உறந்தைவளர் நாட்டுவளப்பம்/இறைவணக்கம்
இசை:
- தானன தானன தானன தானன
- தானன தானன தானன தானன
பாடல்:
- சீர்பெருகு நாடுசி றந்தாள்உ றந்தையில்
- பேர்பெருகு முன்தழுக்கைப் பிள்ளையாரே முன்னடவீர்!
- முன்னடவீர் தென்னுறந்தை முருகா உனைப்பாடச்
- சன்னதிப் புன்னைப் போல் தழைக்கும்உ றந்தையில்
- மிக்க துவரைவி ளங்கனியாம் சர்க்கரை
- சர்க்கரை பாலுடன்த ழைக்கும்உ றந்தையில்
- முக்கனி சர்க்கரை முழங்கும்உ றந்தையில்
- முக்கனி கொண்டவர் மெய்க்குவி நாயகர்
- மெய்க்குவி நாயகரை வேண்டிஅ னுதினம்
- தக்கோர் வளத்தைப்பாடச் சரஸ்வதியே முன்னடவீர்!
- தஞ்சமென்றேன் உன்பாதம் சரசுபதித் தாயே
- பூஞ்சோலை என்றுபொ ருப்பாள் பெரியவள்
- கற்றோர் பெரியவர் கவிவாண ருக்கெல்லாம்
- பற்புலவர் நற்புலவர் பாதம்ப ணிந்துநான்
- முத்தையன் சொன்னதமிழ் எத்தேச காலமும்
- வித்தை வளரருள்செய் மெய்க்குவி நாயகர்
- உறந்தை வளநாடு சிறந்துப ணிகின்றோம்
- குரும்பீசர் பாதத்தை விரும்புவோம் எந்நாளும்
- பெருத்தச டையும்பி றையும்த ரித்தவர்
- திருக்காக் குரும்பரைநான் துதிப்பேன் பலநாளும்