இளையர் அறிவியல் களஞ்சியம்/தைராய்டு

தைராய்டு : இது ஒரு நாளமில்லாச் சுரப்பியாகும். இச்சுரப்பி குரல் வளைக்கு அடியில்

தைராய்டு சுரப்பி

இரு பக்கங்களிலுமாக அமைந்துள்ளது. ஆண்களிடம் காணப்படும் தைராய்டு சுரப்பியைவிட பெண்களிடமும் குழந்தைகளிடமும் சற்றுப் பெரியதாக இருக்கும். தைராய்டு சுரப்பியின் எடை 80-லிருந்து 60 கிராம் வரைதான் இருக்கும். தைராய்டு சுரப்பில் அயோடின் உள்ளது. இச்சுரப்பியிலிருந்து தைராக்சின் ஹார்மோன் சுரக்கப்படுகிறது.

தைராய்டு சுரப்பி உடலில் உள்ள அளவு இல்லையெனில் குழந்தையின் வளர்ச்சி குன்றும்; மன வளர்ச்சியும் பாதிக்கும். இக்குறை நீங்க தைராக்சின் கொடுக்க வேண்டும்.

தைராய்டு சுரப்பு அதிகம் சுரந்தாலும் உடலுக்கு பாதிப்புண்டாகும். நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இதயத் துடிப்பு அதிகமாகும். படபடப்பு ஏற்படும். தைராக்சின் ஹார்மோனின் பணிகள் இவை. உணவு சீரணமாகும்போது உண்டாகும் சக்தியை உடம்பின் எல்லா எலும்புகளுக்கும் சம அளவில் பங்கிட்டுத் தருவது; புரதச் சத்துக்களை சீரணிப்பதில் உதவுவது; மனித இன வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் கட்டுப்படுத்துவது நரம்பு மண்டலத்தின் செய்கைகளைத் தூண்டுவது; மற்ற நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை துரிதப்படுத்துவது; இதனால் ஏற்படும் நோய் கிரேவ்ங் என்று அழைக்கப்படுகிறது. இந்நோய் ஏற்பட்டவர்களுடைய தைராய்டு சுரப்பி பருத்து பிதுக்கமாகத் தோற்றமளிக்கும்.