றாண்டில் எழுத்துருவம் பெற்றது என்பது ஒரு கோட்பாடு.
களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்- மூலம்
தொகுஆசிரியர்: இறையனார்
தொகு(ஆலவாய்அண்ணல் அறுபது நூற்பாவில் ஆக்கிய அகப்பொருள் இலக்கணம்)
தொகுமுதலாவது களவியல் (நூற்பா 01 முதல் 33 முடிய)
தொகுநூற்பா 01 (அன்பின்ஐந்திணை)
தொகு- அன்பி னைந்திணைக் களவெனப் படுவ
- தந்தண ரருமறை மன்ற லெட்டனுள்
- கந்தருவ வழக்க மென்மனார் புலவர்.
- (இச்சூத்திரம், 'இவ்வதிகாரம் உரைக்கின்ற பொருள் இன்னது' என்றும், 'இதனோடு ஒத்தது' என்றும் உரைக்கின்றது.)
- மூலம் பதப்பிரிப்பு
- அன்பின் ஐந்திணைக் களவு எனப்படுவது
- அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
- கந்தருவ வழக்கம் என்மனார் புலவர். (01)
நூற்பா 02 (அதுவே)
தொகு- அதுவே,
- தானே யவளே தமியர் காணக்
- காமப் புணர்ச்சி யிருவயி னொத்தல்.
- (இச்சூத்திரம் 'களவு' என்பதனை விளக்கியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- அதுவே,
- தானே அவளே தமியர் காணக்
- காமப்புணர்ச்சி இருவயின் ஒத்தல். (02)
நூற்பா 03 (ஆங்ஙனம்)
தொகு- ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் றன்வயின்
- பாங்க னோரின் குறிதலைப் பெய்தலும்
- பாங்கிலன் றமியோ ளிடந்தலைப் படலுமென்
- றாங்கவ் விரண்டே தலைப்பெயல் மரபே.
- (இச்சூத்திரம் 'தலைப்பெயல்' இலக்கணம் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் தன் வயின்
- பாங்கனோரின் குறிதலைப்பெய்தலும்
- பாங்கிலன் தமியோள் இடந்தலைப்படலும் என்று
- ஆங்கு அவ்விரண்டே தலைப்பெயல் மரபே. (03)
நூற்பா 04 (அவ்வியல்பல்லது)
தொகு- அவ்வியல் பல்லது கூட்டக் கூட
- லெவ்விடத் தானுங் களவிற் கில்லை.
- மூலம் பதப்பிரிப்பு
- அவ்வியல்பு அல்லது கூட்டக்கூடல்
- எவ்விடத்தானும் களவிற்கு இல்லை. (04)
நூற்பா 05 (புணர்ந்தபின்றை)
தொகு- புணர்ந்த பின்றை யாங்ஙன மொழுகாது
- பணிந்த மொழியாற் றோழி தேஎத்
- திரந்துகுறை யுறுதலுங் கிழவோன் மேற்றே.
- (இச்சூத்திரம் தலைமகனுக்குரிய செயல் ஒன்றனைக் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- புணர்ந்த பின்றை ஆங்ஙனம் ஒழுகாது
- பணிந்த மொழியால் தோழி தேஎத்து
- இரந்து குறையுறுதலும் கிழவோன் மேற்றே. (05)
நூற்பா 06 (இரந்துகுறை)
தொகு- இரந்துகுறை யுறாது கிழவியுந் தோழியு
- மொருங்கு தலைப்பெய்த செவ்வி னோக்கிப்
- பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
- புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
- மதியுடம் படுத்தற்கு முரிய னென்ப.
- (இச்சூத்திரம் 'மதியுடம்படுத்தல்' என்பதனை விளக்கியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- இரந்து குறையுறாது கிழவியும் தோழியும்
- ஒருங்கு தலைப்பெய்த செவ்வி நோக்கிப்
- பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப்
- புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
- மதியுடம்படுத்தற்கும் உரியன் என்ப. (06)
நூற்பா 07 (முன்னுறவுணர்தல்)
தொகு- முன்னுற வுணர்தல் குறையுற வுணர்த
- லிருவரு முள்வழி யவன்வர வுணர்தலென்
- றம்மூன் றென்ப தோழிக் குணர்ச்சி.
