இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/படித்த மகளின் விபரீதப் போக்கு

ஐந்தாவது அதிகாரம்


படித்த மகளின் விபரீதப் போக்கு

கவே, அவள், என்னைக் குடிசைக்குள் அழைத்துச் சென்ற வண்ணம், “இதெல்லாம் ஒன்றுமில்லை; நாய், பூனை சண்டை போடுவது மாதிரிதான் இக்காட்டு மிருகங்களின் சண்டையும். இவைகளின் சண்டையைப் பார்ப்பதில் எனக்கு மிகவும் பிரியம். இது போன்ற சம்பவம் உமக்குப் புதிதல்லவா! அதனால், உமக்கு மன அதிர்ச்சி யேற்பட்டிருக்கலாம். அதிருக்கட்டும்; இப்போது பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது. நீர் சிறிது கண்ணுறங்கலாமல்லவா!” என்று வினவினாள்.

எனக்குத் திடீரென்று ஏற்பட்ட இக்கலவரம் ஒன்று; எற்கனவே, புவனசுந்தரியின் வரலாற்றில் என் மனம் மிகவும் ஈடுபட்டுவிட்டது மற்ருென்று; இக்காரணங்களால் எனக்குத் தாக்கத்தில் மனஞ் செல்லவில்லை. ஆகவே நான் மெதுவாக, இன்னுங் கொஞ்ச நேரம் பேசிவிட்டு அப் புறம் படுத்துக்கொள்ளலாமே! எனக்கு இப்போது துக் கமே வரவில்லை. உனக்குச் சிரமமாயிருந்தால் வேண்டுமா ஒல்........ ”என்று இழுத்தேன்.

"என்ன எனக்கா சிரமம்?-சிரமம், சோம்பல், ஒய்வு, அளக்கம் என்னுஞ் சுகதுக்கங்களை யெல்லாம் தா எறிந்து வெகு நாளாயின. கண்விழித்து வந்ததாலும், மிருகங்களின் சண்டையைக் கண்ட அச்சத்தாலும் உமக்குக் கஷ்டமா யிருக்கு மென்றெண்ணியே சிறிது ஒய்வெடுத்துக் கொள்ளு தல் நலமென்று சொன்னேனே யன்றி எனக்காக வன்று. நீர் பேசலாமென்று சொல்வதனுல் நான் என் வரலாற்றை மேலுங் தொடர்ந்து கூற முற்படுகிறேன். எங்கு நிறுத்தி னேன்?-ஆமாம்............கலாசாலை வாழ்க்கை ஆரம்பத்தில் எனக்கு மிகவும் குதூகலத்தைத் தந்தது. எனக்கு சுதந்த உல கில் உலவுவது போன்ற உணர்ச்சியே கலாசாலை வாழ்க்கை வில் ஏற்பட்டது. மற்றப் பெண்களும், பெரும்பாலார் என்னை விடச் சுயேச்சையுலகில் உலவும் சுந்தரிகள் எனவே தன் ఊడిr கினைத்துக்கொண்டு கிரிந்துவந்தனர். ஆனல் இக்கலா சாலை வாழ்க்கைதான் எனது பிற்காலச் சீர்கேட்டிற்கு முக்கிய காரண்மாயிருந்தது என்ருல் மிகைப்படுத்திக் கூறுவதாகாது. மாணவிகளில் பலர் தங்கள் இயற்கை சுபாவத்தைவிட்டு எவ்வாறு விபரீத உணர்ச்சியையும் செயலையும் மேற்கொள்ளுகிருர்கள் என்பதற்கு ஒரு சிறு

உதார்ணங் கூறுவேன். - -

ஒருநாள் கலாசாலை முடிந்ததும் வழக்கம்போல் பங் o மெரீன கடற்கரைக்கு நானும், மற்றும் ளிரும் சேர்ந்து சென்ருேம். மாலேக் காலங் படித்த மகளின் விபரீதப் போக்கு 79

களில் மகிழ்ச்சியாகக் காலத்தைக் கழிக்கு மிடங்களுள் கடற்கரை யொன்றல்லவா! நாங்கள் இளம் பருவத்திற் கேற்ற குறும்புப் பேச்சுகளை ஒருவரோடொருவர் பேசிக் கொண்டும், கல கல வெனச் சிரித்துக்கொண்டும், கெக்கலி கொட்டிக்கொண்டும் போய் மணலில் வட்டமாக உட்கார்க் தோம். பிளாட்பாரத்தின் வழியாக வரும்போதே எங்களே விடப் புருடர் பலர் பின் தொடர்ந்து வந்தனர். நாங்கள் மணலில் உட்கார்ந்ததும், அவர்களில் சிலர் எதிரே அமர்ந்து எங்களைப் பார்த்து விஷமமாகச் சைகை செய்தும், குறும் புத்தனமாகப் பேசிப் பகடியடித்துக் கொண்டுமிருந்தனர். மற்றுஞ் சில வாலிபர்கள் ஆங்காங்கே கின்று எங்கள் ஒவ் வொருவரையும் உற்று நோக்கித் தங்கள் கண்களாகிய அம்புகளைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். வேறு சிலர் எங் களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

