உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஊர்த்தெய்வ வணக்கம்
- உரத்தநாட் டையன்பாதம் உரைப்பேன் பலநாளும்
- பொங்குச டையும்பு கழுந் தரித்தவர்
- எங்கள் புதுவூர்த் தெய்வங்கள் பெருமாளும்
- ஏறும் பரிகள்வந்து சூழும் பனிநீரை
- காரி அழகரைநான் பாதன் பணிந்தேனே
- பொய்சொல்லா மெய்யன்புது மேஸ்திரி யாவரும்
- மெய்சொல்லி அய்யன்பாதன் வேண்டிப் பணிகின்றோம்
- பாலும் பழமும்ப சியாவ ரந்தரும்
- பாலையடி அய்யனுடைப் பாதம் பணிந்துநான்
- ஓங்கார முள்ளஉ றந்தை வளநாட்டில்
- வேம்பய்யன் பாதத்தை விரும்பிப் பணிகின்றோம்
- கலங்காதே யென்றுப லங்கள் தருகின்ற
- இளங்கோவில் ஐயன்பாதம் விளங்குவோம் எந்நாளும்
- வாழ்வும்பெ ருகும்வ ளரும்உ றந்தையில்
- சேவுக ரையன்பாதம் சீர்பாதம் போற்றுவோம்
- சரசகு ணமுந்த யவும்பெ ருகியே
- பெரியமு தலியையன் துதிசெய்வோம் எந்நாளும்
- ஐவர் பையில் அடைக்கலம் காத்தவர்
- வைபோகம் எங்கும்புகழ் தெய்வங்கள் விநாயகர்
- அசாரக் காரரவர் அபிமானங் காத்தவர்
- ராஜாவூர் ஐயன்பாதம் நேசம் மறவேனே
- உத்தமி எங்கள்உ றந்தை வலநாட்டில்
- முத்துமகா மாரிபாதம் நித்தம் துதிசெய்வோம்
- அலைகடலில் பள்ளிகொள்ளும் ஆயன்ச கோதரி (65)
- மலையாள் பரங்கிமுத்து மாரி பெரியவள்
- மலையாள் பரங்கிஉல காத்தாள்வில் லாத்தாளாம்
- குலதெய்வம் என்றுநாங்கள் நிதமும் துதிசெய்வோம்
- பூத தயவுகளும் பெருமைகளும் உண்டாக
- மாதா பெரியவள் பாதம்ப ணிகுவோம் (70)