இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும்

பதின்மூன்றாவது அதிகாரம்


தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும்

ம்பாய் துறைமுகத்தில் என்னை எதிர் கொண்டழைத்தவர் ஒரு மெலிந்த தேகமுடைய மனிதர். என்னை வரவேற்க என் தந்தை, சிற்றப்பா முதலியவர்கள் வந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்த வண்ணம், கைப்பெட்டியையும் மற்றுஞ் சாமான்களையும் எடுத்துக் கொண்டு, சுற்று முற்றும் பார்த்தேன். இச்சமயத்தில், என்னருகே வந்த மெலிந்த மனிதரைப் பார்த்தும், அவரைக் கவனியாது நாலா பக்கமும் கண்களைச் சுழல விட்டு, “நீர் யார்? என் தந்தை முதலியவர்கள் எங்கே?' என்று கேட்க வாயெடுத்தேன். இதற் குள் அவர் என் குறிப்பறிந்தவர்போல், அம்மா! நான் தான் இதோ இருக்கிறேன்" என்று மெதுவாகக் கூறினர். அக்குரலேக் கேட்டதும் திரும்பி அவரைக் கூர்ந்து நோக்கி னேன். 'ஆ' என்ன என் தந்தையா? என் அருமைத் தந்தையா? லட்சாதிபதியான என் தந்தையா இவ்வளவு எளிய தோற்றமும், மெலிந்த தேகமு முடையவரா யிருக் கிருர்?' என்ற எண்ணம் என் மனதில் மின்னல் தோன்றி மறைவதுபோல் உதித்து ஒடுங்கியது. திடுக்கிட்டேன். அடுத்தகணம் என் கையிலிருந்த பெட்டி முதலியன வெல் லாம் நழுவி விழுந்தன. அப்பா! நீயா அப்பா இக்கோலத் தில் காணப்படுகிருய்?” என்று கதறியவண்ணம் அவரைக் கட்டிக்கொண்டேன். அவர் கண்களிலும் நீர் தாரை தாரை யாக வடிந்தது. -

என் கூச்சல் கூட்டத்தைச் சேர்த்துவிட்டது. பலர் ாஎன்ன! என்ன நேர்ந்தது?" என்று என் தந்தைய்ைப் பர பரப்புடன் வினவினர். ஒரு சிலர், சீமாட்டி மகள்போல் கர்ணப்படும் இப்பெண் ஒரு பைத்தியக்காரக் கிழவனைக் கட்டிக்கொண்டு அழுகிருளே என்றெண்ணியோ என் னவோ கேலியாகச் சிரித்து கின்றனர். திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியால் நான் என் தந்தையின் மீதே மூர்ச்சையாய் விட்டேன். . . . . . .

என் தந்தை கேட்டவர்களுக்கு ஏதோ சமாதானஞ் சொல்லிவிட்டு, என்ன ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு: அவ்விடத்தினின்றும் வெளியேறினர். - - -

நான் மூர்ச்சை தெளிந்து நோக்கியபோது ரயிலில் இர்யான்ஞ் செய்து கொண்டிருப்பதர்க அறிந்தேன். பக் கத்தில் அம்ர்ந்திருந்த என் தந்தையைப் பார்த்துப் பல.

15 . 248 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கேள்விகள் கேட்டேன். அவற்றிற் கெல்லாம் அவர் சரி யாகப் பதில் சொல்லவில்லை. அவருடைய இவ்வித மாறுத அக்குக் காரணமென்ன என்ற கேள்விக்கு மட்டும், தாம் நோய் வாய்ப்பட்டுத் தேறியதாகப் பதில் கூறினர். மற்றப் படி நான் கேட்பவற்றைக் காதில் வாங்கிக்கொள்ளாது: என் கவனத்தை வேறு விஷயத்தில் திருப்பப் பெரிதும் முயன்ருர், இதிலிருந்து என் மனதில் பெரிய பெரிய சங் தேகங்களெல்லாம் உண்டாய்க்கொண்டிருந்தன. சென்டி. ரல் ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றதுகூட எனக்குத் தெரிய சில்லை. என் தந்தை என் கையைப்பற்றி யழைத்த பிறகே: என் சிந்தனையை விட்டு அவர் பின் சென்றேன்.

எங்களுக்காக எங்கள் சொந்த மோட்டார் வந்து காத் திருக்குமென்று எதிர்பார்த்தேன். ஆனல் அதற்குப் பதி லாக, என் தந்தையார் சிறிது அாரத்திருந்த ஜட்கா வண்

'ಕಾಲ வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வந்தார். வண்டி, அருகில் வந்ததும், முதலில் என்னே அதில் ஏறச் செய்து பின் தானும் எறிக்கொண்டார். உடனே வண்டியோட்டி குதிரையைத் தெற்கு நோக்கிச் செலுத்தினன். எனக்குண் டான ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. ஒரு மோட்டார். கம்பெனியே சொந்தமாக இருந்தும், விட்டு உபயோகத் துக்கு மட்டும் ஒன்றுக்கு மூன்று மோட்டார். கார்கள். இருந்தும் ஒரு மோட்டார்கூட எங்களை ஏற்றிச் செல்ல வராமலிருந்ததென்ருல் அது எனக்குப் பேராச்சரியத்தை புண்டாக்காம விருக்கமுடியுமா? ஆல்ை, இம்முறை என் தந்தையைப் பார்த்து மோட்டார் என் வரவில்லை?" என்று கேட்கவில்லை. ஏனென்ருல் எனது கேள்விகள் அவரைப் பரம சங்கடத்துக்குள்ளாக்குவதையும், அவருள் பொதிக்,

$

தரும் கும் துக்கத்தைக் கிளறி. யதிகப்படுத்துவதையும், தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும் 219.

