இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்/மஹிளாதேவி கலாசாலை மர்மம்

எட்டாவது அதிகாரம்


மஹிளாதேவி கலாசாலை மர்மம்

ஸ்ரீமதி மஹிளாதேவி நல்ல அழகும், கம்பீர தோற்றமும் வாய்ந்தவராயிருந்தார். அவருக்குச் சுமார் 30-வயதிருக்கும். நவநாகரிகத்துக்கும், ஆடம்பரத்துக்கும் அவர் இருப்பிடமாக விளங்கினார் என்று ஒரு வார்த்தையில் கூறி விட்டால், அதிகமாக வருணிக்க வேண்டிய அவசியமிருக்காது என்று கருதுகிறேன். அவர் என் தந்தையோடும், ஆலால சுந்தர முதலியாரோடும் உரையாடும்போது சிறிது 122 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அமர்த்தலாகவே பேசினர். அதற்கேற்பவே முதலியாரும் உரையாடி அவர் நிபந்தனைகளைச் சிறிது விட்டுக்கொடுக்கும். படிச் செய்துவிட்டார். பரீகூைடிக்கு ஆஜராகும் வரை நான் எடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களை (Subjects)ப் போதிப்பதற்கு 300-ரூபாய் கொடுப்பதாக என் தந்தை இசைந்தார். அத்தொகையை முன் கூட்டியே கட்டிவிட

வேண்டுமென்று பிரின்ஸிபால் குறிப்பிட்டார். அவ்வாறே. ஒப்புக்கொள்ளப்பட்டது. மஹிளாதேவியின் வசீகர வதன

மும், வாக்கு வன்மையும் என்ன மிகவுங் கவர்ந்தமையால் அப் பெண்மணி தலைமையில் படிப்பதைக் குறித்து நான்

பெரிதும் பெருமையுற்றேன்.

சர்க்கார் அங்கீகாரம் பெற்ற கலாசாலைகள் நடப்பது போலவே, மஹிளாதேவி டியூடோரியல் கலாசாலேயும் கடைபெற்றது. எஸ். எஸ். எல். ஸி. முதல் எம். ஏ. வரை வகுப்புகள் இருந்தன. நான்கு இந்துப் பெண்மணிகளும், ஒரு ஆங்கிலோ இந்திய மாதும், இரு கிறிஸ்தவ மங்கை மாரும் ஆசிரியைகளாக இருந்தனர். எல்லா வகுப்புக்களுக் குஞ் சேர்ந்து சுமார் 60 மகளிர் மாணவிகளாகச் சேர்க் திருந்தனர்.

கலாசாலை ஆரம்பித்து ஒரு வாரமாயிற்று. நான் தினங் -- தோறும் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தேன். இதற். இடையே ராஜதானி கலாசாலையில் என்ைேடு வாசித்த கண் பர்கள் சிலர்-குறிப்பாக நீரஞ்சனி, தாமோகான் ஆகி யோர் நேரே வந்து, நான் திடீரென்று அக் கலாசாலையை விட்டுகின்று அவர்களைப் பிரிந்ததற்காக வருத்தங் தெரிவித் துச் சென்றனர். அவர்கள் தங்கள் சிநேகத்தை மறந்து விடக் கூடாதென்றுங் கேட்டுக்கொண்டனர். இவ்விடத்தி லும் சில பெண்கள் எனக்குச் சிநேகமாயினர். இவர்களில் மஹிளாதேவி கலாசாலை மர்மம் 128

பெரும்பாலோர் கலாசாலைகளில் படித்துப் பரீக்ைஷயில் தேர்ச்சிபெறத் தவறியவ்ர்களாகவே இருந்தனர். அன்னர் மீண்டும் கலாசாலைகளில் சேர்ந்து பனங்கட்டிப் படிக்க முடியாமையால் இதில் சேர்ந்ததாகத் தெரிந்தது. அது கிடக்க.

