உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/நூல்கள்

உரை வேந்தர் ஔவை
சு.துரைசாமி பிள்ளை எழுதிய நூல்கள்

ஊர்ப்பெயர் - வரலாற்றாராய்ச்சி (அச்சாகவில்லை)

ஐங்குறுநூறு உரை

ஔவைத் தமிழ்

சிலப்பதிகார ஆராய்ச்சி

சிலப்பதிகாரச் சுருக்கம்

சிவஞானபோதச் செம்பொருள்

சிவஞானபோத மூலமும் சிஞனா சுவாமிகள் அருளிய சிற்றுரையும்

சீவக சிந்தாமணி ஆராய்ச்சி

சீவகசிந்தாமணிச் சுருக்கம்

சூளாமணி

சைவ இலக்கிய வரலாறு

ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்

தமிழ்த் தாமரை

தமிழ்நாவலர் சரிதை மூலமும் உரையும்

திருமாற்பேற்றுத் திருப்பதிக உரை

திருவருட்பா மூலமும் உரையும் (9 தொகுதிகள்)

திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை

தெய்வப் புலவர் திருவள்ளுவர்

நந்தா விளக்கு

நற்றிணை உரை

பதிற்றுப்பத்து உரை

பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு

பரணர்

புதுநெறித் தமிழ் இலக்கணம் (2 பகுதிகள்)

புறநானூறு மூலமும் உரையும் (2 பகுதிகள்)

பெருந்தகைப் பெண்டிர்

மணிமேகலை ஆராய்ச்சி

மணிமேகலைச் சுருக்கம்

மதுரைக் குமரனார்

மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு)

மருள் நீக்கியார் நாடகம் (அச்சாகவில்லை)

யசோதர காவியம் மூலமும் உரையும்

வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்)

Introduction to the Study of Thiruvalluvar


அச்சில் வெளிவந்த கட்டுரைகள்

ஆர்க்காடு

ஊழ்வினை

சிவபுராணம்

ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை

தூத்துக்குடி சைவசித்தாந்த சபைத் தலைமைப் பேருரை


ஔவை சு. துரைசாமிபிள்ளை பற்றிய
சின்னஞ்சிறு வெளியீடுகள்
அறிவொளி, தி.நா., ஔவை துரைசாமிபிள்ளை வாழ்க்கைக் குறிப்பு
இராகவன், கோமான் ம.வி. ஆசிரியப் பெருந்தகை ஔவை துரைசாமி
கிரி, பி.வி., (தொ.ஆ.) உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு
சிவமணி, கு. 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர் ஔவை சு. துரைசாமி (கருத்தரங்கக் கட்டுரை)


உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை (1902-1981): பேராசிரியப் பெருந்தகை. சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்: சைவசித்தாந்த வித்தகர்; சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர்; பேச்சாலும் எழுத்தாலும் பிறர்உள்ளம் கவர்ந்தவர்; தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர்; ஏடு படிப்பதிலும் கல்வெட்டு ஆராய்வதிலும் வல்லவர்; தம் சொந்த முயற்சியாலும் கடும் உழைப்பாலும் உலகம் போற்ற வாழ்ந்தவர்; மாணவர்களின் உள்ளம் கொள்ளை கொண்டவர்; தாம் வாழ்ந்த காலத்திலேயே பேரும் புகழும் பெற்றவர். ஔவை சு.துரைசாமி பிள்ளை, பல்வேறு பட்டங்கள் பெற்றவரேயாயினும் ‘உரைவேந்தர்’ என்பதே இறுதிவரை நிலைத்துள்ளது. இத்தகு பட்டத்தை வழங்கியது, மதுரைத் திருவள்ளுவர் கழகம்.

இந்நூலாசிரியர் ச. சாம்பசிவனார், உரைவேந்தரோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டவர்; மதுரைத் திருவள்ளுவர் கழகச் செயலராக இருந்தபெருமை சாம்பசிவனார்க்கு உண்டு. இவர் எழுதிய நூல்கள்-75, கட்டுரைகள், கவிதைகள் பல, “செந்தமிழ்ச் செல்வர், தமிழாகரர், அருந்தமிழ் மாமணி, திருக்குறள் செம்மல்” எனப் பல்வேறு பட்டங்களும், தமிழக அரசின் ‘நல்லாசிரியர்’ விருதும் பெற்றவர்; சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, இலங்கை முதலான நாடுகட்குச் சென்று உலகளாவிய மாநாடுகளில் தலைமை தாங்கியும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுமுள்ளவர். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மிக உயர்ந்த ‘மாட்சிமைப் பரிசு’ம் பெற்றவர்; ‘தமிழ் மாருதம்’ என்ற உலகளாவிய இலக்கியத் திங்கள் இதழின் ஆசிரியர். மதுரை நகரில் சிறந்ததொரு நூலகத்தையும் உருவாக்கியவர்.


Uraivendar Avvai Su. Duraisamipillai (Tamil) Rs. 25 ISBN-81-260-2366-X



சாகித்திய
அகாதெமி