இங்கனம் தங்களைப் பார்த்து செல்வச் சீமான்களும் மற்றும் வாலிபர்களும் மயங்கித் தேனில் ஈக்கள் மொய்த் துக்கொள்வது போல் சூழ்ந்துகொண்டிருப்பதைக் கண்ட எங்களில் சில பெண்களுக்குப் பெருமித உணர்ச்சியும்:

அகம்பாவ வார்த்தைகளும் ஏற்படலாயின.

“What fools they are! Why they follow us? I think they are all semi-cracks” (“arsšr6or apl', r6ir&sir gair கள்? நம்மையேன் இவர்கள் பின்தொடர்ந்து வருகிருர் கள்? இவர்கள் பிச்சுக்குட்டிகளா யிருக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன்') என்று மிஸ் மார்கரெட் என்னும் ஆங்கிலோ இந்தியப் பெண் எங்களை வட்டமிடும் வாலிபர் களைச் சுட்டிக்காட்டிக் கூறி நகைத்தாள். - §

- ஸ்வர்ண குமாரி என்னும் மலேயாளப் பெண்-துரl லெமி கிராக் காவது களிமண்ளுவது அதெல்லாம் ஒன்று

80 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மில்லை. நம்மில் எந்தக் குட்டியாவது அவர்க்ள் ஹாட்டு பூட்டைக் கண்டு மயங்கி வலையில் சிக்கமாட்டார்களா? என்று கருதியே வாயைப் பிளந்துகொண்டு பார்த்து வரு கிருர்கள்:

இக்காளியஸ் ராஜம்மாள்.-ஐயோ பாவம்' காமா அவர்கள் விரிக்கும் வலையில் சிக்குவது? அவ்வாடவர்களல் லவோ நம்வலையில் வந்து விழவேண்டும். -

மிருநாளினி.-சே' என்னடி என்னமோ fool மாதிரி உளறி வழிகிருய் அந்த brute களைப் பார்த்து நாம் தான் என் love பண்ணனும்? நம் beautyயைக் கண்டு அந்த devils Arsèr grait follow Goulu goth. Afts dirty businessGau prib think Leirgwarśgal_rg. Selfish goose Gerrar eis ஆண்கள் வாடையே நம் side விசக்கூடாது.

பாகீரதி (நகைத்துக்கொண்டே):-அதென்னடி நளினி உனக்கு அந்த ஆடவர்கள்மீது அவ்வளவு கோபம்! நீ இவ் வளவு தூரம் வெறுப்புக்கொள்ளும்படி அவர்கள் என்ன செய்து விட்டார்கள்? ஒருவேளை நீ வைத்த குறியிலிருந்து எவ்வாலிபனுயினும் தப்பித்துக்கொண்டு உன்னை ஏமாற்றிச் சென்றுவிட்டான? என்ன! . . ." .

ஸ்வர்ணகுமாரி.-சில் நாட்களுக்கு முன்வரை தேவ சுந்தரத்தோடு திரிந்தலைந்துகொண்டிருந்ததை மிருநாளினி இதற்குள் மறந்துவிட்டாள் போலும்!

தேவகி:-அது கிடக்கட்டும். மிருநாளினி கூறுவதை ஒருவிதத்தில் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆ- காற்று பட்டாலே நாம் அநியாயமாகக் கெட்டு விடு ம், அவர்கள் சகவாசத்தால் காம் எவ்வளவு துன்பங் ஆளர்கிருேம் தெரியுமா? அவர்கள் முதலில் காட்

o: பிலும் பேசும் ஆசை வார்த்தையிலும் எளிதில் படித்த மகளின் விபரீதப் போக்கு 81.

மயங்கிப் போய்விடுவது பெண்களாகிய நமக்கு இயற்கை யாக இருக்கிறது. ஆடவர்கள் தங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள முயலும்போது நம்மைக் கண்ணே! பெண்ணே மணியே! என்றெல்லாம் கெஞ்சிக் கொஞ்சிக் கூத்தாடுகிருர்கள். அதற்கப்புறம் நாயே! பேயே! வேசையே! என்று வாயில் வந்தவாறு வைது கேவலமாக நடத்துகிருள்கள். இது அவர்களிடஞ் சகஜமாய்க் காணப் படுகிறது. அவர்கள் நம்மினத்தை சேர்ந்த பெண்களைப் படுத்துங் கொடுமை சொல்லுந் தரத்ததன்று.

