இளையர் அறிவியல் களஞ்சியம்/கல்லீரல்

கல்லீரல் : உடலில் பலவிதச் சுரப்பிகள் உள்ளன. அவற்றுள் மிகப்பெரும் சுரப்பியாக அமைந்திருப்பது கல்லீரல் ஆகும். இது கருஞ் சிவப்பு நிறத்தில் அமைந்துள்ளது. இது வயிற்றின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. இதன் அடியில் சிறுகுடல் அமைந்துள்ளது. வலப்புறத்தில் சிறுநீரகம் உள்ளது.

கல்லீரலின் முக்கியப் பணி இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களையும் கழிவுப் பொருட்களையும் சுத்திகரிப்பதே யாகும். இதிலுள்ள பித்தப் பையிலிருந்துதான் பித்த நீர் சுரக்கிறது. இது மஞ்சள் நிறமாக இருக்கும். இது மிகவும் கசப்புச் சுவையுடையதாகவும். இப்பித்த நீர் தேவைப்படும்போது பித்தப் பையிலிருந்து வெளிப்பட்டு சிறுகுடலுக்குச்

கல்லீரல் இரைப்பையும் அதன் மற்ற உறுப்புகளும்

செல்லும். அங்கு உணவில் உள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைத்து எளிதில் சீரணமாக உதவுகிறது. இதன் மற்றொரு முக்கியப் பணி இரத்தத்தில் உள்ள சர்க்கரைச்சத்தை கிளைக்கோஜன் ஆக மாற்றி சேமித்து வைப்பதாகும். ஆற்றல் தேவைப்படும்போது இதை மீண்டும் சர்க்கரையாக மாற்றி இரத்தத்தில் கலக்கச் செய்கிறது. அளவுக்கு அதிமாகச் சேர்ந்துவிடும் புரதத்தை யூரியாவாக மாற்றி சிறுநீரகத்துக்கு அனுப்புவது இதன் பணியேயாகும். கல்லீரலிலிருந்து வரும் பித்தநீர் சிறு குடலுக்குச் செல்வதில் ஏதேனும் தடை ஏற்படின் காமாலை நோய் தோன்றும். பித்த நீரின் நிறத்தை வைத்து இதை மஞ்சள் காமாலை என்றே அழைப்பர். கல்லீரலில் ஒரு பகுதி சேதமடைந்தாலும்கூட கல்லீரல் பணிகள் ஏதும் பாதிக்கப்படுவதில்லை. கல்லீரலைப் பீடிக்கும் நோய்கள் பெரும்பாலும் போதைப் பொருட்களாலே ஏற்படுகின்றன. நாம் உண்ணும் உணவில் புரதச் சத்துக் குறைந்தாலோ வைட்டமின் ‘பி’ பற்றாக்குறை ஏற்பட்டாலோ நோய் ஏற்பட ஏதுவாகிறது.

மது, கல்லீரலைப் பாதிக்கும் முக்கியமான போதைப் பொருளாகும்.