ஒரு நாள் எங்கள் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அச்சமயத்தில் பிரின்ஸ்பால் மஹிளாதேவியே எங்களுக்குப் பாடத்தைப் போதித்துக் கொண்டிருந்தார். அவரது போதிப்பு முறை எனக்கு மாத்திரமல்ல, பொதுவாக எல்லா மாணவிகளுக்குமே நன்முகப் பிடித்திருந்தமையால், அவர் பாட விஷயத்தை எடுத்து விவரிப்பதைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தோம். இக் கியிைல் திடீரென்று டக் டக் என்று பூட்ஸ் சப்தம் கேட்கவே, யாவரும் எககாலத் தில் திரும்பிப் பார்த்தோம். எங்கள் வகுப்பு அறையின் வாயிலண்டை, ஐரோப்பியரைப்போல் காணப்பட்ட ஒரு கனவானும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் இரு கான்ஸ் டேபிள்களும் தோன்றினர். இன்ஸ்பெக்டர் முன்னே வர அக்கனவான் கான்ஸ்டேபிள்கள் காவலோடு நட க்து வந்து கொண்டிருந்தார். பிரின்ஸிபால் இக்காட்சியைக் கண்ட தும் வாய்விட்டு அலறி மூர்ச்சையாகி விழுந்தார். மான, ளாகிய நாங்கள் ஒன்றுக் தோன்றத் திகைத்து கின்ருேம்.

இன்ஸ்பெக்டர் முதலியவர்களுங் கூட சில விநாடிகள் அசைவற்று துரத்திலேயே கின்றுவிட்டனர். ஆகுல், மேம் குறித்த கனவான் முகத்தில்மட்டும் எவ்வித சலனமும் காணப்படவில்லை. இதற்குள் எனக்குப் பக்கத்தில் உட் கார்ந்திருந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணும். மீளும்பாள். என்ற மங்கையும் ஒடிச்சென்று பிரின்ஸிபால் மஹிவா கேவி யைத் அாக்கி, நாற்காலியில் உட்காாவைத்தன்ர். இகம்  மற்றொரு பெண் அவர் முகத்தில் நீரைத் தெளிவித்தாள். வேறொருத்தி தன் சேலையின் முந்தானையால் விசிறிக் காற்றை யுண்டாக்கினாள்.

இவ்வாறு மாணவிகளாகிய நாங்கள் அனைவருமே எங்களுக்குத் தோன்றிய வண்ணமெல்லாம் சைத்தியோப சாரங்களைச் செய்யவும், மஹிளாதேவி சிறிது நேரத்திற்கெல்லாம் மூர்ச்சை தெளிந்து கண்ணைணே விழித்துப்பார்த்தார். நாங்கள் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், என்ன


நினைத்தாரோ தெரியவில்லை. எங்களைப் பார்க்க வெட்கமுறுபவர்போல மீண்டும் கண்களை மூடிக்கொண்டார்.

இதனிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டேபிள்களை அக்கனவான் அண்டையிலேயே நிறுத்திவைத்து விட்டு, தாம் மட்டும் எங்களை நோக்கி வந்தார். எனவே, மாணவிகளாகிய நாங்கள் பிரின்ஸிபாலுக்குப் பின்னாகப் போய் ஒதுங்கி நின்றோம். பிரின்ஸிபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் தம்மிடமே வருகிறார் என்று குறிப்பாக அறிந்து கண்களைத் திறந்துகொண்டு எழுந்து நின்றார்.