குறிப்பா லறிந்தேன். உற்சாகத்தோடன்றி, கவலையோ, டிருந்ததை இதற்கு முன் ஒரு முறையும் பார்த்தறியாத கான், இப்போது பார்த்தது முதல் பெருங் கவலையால் அவர் பேதுற்று வருந்துவதைக் கண்டு மனம் பதறினேன். இவ் வித அசெளகரியங்களெல்லாம் சேர்வதற்கு என்ன நிகழ்ந் திருக்கக்கூடும் என்று மிகத் தீவிரமாக ஊகித்துப் பார்த் தும் என்னல் கண்டறிய முடியவில்லை. ரயிலிலுஞ் சரி; ஜட்கா வண்டியிலுஞ் சரி; என் தங்தை லண்டனில் என் வாழ்க்கை எப்படி யிருந்தது என்ருே கேம்பிரிட்ஜ் கலா சாலைப் படிப்பு எப்படி என்ருே எனது யோக கூேடிமத் தைக் கேட்காதது எனக்கு மற்ருெரு புறத்தில் பெரிய ஆச் சரியத்தை விளேத்தது. . * ,

இவ்விதம் பல விஷயங்களைப்பற்றிச் சிந்தித்த வண் ணம் போய்க்கொண்டிருக்கையில் வண்டி திடீரென்று நின் றது. உடனே நான் தலை நிமிர்ந்து பார்த்தேன். அடை யாற்றிலுள்ள எங்கள் பங்களாவுக்கு எதிரில் வண்டி நிற் பதை யறிந்து திடுக்கிட்டேன். இவ்வளவு தாரமுமா கான் சிந்தனையில் மூழ்கி வந்தேன்? என் தேனும்பேட்டையி லுள்ள நமது மாளிகைக்குப் போகாது இங்கு தந்தை யழைத்து வந்தார்?' என்று என் மனதில் எழுந்த கேள்வி களுக்குப் பதிலே யாராய்ந்த வண்ணம் வண்டியைவிட்டு இறங்கினேன். என் தந்தையின் தோற்றமும், செயலும் எல்லாம் எனக்கு மிகவும் மர்மமாகவே இருந்தது.

வண்டியின் சத்தத்தைக் கேட்டுவிட்டுத்தான்போலும் உள்ளிருந்து வந்த என் அருமைத் தாய், நான் பங்களாவி லுள் அடியெடுத்து வைத்ததும், என்னேக் கண்டு ஓடி வந்து என்ன இறுகச் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஒ:வெனக் கதறி பழுதாள். நானுங் காரண மறியாமலே, அவளுடன் 220 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

சேர்ந்து அலறி யழுதேன். இவ்வழுகை யொலியைக் கேட்டு வெளிவந்த என் சிற்றன்னே முதலியவர்களும் வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்தனுப்பிவிட்டுக் கைப் பெட்டி முதலியவைகளே யெடுத்துக்கொண்டு வந்த என் தந்தையும் எங்களே ஆஸ்வாஸப்படுத்தி உள்ளழைத்துச் சென்றனர். எங்கள் துயரம் சாந்தமடைவதற்கு வெகு நேரமாயிற்று. * . . . -

காங்களும் சிறிய தந்தை குடும்பத்தாருமேயன்றி, உற வினர், வருவார், போவார், வேலையாட்கள் முதலியவர் களும் நிறைந்து சத்திரம்போல் காணப்பட்ட எங்கள் மாளிகை பொலிவிழந்து வெறும் வெளியாகக் காணப்பட் டது. வேலைக்காரர் ஒருவர் கூட இல்லை. சிற்றப்பாவின் மக்களில் கூட இருவரே யிருந்தனர். இருந்த காலேந்து பேரில் ஒருவர் முகத்தில்கூட உற்சாகங் காணப்படவில்.ஆ. என் தந்தையைக்காட்டிலும் தாய் மிக மெலிந்திருந்தாள். வைர கைகளே மயமாயிருந்த அவள் தேகத்தில் சில சிறு ஆபரணங்களே யிருந்தன. கான் போன சமயம் என் சிந் றப்பா வெளியே எதோ வேலையாகப் போயிருந்தார். நான் ஒன்றுங் கவலேப்படாதிருக்குமாறு கூறிக் குளித்து ஆகா சங் கொள்ளும்படி உபசரித்தார்களே யொழிய, என்ன நேர்ந்தது? இப்பஞ்சைக் கோலத்துக்குக் காரணமென்ன? என்று கான் எவ்வளவோ மன்ருடிக் கதறிக் கேட்ட ,

விக்குமட்டும் ஒருவரும் பதில் சொல்ல முன் வரவில்.ஆ.

