உரைநூல் மேற்கோள் பாடல்கள்
இலக்கண நூல்களுக்கு உரை எழுதும் ஆசிரியர்கள் நூற்பா விளக்கத்துக்கு எடுத்துக்காட்டாகச் சில மேற்கோள் பாடல்களைத் தந்துள்ளனர். அவற்றில் சங்கநூல் தொகுப்புப் பாடல்களிலோ, பிற இலக்கியங்களிலோ இடம்பெறாத பாடல்கள் சில உள்ளன. அப்பாடல்களில் சில முத்தொள்ளாயிரம் போன்ற நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் பாடல்கள் இத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.
கிடைத்துள்ள உரைநூல்களில் காலத்தால் முந்தியது நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரை. இதில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ள பாடல்கள் திருக்கோவையார் என்னும் நூலாக உள்ளது. எனவே இப் பாடல்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்படவில்லை.
கால வரிசையில் அடுத்து வருவது புறப்பொருள் வெண்பாமாலை. இதில் உள்ள மேற்கோள் பாடல்கள் நூலாசிரியர் ஐயனாரிதனார் பாடிச் சேர்த்தவை. இவரது பாடல்களும் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை.
பிற
- இளம்பூரணர் தொல்காப்பிய உரை மேற்கோள்
- பேராசிரியர் தொல்காப்பிய உரை மேற்கோள்
- யாப்பருங்கலம் உரை மேற்கோள்
- பாடல்கள்
- குறிப்பு - செங்ககைப் பொதுவன்
அ
தொகுஅங்கண் மதியம்
தொகுஅங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்
பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி
ஏதின் மாக்களும் நோவர் தோழி
என்றும் நோவார் இல்லைத்
தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் நலக்கே.
- நிலாவைப் பாம்பு விழுங்கியது எனப் புலம்புகின்றனர். சேர்ப்பன் நினைவால் என் நலம் குன்றியுள்ளதே. இதற்கு யாரும் கவலைப்படவில்லையே.
- இது செர்ப்பன் என்னும் திணைநிலைப் பெயராலும், இரங்கல் பொருளானும் நெய்தல் திணை - அகத்திணை 24 மேற்கோள்
அஞ்சுவல்
தொகுஅஞ்சுவல் வாழி தோழி சென்றவர்
நெஞ்சுணத் தெளித்த நம்வயின்
வஞ்சஞ் செய்தல் வல்லின வாறே.
- அகத்திணையியல், 45 பிரிவாற்றாமைக்குச் செய்யுள்
அடும்பவிழ்
தொகுஅடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்துந்
தடந்தாள் நாரை யிருக்கும் எக்கர்த்
தண்ணந் துறைவற் றொடுத்து நன்னலங் கொள்வாம்
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டக்
கொடுத்தவை தாஎனக் கூறலின்
இன்னா தோநம் மன்னயிர் இழவே.
- பொருளதிகாரம் (கற்பியல்) 145 பிரித்தல் பற்றி வந்தது
அணிநிறக் கெண்டை
தொகுஅணிநிறக் கெண்டை ஆடிடம் பார்த்து
மணிநிறச் சிறுசிரல் மயங்குநம் பொய்கை
விரைமல காற்றா விருந்தினம் யாமென
முழவிமிழ் முன்றில் முகம்பணர் சேர்த்தி
எண்ணிக் கூறிய இயல்பினின் வழாஅது
பண்ணுக்கொளப் புகுவ கணித்தோ பாண
செவிநிறை உவகையேம் ஆக
இதுநா ணன்மைக் குரைத்துச்சென் றீமே.
- பொருளதிகாரம் (கற்பியல்) 148 பாணர் கூற்றுக்கு எதிராகக் கூற்று நிகழ்தலுக்கு எடுத்துக்காட்டு
அதிரிசை
தொகுஅதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த
பல்தேன் இறாஅல் அல்குநர்க் குதவு
நுந்தை நன்னாட்டு வெந்திறல் முருகென
நின்னோய்க் கியற்றிய வெறிநின் தோழி
என்வயி னோக்கலிற் போலும் பன்னாள்
வருந்திய வருத்தந் தீரநின்
திருந்திழைப் பணைத்தோள் புணர்ந்துவந் ததுவே.