126 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

மேஜையருகே வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரின்வி பால் மஹிளா தேவியைப் பார்த்து, அம்மா! தாங்களும் தங்கள் கணவருஞ் சேர்ந்து, பொதுமக்கள் பொருளைக் கொள்ளையடிக்கும் உத்தேசத்தோடு, தற்காலிகமாக இக் கலாசாலையை ஏற்படுத்திப் படித்த பெண்களையும், சர்க்கா ரையும் ஏமாற்றி வருவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக் கிறீர்கள். ஆதலால், நமது மேன்மைதங்கிய அரசர் பெரு மான் கட்டளைப்படி தங்களைக் கைது செய்கிறேன்” என்று அதிகாரத் தோரணையில் கூறி, வாரண்டை நீட்டினர். இதைக் கேட்டதும், முன்னேயிலும் மஹிளா தேவியின் முகம் சவம் போல் வெளுத்தது. நடுக்கத்தோடு வாரண்டை கையில் வாங்கினர். அதைப் பிரித்துப் பார்க்கையில் கண்களில் நீர் கிறைந்து வழிய ஆரம்பித்தது. அவரால் அவ்வாாண்டில் உள்ள விஷயங்கள் முழுவதையும் படிக்க முடியவில்லை. அவர் தேகம் கிக்கொள்ளாது தள்ளாடியது. அடிக்க்டி ம்ேஜையைப் பற்றுக் கோடாகப் பற்றிகின்ருர். பின்னர், அவ்வம்மையார் சிறிது துரத்தில். கின்றிருக்கும் அவரது கணவரை மருட்சியோடு நோக்கினர். உடனே, அக்கன வான் ---. ------ - - ர்த்து கண்ணேச் சிமிட்டித் தலையை 8 ; : , , ணமே, மஹிளாதேவி தமக்குள் ஏதோ த்துக்கு வந்தவர்போல், கண்களைத் துடைத்துக் டு, ஆடைகளைச் சீர்திருத்திக்ெ -

காண்டார். பிற்கு,

போகலாமல் டையென்ன!” முகத்தில் பரி

பின் மஹிளாதேவி கலாசாலை மர்மம் 127

இன்ஸ்பெக்டர் அவ்விருவரையும் ஏறி யமரும்படிச் செய்து தாமும் முன் பக்கத்தில் உட்கார்ந்தார். - போலீஸார் வந்தவுடனேயே பயந்துபோன நாங்கள், எங்கள் பிரின்ஸிபால் மோசடிக் குற்றத்திற்காக வாரண்டு பிறப்பிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார் என்று அறிந்த தும் ஒன்றுங் தோன்ருது திகைத்துப் போனுேம். எங்களுக் குக் கைகால்கூட ஒடவில்லை. மஹிளா தேவியைப் பொலி ஸார் கைது செய்ய வந்திருக்கும் விஷயம் மற்ற வகுப்புக ளில் உள்ளவர்களுக்கும் தெரிந்துவிடவே, ஆசிரியைகளும், மாணவிகளுமாக அனைவரும் எங்கள் வகுப்பு அறையில் வந்து கூடிவிட்டார்கள். மஹிளாதேவி போலிஸாரோடு போகையில் யாரிடமும் ஒரு வார்த்தைகூடக் கூருது சென் றது அவர்களுக்குக்கூட ஆச்சரியமாய் இருந்தது. மோட் டார் புறப்படும் சமயத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோட்டார் பக்கத்தில் கின்றிருந்த ஹெட் கான்ஸ்டேபிளைக் கூப்பிட்டு இரகசியமாக எதோ சொல்லவே, அவர் மற் ருெரு கான்ஸ்டேபிளோடு வெளி வாயிலில் நாங்கள் கும்ப, லாக நின்றிருந்த இடத்துக்கு வந்து, 'அம்மா! நீங்களெல் லாம் அவரவர் இருப்பிடத்துக்குப் போகலாம். வழக்கு விசாரணைக்கு வரும்போது, உங்களில் குறிப்பிட்ட சிலருக் குச் சம்மன் வரும். அச்சமயம், நீங்கள் வந்து உங்களுக் குத் தெரிந்தவைகளைச் சாட்சி சொல்லவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஐயா உங்களுக்குத் தெரிவிக்கச்சொன்னர். இக் கட்டிடம் சீலி டப்பட்டு எங்கள் கண்காணிப்பில் இருக்கப் போகிற தாகையால் நீங்கள் போய்வாருங்கள்” என்று பணிவாகக் கூறினன். எனவே நாங்கள் இச்சம்ப வத்தைப் பற்றிப் பலவிதமாக ஒருவருக்கொருவர். பேசிக் கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தோம். ... ." 128 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