இக்நாஸியஸ் ராஜம்மாள்:-அதுமட்டுமா! அவ்வாட வர்கள் நம்மினத்தவராகிய பெண்களைத் தங்களுக்கு அடி மைகளென்றன்ருே நினைத்து அடக்கி யாளுகிருர்கள்?

- நல்லமுத்து:-அதுவாயினும் ஒருவாறு பொறுக்கக்

கூடியதாயிருக்கிறது. இக்கொடிய ஆடவர் சேர்க்கையால் நம் மகளிர் வயிற்றில் மூட்டையன்ருே கட்டிக்கொள்ளு. கிருர்கள்? (ஒரே சிரிப்பு) அம்மம்மா ஒரு நாளா ஒரு மாதமாl இரண்டு மாதமா! பத்து மாதங்கள்வரையல்லவோ அப்பளுவைத் தாங்கித் தொலைக்கவேண்டியிருக்கிறது. இப் பிள்ளைப்பேற்றைவிட கஷ்டமான காரியம் வேருென்று இருக்க முடியாது என்றே துணிந்து சொல்வேன். இவ். வொரு காரணத்தைக்கொண்டே ஆடவர் கூட்டுறவை நாம் அறவே யொழிக்க வேண்டுமென்பது புலப்படுகிற தல்லவா! w

- இந்திராணி-மீசைமுளைத்த இவ்வாடவர்களை விரும்பி விவாகத்தால் ஒன்று படாதிருந்தால் நாம் எப்போதும் பூவோடும் மஞ்சளோடும் சர்வாலங்கார பூவிதைகளாப் வாழ்நாள் முழுதும் இருந்து இன்பமாய்ச் சுயேச்சை' யாகக் காலங் கழிக்கலாம். 82 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

சுலோச:ை-ஆமாம், ஆமாம், உண்மை. ஒருவனேக் காதலித்துக் கலியாணம் பண்ணிக்கொண்டதும், நம் சுயேச் சையே போய்விடுகிறது. கணவன் இறந்தால் மனைவி தாலி யறுத்துவிட்டு மூலையில் போய்த்தான் முடங்கிக்கொள்ள வேண்டும். நல்லாடை யுடுத்தவும், திலகமிட்டுக் கொள்ள வும் கூட அப்புறம் பெண்களுக்கு உரிமை கிடையாது. ஆ! இதையெல்லாம் நினைக்கும்போது அந்தப் பாழும் ஆடவர் களையே ஏறெடுத்தும் பார்க்கக்கூடாது என்றுதான் தோன்றுகிறது. -

மிஸ். மார்கரெட்-ஆண்மை ஒழிக’ ஆடவர் கூட் டம் பூண்டோடு அழிக!” என்று ஆங்கிலத்தில் கத்தினுள்.

ஸ்வர்ணகுமாரி:-ஆமாம். ஆடவர் கூட்டம் அறவே ஒழிந்துவிட்டால் நம் பெண்ணுலகமும் அழிந்து ஒழிந்து தானே போகும்? நம் பெண்கள் வளர்ச்சிக்கு அவர்கள் தானே காரணம்? -

பக்மாஸ்னி:-நம்மவர் காதலைப் பூர்த்தி செய்வதற் காக வாயினும், ஆடவர்கள் உதவி நமக்கு வேண்டியதாகத் தானே இருக்கிறது.

மிருநாளினி:- காத லுணர்ச்சியைத் தணிப்பதற்கு இவ்வாடவர்கள் உதவியைத்தான நாடவேண்டும்? வேறு. மிஸ். மார்கரெட்: — நம் சிநேகிதைகள் முதலியோரிடமும் இக்கொள்கையைப் பரவச் செய்யவேண்டும்.


ஸ்வர்ணகுமாரி: -அடி! அடி! இதோ பாருங்களடி! உங்கள் பேச்சை நிறுத்தங்களடி! நீங்கள் இவ்வளவு தூரம் தீவிரமாகப் பேசி ஆண்கள் உலகத்தையே எரித்துச் சாம்பலாக்கிவிடத் தீர்மானித்ததும், அதோ இருக்கும் அப்பயல்கள் உங்கள் பாதங்களின் அடியில் விழுந்து கெஞ்சப் போவதாகத் தெரியவில்லையே! உங்களை யெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு அவர்கள் அத்தனைபேரும், பாவம் தெய்வமே யென்று பேசாமலிருக்கும் புவனாவையன்றோ கண் கொட்டாது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? இதைக் கண்டு உங்களுக்குச் சிறிதும் வெட்க மில்லையா?