- தொல்காப்பியம் (பொருளதிகாரம்) 144 மேற்கோள்
- இதில் நுந்தை நன்னாட்டு என்று கூறுமிடத்து தலைவியின் பெருமை வெளிப்படுகிறது
- நின்னோய்க்கு இயற்றிய வெறி நின் தோழி என்வயின் நோக்கலின் போலும் என்று கூறுமிடத்து அவர்கள் செய்யும் குற்றம் கூறியவாறு.
அம்மவாழியோ
தொகுஅம்ம வாழியோ அன்னைநம் படப்பை
மின்னேர் நுடங்கிடைச் சின்னிழ லாகிய
புன்னை மென்காய் பொருசினை அரிய
வாடுவளி தூக்கிய அசைவிற் கொல்லோ
தெண்ணீர்ப் பொய்கையுள் வீழ்ந்தென
எண்ணினை யுரைமோ உணர்குவல் யானே.
- தொல்காப்பியம் (தொருளதிகாரம் - களவியல்) 112 உரை மேற்கோள்
- அல்லகுறிப் படுதல் பற்றி நிகழ்ந்த கூற்று
அராகம்
தொகு- அராகந் தாமே நான்காய் ஒரோவொன்று
- வீதலும் உடைய மூவிரண் டடியே
- ஈரடி யாகு மிழியிற் கெல்லை.
- தொல்காப்பியம் (செய்யுளியல்) 426 மேற்கோள்
- அராகம் என்பதை விளக்கும் இலக்கண நூற்பா மேற்கோள்
அரும்பெறல்
தொகுஅரும்பெறற் காதல ரகலா மாத்திரம்
இரும்புதல் ஈங்கை இளந்தளிர் நடுங்க
அலங்குகதிர் வாடையும் வந்தன்று
கலங்கஞர் எவ்வந் தோழிநாம் உறவே.
- பொருளதிகாரம் (அகத்திணையியல்) 45 மேற்கோள்
- பிரிந்தார் எனக் கூறும் பிரிவாற்றாமை பற்றிய செய்யுள்.
அறனிலை
தொகுஅறன்நிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம்
யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே
இராக்கதம் பேய்நிலை என்றிக் கூறிய
மறையோர் மன்றல் எட்டவை அவற்றுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பிதன்
பொருண்மை என்மனார் புலமை யோரே.
- பொருளதிகாரம் (களவியல்) 89 மேற்கோள்
- வடநூலார் கூறும் எட்டு வகையான திருமண முறைப் பெயர்களைத் தமிழ்ச்சொல்லால் குறியிட்டுக்காட்டும் பாடல்.
அறனும்
தொகுஅறனு மீகையும் அன்புங் கிளையும்
புகழு மின்புந் தருதலிற் புறம்பெயர்ந்து
தருவது துணிந்தமை பெரிதே
விரிபூங் கோதை விளங்கிழை பொருளே.
- பொருளதிகாரம் (அகத்திணையியல்) 44 மேற்கோள்
- பொருள் தேடுவது எதற்காக என்பதை விளக்கும் பாடல்
ஆ
தொகுஆறு
தொகு798
ஆறு குடி நீறு பூசி
ஏறும் ஏறும் இறைவனைக்
கூறு நெஞ்சே குறையிலை நினக்கே.
இ
தொகுஇரும்புலி
தொகு445
இரும்புலிக்கு இரிந்த கருங்கட் செந்நாகு
நாட்டு அயிர் கேட்டொறும் வெரூஉம்
ஆநிலைப் புள்ளி அல்க நம்மொடு
மானுண் கண்ணியும் வருமெனின்
வாரார் ஆயரோ பெருங்கலாறே.
இல்லுடை
தொகு570
இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரில்
தீதும் உண்டோ மாத ரீரே.