“புவன புவனll என்ன சமாச்சாரம்? உங்கள் டியூ டோரியல் காலேஜைப் பற்றிப் பத்திரிகையில் எதோ போட் டிருக்கிறதே! உங்கள் பிரின்ஸிபால் கைது செய்யப்பட்டு விட்டாராமே! உண்மையென்ன?’ என்று பதைபதைப், போடு கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் என் தக்கை. அவர் அப்போதுதான் கம்பெனியிலிருந்து வந்து கொண்டிருந்தார். ஆதலால் இதுவரை அவரிடம் கலாசாலேவில் நடந்த விஷயத்தைத் தெரிவிக்கச் சந்தர்ப்பமே வாய்க்க வில்லை. விஷயம் புரியாது ஏதோ களேபரம் ஏற்பட்டுவிட்ட தென்று பிரமாதமாக எண்ணி மனக்கவலே யடையப்போகி: முர் என்ற கருத்தினுல், என் தாயிடமும் இவ்விஷயத்தைக் கூறவில்லே. எதிர்பராாதவாறு ஏற்பட்ட இச்சம்பவத்தால் என் மனம் பெரிதுங் குழப்பமடைந்திருந்தது. ஆகவே நான் சாயங்காலம் என் தோழிகள் சிலரோடு கடற்கரைக்குப். பொழுது போக்கப் போய்விட்டு, என் தந்தை வருவித்ர் குச் சில விநாடிகளுக்கு முன்தான் திரும்பி வந்தேன் என' லும், அத் திகில் இன்னுந் திராமையால். மாளிகையின் உள். ளுக்கும் வெளிக்குமாக உலாவிக்கொண்டிருந்தேன். திடீ ரென்று என் தந்தையின் குரல் கேட்கவே திரும்பிப்பார்த்து - *அப்பா வந்து விட்டீர்களா! எங்களுக்குக்கூட ஒன்றுக் தெரியாதப்பா? திடீரென்று காலையில் போலீஸார் வந்தனர்; பிளின்லிபர்ல் மஹிளா தேவியை எதோ மோசடிக் குற்றம் என்று சொல்லிக் கைது செய்துகொண்டு போனர்கள். காலேஜ் கட்டிடங்கூட இல் வைக்கப்பட்டிருக்கிறது....... ஆமாம். பத்திரிகையில் என்ன போட்டிருக்கிறதப்ப்ர்: காண்பியுங்கள்; பார்க்கலாம்" என்று சொல்லி அவர் கையில் வைத்திருந்த பத்திரிகையைத் துடி தடிப்போடு வாங்கினேன். பிரிக்கப் பார்த்தேன். ஓரிடத்தில் பெரிய மஹிளாதேவி கலாசாலே மர்மம் 129,

கொட்டை எழுத்துக்களால் இச் செய்தி பின்வருமாறு: வெளியிடப்பட்டிருந்தது.

'காலேஜ் பிரின்ஸிபால் மோசடி

புருஷனும் மனைவியும் கைதியாயினர்

கலாசாலைக் கட்டிடம் சீல் வைக்கப்பட்டது (நமது கிருபர்)

செப். 18வ. 'இன்று காலே குற்ற இலாகா போலிஸார் இந்நகரில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த மஹிளாதேவி டியூடோ ரியல் காலேஜ்' பிரின்ஸிபால் மஹிளாேதவியையும், அவரது - கணவனென்று கூறப்பட்ட மனிதரையும், மோசடிக் குற். றத்துக்காக கைது செய்தனர். அதோடு கலாசாலைக் கட் டிடமுஞ் சில் வைக்கப்பட்டுப் போலீஸார் மேற் பார்வை

