உறந்தைவளர் நாட்டுவளப்பம்/தாராவின் முறையீடு
- ஆராய்ந்து கொள்வது, நாரைஅ டைவதும்
- தாராவின் முட்டைரசம் நீர்மேல் மிதப்பதும்
- தாரா முறையிடுவ தேதென்றார் நாட்டார்கள்
- வாரி யெழுந்திருந்து ஏரியில் வந்தார்கள்
- தாராவின் முட்டையிலே சேதங்கள் போகாமல்
- காராள ரையழைத்துக் கலிங்குதி றவென்றார்
- கலிங்குதி றக்கவென்றால் குரும்பர் வரவேணும்
- காணிக் குரும்பருந்தே ராணிக்கக் காரராம்
- வந்துக தவும்ம தகும்தி றந்தார்கள்
- சென்றோடிக் கெங்கைசி றந்தத ளிகையும்
- குண்டுக ளந்தண்கு ளங்கள்குட் டையெல்லாம்
- கண்டு விட்டராசன் கடலோடிப் பாய்ந்ததும்
- கடலில் இருந்தசிப்பி எதிராக வந்ததும்
- நிலைபார்ப்போம் என்றுவீர மணவாளர் சொன்னதும்
- வலைகாரர் என்றுசொல்லி வாளைகு திப்பதும்
- சிலைராமர் வாராரென்று சேல்கள்ப ரந்ததும்
- பதறாதே யென்றுவீர மணவாளர் சொன்னதும்
- சேலும்க யலும்சி றந்தவ ளநாடு