இல்லொடு
தொகு418
இல்லொடு மிடைந்த கொல்லை முல்லைப்
பல்லான் கோவலர் பையுள் ஆம்பல்
புலம்புகொள் மாலை கேட்டொறும்
கலங்குங்கொல் அளியள்நங் காத லோனே.
இவளே
தொகு710
இவளே நின்னல திலளே யாயுங்
குவளை உண்கண் இவளல திலளே
யானும் ஆயிடை யேனே
மாமலை நாட மறவா தீமே.
.
எ
தொகுஎன்றும்
தொகு567
என்றும் இனியள் ஆயினும் பிரிதல்
என்றும் இன்னாள் அன்றே நெஞ்சம்
பனிமருந்து விளைக்கும் பரூஉக்கண் இளமுலைப்
படுசாந்து சிதைய முயங்குஞ்
சிறுகுடி கானவன் பெருமட மகளே.
என்னொடு
தொகு456
என்னொடு புலந்தனர் கொல்லோ காதலர்
மின்னொடு முழங்குதூ வானம்
நின்னொடு வருதும் எனத்தெளிந் தோரே.
ஏ
தொகுஏனல்
தொகு608
ஏனல் காவல் இவளும் அல்லள்
மான்வழி வருகுவன் இவனும் அல்லன்
நரந்தங் கண்ணி இவனோ டிவளிடைக்
கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே
நம்மென் நாணினர் போலத் தம்முள்
மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல
உள்ளத் துள்ளே மகிழ்ப
சொல்லும் ஆடுப கண்ணி னானே.
ஒ
தொகுஒலிபுனல்
தொகு666
ஒலிபுனல் ஊரனை ஒருதலை யாக
வலிநமக் காவது வலியென் றொழியப்
பந்தர் மாட்டிய பரூஉச்சுடர் விளக்கத்துக்
கந்த முனித்தலைத் தும்பி ஆர்ப்பக்
காலை கொட்டிய தவர்தோற் சிறுபறை
மாலை யாமத்து மதிதர விடாது
பூண்டு கிடந்து வளரும் பூங்கட் புதல்வனைக்
காண்டலுங் காணான்தன் கடிமனை யானே.
ஓ
தொகுஓங்கெழில்
தொகு708
ஓங்கெழில் கொம்பர் நடுவி தெனப்புல்லும்
காந்தட் கிவருங் கருவிளம் பூக்கொள்ளும்
மாந்தளிர்க் கையில் தடவரு மாமயில்
பூம்பொழில் நோக்கிப் புகுவன பின்செல்லும்
தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடும்
நீள்கதுப் பிஃதென நீரற் றறல்புகும்
வாளொளி முல்லை முகையை முறுவலென்று
ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான்.
ஓரை ஆயம்
தொகு423
ஓரை ஆயம் அறிய ஊரன்
நல்கினன் நந்த நறும்பூந் தண்தழை
மாறுபடின் எவனோ தோழி வீறுசிறந்து
நெடுமொழி விளங்குந் தொல்குடி
வடுநாம் படுதல் அஞ்சுதும் எனவே.
க
தொகுகங்குலும்
தொகு424
கங்குலும் பகலுங் கலந்துக ஒன்றி
வன்புறை சொல்லி நீத்தோர்
அன்புறு செய்தி உடையரோ மற்றே.
கரந்தை
தொகு418
கரந்தை விரஇய தண்ணறுங் கண்ணி
இளையர்ஏல் இயங்குபரி கடைஇப்
பகைமுனை வலிக்குந் தேரொடு
வினைமுடித் தனர்நங் காத லோரே.
கரைபொரு
தொகு619
கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதி ராயின்
அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக
நரையுருமே றுங்கைவேல் அஞ்சுக நும்மை
வரையா மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ.
குன்று
தொகு798
குன்று கொண்டு நின்ற மாடு
பொன்ற வந்த மாரி
சென்று காத்த திறலடி தொழுமே.