யில் இருந்து வருகிறது. -

- இச்சம்பவத்தைப்பற்றிக் தீவிரமாக விசாரணை செய் ததில், இவ்விருவரும் கைது செய்யப்படுவதற்குக் காரண மாயிருந்தது, மஹிளாதேவி பர்மாவிலுள்ள தன் தாய்க்கு எழுதிய கடிதமே யென்றும், அக்கடிதம் தபால் இலாகா அதிகாரிகளால் சந்தேகங் காரணமாகப் பிரித்துப் பார்க்கப் பட்டதென்றும், அதிலுள்ள விஷயம் விபரீதமா யிருந்த தால், இது போலீஸ் கமிஷனர் பார்வைக்கு அனுப்பப் பட்டதென்றும், அவர்கள் அதைப் பரிசீலனை செய்து உடனே, நட்வடிக்கை யெடுத்துக்கொண்டு, இவ்விருவரை யும் கைதுசெய்திருக்கிருர்களென்றும் தெரிகிறது. அக்கடி 130 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

தத்திலுள்ள விஷயம் மிக அந்தரங்கமாக வைக்கப்பட்டி ருக்கிறது. அவர்கள் கூடிய சீக்கிரம் மாஜிஸ்டிரேட் முன் விசாரணைக்குக் கொண்டுவரப்படுவார்கள்.

இதைப் படித்ததும் என் மனம் பலவிதமாக வெல் லாம் எண்ணியது. இது சம்பந்தமாக, யானும் என் தக் தையும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கடைசி யாக என் தந்தை ஆயாசத்தோடு, புவன மஹிளா தேவி யிடம் முன்பணமாகக் கட்டிய 300 ரூபா தொலைந்தமாதிரி தான். இனி அதைப்பற்றி எண்ணுவதில் பயனில்லை. பழையபடி நீ ராஜதானி கலாசாலைக்கே போய்வா. திடீ ரென்று சொல்லாது இரண்டு வாரத்துக்கு மேலாக கின்று விட்டதைப்பற்றிக் கலாசாலே அதிகாரிகள் தகராறு செய் யக்கூடும். அதற்கு நான் தகுந்த சமாதானஞ் சொல்லிச் சரிப்படுத்திவிடுகிறேன். என்ன சொல்லுகிருய் அம்மா!” என்று கேட்டார்.

"அப்படியே போகிறேன் அப்பா' எனக் கூறினேன். அதற்கப்புறம் நான் முன்போலவே தினந்தோறும் ராஜ கானி கலாசாலைக்குச் சென்று படித்து வந்தேன். நான் மறுபடியும் சேர்ந்து படிக்கத்தொடங்கியது, பிரிந்துபோன "வித்து வருத்தக் தெரிவித்த என் நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையுங் குதூகலத்தையுங் கொடுத்தது. ஆனல் புரொபஸர் சம்பத் மட்டும் என் முகத்தில் விழிக்கத் துணி 4ாது, என்னத் துரத்தில் பார்க்கும்போதே ஒளிந்து தலை

மறைந்து வந்தார்.

மஹிளா தேவியின் தொடர்பு எனக்கு ஏற்பட்டு ஒரு சில காட்களே யாயினும் அவளை எளிதில் மறக்க முடிய வில்லை. என் கண்ணெதிரே போலீஸார் அவள்மீது மோச மஹிளாதேவி கலாசாலை மர்மம் 131.