இவ்வாறு இரண்டொருகாள் சென்றது. என் தந்தை மேல்மாடியிஅள்ள அவரது அறையை விட்டு அதிகமாக வெளிவருவதில்லை. சிற்றப்பா மட்டும் வெளியே அடிக் குடி போய்வத்து தந்தைக்கு எகோ தகவல் ,ெ கொண்டிருந்தார். தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 221

மூன்ரும் நாள் மாலே என் தாய் விஷயத்தை என் னிடம் மெல்லச் சொல்லத் தொடங்கிளுள். அம்மா புவன கமக்கு வந்த கஷ்ட காலத்தைப்போல இவ்வுலகில் வேறு யாருக்கும் வராதம்மா! நமது மோட்டார் வியா பாரம் கீ போன பிறகுகூட நன்ருய் நடந்து கொண்டுதா னிருந்தது. சனி திசையோ என்னமோ! உன் அப்பா பொறுப்பை யெல்லாம், தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு சும்மா கம்பெனிக்குப்போப் வந்துகொண்டிருந்தார். உன் சிற்றப்பன்சமாச்சாரத்தான் உனக்குக் தெரியுமே? தம் களியாட்டங்களுக்கெல்லாம் கம்பெனிப் பணத்தைத் தண் ணிர்போல வாரியிறைத்துச் செலவு செய்ய ஆரம்பித்துவிட் டார். இவர் தம் சிநேகிதர்களோடு கூடிக் கூத்தடிக்கும் சமாசாரம் பண நெருக்கடி யேற்பட்ட பிற்பாடு தான் உன் தந்தைக்குத் தெரியும். கொஞ்ச நாளைக்கெல்லாங் கம் பெனி நஷ்டத்தில் நடப்பது தெரிந்தது. வியாபாரம் மிக மோசமாய்விட்டது. கடன் ஏராளமாய்ச் சேர்ந்துவிட் டது. இச்சமயத்தில் போர்டு கம்பெனியின் (அமெரிக்க) சொந்தக்காரர்கள் நமக்கு மோட்டார் அலுப்புவதை கிறுத்தியதோடு, ஏஜன்ஸி கொடுத்திருந்ததையும் ாத்துச் செய்துவிட்டனர். தாங்களே சென்னையில் ஒரு கிளை ஆபீளைத் திறந்து வியாபாரஞ்செய்ய ஆரம்பித்துவிட்ட னர். எனவே, நமது கம்பெனி வியாபாரம் அடியோடு படுக்க விட்டது. கடைசியாக, மோட்டார் கம்பெனியை மூடவேண்டிய நிலை யேற்பட்டுவிட்டது. இதை யறிந்து கடன்காரர்கள் நெருங்கத் தலைப்பட்டனர். சம் சொத்துக்க ளெல்லாம் கடன்காரர்களுக்கு அடமானம் வைக்கப்பட் டிருப்பதால் அவைகளை விற்றுக் கடனைத் தீர்க்கவும் வழி யில்லை. அவ்வாறு செய்ய முயன்ருலும், கடன்காரர்கள் அதற்கிடங் கொடுக்காது அவற்றை எலத்தில் கொண்டு 222 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

வரப் பாடுபட்டு வருகின்றனர். சிலர் உன் தந்தையை வாரண்டில் பிடிக்கக் கோர்ட்டில் டிக்ரி வாங்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காகவே, தேனும்பேட்டை மாளிகையை விட்டு விட்டு இங்கு வந்து வசிக்கிருேம். வியாபாரப் போட்டியின் மீது ஏற்பட்ட பகைவர்கள் உன் தந்தையை இன்ஸால்வென்ஸி வாங்கும்படி செய்யப் பிரயத்தனப்பட்டு வருகின்றனர். 'ஆல்ை உன் தந்தை என் உயிர் போனலும் இன்ஸால்வென்ஸி வாங்க மாட் டேன்' என்ற உறுதியோடு இருந்து வருகிருர் நாம் இவ் வாறு கஷ்டப்படுவதை உடனிருந்து பார்க்க உன் சிற்றன் இனக்கு உள்ளுக்குள் மிகவுஞ் சந்தோஷம். அவள் பிள்ளை களைக்கூடப் பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டாள். அவள் கொஞ்சம் பணத்தைச் சேர்த்து ஊருக்கு இரகசியமாக அனுப்பியிருப்பதாகக்கூடக் கேள்வி. எப்படியோ பிழைத் துப் போகட்டும்-மேற் படிப்புக்காக உன்னை இலண்ட அக்கு அனுப்பிலுைம், அல்லும் பகலும் உன் கினைவாக இருந்த உன் தந்தை இக்கேவல நிலைமைக்குப் பின்னர், ஒவ்வொரு வினாடியும் உன்னை நேரில் பார்க்கத் துடிதுடித் துக் கொண்டிருந்தார். அப்பேராவலாலேயே கஷ்டத் தோடு கஷ்டமாகப் பணஞ் சேகரித்து அனுப்பி உன்னை வரவழைத்தார். இனி நீ இலண்டனுக்குச்சென்று படிப்பை முடிப்பதென்பது முடியாத காரியமம்மா படித்த வரைக் கும் போதும், நமது இந்தப் பெருங் கஷ்டத்தைக் கடவுள் தான். 4. கண்திறந்து பார்த்துப் போக்கவேண்டும். இல்லா விட்டால் நம் கதி......"என்று மேலே பேச முடியாமல் குழந்தைபோல் தேம்பித் தேம்பி யழுதான். -- -