கைக்கிளை
தொகு466
கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம்
அத்திறம் இரண்டும் அகத்திணை மயங்காது
அத்திணை யானே யாத்தனர் புலவர்.
கையொடு
தொகு499
கையொடு கையோடு ஒருதுணி கோட்டது
மொய்யிலைவேல் மன்னர் முடித்தலை- பைய
உயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே அங்கோர்
வயவெம்போர் மாண்ட களிறு.
கோட்டகம்
தொகு424
கோட்டக மலர்ந்த கொழுங்கொடி அடம்பின்
நற்றுரை அணிநீர்ச் சேர்ப்இப்
பொற்றொடி அரிவையைப் போற்றினை அளிமே.
ச
தொகுசத்துவம்
தொகு734
சத்துவம் என்பது சாற்றுங் காலை
மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணீர் வார்தல்
நடுக்கங் கடுத்தல் வியர்த்தல் தேற்றம்
கொடுங்குரற் சிதைவொடு திரல்பட வந்த
பத்தென மொழிய சத்துவந் தானே.
சூரல்
தொகு884
- சூரல் பம்பிய சிறுகான் யாறே
- சூரர மகளிர் ஆரணங் கினரே
- வாரல் வரினே யானஞ் சுவலே
- சாரல் நாட நீவர லாறே.
த
தொகுதற்கொள்
தொகு499
தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற்கு
ஒற்கத்து உலந்தானும் ஆகுமால் பின்பின்
பலர்புகழ் செல்வம் தரூஉம்பற் பலர்தொழ
வானக வாழ்க்கையும் ஈயுமால் அன்னதோர்
மேன்மை இழப்பப் பழிவருவ செய்பவோ
தானேயும் போகும் உயிர்க்கு.
தன்தோள்
தொகு799
தன்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉங்
களிறுவளர் பெருங்கா டாயினும்
ஒளிபெரிது சிறந்தன் றளியஎன் நெஞ்சே.
தன்னையும்
தொகு606
தன்னையுந் தான்நாணுஞ் சாயலாட் கீதுரைப்பின்
என்னையும் நாணப் படுங்கண்டாய் – என்னைய
வேயேர்மென் தோளிக்கு வேறாய் இனியொருநாள்
நீயே யுரைத்து விடு.
திருநகர்
தொகு418 திருநகர் விளங்கு மாசில் கற்பின்
அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு
நின்னுடைக் கேண்மை யென்னோ முல்லை
இரும்பல் கூந்தல் நாற்றமும்
முருந்தேர் வெண்பல் ஒளியுநீ பெறவே.
துறைவன்
தொகு593
துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதஎன்
மம்மர் வாண்முக நோக்கி அன்னைநின்
அவலம் உரையென் றனளே கடலென்
பஞ்சாய்ப் பாவை கொண்டு
வண்டலஞ் சிறுமனை சிதைத்ததென் றேனே.
தேர்ந்து
தொகு798
தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து
நேர்ந்து வாமனை நினையின்
சேர்ந்த வல்வினை தேய்ந்தக லும்மே.
தேரோன்
தொகு567
தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள்
தீரா வெம்மையொடு திசைநடுக்கு உறுப்பினும்
பெயராப் பெற்றியில் திரியாச் சீர்சால்
குலத்தில் திரியாக் கொள்கையுங் கொள்கையொடு
நலத்தில் திரியா நாட்டமும் உடையோய்
கண்டத னளவையிற் கலங்குதி யெனின்இம்
மண்திணி கிடக்கை மாநிலம்
உண்டெனக் கருதி உணரலன் யானே.
தோளும்
தொகு455
தோளுந் தொடியும் நெகிழ்ந்தன நுதலும்
நெய்யுகு பள்ளி யாகுக தில்ல
யானஃ தவலங் கொள்ளேன் தானஃ
தஞ்சுவரு கான மென்றதற்
கஞ்சுவல் தோழி நெஞ்சத் தானே.