டிச் குற்றஞ் சாட்டிக் கைது செய்துகொண்டு போனலும், என் மனம் அவளைக் குற்றவாளியென்று கருதவும் இடம் கொடுக்கவில்லை. அவளுக்கும், அவளது கணவனுக்கும் யாராயினும் விரோதிகள் இருந்து, சதி செய்து அவர்கள் மீது மோசடிக் குற்றத்தை யேற்படுத்தி யிருக்கக்கூடும் என்று என் பேதை மனம் எண்ணியது; நம்பியது. ஆகவே அவர்கள் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கின் முடிவை யறிய, ஒவ்வொருநாளும் தவருது பத்திரிகையில் அவ்வழக் கின் விசாரணையைப் படித்து வந்தேன். விசாரணையின் போது பல உண்மைகள் வெளியாயின. எதிரிகளாகிய இவ் விருவர் செய்த சதிக்கு உதவியாக இருந்ததற்காக பர்மாவி லிருந்து மூன்று பேரும், வங்காளி மகளிர் நான்கு பேரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இவ்வழக்கில் சர்க் கார் தரப்பில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் என் தந்தை யும் ஒருவராவர். முடிவில் சிப் பிரஸிடென்ஸி மாஜிஸ்திரேட் பொருள் சம்பாதிக்கும் கோக்கத்தோடு, சென்னை சர்க்கா ரையும், பொது மக்களேயும் எககாலத்தில் ஏமாற்றி, படிக்க பெண்கள் வாயிலாகப் பொருளேக் கொள்ளை படித்ததாகக் குற்றஞ்சாட்டி முதல் எதிரியாகிய விமலேந்த போஸுக்கு 10 வருஷமும், மஹிளாதேவிக்கு 6-வருடமும், மற்ற எதிரி களில் ஆடவர்களுக்கு நான்கு வருடமும், பெண்களுக்கு இரண்டு வருடமும், கடுங்காவல் தண்டனை விதித்தார். அத் தீர்ப்புச் சரியானதல்லவென்று கூறி எதிரிகள் மேல் கோர்ட் டுக்கு அப்பீல் செய்துகொண்டனர். அங்கும் கீழ்க் கோர்ட்டுக் தீர்ப்பே நீதிபதிகளால் ஊர்ஜிதப் படுத்தப்பட் டது. எனவே, விமலேந்த போஸும் மஹிளா தேவியும் எவ் வளவோ சாமர்த்தியமாக தாங்கள் குற்றவாளிகளல்ல வென்று சாதிக்க முயன்றும் ஒன்றும் முடியாது கடைசி யாகக் காராக்கிருகம் புகுந்தனர். 132 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

இவ்வழக்கில் வெளியான விமலேந்த போஸ், மஹிள தேவி ஆகியவர்களின் திருவிளையாடல்களை என்னென்பது: இப்போது கினைத்தாலும் ஆச்சரியமாகவும், அற்புத மாக வுமே இருக்கிறது. அவர்கள் வரலாற்றை ஒரு பெரிய கதை, யாகக்கூட எழுதலாம். இருந்தாலும் உமக்குச் சுருக்கிக் கூறுகிறேன். மஹிளாதேவி பர்மாவில் வியாபார நிமித்த மாகக் குடியேறிய வங்காளிக்கும், பர்மியப் பெண்ணுக்கும் பிறந்தவள். ஆகவே அவள் பேரழகியா யிருப்பதில் வியப் பொன்று மில்லை. அவள் நன்கு வளர்ந்து படித்து வருகை. யில், வங்காளவாசியான விமலேந்த போஸ் பர்மா போய்ச் சேர்ந்தான். இவர்களிருவரும் எப்படியோ சந்தித்து ஒரு வரை யொருவர் காதலித்தனர். இதற்கு முன் மஹிளா தேவியோடு பழகிக் காதலித்திருந்த சில பர்மிய வாலிபர் களும் மற்றுஞ் சில வாலிபர்களும் விமலேந்த பேர்ஸுடன் சண்டைக்கு வந்து அவன் உயிருக்கு உலே வைக்க முயன்ற னர். எனவே, இவ்விருவரும் ஒருவருக்குக் தெரியாமல் பர் மாவை விட்டு இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்டனர். விம லேந்த போஸ். பி. ஏ. பால் செய்திருந்தான். அத்துடன் உலகப் போக்கை நன்கு உணர்ந்தவன். இவளும் கன்ருக வாசித்திருந்ததோடு பல தேச மக்களுடன் பழகி நன்கு பேசக் கற்றுக்கொண்டிருந்தாள். இருவரும் இந்தியாவில் பல இடங்களிலும் சுற்றியலைந்தனர். விமலேந்த போஸுக்கு. எங்கும் வேலை கிடைக்க வில்லை. கையில் கொஞ்ச கஞ்சமிருந்த பணமுஞ் செலவாகிவிட்டது. ப்ல நாள் பட் டினி கிடந்து வருந்தினர். பிழைக்க வழி யென்னவென்று. இருவரும் பலநாள் யோசித்தனர். சென்னையை யடைந்த னர். அந்நகரின் நிலைமையையும், மக்கள் மனப் போக்கை யும் நன்கு உணர்ந்தனர். அங்கு அவர்களுக்கு ஒரு. யோசனை தோன்றியது. கலாசாலைகளில் சேர்ந்து ப்டிக்கா மஹிளாதேவி கலாசாலை மர்மம் 133