எனது குடும்பத்தின் நிலமையை உள்ளவாறு அறிந்த ம் துடித்த துடிப்பை ஈசனே அறிவார். எனக் தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 223

குத் துக்கம் மேலிட்டாலும், அதை யடக்கிக் கொண்டு என் தாயைத் தேற்றினேன். எனக்காக உடல் பொரு வாவியைக் கொடுத்துக் காப்பாற்றிய என்னருமைப் பெற். ருேரை இக்கஷ்ட நிலைமையிலிருந்து கரையேற்ற என்னல் முடியுமா? என்று என்னென்னமோ யோசனை யெல்லாஞ் செய்து வந்தேன். -

நான் சென்னைக்கு வந்து ஆறு நாட்கள் ஆயின. அன்று காலை நான் படுக்கையினின்றும் எழுந்திருக்கப் போகுஞ் சமயம் என் அறைக் கதவு தட கடவென்று கட் டப்படுஞ் சத்தங் கேட்டுத் திடுக்கிட்டெழுத்தேன். உடை புைச் சீர்திருத்திக்கொண்டு கதவைத் திறந்ததும், சிற் றன்னேயின் மகளான வேதவல்லி என்னைப் பார்த்துக் கதறி ள்ை. என்னவென்று விசாரிப்பதற்குள் அவள் எனக்குச் சைகை காட்டிய வண்ணம் மேன்மாடிக்கு ஓடினுள். கர்னும் அவளைப் பின்தொடர்ந்தேன். என் தங்தையின் அன்றக்கு வெளியில் கூட்டமாயிருந்தது. அவர்கள் ஒரு வருக்கொருவர் ஏதோ குசுகுசு வெனப் பேசி அங்கலாய்த் துக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் அவர்கள் வழிவிட்டு ஒதுங்கி கின்றனர். அறைக் கதவு உடைபட்டுக் கீழே விழுந்து கிடந்தது. ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது. என்று ஊகித்த நான் ஒரே பாய்ச்சலாக அறைக்குள் தாவி ன்ேன். ஆ| அங்கு நான் கண்டதென்ன! என்னருமைத் தந்தை-என் ஆருயிர்த் தந்தை-கட்டிலில் இறந்து கிடக் தார். என் தாய் சிற்றன்னை முதலியவர்கள் பிரேதத்தின் மீ அது விழுந்து அழுதாற்றிக்கொண்டிருந்தனர்.

நான் இக் கோரக் காட்சியைக் கண்டதும் திகைப் புற்றுக் கல்ல்ாய்ச் சமைந்து நின்றேன். என் வரவையறிந்த் கான் தாய் நானிருந்த பக்கத்திரும்பி, அடி என் கண்ணே! +224 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அப்பா போய்விட்டாரம்மா! சம்மை நடுத் தெருவில் விட்டு விட்டு. இனி நாம் என்ன செய்கிறதடி. 'என்று ஒப்பாரி வைத்து அழுது அலறியவண்ணம் வாயிலும் வயிற். நிலும் அடித்துக்கொண்டாள். எனது வாழ்க்கையில் இது வரை இவ்வித துக்க சம்பவம் நிகழ்ந்ததில்லை யாகையா லும், பெண்களின் இழவு’ப் போராட்டத்தைக் கண்டதே. யில்லே யாகையாலும் எனக்கு அச்சமயம் என்ன செய்வ. தென்று தோன்றவில்லை. எனவே மனம் பதற உடல் பதற கின்ற நான் வாய் குழற, 'அம்மா!............”என்று ஆரம்பித்தவண்ணம் நெருங்கினேன். இதற்குள் என் தாய் ஆவேசங் கொண்டவள்போல் என்னைத் தாவிப் பிடித்து இழுத்து உட்கார வைத்து முகத்தோடு முகத்தைப் பொருத்தி ஒ'வெனப் பெருத்த கூச்சலிட்டுக் கதறி யழு. தாள். அடி என் செல்வமே உனக்குக் கலியாணஞ் செய்துகூடக் கண்ணுல் பார்க்க வில்லையே!............இதற். குள் இந்தக் கொள்ளே வந்து நேர்ந்து விட்டதே!............ நம் குடும்பத்துக்குத் திடீரென்று இந்த மாதிரியான கதிவரு மென்று யாருக்காகிலுந் தெரியுமா?........ பாழுந் தெய்வமே உனக்குக் கண்ணில்லையா?’ என்று என் தாய் ஏதேதோ!. கூறிப் பிரலாபித்தாள். அவளது பரிதாபகரமான அழுகை யொலி கல்லேயுங் கரைந்துருகச் செய்யுமென்ருல், எங்களைச் சேர்ந்தவர்களேயன்றி வேடிக்கை பார்க்க வந்தோரும் உடன் அழுதது ஒர் ஆச்சரியமில்லை. நான் வாய்விட்டு அலற வில்லையே யொழிய, முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு குமுறிக் குமுறி யழுதேன். வஞ்சகியான என் சிற்றன்னை அச்சமயத்திலும் கிமிஷத்துக்கொரு தடவை கண்ணைத் துடைப்பதும் மூக்கைச் சிந்துவதுமாகப் பாசாங்கு செய்தாளே யொழிய அவளது மகள் அழு மவ் வளவுகூட உண்மையாக அழவில்லை. இத்துணே நாள் இவ தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 225,