ந
தொகுநகை
தொகு736
நகையெனப் படுதல் வகையா தெனினே
நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கி
நகையொடுநல்லவை நனிமகிழ் வதுவே.
நறவுக்கமழ்
தொகு550
நறவுக்கமழ் அலரி நறவுவாய் விரிந்து
இறங்கிதழ் கமழும் இசைவாய் நெய்தல்
கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர்
நின்னையர் அல்லரோ நெறிதாழ் ஓதி
ஒண்சுணங் கிளமுலை ஒருஞான்று புணரின்
நுண்கயிற் றுறுவலை நுமரொடு வாங்கிக்
கைதை வேலி இவ்வூர்ச்
செய்தூட் டேனோ சிறுகுடி யானே.
நாமவர்
தொகு664
நாமவர் திருந்தெயி றுண்ணவும் அவர்நம
தேந்துமுலை யாகத்துச் சாந்துகண் படுப்பவுங்
கண்டுசுடு பரத்தையின் வந்தோற் கண்டும்
ஊடுதல் பெருந்திரு உறுகெனப்
பீடுபெறல் அருமையின் முயங்கி யேனே.
நாற்றம்
தொகு629
நாற்றம் பெற்று நிலைப்புக் காண்டல்
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்
கண்துயில் மறுத்தல் கோலஞ்செய் யாமை.
நீரின்தன்மை
தொகு806
நீரின் தன்மையுந் தீயின் வெம்மையுஞ்
சாரச் சார்ந்து தீரத் தீருஞ்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாவே.
நெஞ்சமொடு
தொகு671
நெஞ்சமொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந்
தாயலட் டெறுதரக் காக்கவெம் மகனெனச்
சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற
மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே
பெற்றனம் யாமே மற்றதன் பயனே.
நெடுந்தேர்
தொகு608
நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று
கடுங்களிறு காணீரோ என்றீர்- கொடுங்குழையார்
யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்துள்
ஏனற் கிளிகடிகு வார்.
நெருநலும்
தொகு605
நெருநலும் முன்னா ளெல்லையும் ஒருசிறைப்
புதுவை யாகலின் அதற்கெய்த நாணி
நேரிறை வளைத்தோள்நின் தோழிசெய்த
ஆருயிர் வருத்தங் களையா யோவென
எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை
எம்பதத் தெளியன் அல்லன் எமக்கோர்
கட்காண் கடவுள் அல்லளோ பெரும
வாய்கோன் மிளகின் மலயங் கொழுங்கொடி
துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும்
மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே.
நெறிநீர்
தொகு607
நெறிநீர் இருங்கழி நீலமுஞ் சூடாள்
பொறிமாண் வரியலவன் ஆட்டலும் ஆட்டாள்
திருநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாள்
செறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் சேர்கேன்.
ப
தொகுபடாஅ
தொகு421
படாஅ தோழியெங் கண்ணே கொடுவரி
கொன்முரண் யானை கனவு
நன்மலை நாடன் நசையி னானே.
பருவ மென்திணை
தொகு420
பருவ மென்திணை பாலும் பெய்தன
கருவிரற் கிள்ளை கடியவும் போகா
பசிமூ தந்திக் கடைவன வாடப்
பாசிப் பக்கப் பனிநீர்ப் பைஞ்சுனை
விரியிதழ்க் குவளை போல வில்லிட்டு
எரிசுடர் விசும்பின் ஏறெழுந்து முழங்கக்
குன்றுபனி கொள்ளுஞ் சாரல்
இன்றுகொல் தோழி அவர்சென்ற நாட்டே
புலைமகன்
தொகு676
புலைமகன் ஆதலிற் பொய்ந்நின் வாய்மொழி
நில்லல் பாண செல்லினிப் பரியல்
பகல்எஞ் சேரிக் காணின்
அகல்வய லூரன் நாணவும் பெறுமே.
பூங்கொடி
தொகு423
பூங்கொடி மருங்கின் எங்கை கேண்மை
முன்னும் பின்னும் ஆகி
இன்னும் பாணன் எம்வயி னானே.