- (இச்சூத்திரம் தோழி உணரும் முறையைக் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- முன்னுற உணர்தல் குறையுற உணர்தல்
- இருவரும் உள்வழி அவன் வரவு உணர்தல்
- அம்மூன்று என்ப தோழிக்கு உணர்ச்சி. (07)
நூற்பா 08 (ஆங்குணர்ந்)
தொகு- ஆங்குணர்ந் தல்லது கிழவோள் தேஎத்துத்
- தான்குறை யுறுதல் தோழிக் கில்லை.
- (இச்சூத்திரம் தோழிக்குரியதோர் பண்பினைக் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- ஆங்கு உணர்ந்து அல்லது கிழவோள் தேஎத்துத்
- தான் குறையுறுதல் தோழிக்கு இல்லை. (08)
நூற்பா 09 (முன்னுறவுணரினும்)
தொகு- முன்னுற வுணரினு மவன்குறை யுற்ற
- பின்ன ரல்லது கிளவி தோன்றாது.
- (இச்சூத்திரம் தோழியின் சொல்லாடுந்திறன் உணர்த்தியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- முன்னுற உணரினும் அவன் குறையுற்ற
- பின்னர் அல்லது கிளவி தோன்றாது. (09)
நூற்பா 10 (உள்ளத்துணர்ச்சி)
தொகு- உள்ளத் துணர்ச்சி தெள்ளிதின் கரந்து
- கிழவோள் தேஎத்துக் குறையுறூஉ முளவே
- குறிப்பறி வுறூஉங் காலை யான.
- (இச்சூத்திரம் தோழி தலைமகளிடத்துக் குறைவேண்டல் உணர்த்தியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- உள்ளத்து உணர்ச்சி தெள்ளின் கரந்து
- கிழவோள் தேஎத்துக் குறை உறூஉம் உளவே
- குறிப்பு அறிவு உறூஉம் காலை ஆன. (10)
நூற்பா 11 (தன்னுள்)
தொகு- தன்னுட் குறிப்பினை யருகுந் தோழிக்கு
- முன்னுறு புணர்ச்சியி னருகலு முண்டே.
- (இச்சூத்திரம், தன் உள்ளக்குறிப்பினைத் தலைமகள் உணர்த்துதலைக் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- தன் உள்குறிப்பினை அருகும் தோழிக்கு
- முன்உறுபுணர்ச்சியின் அருகலும் உண்டே.(11)
நூற்பா 12 (குறையுறுங்)
தொகு- குறையுறுங் கிழவனை யுணர்ந்த தோழி
- சிறையுறக் கிளந்து சேண்பட நிறுத்தலு
- மென்னை மறைத்த லெவனா கியரென
- முன்னுறு புணர்ச்சி முறைமுறை செப்பலு
- மாயப் புணர்ச்சி யவனொடு நகாஅ
- நீயே சென்று கூறென விடுத்தலு
- மறியாள் போறலுங் குறியாள் கூறலும்
- படைத்துமொழி கிளவியுங் குறிப்புவேறு கொளலு
- மன்ன பிறவுந் தலைப்பெயல் வேட்கை
- முன்னுறு புணர்ச்சிக் குரிய வென்ப.
- (இச்சூத்திரம் 'சேட்படை' என்பதுபற்றிக் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- குறையுறும் கிழவனை உணர்ந்த தோழி
- சிறையுறக் கிளந்து சேண்பட நிறுத்தலும்
- என்னைமறைத்தல் எவனாகியர் என
- முன்னுறுபுணர்ச்சி முறை முறை செப்பலும்
- மாயப் புணர்ச்சி அவனொடு நகாஅ
- நீயே சென்று கூறு என விடுத்தலும்
- அறியாள் போறலும் குறியாள் கூறலும்
- படைத்துமொழி கிளவியும் குறிப்பு வேறு கொளலும்
- அன்ன பிறவும் தலைப்பெயல் வேட்கை
- முன்னுறுபுணர்ச்சிக்கு உரிய என்ப. (12)
நூற்பா 13 (குறையுறுபுணர்)
தொகு- குறையுறு புணர்ச்சி தோழி தேஎத்துக்
- கிழவிக் கில்லை தலைப்பெய லான.