சது ஆதரவில் உண்டு உடுத்து இனிமையாக வாழ்ந்து வங் தோமே என்ற நன்றி யறிதல் கொஞ்சமாவது இருந்தால் தானே அவள் மனங் கனிந்து அழுவாள்! தான் எக் கேடு கெடுவதாயினும், அவள் கண் முன் நாங்கள் பல துன்பங் களுக் காளாகிப் பரம எழைகளாய் வருந்தவேண்டு மென் பதுதான் அவளது கித்திய பிரார்த்தனே ஆகையால், அவள் என் தந்தை இறந்த இச்சமயத்தில் உள்ளே மகிழ்ந்து வெளிக்கு அழுவதாகப் பாவனே செய்ததில் வியப்பொன்ற மில்லை பல்லவா!

எங்களுக்குத் திடீரென்று ஏற்பட்ட இப்பேரிடியைத் தாங்கமாட்டாது) நானும் என் தாயும் கதறிப் பதறி பழுவ தும், மாறி மாறி அடிக்கடி மூர்ச்சைப் போட்டு விழுவதும் எழுவதுமாயிருந்தோம். அக்கம்பக்கத்திலுள்ள அயலவர் களே. எங்களை மூர்ச்சை தெளிவிப்பதும் தேற்றுவதுமாப் இருந்தனர். என் தந்தை திடீரென இறந்த செய்தி காட்டுத் தீப்போல் எங்கும் பரவி விடவே, நாழிகையாக ஆக ஜனக் கூட்டம் அதிகரித்துவிட்டது. ஆனல் எங்கள் உறவினரில் ஒரு சிலர் தவிர, பெரும்பாலோர் வரவில்லை என்பதை அன் பரே! நீர் அறிதல் வேண்டும். என் சிற்றப்பா மேன் மாடிக்கு வருவதும், கீழே இறங்கிச் செல்வதுமாக கிலே கொள்ளாது கிரிந்துகொண்டிருந்தார்.

"இவருக்கு என்ன உடம்பு'

கன்ரு யிருந்த புண்ணியவானுக்கு இப்படித் திடீ ரென்று மரணஞ் சம்பவிக்குமா?”

நேற்று சாயங்காலங்கூட இவர் மேன் மாடியில் உலவிக்கொண்டிருந்ததை என் கண்ணுல் பார்த்தேனே! அப்படியிருக்க, இாத்திரிக்குள் இவர் எப்படி இறந்து போளுர்?" -226 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அதென்னமோ அம்மா இராத்திரி நன்முகப்படுக்கப் போனவர் பொழுது விடிவதற்குள் இறந்துபோனர் என்

ருல் மாயமாகத் தானிருக்கிறது!” 1 *

இவ்வாறெல்லாம் வேடிக்கை பார்க்க வந்த சுற்றுப் புறத்து மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு அங்க லாய்த்துக்கொள்வதும், மற்றுஞ் சிலர் காதோடு காது வைத்துக் குசு குசு வெனப் பேசிக்கொள்வதும் என் காகில் ஒருவாறு விழுந்தது. இவர்களது சம்பாஷணையைச் செவி யேற்ற பின்னர் தான், எனக்கு என் தந்தையின் மரணத் தில் சந்தேக மேற்பட்டது. உடனே என் மனம் பல பல எண்ணியது. கும்பல் அதிகரிக்க அதிகரிக்க மும்முர மடைந்து (எங்கள் அழுகை யொ லியையும் அடக்கி) வந்த பேச்சாரவாரம், இருந்தாற்போலிருந்து கின்று விட்டது. அதே சமயம் டக் டக் என்று பூட்ஸ் சப்கங் கேட்டது; சிக்கனயில் மூழ்கியிருந்த நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த் தேன். என் சிற்றப்பா முன்னே வர, நாலந்து கனவான் கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர் அவர்களில் இரு போலீஸ் உத்தியோகஸ்தர்களு மிருந்தனர். அவர்களுக்கு இவர் ஏதோ சமாதானஞ் சொல்லிக்கொண்டு வருவதாகத் தெரிந்தது. - - -