84 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பத்மாஸ்னி-புவனவின் அதிர்ஷ்டம் யாருக்கு வரும்: எங்கு போனலும் நமக்கெல்லர்ம் அவள்தான் ராணியாக விளங்குகிருள். அவளால்தான் நமக்குக் கெளரவங் கிடைக் கிறது. -

இராஜாம்பாள்:-புவன ராஜ குடும்பத்தில் பிறக்க வேண்டியவள்.

பத்மாலனி:-இப்போதுதான் என்ன? எவனேனும் அரசகுமாரன் இவளைத் தேடிக் கலியாணஞ் செய்துகொள் கிருன். இவள் ராணியாகப் போய்விட்டால் நம்மையெல் லாம் ஏறிட்டுக்கூடப் பார்க்கமாட்டாள்.

ஸ்வர்ண குமாரி:-அதெல்லாம் இருக்கட்டுமடி, நிரம் இவ்வளவு பேரிருக்க நம்மையெல்லாம் விட்டு புவணுவைக் தங்கள் கருத்துக்கிசைந்த காதலியாகத் தேர்ந்தெடுத்தார் களே! அவ்வாலிபர்களின் நுண்ணறிவை என்னென்பது!

சுலோசனு:--இதிலென்ன ஆச்சரியம்! தேனுள்ள இடத்தில் வண்டுகள் பறந்துவந்து மொப்ப்பது இயற்கை தானே! -

எனது தோழிகளது பேச்சு, முடிவில் என் பக்கத்தில் திரும்பிப் பலமடைந்து, வருவதைக் கண்டு என்னுல் சகிக்க முடியவில்லை. எனவே நான் சிறிது பிணக்கத்தோடு, சt தான் போங்களடி உங்களுக்கு வேலே இல்லை; என்னப் புரளி பண்ண ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் குறும்பு எப்போதும் போவதே இல்லை-நான் போகிேறன்” என்று கூறிக்கொண்டே எழுந்து வேகமாகப் பிளாட்பாரத்தை கேரிக்கி நடந்தேன். இதற்குள் பொழுது சாய்ந்துவிட்ட கால், ன் தோழிகளும் என்னைத் தொடர்ந்து வந்து விட் மார்கள். ஆனல் எனக்கு அச்சமயம் என் தோழிகளின் சம்பாஷணைகளை அர்த்தஞ் செய்துகொள்ள முடியவில்லை. இப்போது அதை நன்முக உணர்கிறேன். இச்சம்பாஷணை யைக் கேட்டதிலிருந்து தோழரே! நீங்களும் மாணவிகளின் விபரீத மனப்போக்கை நன்முக அறிந்து கொண்டிருப்பீர்க ளென்று நம்புகிறேன். இவ்விபரீத மனப்போக்கை ஒட் டியே இம்மகளிரது செயல்களும் வெகு விபரீதமாகக் காணப்பட்டது. மற்ற மாணவிகளைவிடக் கலாசாலை ஹாஸ் டல்களிலேயே தங்கி வாசிக்கும் பெண்களிடம் நவநாகரிகப் போக்கின் பயனுகவோ, சகவாச தோஷத்தாலோ விபரித உணர்ச்சியும், செயல்களும் சகஜமாக இருந்தன. ஆடவர். சேர்க்கையை அருவருக்கும் இவ் அல்விராணிகள் எத்தனை விதமான இயற்கைக்கு மாருண தீய செயல்களே மேற். கொண்டிருந்தவர்கள் தெரியுமா! சில சமயங்களில் தற்செய லாக நான் சில மகளிர் இப்பொருந்தாச் செயல்களில் ஈடு பட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. அவ்வாபாசக் காட்சி களைக் கண்டு என் கண்கள் கூசியதைக் காட்டிலும், மனம் அதிகமாகக் கூசியது. அப்பா எவ்வளவு அருவருப்பான காரியம் அதை என்னென்று விவரிப்பது; அவற்றை நினைத் தாலே உள்ளம் கடுங்குகிறது. இயற்கைக்கு மாருன இக் - கெட்ட பழக்கம் படித்த பெண்களிடையே பரவி வரு மானுல் வெகு விரைவில் ஜனசமூகம் பெரிதும் பாதகமடை யும் என்பது திண்ணம். பின்னே என்னைப் பெரிய படு குழியில் தள்ளுவதற்காக வேண்டியே போலும்! இறை வன் என்னே இளமையில் இவ்விதக் கெட்ட பழக்கங்களி லெல்லாம் ஈடு படுத்தவில்லை என்று கினைக்கிறேன். இயற்கை நெறியில் ஏறுமாருகப்போய்க் கெட்டலேய வைத்தாலும், செயற்கைச் சேற்றில் வீழ்த்தாததற்காக அவ்வாண்டவனுக் குத் துதி கூறுகிறேன்.