இளையர் அறிவியல் களஞ்சியம்/வெப்ப இரத்தப் பிராணிகள்
வெப்ப இரத்தப் பிராணிகள் : சாதாரணமாக நம் உடலின் வெப்பநிலை 98.40 ஃபாரன் ஹீட் ஆகும். எவ்வளவு உயர்ந்த அளவு வெப்பம் அல்லது குளிர் உள்ள பகுதிகளில் இருந்தாலும் நம் உடம்பு இதே வெப்பநிலையைக் கொண்டே இருக்கும். அதேபோன்று வேறுசில பிராணிகட்கும் அதிகபட்ச வெப்ப அல்லது குளிரால் பாதிக்காமல் நம்மைப் போலவே நிலையான உடல் வெப்ப நிலையைப் பெற்றுள்ளன. இவையே 'வெப்ப இரத்தப் பிராணிகள்’ என அழைக்கப்படுகின்றன. குதிரை. நாய், பூனை போன்ற பிராணிகள் வெப்ப இரத்தப் பிராணிகள் ஆகும்.
வேறு சிலவகைப் பிராணிகள் சுற்றுப் புறத்தில் உள்ள வெப்ப குளிர் நிலைகளுக்கேற்ப
தங்கள் உடலின் வெப்ப நிலையில் ஏற்ற, இறக்கங்களைப் பெறுகின்றன. இவை குளிர் இரத்தப் பிராணிகளாகும். இதற்குப் பாம்பு, அரணை . முதலை, தவளை மற்றும் தேள், சிலந்தி. மண்புழு போன்றவை தக்க உதாரனங்களாகும்.
சாதாரணமாக முதுகெலும்புள்ள பிராணிகள் வெப்ப இரத்தப் பிராணிகளாகவும், முதுகெலும்பில்லாதவை குளிர் இரத்தப் பிராணிகளாகவும் உள்ளன.