வந்தவர்கள் அழுது கொண்டிருந்த என் தாய் முதலி யோரை விலகி யிருக்கச் செய்து என் தந்தையின் பிரேதத் தைச் சூழ்ந்தனர். ஒரு கனவான் கை காடியைத் தொட்டுப் பார்க்கார்; ஜேபியில் வைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்பை யெடுத்து மார்பில் வைத்து இருதயத் துடிப்பு இருக்கிறதா என்று கவனித்தார்; வாயைத் திறந்து நாக்கைக் கூர்ந்து நோக்கினர். கண் விழிகளை நீக்கி ஆராய்ந்தார். பின்னர் டாக்டர் நிமிர்ந்து மற்றவர்களைப் பார்த்து நாம் சந்தேகித் தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 227

தது சரிதான். இது இயற்கை மரணமாக இருக்க முடி வாது. பிரேத பரிசோதனைக்குப் பிரேதத்தை அனுப்ப வேண்டியதே. அங்கே தெரிந்து போகிறது எல்லாம் வெட்ட வெளிச்சமாக, ஊம், இன்ஸ்பெக்டர் சார்! என்ன யோசிக்கிறீர்?’ என்று சிறிது மிடுக்காகவே கேட்டார். தமது கடமையைச் செய்வதில் சிறிதும் வழுவாதவர் என்ப தைப் பிறர் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது அவரது எண்ணம்போலும். இது அவரது தடபுடலி விருந்து தெரிந்தது. *

போலிஸ் இன்ஸ்பெக்டர், சப் மாஜின்திரேட் முதலிய வர்களேத் தனியாக அழைத்துக்கொண்டு போய் ஏதோ சில விநாடிகள் பேசினர். பின்னர் அவர் எங்களிடம் திரும்பி வருகையில், அவர் வருங் குறிப்பை யறிந்துகொண்டவர் போல் என் சிற்றப்பா எதிர் சென்று வழி மறித்து அவர் முகவாய்க் கட்டையைப் பிடி த்துக்கொண்டு பலவாறு கூறிக்

கெஞ்சலாஞர்.

இதே சமயம் மற்றுஞ் சில கனவான்கள் அங்கே தோன்றினர். அவர்கள் கடன்காரர்கள் என்று பின்னல் எனக்குத் தெரிந்தது. அவர்கள் அச்சமயம் அங்கு வந்த நோக்கம் எதுவோ! ஆயினும், என் சிற்றப்பாவின் தவிப் பைப் பார்த்துவிட்டு இரக்கங் கொண்டவர்களாய், போலிஸ் இன்ஸ்பெக்டர் முதலியவர்களோடு எங்கள் சார் பாக வாதாடினர். சிறிது நேரம் அனைவருங் கலந்தாலோ சித்த பின் ஏதோ முடிவுக்கு வந்தவர்களாய், என் சிற்றப் பாவிடம் பிரேதத்தைச் சீக்கிரம் அடக்கஞ் செய்துவிடு மாறு யோசனை கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றனர்.

அப்போதுதான் நான் கொஞ்சங் தைரியமாக மூச்சு விடலானேன். எதிர்பாராதவாறு இவ்வாறு சிக்கிரத்தில் 228 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

எங்கள் குடும்பம் சீர் கெட்டழியும் கிலேமைக்கு வந்துவிட்

டதை நினைத்தபோது என் வயிறு குழம்பியது. ஆம்: நான் ஐயுற்றபடியே மானத்துக் கஞ்சி விஷத்தையோ

வேறெதையோ-உண்டு என் தந்தை உயிரைப் போக்கிக்

கொண்டார். அதுதான் உண்மையாக கடந்ததும். இவ் வெண்ணம் உறுதிப்படவே'நான் திடீரென எழுந்து அவ்

வறையை ஆராயலானேன். தலையணையை யெடுத்துப் பார்த்தபொழுது ஒரு சிறு காகிதம் மடிக்கப்பட்டுக் கிடக்

தது. அதை ஆவலாக எடுத்துப் பார்த்தேன். என் கை நடுங்கியது. அதில் பின் வருமாறு என் தந்தையால் எழு

