இளையர் அறிவியல் களஞ்சியம்/நாளமில்லாச் சுரப்பிகள்

நாளமில்லாச் சுரப்பிகள் : நம் உடலில் பலவிதச் சுரப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகள் அனைத்தும் உயிரணுத் தொகுதிகளால் ஆனவைகளாகும். இவை இரண்டு பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளன. முதலாவது நாளமுள்ள சுரப்பிகள். இரண்டாவது, நாளமில்லாச் சுரப்பிகள்.

நாளமுள்ள சுரப்பிகட்கு, சுரக்கும் சுரப்பியைக் கொண்டு செல்ல நாளங்கள் உண்டு. அவற்றின் மூலம் சுரப்பு உறுப்புகளைச் சென்றடைகின்றன. சான்றாக, நாக்கின் அடியில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் சுரக்கிறது. அது நாளத்தின் வழியாக வெளியேறி வாய்க்கு வந்து சேர்கிறது. இதனால் இத்தகைய சுரப்பிகள் நாளமுள்ள சுரப்பிகளாகின்றன.

சுரப்புகளைக் கொண்டு செல்ல நாளங்கள் இல்லை. இவற்றின் சுரப்புகள் நேரிடையாக இரத்தத்தோடு கலக்கின்றன. இவை நாளமில்லாச் சுரப்பிகளாகும். நாளமில்லா சுரப்பி கள் சுரக்கும் சுரப்புக்கள் 'ஹார்மோன்கள்’

நாளமில்லாச் சுரப்பிகள்


என்று அழைக்கப்படுகிறது. உடல் நல்ல வளர்ச்சியடையவும் ஒழுங்கான உருவமைப் புப் பெறவும் உண்ணும் உணவுச்சத்துக்களை உடல் நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் உறு துணையாய் அமைவது இந்த ஹார்மோன்களே யாகும். இவை சரிவர இயங்கவில்லையென்றால் அறிவு வளர்ச்சி குன்றும். ஆளுமைத் தன்மை பாதிக்கும்.

நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் சுரப்பிகள் தனித்தனியாக எந்த உறுப்பையும் இயக்குவதில்லை. உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளும் ஒருங்கிணைந்து ஒன்றாகச் செயல்படும்போதே அவற்றின் ஆற்றல் முழுமையாக வெளிப்படும். ஏதோ ஒருநாளமில்லாச் சுரப்பி பழுதடைந்தால் கூட மற்ற நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம் பாதிப்படைகிறது. அதனால், உடலுக்குத் தீங்கு விளைகிறது. எனவே, அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளும் ஒரே சமயத்தில் இயங்கி சுரப்புகளை வெளிப்படுத்தி ஒழுங்காகப் பணியாற்றினால்தான் உடலுக்கு அனைத்து நலன்களும் உண்டாக முடியும்.

நாளமில்லாச் சுரப்பிகளில் தலையில் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பி, குரல்வளைக்குக் கீழாகவும் இருபுறங்களிலும் உள்ள தைராய்டு சுரப்பி, பாராத்தைராய்டு சுரப்பிகள், சிறுநீரகங்களின் உச்சிப் பகுதியில் அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பி, மார்புக்கு அடியில் கடற்பஞ்சுபோல் உள்ள தைமஸ் சுரப்பி, கணையத்திலுள்ள ’லாங்கர்ஹான்ஸ் தீவுகள்’ எனப்படும் திசுப் பகுதி, வயிற்றிற்கு மேலாக அமைந்துள்ள மண்ணீரல் ஆகியலை முக்கிய நாளமில்லாச் சுரப்பிகளாகும்.

உடல் பழுதில்லாமல் ஒழுங்காக இயங்க நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியமாகும்,