உறந்தைவளர் நாட்டுவளப்பம்/ஏழு கன்னியர் வருகை
- உறந்தை வளநாட்டில் குரும்பீசர் தோட்டத்தில்
- வருந்தூது வண்டுகள் அரும்பும லர்ந்திட
- நல்ல மலர்களுண்டு தென்னுறந்தை நன்னாட்டில்
- உன்னத மாகவேழு கன்னியர்கள் வந்ததும்
- மலரெல்லாம் கொய்துதிரு முடிமே லணிந்ததும் (155)
- நலியாமல் கன்னியர்கள் தளிகைநீ ராடியே
- ஆடிப் புடைவைதுகி லாடை யணிந்ததும்
- ஓடிநூ லேணிவழி யாகநடந்ததும்
- சப்தகன் னிகள்வந்து நித்தமலர் கொய்ததும்