தப்பட்டிருந்தது:-என் அருமைப் புதல்விக்கு,

உனக்காகவே உயிரை வைத்திருந்தேன். நான் இதற்கு முன், என் உயிரினும் சிறந்த உன்னைக் கண் குளிரப்பார்த்து விட வேண்டுமென்ற ஆசை நிறைவேறிவிட்டது. இனி, எனக்கு இவ்வுலகில் வேலையில்லே. நான் அரும்பாடுபட்டுக் தேடிய செல்வமும், சீரும், குடும்பப் பெருமையும் எவ் வாருே அழிந்துவிட்டன. அதுபற்றி நான் யாரையுங் குறை கூற விரு.பவில்லை. மான மழிந்த பின்னும் உயிர் வாழ இச்சை கொள்வது மிகக் கேவலமானதாகு . இப் பாழும் உலகத்தில் நீ யாரையுஞ் சகமென்று நம்பாதே! கல்வியறிவு இருப்பினும் உலகானுபவமற்ற உன்னைச் சகல. புவனங்களுக்குக் தாயுந் தந்தையுமான முழு முதற் கடவு. ளிடமே அடைக்கலப் படுத்திவிட்டுச் செல்கிறேன். எதை முன்னிட்டும் உன் அருமைத் தாயை மட்டும் கை நெகிழ் விடாதே, - -

என் இன்னுயிரை உன்னிடம் வைத்துவிட்டுச் செல்லும்,

உன் தந்தை. தந்தை பிரிவும் குடும்பச் சீரழிவும் 229

அக்கடிதத்திலுள்ள வார்த்தைகள் சில விடங்களில் தெளிவாகத் தெரியாமலிருந்தன. எழுதப்பட்ட மை கலைக் திருப்பதே அதற்குக் காரணமெனத் தெரிந்து, பல முறை அக்கடிதத்தைத் திருப்பித் திருப்பிப் படித்த நான் என் தந்தை அக்கடிதத்தை யெழுதும்போது அழுதுகொண்டே யெழுதி யிருக்கிருரென்றும், அவரது கண்ணிர்த் துளிகளே மையைக் கலைத்து வார்த்தைகளைத் தெளிவாகத் தெரிய வொட்டாது செய்திருக்கிறதென்றும் பின்னர் ஊகித்தறிந் தேன். அக் கடிதத்திலுள்ள பொருளே ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க எனக்குத் துக்க மேலிட்டது. நான் கடிதத்தைக் கண்டெடுத்துப் படிப்பதைப் பார்த்ததும் என் சிற்றப்பா என்னிடம் வந்து அதை வாங்கிப் பார்த்தார். உடனே அவர் முகம் மாறுதலடைந்தது. ஒன்றுஞ் சொல்லாமல் அதை என்னிடமே கொடுத்துவிட்டு வெளியே போய்விட் ட்ார். என் தாய் பைத்தியம் பிடித்தவள்போல் மாறிவிட்ட தால் என் செயலே அவள் கவனிக்கவேயில்லை. என் சிற் ஹன்னமட்டும் அக் கடிதத்தில் என்ன எழுதி யிருக்கிறது என்று அறியத் தடிதுடித்துக்கொண்டிருந்ததை சான் குறிப்பா லறிந்தேன். ஆனல் அவளுக்கு அது என்ன வென்று என்னைக் கேட்கத் துணிவில்லை.

கடைசியாக, எவ்வாருே அன்று மாலை நான்கு மணிக்கு என் அருமைத் தந்தை-செல்வத் தந்தை-யின் பிரேதம் சந்தடியின்றிச் சாதாரண முறையில் அநாதைப் பிணம் போல் அடக்கஞ் செய்யப்பட்டது. அதன் பின் முறையே செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளெல்லாம் ஒருவாறு செய்து முடிக்கப்பட்டன. இதற்கு முன் தேனீக்கள்போல் மொய்த்துக் கொண்டிருந்த உற்ருர் உறவின . ரெல்லாம் பிரேத அடக்கத்துக்கு மட்டுமல்ல, உத்தரகிரியைக்கும் 330 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

கூட வாதது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. தூர பந்துக் களாயும் நண்பர்களாயுமுள்ள ஒரு சிலரே உடனிருந்து காரியங்களை நிறைவேற்றினர். . . . . . *

உத்தரகிரியை முடிந்ததோ இல்லையோ கடன்காரர். கள், எங்கள் சொத்துக்களே எலத்தில் போட்டனர். கடன் காரர்கள் தாராள மனப்பான்மை காட்டியிருந்தால், கிரமப் படி எங்கள் சொத்துக்களே விற்றிருந்தால், அவர்களுக்கும் கடன் கொடுத்து ஏதோ எங்களுக்குங் கொஞ்சஞ். சொத்தோ பணமோ மீதமடைந்திருக்கும். அதைக் கொண்டு நாங்கள் ஒருவாறு காலத்தள்ளி யிருக்கலாம். ஆஞல், எலத்தில் விட்டதில் ஒன்றுக்குப் பாதியாகப்போப் கடன்காரர்களுக்கே சரியாகக் கடன் சேராது போய்விட் டது. ஆகவே, நாங்கள் தங்கக்கூட குடிசையில்லாமல் நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.