பெயர்ந்து
தொகு443
பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி
சிலம்புகெழு சீறடி சிவப்ப
இங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே.
பேதை
தொகு784
பேதை யென்ப தியாதென வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளாற் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கண்டது தெளிதல்.
ம
தொகுமாணிழை
தொகு563
மாண்இழை பேதை நாறிருங் கூந்தல்
ஆணமும் இல்லாள் நீர்உறை சூருடைச்
சிலம்பிற் கணங்காய் முயன்ற செறியியல்
நொதுமல் நோக்கைக் காண்மோ நெஞ்சே
வறிதால் முறுவற் கெழுமிய
நுடங்குமென் பணைவேய் சிறுகுடி யோனே.
மாந்தர்
தொகு456
மாந்தர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரும் என்ப தடமென் தோழி
அஞ்சினன் அஞ்சினள் ஒதுங்கிப்
பஞ்சு மெல்லடிப் பால்வடுக் கொளவே.
முதுக்குறை
தொகு420
முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந்தனளே.
வ
தொகுவானிலங்கு
தொகு678
வானிலங் குண்கண் வைஎயிற் றோயே
ஞாலங் காவலர் வந்தனர்
காலை அன்ன மாலைமுந் துறுத்தே.
விடிந்த
தொகு419
விடிந்த ஞாலம் கவின்பெறத் தலைஇ
இடிந்த வாய எவ்வங் கூற
நிலமலி தண்துளி தவிராது புலந்தாய்
நீர்மலி கடாஅம் செருக்கிக் கார்மலைந்தது
கனைபெயல் பொழிந்த நள்என் யாமத்து
மண்புரை மாசுணம் விலங்கிய நெறிய
மலைஇ மணந்த மயங்கரி லாரலிற்
றிலைபொலிந் திலங்கு வைவே லேந்தி
இரும்பிடி புணர்ந்த செம்மல் பலவுடன்
பெருங்களிற்றுத் தொழுதியோ டெண்குநிரை இரிய
நிரம்பா நெடுவரை தத்திக் குரம்பமைந்து
ஈண்டுபயில் எறும்பின் இழிதரும் அருவிக்
குண்டுநீர் மறுசுழி நீந்தி ஒண்தொடி
அலமரல் மழைக்கண் நல்லோள் பண்புநயந்து
சுரன்முத லாரிடை நீந்தித் தந்தை
வளமனை ஒருசிறை நின்றனே மாகத்
தலைமனைப் படலைத் தண்கமழ் நறுந்தாது
ஊதுவண் டிமிரிசை யுணர்ந்தனள் சீறடி
அரிச்சிலம் படக்கிச் சேக்கையின் இயலிச்
செறிநினை நல்லில் எறிகத வுயவிக்
காவலர் மடிபத நோக்கி ஓவியர்
பொறிசெய் பாவையின் அறிவுதளர் பொல்கி
அளக்க ரன்ன வாரிருள் துமிய
விளக்குநிமிர் பனைய மின்னிப் பாம்பு
படவரைச் சிமையக் கழலுறு மேறோ
டிணைப்பெய லின்னலங் கங்குலும் வருபவோ வென்றுதன்
மெல்விரல் சேப்ப நொடியின ணல்யாழ்
வடியுறு நரம்பிற் றீவிய மிழற்றித்
திருகுப முயங்கி யோளே வென்வேற்
களிறுகெழு தானைக் கழறொடி மலையன்
ஒளிறுநீ ரடுக்கங் கவைஇய காந்தள்
மணங்கமழ் முள்ளூர் மீமிசை
அணங்குகடி கொண்ட மலரினுங் கமழ்ந்தே.
வெள்ளாங் குருகு
தொகு726
வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே
அவையினும் பலவே சிறுகருங் காக்கை
அவையினும் அவையினும் பலவே குவிமடல்
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த
தூங்கணங் குரீஇக் கூட்டுவாழ் சினையே.