இளையர் அறிவியல் களஞ்சியம்/உருளை எந்திரம்

உருளை எந்திரம் : 'சிலிண்டர்' என்று அழைக்கப்படும் இது தட்டு எந்திரத்தை விடப் பெரியதாகும். இதில் அச்செழுத்து முடுக்கப்பட்ட சட்டம் கிடையாகக் கிடத்தப்பட்டிருக்கும். நன்கு பொருத்தப்பட்ட அது முன்னும் பின்னுமாகச் சென்று வரும். பின்னே செல்லும் போது அங்குள்ள மை உருளைகள் எழுத்து மீது மை தடவும். முன்னோக்கி வரும்போது அங்கு தாள் சுற்றிய உருளை சுழலும். அப்போது அவ்வுருளையோடு இணைந்த தாளில் அச்சு பதியும். பின் உருளை அவ்விடத்தை விட்டு அகன்றவுடன் அதனோடு இணைந்திருந்த அச்சுப் பதிந்த தாள் தனியே பிரிந்துவிடும்.மீண்டும் உருளையில் புதியதாள் சுற்றப்படும். இதில் பெரிய தாள்களும் கூட அச்சிட முடியும். அதாவது ஒரே சமயத்தில் 16 பக்கங்களோ 32 பக்கங்களோ அச்சிட இயலும். இந்த உருளை எந்திரங்கள் மின்

நின்று சுழலும் உருளை அச்சுப் பொறி

விசையால் மட்டுமே இயங்கும். இதில் ஒரே சமயத்தில் மணிக்கு இரண்டாயிரம் படிகளுக்கு மேல் அச்சிட முடியும்.