மலே, பரிசுை.செல்ல விரும்புபவர்களுக்காக, எங்கு பார்த் தாலும், டியூடோரியல் காலேஜுகள் இருக்கின்றமையால், என் நாமும் பெண்களுக்காக மட்டும் இம்மாதிரி டியூடோ ரியல் காலேஜ் ஏற்படுத்தக்கூடாது? அவ்வாறு எற்படுத்தி இல், இப்போது மேற்படி கலாசாலைகளில் ஆண்களோடு கலந்து படிக்கும் பெண்களெல்லாம் இங்கு வந்து சேர்ந்து படிக்க விரும்புவார்கள் என்று விமலேந்தபோஸ் நம்பினன். ஆல்ை, இதில் ஒரு தடையிருக்கிறது; விமலேந்த போஸ் வெறும் பி. ஏ. தான்! எல். டி. கூட பாஸ் செய்யவில்லை. இக்கிலேயில் அவன் ஆசிரியனுக இருக்க முடியாது. மேலும், பெண்களுக்குப் பெண்களே ஆசிரியைகளாக இருந்தால் தான் பெற்ருேர்களுக்கும் நம்பிக்கையாக இருக்கும்; மாணவிகளும் ஏராளமாகச் சேர்வார்கள். ஆமாம் ஆசிரி யைகளுக்கு எங்கு போவது? அவர்கள் முதலில் பணமில் லாது எப்படி வருவார்கள்? வரும் ஆசிரியைகளில் எவரை யேனும் பிரன்ஸிடாலாக ஏற்படுத்தினுல், இவர்களுக்கு எவ் வித அதிகாரமும், சுதந்திரமும் ஏற்படாது. இச் சக்தர்ப்பங் களேயெல்லம் இருவரும் யோசித்துப் பார்த்தனர். இக்கலா சாலையை சாம் ஒன்றும் நீடித்து நடத்தப்போவதில்லை. பொருள் சம்பாதிப்பதற்காகவே தற்காலிகமாக ஏற்படுத் தப் போகிருேம்; ஆதலால் இதில் ஏன் சூழ்ச்சியையுங் கையாளலாகாது’ என்று இருவருக்கும் துணிவேற்பட்டது, கடைசியாக இவர்களது நண்பர்களும், வேலையில்லாது திண்டாடுபவர்களுமான பட்டம் பெற்ற பெண்கள் ஐக் தாறுபேர் பர்மாவிலிருந்தும், வங்காளத்திலிருந்தும் வர வழைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆசை வார்த்தை காட் டவ்ே, இவர்களது சூழ்ச்சிக்கு அவர்களும் இணங்கினர்; துணை கின்றனர். உடனே, மாடீன் நியூன் என்ற பெயர் பெற்றிருந்த பர்மியப்பெண்,மஹிளாதேவி எம், ஏ, (0xon) 134 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