என் சிற்றன்னே கருமாதி முடிந்ததும் தன் மகளை Ավւனழைத்துக்கொண்டு எங்களைவிட்டு மெல்ல நீங்கி என் பாட்டி ஊராகிய மன்னர்குடிக்குப் புறப்பட்டுவிட்டாள். கடன்காரர் போட்ட பகிரங்க எலத்தில் எங்கள் சொத்து ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் போன பிறகு என்சிற்றப்பா மிகவும் கவலையோடு என் தாயிடம் வந்து, 'அண்ணி கிற் கக்கூட நிழலில்லாமல் நம் கதி வந்துவிட்டது. இங்கிலேயில் இச்சென்னே நகரில் எப்படிக் காலங் தள்ளுவதென்று தெரியவில்லை. ஆகையால், நான் ஒரு உத்தியோகத்தைத் தேடிப் பெறும்வரை நீங்களும், புவனவும், மன்னர்குடிக்கு ............"என்று கூறி வருகையில், துயரமே வடிவாய் இருந்த என் தாய் சீறி எழுந்து, கம்பி! அந்தப் பேச்சை மட்டும் எடுக்காதே! நாம் நல்ல நிலைமையில் இருந்தவரை அடிக்கடி வந்து கூடிக்குலாவி, உண்டு. உடுத்துச் சென்ற தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும் 231.

வர்கள், உங்கள் அண்ணு காலஞ் சென்ற செய்தி தெரின் தும் ஒருவரும் இதுவரை வராமல் இருந்திருக்கிருர்களென்.

முல், அவர்களது அலட்சியத்தையும் நன்றி கெட்ட தன்மை யையும் என்னென்பது! இவர்களும் எனது தாய்விட்

டாரா? அப்பேர்ப்பட்ட கொடும்பாவிகள் விட்டுக்கா

நாங்கள் போவோம்?................ அதற்குமேல் வார்த்தை. யெழவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது.

'உம். இல்ல அண்ணி சிதம்பரநாதனுக்கு நம் புவன வைக் கலியாணஞ் செய்து கொடுக்கவில்லை யென்ற கோபமாயிருக்கலாம். இருந்தாலும் இச்சமயத்தில் அவர் கள் இவ்வாறு அலட்சியமா யிருக்கப்படாதுதான்! என்ன. செய்வது? நமது தற்போதைய நிலமையை யுத்தேசித்து நாம் அதையெல்லாம் மனதில் வைத்துப் பாராட்டாமல். அவர்கள் வீட்டுக்குப் போவதுதான் நலமென்று எனக்குக் தோன்றுகிறது.................... ” என்று மெல்ல இழுத்தவண் ணங் கூறினர். -

இவ்வார்த்தைகள் எரியும் நெருப்பில் செய்விட்டது. போல் என் தாயின் கோபத்தை அதிகப்படுத்தியது. எனக் குத் தெரிந்து என் தாய் எதை முன்னிட்டும் இவ்வளவு தாரங் கோபங்கொண்டதை நான் பார்த்ததில்லை. தம்பி மீண்டும் அந்தப் பேச்சையே பேசுகிருயே! நாங்கள் நடுத் தெருவில் நின்று பட்டினி கிடந்து உயிர்விட்டாலும் விடு வோமே யொழிய, அந்தச் சண்டாளர்கள் வீட்டுக்குச் செல்வோமென்று மாத்திரம் கனவிலும் நினைக்காதே! வேண்டுமானல் நீ கூட எங்களைக் காப்பாற்ற வேண்டாம். எங்களைப்பற்றிய கவலே உனக்கு வேண்டாம். நாங்கள். எப்படியாகிலும் போகிருேம். உனது மனைவி மக்களைப், போய்ப் பார்”.......என்று கர்ஜித்தாள். என் தாய் முகத்தைப் பார்க்க எனக்குச் சகிக்கவில்லை. கோபத்தில் வரம்பு மீறி மிகவுங் கடுமையாகப் பேசி விட்டாள் என்று, நான் அப்போது நினைத்தேன். அவ்வார்த்தைகளின் வேகம் என் மனதில் ஊடுருவிப் பாய்ந்து, சுருக்கென்று தைத்தது. எனவே, நான் என் தாயின் பின்பக்கம் போய், அவள் தோளைப் பற்றிய வண்ணம் சாந்தப்படுத்த முயன்றேன். என் சிற்றப்பா அதற்கு மேல் ஒன்றும் பேசாமல், தலையைக் குனிந்து கொண்டு போய் விட்டார்.

எங்களது பரிதாபகரமான நிலையைக் கண்ட என் தந்தையின் ஆப்த நண்பர்களில் ஒருவரான துவிபாஷி ஜனார்த்தனம் நாயுடுவும், அவரது குடும்பத்தாரும் எங்களைத் தங்கள் ஆதரவில் வந்திருக்குமாறு முதலில் கூறினர். ஆனால், என் தாய் அதற்கு இசையவில்லை. ஆகவே, அவர்கள் திருவல்லிக்கேணியில் காலியாய் இருக்கும் தங்கள் வீடொன்றில் வந்து வசிக்குமாறு மிகவும் வற்புறுத்தி வேண்டிக் கொண்டனர். இவ்வளவு தூரம் அவர்கள் பரிந்து கூப்பிடும் போது, பிடிவாதமாக மறுப்பது நன்றாயிராது என்று உட்கொண்டு, என் தாய் ஒருவாறு இணங்கினாள்.