- (இச்சூத்திரம் தலைமகளது பண்பினை உணர்த்தியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- குறையுறு புணர்ச்சி தோழி தேஎத்துக்
- கிழவிக்கு இல்லை தலைப்பெயல் ஆன. (13)
நூற்பா 14 (தோழிக்குரியவை)
தொகு- தோழி்க் குரியவை கோடாய் தேஎத்து
- மாறுகோ ளில்லா மொழியுமா ருளவே.
- (இச்சூத்திரம் அறத்தொடுநிற்கும் முறைமை கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- தோழிக்கு உரியவை கோடாய் தேஎத்து?
- மாறுகோள் இல்லா மொழியுமார் உளவே. (14)
நூற்பா 15 (முற்படப்)
தொகு- முற்படப் புணராத சொல்லின் மையின்
- கற்பெனப் படுவது களவின் வழித்தே.
- (இச்சூத்திரம் கற்பின் இலக்கணம் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- முன்படப் புணராத சொல் இன்மையின்
- கற்பு எனப்படுவது களவின் வழித்தே. (15)
நூற்பா 16 (களவினுட்)
தொகு- களவினுட் டவிர்ச்சி காப்புமிகி னுரித்தே
- வரைவிடை வைத்த காலை யான.
- (இச்சூத்திரம் தலைமகனுக்கு நிகழும் இடையீடு கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- களவினுள் தவிர்ச்சி காப்பு மிகின் உரித்தே
- வரைவு இடைவைத்த காலை ஆன. (16)
நூற்பா 17 (அல்லகுறிப்)
தொகு- அல்லகுறிப் படுதலு மவ்வயி னுரித்தே
- யவன்வர வறியுங் குறிப்பி னானா.
- (இச்சூத்திரம் அல்லகுறிப்படுதல் என்பதுபற்றிக் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு:
- அல்ல குறிப்படுதலும் அவ்வயின் உரித்தே
- அவன் வரவு அறியும் குறிப்பின் ஆனா. (17)
நூற்பா 18 (குறியெனப்படுவ)
தொகு- குறியெனப் படுவ திரவினும் பகலினு
- மறியக் கிளந்த இடமென மொழிப.
- (இச்சூத்திரம் 'குறி' -இரவுக்குறி, பகற்குறி- பற்றிக் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- குறி எனப்படுவது இரவினும் பகலினும்
- அறியக் கிளந்த இடம் என மொழிப. (18)
நூற்பா 19 (இரவுக்குறியே)
தொகு- இரவுக் குறியே யில்வரை யிகவாது.
- (இச்சூத்திரம் இரவுக்குறி நிகழுமிடம் கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- இரவுக்குறியே இல் வரை இகவாது. (19)
நூற்பா 20 (பகற்குறி)
தொகு- பகற்குறி தானே யிகப்பினும் வரையார்.
- (இச்சூத்திரம் பகற்குறி இடம் உணர்த்தியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- பகல்குறி தானே இகப்பினும் வரையார். (20)
நூற்பா 21 (இரவுமனை)
தொகு- இரவுமனை யிகந்த குறியிடத் தல்லது
- கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை.
- (இச்சூத்திரம் இரவுக்குறிக்கோர் எல்லை கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- இரவுமனை இகந்த குறியிடத்து அல்லது
- கிழவோன் சேர்தலை கிழத்திக்கு இல்லை. (21)
நூற்பா 22 (அம்பலும்)
தொகு- அம்பலு மலருங் களவு.
- (இச்சூத்திரம், அம்பல், அலர் பற்றி உரைத்தது)
- மூலம் பதப்பிரிப்பு
- அம்பலும் அலரும் களவு. (22)
நூற்பா 23 (வெளிப்பட்ட)
தொகு- வெளிப்பட்ட பின்றையு முரிய கிளவி.
- (இச்சூத்திரம், வெளிப்பட்ட பின்னர் நிகழ்வது உணர்த்தியது)
- மூலம் பதப்பிரிப்பு
- வெளிப்பட்ட பின்றையும் உரிய கிளவி. (23)
நூற்பா 24 (களவுவெளிப்படா)
தொகு- களவு வெளிப்படா முன்னுறு வரைதல்
- களவு வெளிப்பட்ட பின்றை வரைதலென்
- றாயிரண் டென்ப வரைத லாறே.