எல். எல். பி. என்னும் உயர்தா பட்டம் பெற்ற வங்காளப் பெண்மணியானள். (இதிலிருந்து அவளது இயற்பெயர் மஹிளாதேவி யல்லவென்றும் தங்கள் காரியத்திற்காகவே வைத்துக்கொண்ட மாறுபெயரென்றும் தெரிந்துகொள்ள லாம்) கலாசாலே சம்பந்தப்பட்ட சகல விஷயங்களுக்கும் அவளே சர்வாதிகாரியானுள். விமலேந்த போஸ் மறைமுக 'மாக அடிக்கடி அவளுக்கு யோசனை கூறிக் காரியத்தைத் திறமையாக நடத்திவந்தான். வெளியிலிருந்து வந்த பெண் கள் உண்மையிலேயே எம். எ. எல். டி., பி. எ. எல். டி. பட்டம் பெற்றவர்களாகையால், ஆசிரியைகளாயினர், மானேக்காட்டி மானப் பிடிப்பதுபோல், அவர்களைக் காட்டி உள்ளூரிலிருந்தும் இரண்டு மூன்று பெண்கள் நம்பிக்கை ஏற்படுவதற்காக ஆசிரியைகளாக அமர்த்தப்பட்டனர். உத்தியோகம் வாங்கித் தருகிருேம் என்று சொல்லி அவர் களிடம் கூட துறு இருநூறு இலஞ்சம் வாங்கியதாக விசா ரணையின் போது பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆனல் அது ருஜவாகவில்லை. விமலேந்த போஸ் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரம் நல்ல பலனை விரைவில் கொடுத்தது. ஏராளமாகப் பெண்கள் பலவிதமான உயர்தர படிப்புகளைப் பயில்வதற். காக வந்து சேர்ந்தனர். அந்தந்த பட்டங்களுக்குத் தகுந்த வாறு ஒவ்வொரு மாணவியிடத்தும், இருநூறு, முந்நூறு, நானூறு என்று காலேஜ் கட்டணம் முன் கூட்டியே வாங் கப்பட்டது. இவ்வித நிர்வாகங்களை மீஹிளாதேவியே கவனித்து வந்தாள். விமவேந்த போஸ், மாணவிகள் வந்து சேர ஆாம்பித்த பின்னர், வெளிப்படையாக மஹிளா தேவி வின் கிர்வாகக் காரியங்களில் கலந்து கொள்வதில்லை. போலி லார் கைது செய்யப்படும் வரை மஹிளா தேவிக்குக் கண வனிருக்கிருன் என்ற லிஷயமே யாருக்கும் தெரியாது. அவ் வளவு எச்சரிகையாக அவர்கள் நடந்து வந்திருக்கின்றனர் மாணவிகள் கட்டிய கட்டணங்கள் சுமார் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் சேர்ந்து விட்டன. எனவே, விமலேந்த போஸும், மஹிளாதேவியும் தாங்கள் போட்ட திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு மேல் வெற்றியோடு நிறைவேறி விட்டது கண்டு, மகிழ்ச்சி கொண்டாடினர். இத்தொகையோடு அவர்களிருவரும் யாருக்கும் தெரியாமல், பர்மாவுக்குச் சென்று விட வேண்டுமென்று தீர்மானித்தனர். அவ்விஷயத்தை விவரித்து, மஹிளாதேவி தன் தாய்க்குக் கடிதமெழுதித் தாங்கள் கூடிய சீக்கிரம் பர்மா வந்து சேர்ந்து விடுவதாகத் தெரிவித்திருந்தாள். அக்கடிதந்தான் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. தங்களை நம்பி வந்த, பட்டம் பெற்ற பெண்களுக்கும் நாமம் போட்டு விட்டுச் செல்ல, நினைத்த அவ்வஞ்சகர்கள் கடைசியில் தங்களுக்கே பெரிய நாமம் போட்டுக் கொண்டு, சிறைச்சாலையைத் தங்கள் வாசஸ்தலமாக அடைந்தனர். அவர்களது சூழ்ச்சியையும், வஞ்சத்தையும் பார்த்தீர்களா! மஹிளாதேவி எவ்வளவு பேரழகியாக இருந்தாளோ, அவ்வளவுக்கவ்வளவு வஞ்சகியாகவும், விஷக் குண்டூசியாகவும் இருந்தாள். வெளித் தோற்றத்தைக் கண்டு, மயங்கி விடக் கூடாது என்று இதிலிருந்து ஏற்படுகிறதல்லவா! உலகமே அப்படித்தான்’ என்று விரக்தியாகக் கூறிப் புவன சுந்தரி பெருமூச்சு விட்டாள்.