- (இச்சூத்திரம், 'வரைதல்' இரண்டுவகை எனக்கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு
- களவு வெளிப்படா முன்னுறு வரைதல்
- களவு வெளிப்பட்ட பின்றை வரைதல் என்று
- ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. (24)
நூற்பா 25 (பட்டபின்றை)
தொகு- பட்ட பின்றை வரையாக் கிழவன்
- நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிதலும்
- பொருள்வயிற் பிரியா தொருவழித் தணத்தலும்
- புரைவ தென்ப கற்பா லான.
- (இச்சூத்திரம், அவ்வரைவிற்கு வரும் இடையீடு இவை என்பது கூறியது.)
- மூலம் பதப்பிரிப்பு:
- பட்ட பின்றை வரையாக் கிழவன்
- நெட்டிடை கழிந்து பொருள்வயின் பிரிதலும்
- பொருள்வயின் பிரியாது ஒருவழித் தணத்தலும்
- புரைவது என்ப கற்பால் ஆன. (25)
நூற்பா 26 (வெளிப்படை)
தொகு- வெளிப்படை தானே விரிக்குங் காலைத்
- தந்தை தாயே தன்னைய ரென்றாங்
- கன்னவ ரறியப் பண்பா கும்மே.
- (இச்சூத்திரம், வெளிப்படை என்பதன் இலக்கணங் கூறியது.)
நூற்பா 27 (அவருள்)
தொகு- அவருள்,
- தாயறி வுறுதலி னேனோரு மறிவர்.
- (இச்சூத்திரம், பிறர் அறியும்வகை கூறியது.)
நூற்பா 28 (தந்தை)
தொகு- தந்தை தன்னைய ராயிரு வீற்றும்
- முன்ன மல்லது கூற்றவ ணில்லை.
- (இச்சூத்திரம், நற்றாய் அறத்தொடுநிற்றலைக் கூறியது.)
நூற்பா 29 (காப்புக்கை)
தொகு- காப்புக் கைமிக்குக் காமம் பெருகினும்
- நொதுமலர் வரையும் பருவ மாயினும்
- வரைவெதிர் கொள்ளாது தமரவண் மறுப்பினு
- மவனூ றஞ்சுங் கால மாயினு
- மந்நா லிடத்தும் மெய்ந்நா ணொரீஇ
- யறத்தொடு நிற்றல் தோழிக்கு முரித்தே.
- (இச்சூத்திரம், அறத்தொடு நிற்கும் இடம் கூறியது.)
நூற்பா 30 (காமம்மிக்க)
தொகு- காமம் மிக்க கழிபடர் கிளவியுங்
- காப்புச் சிறைமிக்க கையறு கிளவியு
- மாறுபார்த் துற்ற வச்சக் கிளவியு
- மிரவினும் பகலினு நீவரு கென்றலுங்
- கிழவோன் றன்னை வார லென்றலுந்
- தன்னுட் கையா றெய்திடு கிளவியு
- மன்ன மரபின் பிறவுந் தொகைஇத்
- தன்னை யழிந்த் கிளவி யெல்லாம்
- வரைதல் வேட்கைப் பொருள வென்ப.
- (இச்சூத்திரம், வரைவுகடாவும் இலக்கணமெல்லாம் தொகுத்துணர்த்தியது.)
நூற்பா 31 (ஆறின்னாமை)
தொகு- ஆறின் னாமையு மூறு மச்சமுந்
- தன்னை யழிதலுங் கிழவோற் கில்லை.
- (இச்சூத்திரம்,தலைமகனது பண்பு உணர்த்தியது.)
நூற்பா 32 (களவினுட்)
தொகு- களவினுட் டவிர்ச்சி வரைவி னீட்டம்
- திங்க ளிரண்டி னகமென மொழிப.
- (இச்சூத்திரம், களவொழுக்கத்தின் காலம் இவ்வளவு என உரைத்தது.)
நூற்பா 33 (களவினுட்..கிழவோற்)
தொகு- களவினுட் டவிர்ச்சி கிழவோற் கில்லை.
- (களவுக்காலத்துத் தலைமகனது இலக்கணம் உணர்த்தியது.)
முதலாவது களவியல் முற்றும்
தொகுஅடுத்து வருவது, கற்பியல்
தொகுபார்க்க:
- இறையனார் அகப்பொருள்/கற்பியல் :[[]] :[[]] :[[]]